Wednesday, October 7, 2020

*"கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக."*(பிலிப்.2:5)

http://lrdselvam.blogspot.com/2020/10/25.html


*"கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக."*(பிலிப்.2:5)

*________________________________*


நம்மைப் பொறுத்தமட்டில் சாணம் ஒரு கழிவுப் பொருள்.


ஒரு விபசாயியைப் பொறுத்தமட்டில் அது உரம்.


நம்மைப் பொறுத்தமட்டில் கிழிந்த தாள் waste paper.


பழைய பேப்பர் வியாபாரிக்கு அது வணிக பொருள். (Commercial Commodity.) 


ஒரு பொருளின் மதிப்பு அதற்குள் இல்லை,


 மாறாக அதை பார்ப்பவர்களுக்குள் இருக்கிறது.


மருத்துவ மனநிலையோடு பார்ப்பவர்களுக்கு urine கூட ஒரு மருந்துதான்.


ஒருவருக்கு Sweet தின்பண்டம். இன்னொருவருக்கு அதுவே விஷம்.


நிகழ்ச்சி ஒன்றாய் இருக்கும், 

அதற்கான rection ஆளுக்கு ஆள் மாறுபடும். 


திடீரென்று அரசு பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என்று அறிவிக்கும்.


மாணவர்களுக்கு கொண்டாட்டம்.


ஆசிரியர் Syllabusஅ எப்படி முடிக்க போகிறோமோ என்று கவலைப் படுவார்.


H.M Term daysஅ  எப்படி adjust செய்ய  என்ற கேள்விக்குறியோடு இருப்பார்.


பார்ப்பவரின் மனநிலைக்கு ஏற்ப நிகழ்ச்சியின் பொருள் மாறுபடும்.


ஆன்மீகத்தில் இரண்டு வித மனநிலைகள் (mindsets) உண்டு.


உலக மனநிலை, கிறிஸ்துவின் மனநிலை.


யார் எந்த மனநிலையோடு பார்க்கிறார்களோ அதற்கு ஏற்ப நிகழ்ச்சியின் பொருள் மாறுபடும்.


*துன்பத்தை எடுத்துக்கொள்வோம்.*


*உலக மனநிலையோடு  பார்ப்பவர்களுக்கு அது ஒரு சாபம் போல் தோன்றும்,*


 *ஆனால் கிறிஸ்துவின் மனநிலையோடு பார்ப்பவர்களுக்கு அது ஆசீர்வாதம்.*


   *கிறிஸ்துவன்  என்று சொன்னாலே  கிறிஸ்துவின் மனநிலை உள்ளவன் என்பதுதான் பொருள்.*


நம்மிடம் உலக மனநிலை இருந்தால் நம்மால் கிறிஸ்துவின் சீடர்களாக இருக்க முடியாது.


கிறிஸ்து பிறந்த அன்று வானதூதர்கள் 


"நல்மனதோர்க்குச் சமாதானம்" என்று பாடினார்கள்.


இயேசு சமாதானத்தின் தேவன்.


மனிதன் படைக்கப்பட்ட போது இறைவனோடு நல்லுறவில், அதாவது, சமாதானத்தோடு இருந்தான்.



 ஆனால் அவன் செய்த பாவத்தினால் இறைவனோடு நமக்கு இருந்த உறவு முறிந்தது, சமாதானமும் முடிந்தது.


 *மனிதன் இழந்த சமாதானத்தை மீட்டுக் கொடுப்பதற்காகவே இறை மகன் மனிதனாக பிறந்தார்.*  


இயேசு இயல்பிலேயே நல் மனது உள்ளவர்.


நமது மனதும் இயேசுவின் மனதை போல நல் மனதாக இருந்தால்தான் இழந்த சமாதானம் மீண்டும் கிடைக்கும்.


நாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ வேண்டுமென்றால் முதலில் நமது மனம் மாற வேண்டும்.


*நமது மனநிலை கிறிஸ்துவின் மனநிலையாக மாற வேண்டும்.*


 உலக மனநிலையோடு நாம் என்ன செய்தாலும் அதற்கு ஆன்மீக மதிப்பு எதுவும் இல்லை.


Whatever we do with a worldly mindset has no spiritual value.


நமது பெயர்  வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதற்காக


 நமது சொத்தை முழுவதும் ஏழைகளுக்குத் தானமாகக் கொடுத்தால் 


இறைவன் முன்னிலையில் அதற்கு எந்தவித மதிப்பும் இல்லை.


உலக வரலாற்றில் வேண்டுமானால் இடம் இருக்கும்.


*ஆனால் கிறிஸ்துவின் மனநிலையோடு ஒரு பைசா தானமாக கொடுத்தாலும் அதற்கு இறைவன் முன் நித்திய மதிப்பீடு (eternal value) இருக்கும்.*


"கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை.


7 ஆனால், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,


8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."

(பிலிப்.2:6-8)




சர்வ வல்லப கடவுள் எந்தவித மதிப்பும் இல்லாத நம்மை மீட்க,


அடிமையின் தன்மை பூண்டு


மனித உருவில் தோன்றி,


சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குத்


தம்மைத் தாழ்த்திக்


கீழ்ப்படிபவரானார்.


சர்வ வல்லப கடவுளின் மனநிலை:


காலத்திற்கு அப்பாற்பட்டவரை  காலத்திற்குள் நுழைய வைத்தது. 


உருவமற்றவரை மனித உருவை எடுக்கச் செய்தது.


எல்லாவற்றுக்கும் மேலானவரை

தன்னைத்தானே தாழ்த்த வைத்தது.


 சர்வத்திற்கும் அதிபதியானவரை கீழ்ப்படிய வைத்தது.


 மரணமே அற்றவர்க்குச் சிலுவைச் சாவைக் கொடுத்தது.


இதெல்லாம் எதற்காக?


நம்மை மீட்பதற்காக!


நம்மை மீட்பதற்காக இத்தனை இழப்புகளையும் தாமாகவே மனமுவந்து ஏற்றுக்கொண்ட கடவுகளுக்காக 


நாம் எதையெல்லாம் இழக்க தயாராக இருக்கிறோம்?


உண்மையில் அவருக்காக இழப்பதற்கு நமக்குச் சொந்தமான எதுவும் நம்மிடம் இல்லை.


 நாமே முழுவதும் அவருக்கு சொந்தமானவர்கள் தான்.


அவருக்குச் சொந்தமானவற்றை  அவருக்காக இழக்க நமக்கு ஏன் மனம் வரவில்லை?


ஏனெனில் நமக்கு கிறிஸ்துவின் மனநிலை இல்லை.


*கடவுளுக்காக நம்மையே இழக்க தயாராக இருக்கக்கூடிய மனநிலை நமக்கு வேண்டும்.*


We should have a mindset which is ready to sacrifice our whole self for God.


கிறிஸ்துவுக்காக தன்னையே தியாகம் செய்ய மனம் இல்லாதவன் கிறிஸ்துவின் சீடனாக இருக்க முடியாது.



இறைவன் நித்திய பேரின்பத்தில் வாழ்பவர்.


துன்பம் அவரது இயல்பில் இல்லை. அவரால் துன்ப படவே முடியாது.


ஆனாலும் நம்மை மீட்பதற்காக  துன்பப்பட ஆசைப்பட்டார்.

 

 

*தேவசுபாவத்தில் அது முடியாதாகையால் நமக்காக துன்பப்படுவதற்காகவே மனிதனாகப் பிறந்தார்.*


துன்பத்தால் அவரை தேடி போக முடியாது,


 ஆகவே அவரே துன்பத்தை தேடி வந்தார்.


அவர் தாமாகவே மனமுவந்து சிலுவை மரணத்திற்குத் தன்னைக் கையளித்தார்.  


தான் நேசிப்பவர்களுக்காகச் சிலுவையைச் சுமக்க அவரது மனநிலை தூண்டியது.


நாம் நேசிக்கும் இறைவனுக்காக  நமக்கு வரும் சிலுவையை மனமுவந்து சுமக்க நமது மனநிலை தூண்ட  வேண்டும்.


சிலுவையை நமது  பாரமாகக் கருதக்கூடாது.


 ஆசீர்வாதமாகக் கருத வேண்டும்.


*அன்னைத் தெரெசாவை ஏழை, எளியவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கத் தூண்டியது எது?*


*அவளிடம் இருந்த இயேசுவின் மன நிலை.*


இயேசு மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காகவே பிறந்தார் தெரசாவும் தான் மற்றவர்களுக்கு சேவை செய்யவே பிறந்திருப்பதாக கருதினார்.


 இயேசுவின் மனநிலையோடு அவள் ஏழைகளுக்குக் சேவை செய்தார்.


நாம் இயேசுவின் மன நிலையை பெறுவது எப்படி?


ஜெபம், தியானம்.


நாம் இயல்பிலேயே பலகீனமானவர்கள். 


நம்மைச் சுற்றி நடப்பவைகள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன,


 அவற்றை எவ்வாறு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்


 அல்லது அவற்றிலிருந்து நம்மை எப்படி காப்பாற்றி கொள்ளலாம்


 என்றுதான் நினைக்கத்தோன்றும். இது மனித இயல்பு.


ஆனால் நாம் கிறிஸ்தவர்கள்.


கிறிஸ்துவை அறிந்தவர்கள்.


நாம் நற்செய்தி வாசிப்பது  கிறிஸ்துவை பற்றி அறிவதற்காக அல்ல. கிறிஸ்துவை அறிவதற்காக.


கிறிஸ்துவை பற்றி அறியும்போது நமக்கு கிடைப்பது அறிவு மட்டுமே. (Knowledge only)


கிறிஸ்துவை அறிந்தால்தான் 


நமது குணங்கள் அவரது குணங்களாக மாறும்.


 நமது மனநிலை அவரது மன நிலையாக மாறும்.


யாரை எப்போதும் மனதில் அன்புடன் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ,


அவர் நாம் அறியாமலேயே நமது மனதை ஆக்கிரமித்துக் கொள்வார்.


அவரது மனநிலை நமது மனதில் பதிந்துவிடும்.


இயேசுவைத் தியானிப்பதன் மூலமும் அவரோடு உரையாடுவதில் மூலமும் 


நாம் அவரின் மனநிலையை நமது மனநிலையாக ஆக்கிக் கொள்ளலாம்.


அவரது பாடுகளை ஆழ்ந்து தியானித்தால் 


நமக்காக பாடுபட்ட இயேசுவுக்காக நாமும்  பாடுபட தயாராகி விடுவோம். 


நம்மால்தீர்வு காண முடியாத ஏதாவது பிரச்சனைகள் நமது வாழ்வில் ஏற்பட்டால் 


"இந்த இடத்தில் இயேசு இருந்தால்  எவ்வாறு செயல்படுவார்?"


என்று தியானித்தாலே, தீர்வு தானே வரும்.


நமக்கு வெகுநாள் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நபர் நம்மிடம் ஒரு உதவி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.


 இயேசுவை நினைத்தால்

  உடனே உதவி செய்து விடுவோம்.


*இயேசுவின் மனநிலையோடு எதைச் செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.*


இயேசுவின் மனநிலையோடு வாழ்வோம்.


நித்திய வாழ்வில் அவரோடு இணைவோம்.


லூர்து செல்வம்.

No comments:

Post a Comment