"உங்கள் பேச்சு, "ஆம் என்றால், ஆம்: இல்லை என்றால், இல்லை" என்று இருக்கட்டும். ''
(மத். 5:37)
*******************************
இறைவன் நம்மோடு பேசும் மொழி நமது உள்ளத்தில் தோற்றுவிக்கும் உள் தூண்டல்கள்தான். (Inspirations)
மனிதனாகப் பிறந்த இறை மகன் பாவம் தவிர
எல்லா மனிதப் பண்புகளையும்,
பலகீனங்களையும் தனதாக்கிக் கொண்டார்.
ஆகவேதான் இயேசு மனித மொழியிலேயே பேசினார்.
மனித மொழியை மனிதன் எப்படிப் பயன்படுத்தினானோ அப்படியே இயேசுவும் பயன்
படுத்தினார்.
மனித மொழிக்கு
அகராதி ரீதியான பொருள் (literal meaning),
செய்தி (message) ரீதியான பொருள்
என இருவகைப் பொருள்கள் உண்டு.
பேசப்படும் சந்தர்ப்பத்தைப் (context) பொறுத்து உரிய பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு காலையில் அம்மா நம்மைப் பார்த்து,
"சாப்பாடு ரெடி, சாப்பிட வாங்க" என்று சொன்னால்,
அம்மா பயன்படுத்திய வார்த்தைகளுக்கு அகராதியில் என்ன பொருளோ அதன்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.
We must take the meaning literally.
சாப்பிடும்போது வளவள வென்று பேசிக்கொண்டு சாப்பிட்டால்
அப்பா, "வாயப் பொத்திக்கிட்டு சாப்பிடு" என்பார்.
இதை அகராதிப்படி பொருள் கொள்ளக கூடாது. அகராதிப்படி வாயைப் பொத்திக் கொண்டால் சாப்பிட முடியாது.
இங்கு செய்திப்படி பொருள் கொள்ள வேண்டும்.
அப்பா தரும் செய்தி, "பேசாமல் சாப்பிடு."
இயேசு மனித மொழியைப் பேசியதால் அவரது சொற்களில்
literal meaning ம் இருக்கும்,
message meaningம் இருக்கும்.
எடுக்க வேண்டிய பொருளை எடுக்க வேண்டும்.
இன்றைய வாசகத்தில் ஆண்டவர்,
"உங்கள் பேச்சு, "ஆம் என்றால், ஆம்: இல்லை என்றால், இல்லை" என்று இருக்கட்டும். இதற்கு மிஞ்சினதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது.''
இதை literal ஆ எடுத்துக் கொண்டால் நம்மால் ஒரு தடவைக்கு ஒரு வார்த்தைக்கு மேல் பேசமுடியாது.
இயேசு அந்த அர்த்தத்தில் கூற வில்லை.
"வளவள வென்று தேவை இல்லாததையெல்லாம் பேசாமல் உபயோகமான நல்ல விசயங்களை மட்டும் பேசுங்கள்.
தேவை இல்லாதவற்றைப் பேசும் போது தீயவன் (சாத்தான்) உள்ளே புகுந்துவிடுவான்.
அரட்டை அடிப்பவர்கள் தெரிந்தது, தெரியாதது, வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், நல்லது, கெட்டது etc. etc. என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள்.
அரட்டைக்குள் அடங்காத உலக விசயம் எதுவும் இருக்காது.
கடவுளைக்கூட விட்டு வைக்க மாட்டார்கள்.
அரட்டையில் எதைப்பற்றி வேண்டுமானாலும் விமர்சிப் பார்கள்.
புகழ்ந்து பேசுவதைவிட குற்றம் காண்பதும், இகழ்வதும்தான் அதிகம் இருக்கும்.
வளவளப் பேச்சால் அவர்கள் செய்யும் பாவங்களுக்கு சாத்தான் தூபம் போட்டுக் கொண்டிருப்பான்.
பாவத்திற்குக் காரணமான அரட்டையைத் தவிர்த்துவிட்டு நல்ல விசயங்களை அளவோடு பேச வேண்டும்.
பேச்சைக் குறைத்து, செயல்களை அதிகரிக்க வேண்டும்.
நற்செய்தியைச் சொல்லால் அறிவிக்கும் போது அதற்கு எவ்வளவு நேரம் தேவையோ அவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் நற்செய்தியை வாழ்வதற்கு நேரக் கணக்கு கிடையாது.
வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு வினாடியும் நற்செய்தியை வாழ வேண்டும்.
சாதனையாளர்கள் பேச்சைக் குறைத்து, செயலை அதிகரிப்பார்கள்.
அன்னைத் தெரசா தன் இறையன்பையும், பிறர் அன்பையும் வாழ்ந்தாள்.
நமக்கு முன்மாதிரிகையாக இயேசு மூன்று ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்தார்.
ஆனால் 33 ஆண்டுகள் தனது போதனையை வாழ்ந்தார்.
"உங்கள் பேச்சு, "ஆம் என்றால், ஆம்: இல்லை என்றால், இல்லை" என்று இருக்கட்டும்."
என்ற வார்த்தைகள் தரும் செய்தி,
''தேவையான நல்ல விசயங்களை மட்டும் பேசுங்கள்.
குறைவாகப் பேசுவதை நிறைவாக வாழ்ந்து காட்டுங்கள்."
"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே." (அரு.3.17)
"வானதூதர் அனைவரும் புடைசூழ மனுமகன் தம் மாட்சிமையில் வரும்போது மாட்சி அரியணையில் வீற்றிருப்பார்."
(மத். 25:31)
அருளப்பருடைய எழுத்துப்படி
இயேசு இவவுலகிற்கு வந்தது
"தீர்ப்பளிக்கவன்று."
மத்தேயுவின் எழுத்துப்படி இயேசு தீர்ப்பளிக்கிறார்.
"ஜீவியரையும், மரித்தோரையும் நடுத்தீர்க்க வருவார்" என்று விசுவாசப் பிரமாணத்தில் கூறுகிறோம்.
இருவருடைய எழுத்திலும்,
நமது விசுவாசத்திலும்
முரண்பாடு இருக்கிறதா?
முரண்பாடு எதுவும் இல்லை.
இறைவார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ள அதை 'இறையன்பு' என்ற கண்ணைக் கொண்டு பார்க்க வேண்டும்
வார்த்தைகள் எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நமக்கு முக்கியம் நாம் அறிய வேண்டியது வார்த்தைகள்
சுமந்துவரும் செய்தி. (Message)
இறை வார்த்தைகள் சுமந்துவரும் செய்தி அன்பைச் சுமந்து வருவதாக இருக்கும்.
"கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."
இந்த வசனம் அன்பை மட்டும் சுமந்து வருகிறது.
இறைவன் நீதி உள்ளவர்தான்.
அவர் நீதியை மட்டும் பயன்படுத்தியிருந்தால் ஆதாம், ஏவாளோடு மனுக்குலம் முடிந்திருக்கும்.
அன்பின் காரணமாகத்தான் மனுக்குலத்தை மீட்க மனிதன் ஆனார்.
"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு. 3:16)
நாம் முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டுதான் இறைமகன் மனிதன் ஆனார்.
அன்பைச் சுமந்து வரும் வசனத்திற்கு literal ஆகவே பொருள் கொள்ள வேண்டும்.
ஆகவே இயேசு நமக்கு தீர்ப்பு அளிக்க வரவில்லை.
அப்படியானால் மத்தேயுவின் வசனத்தை எப்படிப் புரிந்து கொள்வது?
கடவுள் நமக்கு இரண்டு அன்புக் கட்டளைகள் கொடுத்திருக்கிறார்.
1 எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி.
2. உன்னை நேசிப்பதைப் போலவே உன் அயலானை நேசி.
இக்கட்டளைகள்படி நடப்பவர்கள் மீட்புப் பெறுவார்கள்.
இப்போது ஒரு சிறிய ஒப்புமை.
பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் படிப்பது இறுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்காகத்தான்,
(to pass),
தோற்றுப்போக அல்ல.
(not to fail)
மீட்புப் பெற இறைவன் கட்டளை கொடுத்திருப்பது போல,
மாணவர்கள் வெற்றி பெற பள்ளிக்கூடம் ஒரு கட்டளை கொடுத்திருக்கிறது.
"வெற்றி பெற வேண்டுமென்றால் தேர்வில் 35 அல்லது அதற்கு மேல் சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.
எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.
தேர்வில் ஒரு மாணவன் 30 சதவீத மதிப்பெண் பெறுகிறான்.
35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் வெற்றி பெற்றதாகவும்,
30 மதிப்பெண்கள் பெற்றவன் தோல்வி அடைந்ததாகவும் தலைமை ஆசிரியர் அறிவிக்கிறார்.
(அறிவிக்கிறார், தீர்ப்பு அளிக்க வில்லை)
தோற்றவன் தான் ஒழுங்காகப் படியாததால் தோற்றான்.
பள்ளிக்கூடம் அவன் தோல்வியை அறிவிக்கிறது, அவ்வளவுதான்.
அவன் வெற்றி பெற பள்ளிக்கூடம் உழைத்தது.
அவன் சரியாகப்படியாமல்
தனக்குத்தானே தோல்வியைத் தேடிக்கொண்டான்.
இப்போது மத்தேயுவுக்கு வருவோம்.
மத்தேயு இறுதித் தீர்ப்பு (final Judgement) பற்றி பேசுகிறார்.
தீர்ப்பு என்பது மனித மொழி. குற்றம் சாட்டப்பட்டவனை நீதிபதி விசாரித்து,
அவன் குற்றவாளியா, இல்லையா என்பதைக் கண்டறிந்து,
குற்றவாளியாக இருந்தால் தண்டனைத் தீர்ப்பும், இல்லாவிட்டால் விடுதலைத் தீர்ப்பும் வழங்குவார்.
இது உலக தீர்ப்பு முறை.
தீர்ப்பு என்ற சொல்லுக்கு
உலக ரீதியாக என்ன பொருள் உண்டோ,
அதே பொருள் ஆன்மீக ரீதியாகப் பொருந்தாது.
உலக நீதிமன்றத்தில் அன்புக்கு இடமில்லை.
இயேசு அன்பு மயமானவர்.
அன்பு பாவங்களை மன்னிக்கும்.
அன்பு எதிரிகளையும் நேசிக்கும்.
அன்பு தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யும்.
அன்பு தண்டிக்காது.
நம்மை மீட்க வந்த இயேசு,
தீர்ப்பிட வராத இயேசு
யாருக்கும் தண்டனைத் தீர்ப்பிட மாட்டார்.
அது அவரது சுபாவத்திற்கு எதிரானது.
இப்போது பள்ளிக்கூட ஒப்புமையை ஞாபகத்துக்குக் கொண்டு வருவோம்.
மாணவன் fail ஆக வேண்டும் என்பது ஆசிரியரின் ஆசை இல்லை.
மாணவன் தன் சோம்பேரித் தனத்தால் தன்னைத் தன்னைத் தானே fail ஆக்கிக் கொள்கிறான்.
அதேபோல்தான், ஆசிரியர் மாணவனுடைய வெற்றிக்காக உழைப்பதுபோல,
இயேசு நமது மீட்புக்காகப் பாடுபட்டார்.
ஆனால் தங்கள் சுதந்தரத்தை பயன்படுத்தி அவர் வேண்டாம் என்று தள்ளிவிட்டு பாவம் செய்பவர்கள்
தங்களைத் தாங்களே இயேசுவின் உறவிவிலிருந்து பிரித்துக் கொள்கிறார்கள்.
இயேசுவின் உறவிலிருந்து நித்திய காலமும் பிரிந்திருப்பதுதான் நரகம்.
இயேசுவோடு நித்திய காலமும் இணைந்திருப்பது மோட்சம்.
மோட்ச நிலையில் பேரின்பம்.
நரக நிலையில் தாங்கமுடியாத நித்திய பெருந்துன்பம்.
மத்தேயு எழுதிய வசனங்களை இறையன்பு என்ற கண்ணாடி மூலம் பார்க்க வேண்டும்.
அன்பின் மூலம் பார்த்தால் இயேசு நம்மைத் தீர்ப்பிட வரவில்லை என்பது புரியும்.
"ஜீவியரையும், மரித்தோரையும் நடுத்தீர்க்க வருவார்" என்ற நமது விசுவாசப் பிரமாணத்தையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இறந்தவுடன் தனித்தீர்வையின்போதே
அவரவர் தேர்ந்தெடுத்த நிலையை அடைந்து விடுவார்கள்.
பொதுத் தீர்வையிலும் அதைத்தான் செய்வார்கள்.
பொதுத் தீர்வை ஒரு வினாடியில் நடந்து முடிந்து விடும்.
The Church teaches that
there is but one moment for the final judgment
when the living and dead will be judged.
There will be no period of time
where the righteous are taken from the Earth while others remain behind.
(Catholic Answers)
'Catechism of the Catholic Church says:
679
"Yet the Son did not come to
judge, but to save and to give the life he has in himself.588
By rejecting grace in this life, one already judges oneself,
receives according to one's works,
and can even condemn oneself for all eternity by rejecting the Spirit of love.
கத்தோலிக்க திருச்சபையின் ஞானோபதேசம் இவ்வாறு கூறுகிறது:
இறை மகன் (நம்மைத்) தீர்ப்பிட வரவில்லை.
ஆனால்,
மீட்கவும், அவரிடம் இருக்கும் வாழ்வைத் தரவுமே வந்தார்.
இறைவன் தரும் அருளை வேண்டாமென்று தள்ளுபவன் தன்னைத் தானே தீர்ப்பிட்டுக் கொள்கிறான்.
அவனுடைய செயல்களுக்கு எது உரியதோ அதைப் பெற்றுக் கொள்கிறான்.
அன்பின் ஆவியானவரைப் புறக்கணிப்பவன், தன்னைத் தானே நித்தியத்துக்கும் குற்றவாளியென்று தீர்மானித்துக் கொள்கிறான்."
பைபிள் வசனங்கள் எல்லாம் சரியாகவே எழுதப்பட்டுள்ளன.
நாம் இயேசுவின் அன்பு என்னும் கண்ணாடி மூலம் அவற்றைப் பார்ப்போம்.
சரியாகப் புரிந்து கொள்வோம்.
லூர்து செல்வம்
.
No comments:
Post a Comment