Monday, June 14, 2021

"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்." ( மத். 5:44)

"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்." ( மத். 5:44)


ஒரு காலத்தில்  யாராவது ஒருவர் யாருக்காவது ஒரு தீங்கு செய்தால் அதற்குத் தண்டனையாக  அதே தீங்கை அவருக்கும் செய்துவிடுவதுதான் நீதியாக இருந்தது.

இதுதான்

"கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்" நீதி என்று அழைக்கப்பட்டது.

"நன்மைக்கு நன்மை, தீமைக்கு தீமை, பழிக்குப் பழி."
இது மனித நீதி.

நன்மைக்கு நன்மை செய்கிறவன் சாதாரண மனிதன்.

நன்மைக்கு தீமை செய்தவன் சாத்தானின் சீடன்.

தீமைக்கு நன்மை செய்கிறவன் இறைவனின் பிள்ளை.

நாம் இறைவனின் பிள்ளைகளாக இருக்கத்தான் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இறைவனுக்கு விரோதமாக பாவம் செய்தோம்.

தேவ சுபாவத்தில் துன்பமே பட முடியாத இறைமகன் 

துன்பப் படுவதற்கென்றே மனித சுபாவத்தையும் எடுத்து, 

அதாவது மனிதனாகப் பிறந்து,

 பாடுகள் பட்டு, 
சிலுவையில் அறையப்பட்டு,
 தன்னையே பலியாக்கி, 
நமது பாவங்களுக்குப்    பரிகாரம்  செய்து நம்மை மீட்டார்.

இறைமகனால் மீட்கப்பட்ட நாம் 
இறைவனுடைய பிள்ளைகளாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம்.

ஆண்டவர் சொல்லுகிறார்:

 "உங்களுக்கு தீமை செய்தவனை எதிர்க்கவேண்டாம். 

ஆனால் யாராவது உங்கள் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டுங்கள்.

யாராவது உங்களிடமிருந்து எதையாவது அபகரிக்க விரும்பினால் தடுக்க வேண்டாம்,

 அவன் எதிர்பார்ப்பதற்கு மேலாகவே அவனுக்குக் கொடுங்கள்.

உங்களை வெறுப்பவர்களை அன்பு செய்யுங்கள்.

உங்களுக்கு துன்பம் செய்பவர்கள் நன்மை அடைய இறைவனிடம் வேண்டுங்கள்.

தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்தால்தான் நாம் வானகத் தந்தையின் பிள்ளைகள். 

வானகத் தந்தை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பார்க்காமல் எல்லோருக்கும் நன்மையே செய்கிறார்."

இயேசு தனது தந்தையை 

"எங்கள் தந்தையே"

 என்று அழைக்கும்படி நம்மைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆகவே நாம் இயேசுவின் சகோதர சகோதரிகள், தம்பி தங்கைகள்.

சகோதர பாசத்தைப் பற்றி நமக்கு நன்கு தெரியும்.

இயேசு நம் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்.

நாம் அவரது அன்புக்கு முழுவதும் கட்டுப்பட்டவர்கள்.

அவரது அன்பு கட்டளை நாம் அனைவரையும் அவர் நேசிப்பது போலவே நேசிக்க வேண்டும்.

அவர் நல்லவர்களையும் அளவுகடந்து நேசிக்கிறார்,

 கெட்டவர்களையும் அளவு கடந்து நேசிக்கிறார்.

 அவருக்கு விரோதமாக பாவம் செய்தவர்களும் உலகில் எந்தக் குறைவும் இல்லாமல் வாழ்வதை நமது கண்கூடாக பார்க்கிறோம்.

நாமும் அவரைப் போலவே நண்பர்களை நேசிப்பது போலவே, விரோதிகளையும் நேசிக்க வேண்டும்.

நமது அன்பினால் விரோதிகளையும் நண்பர்களாக மாற்ற வேண்டும்.

இயேசுவே அவருக்கு விரோதமாக பாவம் செய்தவர்களைத் தேடித் தான் உலகிற்கு வந்தார். 

"நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" 
(லூக்.5:32)

நம்மை நேசிக்கும் நண்பர்களை நேசிப்பது எளிது. யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் விரோதிகளை நேசிக்க இயேசுவின் சீடர்களால்தான் முடியும்.

அதாவது விண்ணகத் தந்தையின் பிள்ளைகளால்தான் முடியும்.

வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதால்தான், அவரால் எல்லோரையும் நேசிக்க முடிகிறது.

ஆகவே நாமும் விண்ணகத் தந்தையைப் போலவே நிறைவுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

நிறைவு (perfection) இறைவனுக்கு மட்டுமே உரியது. 


நாமும் இறைவனைப் போல்  நிறைவுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புவதால் 

அவர் நம்மீது எவ்வளவு ஆசை வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அவர் இறைமகன், நிறைவு உள்ளவர்.

நமது வாழ்வின் இலட்சியமும் நிறைவுதான்.

 Perfection is our aim in life.

இலட்சியத்தை அடைய ஒரே வழி அன்பு மட்டும் தான்.

ஆகவே அன்பு செய்வோம்.

எல்லோரையும் அன்பு செய்வோம்.

விரோதிகளையும் அன்பு செய்வோம்.

நம்மை வெறுப்பவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்.

நிறைவை நோக்கிய நமது பயணம் வெற்றிப் பயணமாக இருக்க இறைவன் நமக்கு அருள்வாராக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment