Monday, October 12, 2020

"எனவே, மனந்திரும்பியவருக்கேற்ற செயல்களைச் செய்துகாட்டுங்கள்."(லூக்.3: 8)

http://lrdselvam.blogspot.com/2020/10/3-8.html



"எனவே, மனந்திரும்பியவருக்கேற்ற செயல்களைச் செய்துகாட்டுங்கள்."
(லூக்.3: 8)
         *---------------------------*
"என்னப்பா செஞ்சிகிட்டு இருக்கீங்க?"

"மேஜை முழுவதும் ஒரே எறும்பு."

"மேஜை முழுவதும் ஒரே எறும்பா? 
அவ்வளவு பெரிய எறும்பா? காட்டுங்க."

"ஏல, கிண்டலா? மேஜை முழுவதும் எறும்புகள். போதுமா?"

"ஒரு எறும்பையும் காணல!"

"இப்பதான் துடைத்து முடித்தேன்."

 சொல்லி முடிக்கும் முன் எறும்புகள் பழையபடி மேஜைக்கு  வர ஆரம்பித்தன.


" அப்பா, எறும்பு!''

அப்பா துடைக்க ஆரம்பித்தார்.

" எத்தனை தடவைதான் துடைப்பது? இது மூன்றாவது முறை."

"அப்பா, எத்தனை தடவை துடைத்தாலும் திரும்பவும் வரும்."

"ஏண்டா அப்படி சொல்ற."

ஒரு சின்ன குட்டி உள்ளே ஓடி வருகிறது.

"அப்பா."

"என்னடா?"

"நீங்கள் நேற்று வாங்கித்தந்த சாக்லெட்டை காணல அப்பா."

"நீ தின்றிருப்பாய்."

"நான் திங்கவில்லை."

"உன்னுடைய சாக்லேட்ட எறும்பு தின்றுவிட்டது."

"பொய் சொல்லுத.  நீதான் சாப்பிட்டு இருப்ப."  

"இல்ல, இங்க பார்."

பொடியன் மேஜை மீது இருந்த ஒரு புத்தகத்தை தூக்குகிறான்.

அடியில் ஒரு சாக்லேட், சுற்றிலும் எறும்பு கூட்டம்.

குட்டி சட்டென்று பாய்ந்து சாக்லேட்டை எடுக்க போனாள்.

 ஆனால் அப்பா அதை உடனே எடுத்து

" எறும்பும் தின்ற சாக்ட்டை தின்னக் கூடாது."

" எறும்பு  தின்றதைச் சாப்பிட முடியாது. நான் எறும்பு தின்னாமல் விட்டு வைத்திருப்பத் தின்பேன்.''

"சீ.... அது எச்சி. உனக்கு வேறு சாக்லேட் வாங்கி தருகிறேன்.

நீ ஏன்டா தங்கச்சி சாக்லெட்டை எடுத்து மேஜை மேலே, புத்தகத்துக்கு அடியில வச்ச? 

உன்னால மேஜை முழுதும் எறும்பு."

மேஜை மீது இருந்த எல்லாப் பொருள்களையும் அப்புறப்படுத்தி விட்டு 

திரும்பவும் நன்கு துடைத்தான்.  அதன்பிறகு எறும்பு வரவில்லை.

எதற்காக இந்த எறும்புக் கதை?.

மேஜைமேல் எறும்பு ஏறக் காரணம் என்ன?
'
 மேஜையின் மேலிருந்த சாக்லேட்.

 சாக்லேட்டை அப்புறப்படுத்தாமல் மேஜையை எத்தனை தடவை துடைத்தாலும் எறும்பு தன் வருகையை நிறுத்தாது.

 எறும்பின் வருகைக்கு காரணம் எதுவோ அதை அப்புறப்படுத்தி விட்டால்  அது திரும்ப வராது.

உள்ளத்தை தூய்மையாக வைத்திருந்தால் அதைத் தேடி கெட்ட ஆசைகள் எதுவும் வராது.


ஒரு கட்டடத்திற்குள் நிறைய மதுபானங்கள் இருந்தால் அங்கே குடிகாரர்கள் கட்டாயம் வருவார்கள். 

புத்தகங்கள் இருந்தால் வாசிக்க வாசகர்கள் வருவார்கள்.

அதேபோல உள்ளம் அசுத்தமாக இருந்தால் பாவம் உள்ளே  நுழையும்.

சுத்தமான தண்ணீர் எடுத்து வந்து ஒரு பாத்திரத்திற்குள் ஊற்றுகிறோம்.

ஊற்றிவிட்டு தண்ணீரைப் பார்த்தால் அது அழுக்காக இருக்கிறது.

சுத்தமான தண்ணீர் எப்படி அழுக்காக மாறியது?

பாத்திரத்தின் உள் பகுதி அழுக்காக இருக்கிறது. அதன்மேல் சுத்தமான ஊற்றும்போது அதுவும் அழுக்காகி விடுகிறது.

அதேபோல்தான் தூய்மையற்ற உள்ளத்துக்குள் எது விழுந்தாலும் அதுவும்  தூய்மையற்றதாகவே மாறிவிடும்.


மனந்திரும்புதல் என்றால் இறைவனுக்கு எதிரானவற்றையே நினைத்துக்கொண்டிருந்த  மனம் இறைவனை நோக்கி  திரும்புவது.

இறைவன் பரிசுத்தமானவர்.

இறைவனுக்கு எதிரான எதுவும் பரிசுத்தமாக இருக்க முடியாது. 

இறைவனுக்கு எதிரானவற்றையே நினைத்துக்கொண்டிருந்த  மனம் தூய்மையற்றது.

இறைவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 

தூய்மை அற்ற மனம் தூய்மையானதாக மாற வேண்டும். ஆன்மீக வாழ்வில் இதற்குப் பெயர் மனமாற்றம்.

புற வாழ்வில் நடக்கும்போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு  நடையை தொடரலாம்.

ஆனால் அகவாழ்வில் ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

ஒன்று முன் நோக்கி நகர்வோம் அல்லது பின் நோக்கி நகர்வோம்.

நகராமல் இருக்க முடியாது.


மனம் மாறிய பின் அதாவது மனம் தூய்மை அடைந்த பின்,

தூய்மையின் அளவை அதிகரித்துக்கொண்டே போக வேண்டும்.

After becoming holy, we should keep on becoming holier.

தூய்மையின் அளவை அதிகரிப்பது எப்படி?

தூய்மையான உள்ளத்தில் தோன்றும் தூய்மையான எண்ணங்களை செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

தூய்மையான மனம் என்றால்
 இறைவனால் நிறைந்த மனம்.

இறை அன்பினால் நிறைந்த மனம்.

இறை அன்பை  இறையன்புச்
செயல்களில் காட்ட வேண்டும்.

இறைவனை நோக்கி,

 ''இறைவா, உம்மை நான் அன்பு செய்கிறேன் என்று சொன்னால் போதாது."

செயல் இல்லாத அன்பை உயிர் அற்ற அன்பு என்பார்கள்.

உயிர் அற்ற பொருள் தானே அசையாது.

உயிர் உள்ள பொருள் தான் உயிரோடு இருப்பதை  அசைவின் மூலம் வெளிக்காட்டும்.

 அதே போல் தான் அன்பு உள்ளவனும் அன்பை தன் அன்புச் செயல்கள் மூலம் காட்டுவான்.

செயல்கள் பெருக பெருக அன்பின் அளவும் பெருகும்.

நாம் நமது அயலானுக்குச் செய்யும் அன்புச் செயல்கள் புறச் செயல்கள், அதாவது நமது கண்களால் பார்க்கக் கூடிய செயல்கள்.

செயலெதுவும் செய்யாது இருப்பவன் சோம்பேறி.

 ஆன்மீகத்தில் சோம்பேறித் தனத்திற்கு ஒரு பெயர் உண்டு.

 சாத்தானின் பட்டறை.

 மனித மனம் எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும்.

எதுவும் செய்யாது இருக்கும் மனதில் சாத்தான் புகுந்து

 வேண்டாத எண்ணங்களை தூண்டிவிட்டுக் கொண்டே இருப்பான்,

 எப்போதும் மனம் ஏதாவது செயல்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.


 அகச் செயல்கள் என்றால்?

 மனது மட்டும் செய்யும் செயல்கள்.

மனதில் இருக்கும்

 இறைவனை ஆராதிப்பது,

 அவருக்கு நன்றி சொல்வது,

 அவரிடம் நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது,

  அவரிடம் ஏதாவது விண்ணப்பங்களைச்   சமர்ப்பிப்பது

அவரைப்பற்றி தியானிப்பது,

 இவற்றில் ஏதாவது ஒரு செயலை மனது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

நாம் செய்யவேண்டிய  பிறர் சிநேக சேவைகளுக்கான திட்டங்களை மனதில் தீட்டலாம். 

மனித மனதால்  ஒரு வினாடி கூட ஓய்வாக இருக்க முடியாது.

 ஏதாவது ஒரு சிந்தனையை செய்து கொண்டே இருக்கும். 

சிந்தனை தான் அதன் வேலை.

நாம் நமது மனதிற்கு வேலை கொடுக்காவிட்டால் 

 தனது வேலையை கொடுப்பதற்காக  சாத்தான் தயாராக இருப்பான்.

ஆகவே உள்ளத்தின் தூய்மையை கெடாமல் வைத்திருக்க வேண்டுமென்றால் 

நமது உடல் ஓய்வு எடுக்கும் போதும் உள்ளத்திற்கு ஓய்வு கொடுக்க கூடாது.

"என்னடா செய்கிறாய்?"

"சும்மா இருக்கிறேன்,"

"சும்மான்னா?''

"வேலை ஒன்றும் இல்லை."

"வேறு வேலை இல்லா விட்டால் நல்ல புத்தகங்களை  வாசிக்கலாம்,

 ஏதாவது எழுதலாம்,   

ஜெபம் சொல்லலாம். 

அல்லது தூங்கலாம். 

சும்மா மட்டும் இருக்கக்கூடாது.

 மனதில் வேண்டாத எண்ணங்கள் வருவதற்கு காரணமே நாம் சும்மா இருப்பதுதான்.

நமது மனது ஒரு விநாடி கூட சும்மா இருக்காது.

நாம் தூங்கும்போது கூட,
அதாவது, 

நாம் அதற்கு ஒரு வேலையும் கொடுக்காமல் இருக்கும் போது கூட,

அதுவாகவே நமது அடிமனதில் பதிவாகியிருக்கிற ஏதாவது பழைய எண்ணங்களை கொண்டு வந்து அசைபோட்டுக் கொண்டே இருக்கும்.

அதைத்தான் கனவு என்கிறோம்.

பலவித பதிவுகளை எடுத்து கதம்பம் போல அசைபோடும்.

நான் எப்போதும் நல்லவற்றையே நினைப்பதை இயல்பாகக் கொண்டிருந்தால் அடிமனதில் பதிவுகளும் நல்ல எண்ணங்களாகவே இருக்கும்.

கனவுகளும் மகிழ்ச்சியை தரும்.

எப்போதும் அசிங்கமாக நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு வரும் கனவுகளும் அசிங்கமாக இருக்கும்.

மனதில் எப்போதும் பயந்து கொண்டே இருப்பவர்களுக்கு கனவுகளும் பயங்கரமாக தான் இருக்கும். 

எப்போதும் தூய்மையானவற்றையே  எண்ணுவோம்.

நமது சொல்லும், செயலும் தூய்மையாக இருக்கும்.

நாம் எப்போதும் பரிசுத்தமானவர்களாகவே இருக்க வேண்டும் என்பது நமது ஆண்டவரின் ஆசை.

அவரின் ஆசையை நிறைவேற்றுவது மட்டுமே நமது வாழ்வின் முழு நேர பணியாக இருக்க வேண்டும்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."
(மத். 5:8)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment