Three in one.
************---*****-*************
காரணமின்றி காரியமில்லை.
No effect without cause.
படைத்தவர் இன்றி பிரபஞ்சம் இல்லை.
இது Logic.
Logic மூலம் கடவுள் இருக்கிறார் என அறிந்தோம்.
இயேசு மூலம் கடவுளைப் பற்றி அறிந்தோம்.
தந்தை, மகன், தூய ஆவி மூன்று ஆட்கள், ஒரே கடவுள் என்ற இறை உண்மையை இறை மகன் இயேசு நமக்கு வெளிப்படுத்தினார். (revealed)
,
'இருக்கிறவர் நாமே.' (I am who I am.) என்று மோயீசனிடம் தன் பெயரை வெளிப்படுத்தினார் ஆதியும் அந்தமும், இல்லாத கடவுள்.
'அ'கரமும், 'ந'கரமும் அவரே.
(நமது மொழியின் முதல் எழுத்து 'அ'. இறுதி எழுத்து 'ந')
மூவொரு கடவுள் உண்மை
புதிய ஏற்பாடு முழுவதுமே விரவிக் கிடக்கிறது.
இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, வானம் திறந்தது.
பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து, புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார்.
வானத்திலிருந்து குரலொலி உண்டாகி,
" நீரே என் அன்பார்ந்த மகன். உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் "
இங்கே தந்தை, மகன், தூய ஆவி ஒரே கடவுள் உண்மை வெளிப் படையாகவே வெளிப் படுத்தப்பட்டது.
இயேசு தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வந்ததாக அடிக்கடி கூறுகிறார்.
"என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான்."
(அரு. 14:9)
ஆகிய இயேசுவின் வார்த்தைகள் இயேசு தந்தையோடு ஒரே கடவுள் என்ற உண்மையை வெளியிடுகின்றன.
"ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."
என்ற வசனத்தோடு அருளப்பர் நற்செய்தியைத் தொடங்குகிறார்.
வார்த்தை (Word) மனதில் தோன்றும் எண்ணத்தைக் குறிக்கிறது.
எண்ணம் வார்த்தையானால் தான் வெளிப்படுத்த முடியும்.
வார்த்தை இறைமகனாகிய இயேசுவைக் குறிக்கிறது.
தந்தை நித்திய காலமாக தன்னை எண்ணுகிறார்.
தந்தையின் எண்ணம் தான் மகன்.
தந்தைக்கும், மகனுக்கும் நித்திய காலமாக இருக்கும் அன்புதான் பரிசுத்த ஆவி.
தந்தை கடவுள்.
மகன் கடவுள்.
பரிசுத்தஆவி கடவுள்.
மூவரும் ஒரே கடவுள்.
இறைமகன் இயேசு நித்தியமாகக் கடவுளோடு இருக்கிறார்,
அதாவது,
நித்திய காலமாக கடவுளிடமிருந்து பிறக்கிறார்,
ஆகவே நித்திய காலமாகவே அவர் இறைமகனாக இருக்கிறார்.
இறைமகன் நித்திய காலமாக இறைவனாக இருக்கிறார்.
இறைமகன் இறைத்தந்தையினுள்
ஒரே தேவசுபாவத்தோடு இருப்பதால்
தந்தையும், மகனும் ஒரே கடவுள்தான்.
தந்தைக்கும், மகனுக்கும் இடையே உள்ள அன்பாகிய பரிசுத்த ஆவியும் நித்திய காலமாக இறைவனாக இருக்கிறார்.
தந்தை மகனுள்ளும், பரிசுத்த ஆவிக்குள்ளும் இருக்கிறார்.
மகன் தந்தைக்குள்ளும், பரிசுத்த ஆவிக்குள்ளும் இருக்கிறார்.
பரிசுத்த ஆவி தந்தைக்குள்ளும், மகனுள்ளும் இருக்கிறார்.
மூவருக்கும் ஒரே தேவ சுபாவம், ஒரு அன்பு, ஒரே வல்லமை, ஒரே ஞானம். ஆகவே ஒரே கடவுள்.
திரி ஏகதேவன் உண்மையை
அளவுள்ள அறிவுள்ள நம்மால் முழுவதும் புரிந்து கொள்ள முடியாது.
ஆயினும் ஓரளவாவது நாம் புரிந்து உதவுவதற்காகத் தான் கடவுள் அவரது சாயலாகப் படைத்திருக்கிறார்.
நம்மைப் பற்றி நாமே கொஞ்சம் சிந்திப்போம்.
Mr.X ஒரு ஆள். அவருக்குள் மூன்று தத்துவங்கள் உள்ளன.
புத்தி, அறிவு, மனது.
Intellect, knowledge, mind.
புத்தியிலிருந்து
அறிவு பிறக்கிறது.
அறிவு மனதில் இடம் பிடிக்கிறது.
தத்துவங்கள் மூன்று, ஆள் ஒன்று.
அடுத்து
சிந்தனை, சொல், செயல்.
சிந்தனை சொல்லாகிறது.
சிந்தனையும், சொல்லும் சேர்நது, செயலாகின்றன..
சிந்தனை, சொல், செயல். மூன்று , ஆள் ஒன்று.
எவ்வளவு முயன்றாலும்
'அளவுகடந்த இறைவனை அளவுள்ள நம்மால் முழுவதும் புரிய முடியாது.
அவருடைய சாயலாகிய நம்மால் அவரை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.
ஆனால் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வுலகில் எவ்வளவு முயன்றாலும் சாயல் original ஆக முடியாது.
இவ்வுலகில் என்றேன்.
ஏனெனில் மறுவுலகு ஒன்று இருக்கிறது.
மறுவுலகில்
சாயல் original லோடு இணையும்.
அப்போது நமது புரிதல் அதிகமாகும்.
மூவொரு கடவுள் மனிதர்களை அவரது சாயலில் படைத்திருப்பதால்
மனித இனமே அன்பில் ஐக்கிமாக வேண்டும் என்று விரும்புகிறார்.
"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.
தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்,
அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்: "
நாம் ஒன்றாய் இருப்பதுபோல்
அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி,
நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.
"இவ்வாறு
நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால்,
அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக:
இங்ஙனம், நீர் என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல்
அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்."
(அரு.17:23)
ஆதி முதல் நம்மமோடு இருக்கும்
வார்த்தையின்
வார்த்தைகள்
நம்மை வழிநடத்துவனவாக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment