Monday, January 11, 2021

அவசரமாக ஒரு குழந்தை வேண்டுமே!

அவசரமாக ஒரு குழந்தை வேண்டுமே!


காலையில் பத்து மணிக்கு அவனுக்கும், அவளுக்கும் திருமணம் நடந்தது.

இரவு பத்து மணிக்கு முதல் இரவு அறையில் சந்தித்தார்கள்.


"ஹலோ பொண்ணு! நமக்குக் கல்யாணம் ஆயிட்டுல்ல?"

"இதென்னெங்க கேள்வி?"

"இது கேள்வி இல்ல. Just a   
reminder! நினைவூட்டல்!"

"எதற்கு? நான் எதையும் மறக்கலிய!"

"அப்போ கையில குழந்தையை எங்கே?"

"குழந்தையா? யாருடைய குழந்தை?"

"நமக்குதான கல்யாணம் ஆச்சி?"

"இதென்னெங்க கேள்வி?"

" அதென்னடி என்ன சொன்னாலும் இதென்னெங்க கேள்வின்னு சொல்ற?"


"சரி. நமக்குதான் கல்யாணம் ஆச்சி."

"நானும் நமது நமது குழந்தையை எங்கேன்னுதான் கேட்கிறேன்."

"காலையில கல்யாணம், இராத்திரியிலே குழந்தையா?" 

"ஆமா. கல்யாணம் ஆகி 12 மணி நேரம் ஆச்சே!"

"இதென்னங்க விளையாட்டு?"

"விளையாட்டு இல்ல. உண்மையாகத்தான் கேட்கிறேன்."


"12 மணி நேரம் பொறுத்துக்கிட்டீங்கல்ல. இன்னொரு பத்து மாதம் பொறுத்துக் கோங்க.

ஒன்றல்ல, இரண்டு குழந்தைகள் பெத்துத் தாரேன்."

" அதெல்லாம் பொறுக்க முடியாது. 
எனக்கு இப்போ வேணும்."

"அதென்னங்க பிடிச்ச பிடியில!"

"நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் தான். 

'எனக்குச் சொந்தமா ஒரு குழந்தை எப்போ கிடைக்கும்னு' அம்மாகிட்ட கேட்டேன்.

அவங்கதான் சொன்னாங்க, கல்யாணம் ஆனவுடன் கிடைக்கும் என்று.

தாலி கட்டி கோவிலை விட்டு வெளியே வரும்போதே உன் கையில குழந்தை இருக்கான்னு பார்த்தேன். எதையும் காணல"

"அதுதான் உத்து உத்துப் பார்த்தீங்களோ?"

"நான் தாலி கட்டினதே அதுக்காகத்தானே!"

" .........."

"என்னடி பேசாம இருக்க."

"நீங்களே குழந்தை மாதிரிதான் பேசறீங்க!"

"நான் குழந்தையா? நான் பிடிவாதக்காரன். 

இப்போ சொல்றேன். எப்போ எனக்கு என் குழந்தையைத் தருவியோ அப்போதான் உங்கிட்ட பேசுவேன்.

நான் சொன்னா சொன்னதுதான்."

சொல்லிவிட்டு மறுபக்கம் பார்த்து படுத்துக் கொண்டான். 

சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான்.

அவள் தூங்கினாளா, தூங்கவில்லையா அவளுக்கே தெரியாது.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து சமையல் கட்டுக்குச் சென்றாள்.

அங்கே அவளது அம்மாவும், அத்தையும் சமையலிலே busy யாக இருந்தார்கள்.

அம்மா, "என்னடி, குளிச்சிட்டியா?"

"குளிர் பயங்கரமா இருக்கு. வெயில் ஏறின பின்தான் குளிக்கணும்."

" முதல்ல போய் குளிச்சிட்டு வாடி."

"சும்மா இரும்மா. உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்."

"அம்மா மருமகளே, இனி நானும் உனக்கு அம்மாதான். சொல்ல வேண்டியதை எங்கள் இருவரிடமும் சொல்லு."

இரவு நடந்ததை ஒன்று விடாமல் சொன்னாள்.

அம்மா, "மயினி, உங்க மருமகள் சொல்றது உண்மையாக இருக்குமோ?"

"பய கொஞ்சம் பிடிவாதக்காரன்தான். ஆனால் இந்த அளவுக்குப் போவான் என்று நான் எதிர்பார்க்கல."

"எந்த அளவுக்கு?"

"வாங்க உட்கார்ந்து பேசுவோம்.

                 * * * *

"ஏண்டா" பொண்ணு பிடிச்சிருக்கா?"

"பொண்ணு நல்லாத்தான் இருக்கா. ஆனால் எனக்கு வேண்டாம்."

"ஏண்டா?"

"ஏம்மா, கொஞ்சமாவது யோசித்திருந்தால் இந்த குடும்பத்தில பெண்ணைப் பார்த்திருப்பீங்களா?


