Thursday, August 5, 2021

"போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" (மத்.16:23)

"போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" 
(மத்.16:23)

எந்த இராயப்பரைப் பார்த்து இயேசு,

"உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

என்று சொன்னாரோ,

அதே இராயப்பரைப் பார்த்து அதே இயேசு,


"போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய்."

என்கிறார்.

ஏன்?

 "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்"

என்ற உண்மையை வெளிப்படையாக சொன்ன இராயப்பரைப் பார்த்து, இயேசு

"உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

என்று சொன்னார்

"இயேசு மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்பது இறைவெளிப்பாடு.

இயேசு மெசியா என்ற உண்மையை இராயப்பருக்கு வெளிப்படுத்தியவர் வானகத் தந்தை.

வானகத் தந்தை வெளிப்படுத்தியதை சொன்னதற்காக இயேசு அவரை பாராட்டினார்.

ஆனால் இயேசு தாம் யெருசலேமுக்குச் சென்று மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் பாடுகள் பல படவும், கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் என்று தனது சீடர்களிடம் சொன்ன போது

இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து, "ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம். இஃது உமக்கு நேராது" என்றார்.

இயேசு பாடுகள் பட்டு மரிக்கவேண்டியது மனுக்குலத்தின் மீட்புக்காக.

மனுக்குலத்தின் மீட்புக்காகத்தான் தந்தை இறைவன் தன் மகனை உலகிற்கு அனுப்பினார்.

இயேசு பாடு படாவிட்டால் மனுக்குலத்தை மீட்க முடியாது.

மனுக்குலம் மீட்பு அடையக் கூடாது என்று சாத்தான் தான் விரும்பும்.

ஆகவேதான் இயேசு பாடு படக்கூடாது என்று இராயப்பர் சொன்னபோது அவரை நோக்கி இயேசு

"போ பின்னாலே, சாத்தானே" என்றார்.

அதற்கு இயேசு சொல்லும் காரணம்:

"ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துக்களே." 

அதாவது கடவுளுடைய கருத்துகளுக்கு எதிர் மாறானவை.

கடவுளுடைய கருத்துக்கள் விண்ணகம் சார்ந்தவை.

மனிதனுடைய கருத்துகள் மண்ணுலகம் சார்ந்தவை.

விண்ணகம் செல்ல விரும்புவோர் கடவுளுடைய கருத்துக்களை தங்களது கருத்துகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சாத்தானிடம் செல்ல விரும்புவோர்
மண்ணுலகம் சார்ந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம்.

சிலுவையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது விண்ணகம் சார்ந்த கருத்து.

சிலுவையை வேண்டாம் என்பது மண்ணுலகம் சார்ந்த கருத்து.

வானக தந்தையின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தியதற்காக இராயப்பரைப்
 பாராட்டிய இயேசு,

சாத்தானின் விருப்பத்தை வெளிப்படுத்திய போது அவரை கண்டிக்கிறார்.

இங்கு இயேசு நமக்கு சொல்ல விரும்பும் முக்கியமாக செய்தி ஒன்று இருக்கிறது.

சிலுவை இன்றி மீட்பு இல்லை.

மீட்பு அடைய விரும்புகிறவர்கள் இயேசுவின் சீடர்களாக மாற வேண்டும்.

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.''
(லூக். 14:27)

தன் சிலுவையை சுமக்க விரும்பாதவன் இயேசுவின் சீடனாக மாற முடியாது.

அப்படியானால்,

சிலுவையை சுமக்க விரும்பாதவர்களை,

அதாவது,

வாழ்க்கையில் துன்பப்படவே விரும்பாதவர்களை,

இயேசு என்ன சொல்லுவார்?

 இராயப்பரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இயேசுவே சிலுவையைச் சுமந்தார், நமக்காக.

நாமும் சுமப்போம், அவருக்காக,
அதாவது நித்திய காலம் அவரோடு வாழ்வதற்காக.

சிலுவை இன்றி விண்ணகம் இல்லை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment