Thursday, June 11, 2020

தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்.The fear of the Lord is the beginning of wisdom.(பழமொழி.9:10)

தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்.
The fear of the Lord is the beginning of wisdom.
(பழமொழி.9:10)
*******************************

 பரிசுத்த ஆவியின் வரங்கள் இவ்வாறு பட்டியல் இடப்பட்டிருக்கின்றன.

ஞானம்,        Wisdom

 புத்தி,            understanding

விமரிசை,   counsel

அறிவு,         knowledge

திடம்,             fortitude

 பக்தி,            piety

 தெய்வபயம். Fear of the Lord

இதில் முதலில் வருவது ஞானம்.

இறுதியில் வருவது தெய்வபயம்.

ஆயினும் தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம்.

நமது அனுபவங்களிலிருந்தும், பிறருடைய அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய அறிவு,(knowledge) பெறுகிறோம்.

நமது அறிவைச் சரியாகப் புரிந்துகொள்ள (to understand  Correctly   what we know)

ஞானம் (Wisdom) வேண்டும்.

ஞானம் இல்லாவிட்டால் நாம் பெற்ற அறிவைச் சரியாகப் பயன்படுத்த முடியாது.

சிலரிடம் கருவிகள் நிறைய (Instruments) இருக்கும்.

 ஆனால் எந்தக் கருவியை எதற்கு, எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாது.

பயன்படுத்தத் தெரியாவிட்டால் கருவிகள் இருந்தும் பயனில்லை.

தெரியாத்தனமாகத் தப்பாகப் பயன்படுத்திவிட்டால் ஆபத்தில் கூட முடியும்.

ஒரே Switch board ல் பத்து Switches இருந்து, எதை எதுக்குப் பயன் படுத்துவது என்று தெரியாமல் பயன்படுத்தினால் விபரீதங்கள் விளைய வாய்ப்புகள் உண்டு.

light Switch என்று நினைத்து ஒன்றைப் போடுவோம், 
fan ஓடி மேஜையின் மீதுள்ள பேப்பர்களை எல்லாம் பறக்க விட்டு விடும்.

எந்த அறிவை எதற்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை நமக்குத் தெரியவைப்பது ஞானம்.

உலக சம்பந்தப்பட்ட ஞானம் உலக அறிவை உலக காரியங்களுக்குப் பயன்படுத்த உதவும்.

ஆன்மீக அறிவை மீட்புப் பாதையில் சரியாகப் பயன்படுத்த உதவுவது ஆன்மீக ஞானம்.

நமது  ஆன்மீக ஞானம் சரியாக இயங்க வேண்டுமானால் அதற்கு உயிராக இருக்க வேண்டியது தெய்வ பயம்.

நம்மிடம் தெய்வ பயம் இல்லாவிட்டால் நமது ஞானம் கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி, brake இல்லாத Car மாதிரி!

நம்மிடம் பக்தி (இறைவன் மேல் உள்ள அன்பு) இருந்தால் மட்டும் போதாது, 

அதோடு தெய்வ பயமும் வேண்டும்.

அதற்குப் பெயர் 'பயபக்தி'!

இப்போது ஒரு கேள்வி எழலாம்:

கடவுள் அன்பு மயமானவர்தானே, 

அன்பைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?

தெய்வபயத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள காதலன் - காதலியின் காதலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இருவரும் எந்த அளவுக்கு ஆழமாகக் காதலிக்கிறார்களோ அந்த அளவுக்குப் பயமும் இருக்கும்.

தங்களுடைய வார்த்தையாலோ, செயலாலோ ஒருவர் மனதை ஒருவர் புண்படுத்தி விடக்கூடாதே என்ற பயம்.

ஆகவே பேசும்போது மிகக் கவனகமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

பேசும்போதோ, பழகும்போதோ  முகத்தில் கவலை தோன்றும் மாற்றம் தெரிந்தால்,

''ஏதாவது தப்பாகப் பேசிவிட்டேனா? தெரியாமல் பேசியிருந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள், please."

என்று முகத்தைக் கவலையோடும், ஆவலோடும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

அன்பர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தால் மட்டுமே மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்த பயம்  
தான் நேசிப்பவரை எந்த விதத்திலும் புண்படுத்தி விடக்கூடாதே என்பதற்காகத்தான்.

அன்பு கலந்த பயம்.

Holy fear is love's fear, 

namely, the kind of fear that is inspired by love. 

It's a fear based upon reverence and respect 

for a person or a thing we love.

அளவற்ற அன்புடன் நம்மை நேசிக்கும் இறைவனின் மனதை  நமது பாவத்தினால் புண்படுத்தி விடக்கூடாதே என்ற பயம்.

அன்பை இழந்து விடக்கூடாதே என்ற பயம்.

அன்புத் தந்தையிடம் பாசமுள்ள மகனுக்குள்ள பயம்.

எஜமான் தண்டிப்பாரே என்று வேலைக் காரனிடம் உள்ள பயம் அல்ல.

Our fear for God is holy fear,
not Servile fear.

திவ்ய நற்கருணை முன் நாம் முழந்தால் படியிடுவது இயேசுவுக்கு நமது அன்பையும், மரியாதையையும் காட்ட.

நாம் மரியாதை இல்லாமல் நடந்து சர்வ வல்லவ, அன்பு மயமான கடவுளின் மனதைப் புண்படுத்தி விடக்கூடாதே என்ற அன்பு கலந்த பயம் இதில் இருக்கும்.

இறைவன் மீது  நாம் கொண்டிருக்கும்

பயம் கலந்த அன்பு தான்
'பயபக்தி.'

ஆசிரியரிடம் மாணவர்கள் கொண்டுள்ள அன்பை 'குருபக்தி' என்போம்.

கணவன் மனைவியிடையே உள்ள அன்பை 'பதிபக்தி'
என்போம்.

இறைவன்பால்  நாம் கொண்டுள்ள அன்பை "பயபக்தி" என்போம்.

குருபக்தியில் குரு இருக்கிறார்,

பதிபக்தியில்  பதி இருக்கிறார்,

ஆனால்

பயபக்தியில் கடவுள் இல்லையே என்று நினைக்க வேண்டாம். பயபக்தி கடவுளுக்கு மட்டுமே உரியது.

ஒருவன் பயபக்தி உள்ள பையன் என்று சொன்னாலே கடவுள் மீது பயமும், பத்தியும் உள்ளவன் என்று தான் அர்த்தம்.

இப்போது ஒவ்வொருவரிடமும் ஒரு பைபிள் இருக்கிறது.

நிறைய பேரிடம் பைபிள் அறிவும் நிறைய இருக்கிறது.

அப்படி இருந்தும் இயேசு போதித்த அன்பும், சமாதானமும் மக்களிடையே இல்லை என்றால் என்ன அர்த்தம்?

மக்களுக்கு தெய்வபயம் இல்லை என்று அர்த்தம்.

பரிசுத்த ஆவியிடம் உடல் சுகம் கேட்டு செபிப்பவர்கள், தெய்வ பயம் என்ற வரம் கேட்டு செபிக்க வேண்டும்.

"ஆண்டவருக்கு அச்சத்தோடு ஊழியம் செய்யுங்கள்: அவர் முன் அகமகிழுங்கள்."
(பழமொழி. 2:11)

இறைவனுக்கு ஊழியம் செய்கிறவர்கள் இறைவன் மீதுள்ள அன்பினால் உந்தப்பட்டு ஊழியம் செய்ய வேண்டும்.

தங்களது ஊழியத்தின்போது இறைவன் விரும்பாதவற்றைச் செய்தால் இறைவன் மனம் புண்படுமே எனப்பயந்து ஊழியம் செய்தால் அது இறைவனுக்குப் பிடித்தமானதாக இருக்கும்.

ஊழியம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

இறைவனது மகிமைக்காக அவருக்கு ஊழியம் செய்வது அவருக்குப் பிடிக்கும்.

சம்பளத்துக்காக அரசு வேலை பார்ப்பவர்களைப் போல

 பணம் சம்பாத்தியம் செய்வதை நோக்கமாகக் கொண்டு இறை ஊழியம் செய்தால் (அது இறை ஊழியமே இல்லை) அது இறைவனுக்குப் பிடிக்காது.

இறைபயம் இருந்தால் அவருக்குப் பிடிக்காததைச் செய்வார்களா?

இவர்களிடம் அறிவு இருக்கிறது, ஞானம் இல்லை.

தெய்வபயம் இருந்தால் 

ஞானம் இருந்தால்.

தங்கள் அறிவை ஒழுங்காகப் பயன்படுத்துவார்கள்.

பாவம் தவிர மற்ற எல்லாமே இறைவனது திட்டப்படிதான் நடக்கிறது.

ஒருவனது முகம் நமது பார்வையில் அழகாக இல்லை.

அழகாக இல்லை என்றே ஒரே காரணத்திற்காக நாம் அவனை ஒதுக்கி வைத்தால்,

நாம் யாரை ஒதுக்கி வைக்கிறோம்?

இறைவனைத் தான் ஒதுக்கி வைக்கிறோம், 

ஏனெனில் அந்த முகத்திற்கு வடிவு கொடுத்து படைத்தவர் அவர்தான்.

நமக்கு அழகைப் பற்றிய அறிவு இருக்கலாம்,

 ஆனால் தெய்வபயம் இல்லை. ஆகவே ஞானமும் இல்லை.

ஆகவேதான் இறைவன் திட்டமிட்டு படைத்ததையே அழகில்லை என்கிறோம்.

இது போல்தான் இறைவன் படைத்தவற்றில் எதைக் குறை சொன்னாலும்,  நாம் இறைவனைத் தான் குறை சொல்கிறோம்.

உலகக் கண்ணோக்கில் பார்த்தால் 

இன்று உலகத்தையே தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா

ஒரு இயற்கைப் பேரிடர்.

ஆனால் விசுவாசக் கண்ணோக்கில் பார்த்தால் 

இது உலக மக்களை நல்வழிப் படுத்துவதற்காக இறைவன் எடுத்துள்ள ஒரு நடவடிக்கை.

உண்மையிலேயே விசுவாசம் உள்ளவர்கள்,

தெய்வ பயம் உள்ளவர்கள்,

ஞானம் உள்ளவர்கள்

இறைவன் எடுத்துள்ள ஒரு நடவடிக்கையைக் குறை கூற மாட்டார்கள்,

அவர் விரும்புகிறபடி நல்வழிப் படுவார்கள்.

இறை பயம்தான் நமக்கு ஞானத்தைத் தரும்.

ஞானம்தான் நம்மை நல் வழிப்படுத்தும்.

லூர்து செல்வம்.




No comments:

Post a Comment