அவங்க பிரிவினை சபையைச் சேர்ந்தவங்க. நமக்கும் அவங்களுக்கும் ஒத்துவருமா?

வாழ்நாள் முழுவதும் Tug of war
போடச் சொல்றீங்களா?

எதிர்மாறான கொள்கை உடையவர்கள் ஒன்றாக வாழ முடியுமா?''


"இங்க பாரு, நாம அவங்கள தேடிப் போகல. அவங்க தான் வந்து மாப்பிள்ளை கேட்டாங்க.

 உங்களுக்கும் என் மகனுக்கும் ஒத்துவராதுன்னு சொன்னேன்.

  திருமணம் முடிந்தபின் அவள் உங்கள் மகள், நாங்கள் குறுக்கிட மாட்டோம் என்றார்கள். "

'அதெல்லாம் சொல்வாங்க அம்மா. நம்ம வழிக்கு வர மாட்டாங்க. 

வீட்டுக்கு விருந்துக்கு போனா அவங்க கோவிலுக்குதான் கூப்பிடுவாங்க. 


நான் போகமாட்டேன். வீண் பிரச்சனைதான் வரும்,

 நாமே பிரச்சனைகளுக்கு காரணமாகக் கூடாது அந்த ஆசையை விட்ருங்க.''

"இங்கே பாருடா, ஒரு ஆத்மாவை மனம் திருப்பிய புண்ணியம் உனக்குக் கிடைக்கும்."

எப்படியோ சமாளித்து சம்மதிக்க வைத்தோம். அவன் ஆன்மீகத்தில் மிக உறுதியானவன்.

நீ அவன் வழிக்கு வந்து விட்டால் வாழ்க்கை சுமூகமாக இருக்கும்."

"என்னை வழிக்கு கொண்டு வரவா குழந்தை மாதிரி பேசினாங்க?

கல்யாணத்திற்கு சம்மதி, மாப்பிள்ளையை நம்ம வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று தானே, அம்மா, நீங்க சொன்னீங்க?"

"அப்படியா, மயினீ? என் பையனை உங்கள் வழிக்கு இழுக்கவே முடியாது "

"ஒரு நாடகம் போட வேண்டுமென்றால் ஒரு கதாசிரியர், ஒரு வசன கர்த்தா, ஒரு இயக்குனர் இருக்கவேண்டும்.

 நீங்கள் உங்க உங்க பாட்டுக்கு நாடகம் போடுறீங்க.

 அகப்பட்டது நான்."

         * * * *

இரவு பத்து மணி.

"ஏங்க..."

"இங்கு யாரும் யாருக்காகவும் ஏங்கவில்லை."

"நான் உங்கள் குழந்தையை கொண்டு வந்து விட்டேனே!" 

"எங்கே இருக்கிறான்? காணவில்லை?"

"ஏன் அப்படி பார்க்கிறீர்கள்?"

"..............."

"நாடகம் ஒன்றும் ஒன்றும் போட வேண்டாம். ஆமா நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்கள் குட்டை உங்க அம்மா உடைத்து விட்டார்கள்.

உங்களை ஏமாற்றி உங்கள் அம்மா சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்.

 என்னை ஏமாற்றி எனது அம்மா சம்மதிக்க வைத்திருக்கிறார்கள்."

"இங்கே பார் .உனது அம்மா உன்னை ஏமாற்றி இருக்கலாம்.

 எனது அம்மா என்னை ஏமாற்றவில்லை.

ஒரு சவாலை சமாளிக்கச் சொல்லி இருக்கிறார்கள்."

"என்ன சவால்?"

"அது உனக்கே தெரியும்."

".இப்போ போர் ஆரம்பிக்க போகிறது."

"ஆரம்பிக்கலாம்."

"உங்களது குழந்தை நாடகம் எனக்கு புரிந்துவிட்டது."

"என்ன புரிந்தது?"

" மீட்புப் பெற விசுவாசம் போதும் என்ற கொள்கை உடையவள் நான்.

அதற்கு போட்டியாக குழந்தை பெற திருமணம் போதும் என்று சொல்கிறீர்கள்."

"ஆமா."

''மீட்புப் பெற விசுவாசம் போதும்என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறாரே!"

"உன்கிட்ட வந்து ரகசியமா சொன்னாரா?"

"'விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்.''
என்பது ஆண்டவரது வார்த்தைகள்,

 மீட்புப் பெற வேண்டியது விசுவாசம் மட்டுமே. விசுவாசம் உள்ளவன் ஞானஸ்நானம் பெறுவான். அதுவே மீட்பு, அதுவே இரட்சண்யம்."

"ஹலோ, Madam, மீட்புப் பெறுவான் என்று தான்
 சொல்லியிருக்கிறார்.

பெற்றுவிட்டான் என்று சொல்லவில்லை.

இந்த flight ல.ஏறினால் அமெரிக்காவிற்கு போகலாம் என்று சொன்னால்,

 flight ல ஏறியவுடனே அமெரிக்காவுக்கு போனதாக அர்த்தமில்லை.


ஏறியுள்ள விமானம் அமெரிக்காவிற்குப் பறந்து போக வேண்டும்.

அமெரிக்காவில் இறங்கிய பின் தான் இந்த பிளைட்டில் அமெரிக்காவிற்கு வந்தேன் என்று சொல்ல முடியும்.

விசுவாசம் ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்.

விசுவாசம் இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது.

விசுவாசத்தின் பின் ஞானஸ்நானம் பெற்று, நம்முடைய நற்செயல்களின் மூலமாகவே மீட்பை பெற முடியும்.

அதனால்தால்தான் செயல்கள் இல்லாத விசுவாசத்தைச் செத்த விசுவாசம் என்கிறோம்."

"நான் செய்த பாவங்களுக்கு இயேசுவே தன்னுடைய பாடுகள் மூலமும், சிலுவை மரணத்தின் மூலமும் பரிகாரம் செய்துவிட்டார் .

அப்பரிகாரத்தைத் தந்தையும் ஏற்றுக் கொண்டு விட்டார்.

என் பாவங்களுக்கு பரிகாரம் செய்துவிட்ட இயேசுவை நான் ஏற்றுக்கொள்ளும்போது 

என் பாவங்களுக்கு ஏற்கனவே பரிகாரம் செய்யப்பட்டு விட்டபடியால்

நான் இரட்சிக்கப்பட்டு விட்டதாகத்தானே அர்த்தம்!"


"நாட்டு மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வைத்திருக்கிறது.  

அரசாங்கம் நமது அரசாங்கம்தான்,

 ஆகவே அந்த பணமும் நமது பணம்தான், 

அதில் மாற்றுக் கருத்து இல்லை.


ஆனாலும் மக்கள் ஏதாவது வேலை செய்தால் தான் அரசாங்கத்தில் உள்ள பணம் அவர்கள் கைக்கு வரும்.

ஒரு வேலையும் செய்யாமல் எங்கள் அரசாங்கம்,

 எங்கள் அரசாங்கத்துக்கு சொந்தமான பணம் எங்கள் பணம்

 என்று யாரும் சொந்தம் கொண்டாடி எடுக்க முடியாது.

இயேசுவின் பாடுகளின் பயனால்தான் நமக்கு இரட்சண்யம் கிடைக்கும்.


ஆனாலும் அந்தப் பயனை நமது செயல்கள் மூலமாக நாம் ஈட்ட வேண்டும்.

நமது மீட்பிற்கான அருள் வரங்கள் இயேசுவின் கையில் தயார் நிலையில் உள்ளன.

நமது ஜெபம், தவம், நற்செயல்களின் மூலம் அவற்றை நாம் பெற வேண்டும்.

அடியே, புரிகிறதா?"

"நான் உங்கள் மனைவி. மனைவிக்குப் புரியும் படி சொல்லுங்கள்!"

"என்னை திருமணம் செய்து கொண்டதன் மூலம் நீ என்னுடைய அன்புக்குச் சொந்தக்காரிதான்.

 ஆனாலும் அதை அனுபவிக்க வேண்டுமானால் 

நீ என் விருப்பப்படி நடக்க வேண்டுமா? வேண்டாமா ?

அதேபோல இயேசுவின் பாடுகளின் பலனை நாம் அனுபவிக்க வேண்டுமானால்

 அவர் விருப்பப்படி நடக்க வேண்டுமா? வேண்டாமா?

 அவர் விருப்பப்படி நாம் நடப்பதுதான் நாம் செய்யும் நற்செயல்.

" நீங்கள் என் கணவர். உங்களிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நானே நேரடியாக கேட்க வேண்டியது தானே! எதுக்கு recommendation க்கு ஆள்?

எதற்காக புனிதர்கள் "


"வாடி என் கப்பக் கிழங்கே! இன்று பகல் பூராவும் எங்க அம்மாட்டையும், உங்க அம்மாட்டையும் போய் என்ன பேசின?"

"ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதுதானே குடும்பம்?!

 நம்ம பெற்றோர் நமது குடும்பம் தானே!"

"திருச்சபை நமது குடும்பம் தாண்டி! புனிதர்கள் நமது திருச்சபையை ஆகிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்.
நம்மால் நேசிக்கப் படவேண்டியவர்கள்."

"ஏங்க இப்படியே பேசிக்கொண்டே போனால் பத்தாவது மாதம் கூட குழந்தை கிடைக்காது.

விசுவாசத்துக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கும் செயல் வேண்டும்.

ஏங்க என்னாச்சி, கரண்ட் கட்டாயிடிச்சி!

விசுவசிப்போம், வாழ்வோம்,
நிலைவாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment