Sunday, January 17, 2021

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்:( சங்கீதம்.33:8)

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்:
( சங்கீதம்.33:8)


 "இது என்ன? புதுசா தெரிகிறது."


"புதுசு இல்ல. ரொம்ப பழசு. கற்பனை வாகனம்."

"அப்படின்னா?"

"இதுல ஏறி உட்கார்ந்தா போதும்.
நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் போகலாம்."

"சரி. ஏறி உட்கார்ந்து பார்ப்போமே."

ஏறி அமர்ந்தேன்.

வாகனம் பறந்து, நின்றது. இறங்கினேன். இடம் ஒரு தனியார் கம்பெனி அலுவலகம். Manager அறை.

நான் நிற்பது யாருக்கும் தெரியாது.


Manager நாற்காலியில் அமர்ந்திருந்தார், ஏதோ ஒரு file ல் கையெழுத்துப் போட்டுக் கொண்டு.

யாரோ கதவைத் தட்டுகிறார்கள்.

"Yes, come in."

"Good morning,Sir."

"Very good morning. உட்காருங்க."

கையில் கொண்டு வந்த file ஐ Manager முன் வைத்துவிட்டு உட்கார்ந்தார்.

"உங்களுக்கு எத்தனை வருச Service ?"

"பத்து வருசம்."

"ஆபீஸ் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?"

"நல்லா போய்க்கிட்டிருக்கு."

"எல்லோரும் Sincere ஆ வேலை செய்கிறாங்களா? நான் இன்றுதானே வந்திருக்கிறேன்.

தெரிஞ்சிக்கிடுவதற்காகக் கேட்டேன்."

வந்தவர் முகத்தைப் பார்த்தேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நன்றாகவே தெரிந்தது.

யாரையை வத்தி வைக்கதான் முதல் நாளே வந்திருக்கிறார்.

அவர் என்னென்ன சொன்னார் என்பதை எல்லாம் எழுத வேண்டுமானால் . Volume கணக்கில புத்தகங்கள் எழுத வேண்டும். எழுதி முடிக்கு முன் உலகமே முடிந்து விடும்.

 ரத்ன சுருக்தமாக:

இவர் பெயர் லூர்து என்று தெரிகிறது. அவர் வைத்துக் கொண்டிருந்த வத்தியில் செல்வம் என்ற பெயர் அடி பட்டுக் கொண்டிருந்தது.

உண்மையிலேயே அடிபட்டுக் கொண்டிருந்தது,  இரத்தக் காயங்களோடு.

"நீங்கள் வருமுன்பே உங்கள் பெயரைக் கெடுத்து வைத்திருக்கிறார் அந்த ஆள்."

'" என் பெயரையா ? அவரையே நான் இன்றுதான் பார்த்தேன். என்னை எப்படி அவருக்குத் தெரியும்?"

"தெரியவில்லை. ஆனாலும் நேற்றே உங்களைப் பற்றி என்னவெல்லாமோ சொன்னார், என்னிடமே."

"சரி, நான் கவனித்துக் கொள்கிறேன்."

வந்தவர் வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் அவர் பின்னாலேயே போனேன்.

அவர் உட்கார்ந்த Seatக்கு பக்கத்து Seat காரர்தான் செல்வம் என்று நினைக்கிறேன்.

ஏதோ ஒரு file ஐக் கையில் வைத்துக் கொண்டு கவலையுடன் உட்கார்ந்திருந்தார்.


அவர் நிர்வாகியிடம் சொன்னதை எல்லாம் கேட்டிருப்பாரோ?

இருக்கலாம். அவர்கள் பேசி முடித்த போது யாரோ கதவுப் பக்கமிருந்து வேகமாக நடப்பது போலிருந்தது.

அவர் இவராக இருக்குமோ?

இருக்கலாம்.

கவலையோடு உட்கார்ந்திருந்தவர் பியூனை அழைத்தார்.

"இந்த file ஐ manager டம் கொடுத்துவிடு."

அவர் வாங்கிக் கொண்டு போனார்.

நான் பியூனைப் பின் தொடர்ந்தேன்.

"சார், செல்வம் சார் தந்து விட்டாங்க."

"ஏன் அவர் வரமாட்டாராமோ?"

"தெரியல, சார் "

"போய் அவரை வரச் சொல்லுங்க."

செல்வம் வந்தார்.

"Good morning, sir."


"Good morning. நீங்க தான் செல்வமா?"

"ஆமா, சார்.''

"எத்தனை வருசம் செர்வீஸ்."

" பத்து வருசம், சார்."

" உங்களைப் பற்றி கேள்விப்பட்டேன்."

செல்வம் முகத்தில் வியர்த்துக் கொட்டியது. முகத்தைத் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தார்.

"பத்து வருசம் ஒரே Seat ல இருந்து சலிச்சிருக்குமே. உங்களுக்கு transfer க்கு பரிந்து பேசலாம் என்று நினைக்கிறேன்."

முகத்து வியர்வை அருவி போல் கொட்டியது.

"உங்கள் விருப்பம் சார்."

"உங்களுக்கு விருப்பம் இல்லையா?"

"வேலைக்கு வந்த பிற்பாடு நிர்வாகம் சொன்னபடி நடப்பதுதானே என் வேலை."

Manager பேப்பர்ல ஏதோ எழுதி, செல்வத்தின் கையில் கொடுத்தார்.


"Transfer order."

என்ன இந்த மனுசன். லூர்து சொன்னதை வைத்து, ஏதும் விசாரிக்காமலேயே பழி வாங்குகிறார்.

"Transfer செய்ய வேண்டியது நமக்கு மேல் உள்ளவங்க தான். நான் உங்களை எங்கே அனுப்ப பரிந்துரைக்கப் போகிறேன் என்பதை அதில் எழுதியிருக்கிறேன்."


செல்வம் பேப்பரை வாங்கினார். திறக்கவே இல்லை.

அதற்குள் பேப்பர் அவர் வியர்வையில் குளித்து விட்டது.

"திறந்து பாருங்க சார்."

மெதுவாகத் திறந்தார். முகம் கொஞ்சம் மாறியது. 


முற்றிலும் திறந்து வாசித்தார்.


"Sir, transfer ன்னு சொன்னிங்க."

 ''ஆமா. transferதானே.எழுத்தர் நாற்காலியில் இருந்து தலைமை எழுத்தர் நாற்காலிக்கு போவது ஒரு குட்டி transfer தானே.''


"ஒன்று சொல்லலாமா?" 

"சொல்லுங்க."

" இந்த புரோமோஷன லூர்து சாருக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். அவர் என்னைவிட சிறப்பாக பணிபுரிய கூடியவர்."

"50 percent சம்பளம் கூடுமே,
வேண்டாமா? "


"Sir, அவருக்கும் எனக்கும் ஒரே சர்வீஸ்தான்.

 அதோடு அவருக்கு திறமை அதிகம்.

 அது மட்டுமல்ல,  எனக்கு ஒரு பையன் தான். அவருக்கு மூன்று பெண்கள்.

 அதிக சம்பளம் என்னை விட அவருக்கு உதவியாக இருக்கும்.

 எனவே தயவு செய்து இந்த promotion ஐ அவருக்கே கொடுத்து விடுங்கள்."

"வந்த promotion ஐ வேண்டாம் என்று சொல்கிறவர் நீங்கள் ஒருவராகத்தான் இருக்கும்.

அவருக்கு கொடுக்க சொல்வதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமோ?"

"அவர் எனது நண்பர். நண்பருக்காக விட்டுக் கொடுப்பதில் தவறு எதுவும் இல்லையே!"


எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவர் இவரைப் பற்றி கோள் மூட்டி விட்டு போயிருக்கிறார். இவர் அவருக்காக சிபாரிசு செய்கிறார்!


"தம்பி, லூர்து சாரை கொஞ்சம் வரச்சொல்லு."

பியூன் கதவை திறக்கவும் லூர்து உள்ளே வந்தார்.

கண் கலங்கி இருந்தது.

வந்தவுடன் செல்வத்தின் கையை பிடித்துக்கொண்டு,

 "மன்னித்துக் கொள்ளுங்க, ப்ளீஸ். ஒரு பெரிய தப்பு செய்துவிட்டேன்.
உங்களது நல்ல மனதை அறியாமல். 

எங்கே எனக்கு புரோமோஷன் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்துதான் உங்களைப் பற்றியே இல்லாததும் பொல்லாததுமாக சாரிடம் சொல்லி விட்டேன்.

 நீங்கள் உங்களுக்கு கிடைத்த புரோமோஷனை எனக்கு தர சொல்லி சிபாரிசு செய்து கொண்டிருக்கிறீர்கள்.

 வேண்டாம் சார்.

 அதற்கு பொருத்தமானவர் நீங்கதான்."

என்று கூறிவிட்டு Manager ஐப் பார்த்து மன்னித்துக் கொள்ளுங்கள், சார். 

முதல் நாளே உங்களிடம் வந்து தப்பு செய்துவிட்டேன்

சார் ரொம்ப நல்லவர்.

 நான்தான் சுயநலத்திற்காக அவரைப்பற்றி கெடுத்து பேசிவிட்டேன்.

 இப்பொழுது இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படிப்பட்ட செயல் இனிமேல் நடக்காது."

நிர்வாகி சொன்னார்,

 "இதுல ஒரு பெரிய காமெடி.

 இன்றுதான் நான் பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.  

இன்றைக்கு யாருக்கும் புரோமோஷன் கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு வரவில்லை.

 ஆனால் காலையில் எழுந்தவுடன் பைபிள் வாசிக்கும்போது, நமக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று ஆண்டவர் கூறிய வரிகளை வாசித்தேன்.

 இன்று யாராவது எனக்கு தீமை செய்தால் அவர்களுக்கு பதிலுக்கு நன்மை புரிய வேண்டும்,

அதாவது வாசகத்தை வாழ்வாக வேண்டும்,

 என்ற திட்டத்தோடு வீட்டை விட்டு கிளம்பினேன்.


 அலுவலகம் வந்தவுடன் செல்வம் சார் என்னை பற்றி கெடுத்து பேசியதாக லூர்து சார் சொன்னவுடன், நான் தீர்மானித்து விட்டேன்.

 செல்வம் எனக்கு தீங்கு இழைத்து இருக்கிறார், அவருக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என்று.

ஆகவேதான் இன்று அவரை வரவழைத்து புரமோஷன் கொடுத்திருக்கிறேன்.

லூர்து சார், நீங்கள் செல்வத்திற்கு செய்த கெடுதிக்கு அவருக்கு நன்மை தான் கிடைத்திருக்கிறது.

ஆண்டவர் உங்கள் தீங்கிலிருந்து. அவருக்கு நன்மை வரவழைத்திருக்கிறார்.

 நானும் இன்று வாசித்த வாசகத்தை வாழ்வாக்க நீங்கள் உதவியிருக்கிறீர்கள்.

உங்களுக்கு எனது நன்றி.

செல்வம், உங்களுக்கு கிடைத்த பிரமோஷன் இறைவன் கொடுத்தது, எனது மூலமாக.


 இறைவன் கொடுத்ததை மறுக்கக் கூடாது."

லூர்து, "இன்று இறைவாக்கை வாழ்வாக்கியதினால் இறைவன் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பார்த்திருக்கிறோம்."

Manager, "உண்மைதான் இறை வாக்கை வாசித்தால் மட்டும் போதாது வாழ்வாக்க வேண்டும்.

உணவை வாயில் போட்டு அப்படியே விழுங்கி விடக்கூடாது.

 நாவில் உமிழ் நீரோடு சேர்த்து அதை சுவைத்து விழுங்கினால் தான் அது எளிதில் ஜீரணமாகி நமது உடலோடு கலக்கும்.

 இறைவாக்கை வாசித்து, அப்படியே விட்டு விட்டுப் போனால்

 அதனால் நமக்கு எந்த பயனும் இல்லை.

 நமது வாழ்வில் வாழ்ந்து அதை சுவைத்தால் தான் இறைவன் எவ்வளவு நல்லவர் என்று நமக்கு தெரியும்." 

செல்வம், "இதில் இன்னொரு வேடிக்கை பாருங்கள்.

 செயல்பட்டது நீங்கள் இருவரும்.

 பயன் பெற்றது நான்.

நான் வேறொரு வேலையாக உங்கள் ரூமுக்கு வந்தபொழுது உள்ளே என் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது..

 உடனே நின்று கவனித்தேன்.

 அப்போதுதான் தெரிந்தது லூர்து என்னைப் பற்றிய கெடுத்து பேசி கொண்டிருக்கிறார் என்று.

 நான் உடனே அவருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து என் இருக்கைக்குச் சென்றேன்.

 அதனால்தான் நீங்கள் எனக்குத் தந்த புரோமோஷனை அவருக்கு கொடுக்க ஆசைப்பட்டேன். அதனால்தான் அவருக்காக சிபாரிசு செய்தேன்.  

 ஆண்டவரின் வழிமுறைகள் எவ்வளவு அற்புதமானவை!"

ஒரே வசனம் மூவர் வாழ்விலும் செயல்பட்டிருக்கிறது.

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று நானும் சுவைத்து பார்த்துக்கொண்டே

 கற்பனை வாகனத்துக்குள் ஏறினேன். அது பின் நோக்கிப் பறந்து நின்றது, ஏதோன் தோட்டத்திற்குள்.

ஏறிட்டுப் பார்த்தேன்.

ஏவாள் ஒரு ஆப்பிள் பழத்தைக் கடித்துக் கொண்டே.........

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment