Monday, June 8, 2020

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."(மத், 5:3)

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."
(மத், 5:3)
********************************

இரண்டு படகுகளில் ஒரே நேரத்தில் கால் வைக்கக்  கூடாது என்பார்கள்.

ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு ஐஸ் ஸ்கிரீம் கிடைக்கும்.

ஒரே நேரத்தில் ஐந்து ரூபாய்க்கும் ஐஸ் ஸ்கிரீமுக்கும் ஆசைப் படக் கூடாது.

ஐந்து ரூபாயை இழந்தால்தான் ஐஸ் ஸ்கிரீம் கிடைக்கும்.

மண்ணரசு இவ்வுலகம்.
விண்ணரசு இறையுலகம்

மண்ணரசு லௌகீகம்.
விண்ணரசு ஆன்மீகம்.

மண்ணரசா? விண்ணரசா?
இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.

இவ்வுலக இன்பங்கள்தான் வேண்டும் என்று ஆசைப் பட்டால்,

மறுவுலகை மறந்து விட வேண்டும்.

ஆனால், இவ்வுலகுக்கு மட்டும் ஆசைப்படுவோர்க்கு இரண்டு உலகங்களும் கிடைக்காது.

ஏனெனில் இவ்வுலகம் தற்காலிகமானது. மறுவுலகம் தான் நிரந்தரமானது.

ஆன்மீக வாழ்வைச் சிறப்பாக வாழ்வோருக்கு விண்ணரசு உறுதி.

வெளகீக வாழ்வை மட்டுமே வாழ்வோருக்கு விண்ணரசு இல்லை.

இடபோ பல கேள்விகள் எழும்.

இறைவன் நம்மைப் படைத்தது இவ்வுலகில் தானே.

இவ்வுலகிற்கு ஆசைப் படாமல் மறுவுலகிற்கு மட்டும் ஆசைப்பட்டால் பிறக்கும் முன்பே இறந்து விட வேண்டுமா?

இவ்வுலக வாழ்வுக்கு ஆசைப்படக்கூடாது என்றால் இவ்வுலக வாழ்வை ஏன் கடவுள் தந்தார்?

இவ்வுலகத்துக்கும் நமக்கும் என்ன உறவு?

இது போன்ற கேள்விகளுக்கு விடையாகத்தான் இயேசு,

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."

என்றார்.

எளிய மனது என்றால் என்ன?

இவ்வுலக செல்வங்கள் மீது பற்று இல்லாத, ஆசைப் படாத மனது தான் எளிய மனது.

இவ்வுலக செல்வமே இல்லாதவனை ஏழை என்போம்.

இவ்வுலக செல்வங்களை நிரம்பப் பெற்றவனை செல்வந்தன் என்போம்.

இவ்வுலக செல்வங்கள் இல்லையோ, குறைவாக இருக்கிறைனவோ, நிறைய 
இருக்கிறைனவோ - 

எப்படி இருந்தாலும் அவற்றின் மீது பற்று இல்லாதவனே 'எளிய மனத்தோன்.'

ஒன்றுமே இல்லாத ஏழை கூட செல்வங்களுக்கு ஆசைப்பட்டால் அவனிடம் எளிய மனது இல்லை.

இவ்வுலக கணக்குப்படி ஒருவனிடம் செல்வங்கள் நிரம்ப இருந்தாலும் 

அவற்றின் மீது பற்று இல்லாமல் வாழ்ந்தால்,

மனதளவில் அவன் எளியவன்தான்.

இயேசு தான் போதித்ததை எல்லாம் சாதித்துக் காட்டியவர்.

இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்துச் செல்வங்களுக்கும் உரியவர் கடவுள்தான்.

ஆனாலும் அவரே படைத்த அவரது உலகில் மனிதனாய்ப் பிறக்க

பணக்கார அரசியைத் தாயாக தேர்ந்தெடுக்கவில்லை,

ஒரு ஏழைக் கன்னியைத்தான் தேர்ந்தெடுத்தார்.

பிறப்பிடமாக அரண்மனையைத் தேர்ந்தெடுக்கவில்லை,

ஒரு சத்திரத்தைக் கூட தேர்ந்தெடுக்க வில்லை,

ஒரு மாடடைத் தொழுவைத்தான் தேர்ந்தெடுத்தார்.

பிறந்தவுடன் படுக்க ஒரு தொட்டிலைக் கூட தேர்ந்தெடுக்க வில்லை,

மாட்டின் தீவனத்தொட்டியைத் தான்  தேர்ந்தெடுத்தார். .

30 ஆண்டுகளாக தன்னால் படைக்கப்பட்ட மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

தச்சுத் தொழில் செய்துதான் பிழைத்தார்.

மூன்று ஆண்டு பொது வாழ்வில்  அவருக்குத் 'தலை சாய்க்கக்கூட இடமில்லை.'


"இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்." (லூக்.9:58) 

அவரது மரணப் படுக்கை ஒரு மரச்சிலுவை.

அவர் அடக்கம் செய்யப்பட்டது அடுத்தவனுக்காக வெட்டப்பட்ட கல்லரை.

நசரேத்தூர் ஏழையின் சீடர்கள் நாம்.

நாம் எப்படி வாழ்கிறோம்?

"சீடன் குருவுக்கு மேற்பட்டவன் அல்லன்." (மத்.10:24)

நாம் இவ்வுலகில் வாழ்ந்தாலும் இவ்வுலகிற்காக வாழக்கூடாது.

நாம் இவ்வுலகில் இருந்தாலும், அதைச் சார்ந்தவர்கள் அல்ல.

We are in this world, but not of this world.

வாழ்வது இந்த உலகில், ஆனல் வாழ வேண்டியது மறுவுலகிற்காகத்தான்.

நமக்கு ஒரு உடல் இருக்கிறது,

ஆனால் வாழ வேண்டியது உடலுக்காக அல்ல,

 ஆன்மாவிற்காக.

ஆன்மீக வாழ்வை மட்டும் வாழ வேண்டும், லௌகீக வாழ்க்கையை அல்ல.

Our life should be fully Spiritual, not in the least worldly.

அப்போ உடுத்துவது, உண்பது, உறங்குவது, etc?

அவற்றை இறைவனுக்காகச் செய்து ஆன்மீக மாக்க வேண்டும்.

We must spiritualize our material life by living it for God.

பள்ளிக்கூடப் பணிக்காக நாம் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் we are on duty.

அதே போல் தான் இறைப்பணிக்காக என்ன செய்தாலும் அது ஆன்மீக வாழ்வே.

நம்மிடம் எளிய மனது,

 அதாவது உலகப் பொருட்கள் மீது பற்று இல்லாத மனது,

இருந்தால் மட்டுமே

இறைவனுக்காக வாழ முடியும், 

இறைவனுக்காக வாழ்ந்தால் மட்டுமே விண்ணகம் செல்ல முடியும்.

உலகச் செல்வங்கள் இல்லையா?

கவலைப் படவேண்டாம்.
நாம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே மகிழ்வோம்.

உலகச் செல்வங்கள் நிறைய உள்ளனவா?

அதற்கும் கவலைப்  பட வேண்டாம்.

அவற்றைப் இறைப் பணிக்காகச் செலவழிப்போம்.
மகிழ்ச்சி அடைவோம்.

இருந்தாலும், இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாய் இருப்போம்.

எளிய மனத்தோராய் இருப்போம்.

எப்போதும் மகிழ்ச்சியுடையோராய் இருப்போம்.

ஏனெனில்,விண்ணரசு நமதே!

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment