புது மாப்பிள்ளை.
222222222222222222222222
தங்கள் மகனுக்குத் திருமணம் நிச்சயம் செய்துவிட்டு பெற்றோர் மகனுடன் பங்குக் குருவைப் பார்க்க வந்தார்கள்.
"சுவாமி, பையனுக்குத் திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். ஓலை வாசிக்க வேண்டும். அது விசயமாக உங்களைப் பார்க்க வந்தோம்." என்றார்கள்.
"ரொம்ப சந்தோசம். அப்பாவும், அம்மாவும் கொஞ்சம் வெளியே உட்காருங்க. நான் மாப்பிள்ளையுடன் கொஞ்சம் பேசிவிட்டுக் கூப்பிடுகிறேன்.
தம்பி. உட்காருங்க. எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன், சாமி."
"கல்யாணம் செய்யப் போகிறீங்களா?"
"ஆமா, சாமி."
"எதைச் செய்தாலும். அதுக்கு ஒரு நோக்கம் இருக்கணும், இல்ல?"
"ஆமா, சாமி."
"எந்த நோக்கத்தோடு திருமணம் செய்யப்போறீங்க?"
மாப்பிள்ள கொஞ்சம் யோசித்தார்.
சாமியார் ஏதோ ஒரு பதிலை எதிர்பார்க்கிறார்.
ஒரே செயலுக்கு ஆயிரம் நோக்கம் இருக்கும்.
செயல் செய்கிறவங்கிட்ட ஒரு நோக்கம்தான் இருக்கணும்.
சாமியார் எதிர்பார்க்கிற பதிலைச் சொல்லாவிட்டால், நம்மைப் பற்றித் தப்பா நினைப்பார்.
அவர் எதிர்பார்க்கிற பதில் எது என்று தெரியவில்லையே!
மாப்பிள்ளை அமைதியாய் இருப்பதை பார்த்து
சாமியார் கேட்டார், "தம்பி, பதில் தெரியவில்லையா?"
"சுவாமி, தெரியும்.
ஆனால் நீங்கள் என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை.
நீங்கள் எதிர்பார்க்கிற பதிலைச் சொன்னால்தானே மார்க் கிடைக்கும்.
அதுதான் யோசிக்கிறேன்."
"நினைப்பதைச் சொல்லுங்க."
"வாழ்வதற்காக."
"நீங்கள் சொல்லுவது தவறான பதில் அல்ல,
ஆனால் பொதுவான பதில்.
குறிப்பிட்ட ஒரு செயலுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருக்கும்."
"மனைவியோடு வாழ."
"மனைவியோடு ஏன் வாழ வேண்டும்?"
"குழந்தைகளைப் பெற, அவர்களை வளர்க்க."
"அப்போ நான் எதிர் பார்க்கிற பதிலை நீங்க சொல்ல மாட்டீங்க.
பரவாயில்லை. நானே சொல்லிவிடுகிறேன்.
கடவுள் நமது முதல் பெற்றோரை அவரே நேரடியாகப் படைத்தார்.
அடுத்த மனிதரைப் படைக்க அவர்களையே partners ஆகச் சேர்த்துக் கொண்டார்.
படைப்பது அவர்தான், ஆனால் மனித உதவியின்றி இன்னொரு மனிதனை அவர் படைப்பதில்லை.
மனிதனுக்குரிய உடலை கணவனும், மனைவியும் சேர்ந்து தயாரிக்கிறார்கள்.
ஆன்மாவைக் கடவுள் படைத்து உடலோடு சேர்க்கிறார்.
ஒரு புது மனிதன் உருவாகிறான்.
அப்போ மனித படைப்பு ஒரு..... வாக்கியத்தை முடிங்க."
மாப்பிள்ளை உடனே சொல்லி விடுகிறார்.
"Team work."
"Very good. Team work வெற்றி பெற எது முக்கியம்?"
"Cooperation. ஒத்துழைப்பு. Team தலைவரோடு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்."
"இந்த Team க்கு Head யாரு?"
"கடவுள்."
"Very good. இந்தப் பதிலை உங்கள் மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
கடவுள்தான் உங்கள் Team Head. நீங்களும், உங்கள் மனைவியும் Team members.
நீங்கள் இறைவனோடு ஒத்துழைத்தால்தான் உங்கள் குடும்பம் வெற்றி பெறும்.
Team எப்படி இயங்க வேண்டும்?"
"தலைமையின் ஆலோசனைப்படிதான் உறுப்பினர்கள் இயங்க வேண்டும்."
"Very good. கடவுள் தன்னுடைய படைப்பு தொழிலுக்கு உங்களை உதவிக்காக வைத்து கொள்கிறார்.
எவ்வளவு பெரிய பதவி!
அவரால் படைக்கப்பட்ட உங்கள் மக்களை
அவரது விருப்பப்படிதான் வளர்க்க வேண்டும்."
"சரி, சுவாமி."
"அவரது விருப்பத்தை எப்படி அறிந்து கொள்வீர்கள்?"
"சுவாமி, இயேசு தாய்த் திருச்சபை மூலமாக நம் எல்லோரோடும் பேசுறார்.
என்னோடும் அப்படித்தான் பேசுகிறார்.
இப்போது இயேசு தான் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறார்."
"Good. தெளிவாக இருக்கிறீங்க.
இப்போ உங்கள் திருமணத்திற்காகத் தயார் நிலையில் உள்ளீர்கள், சரியா?"
"என்னால் இயன்ற அளவில் தயார்."
"ஆரம்பத்தில் பதில் சொல்ல கொஞ்சம் தயங்குனீர்களே, ஏன்?"
"தேர்வு எழுதப் போகும்போது உள்ள பயம். தேர்வு வைப்பவர் எதிர்பார்க்கும் பதிலைத் தரவேண்டுமே."
"இப்போ சொல்லுங்க.
நீங்க எந்த அளவுக்கு தயார்நிலையில் உள்ளீர்கள்?"
"எந்தச் செயலையும் இறைவனது மகிமைக்காகத்தான் செய்யவேண்டும்
என்று திருச்சபை நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.
ஆகவே திருமண வாழ்க்கையையும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல,
இறைவனுக்காகவே வாழ வேண்டும் என்ற உறுதியுடன் தான் நான் திருமணம் செய்ய தயாராக இருக்கிறேன்.
குருத்துவம் எவ்வாறு ஒரு இறை அழைப்போ அதேபோல திருமணமும் இறை அழைப்பு தான்.
குருத்துவம் எவ்வாறு ஒரு தேவத் திரவிய அனுமானமோ
அதே மாதிரி திருமணமும் ஒரு தேவத் திரவிய அனுமானம் தான்.
எவ்வாறு தகுந்த தயாரிப்போடுதான் குருக்கள் பட்டம் பெறுகிறார்களோ
அதே போல திருமணம் புரிபவர்களும் தகுந்த தயாரிப்போடுதான் திருமணம் செய்ய வேண்டும்.
எங்கள் மூலமாக இறைவன் உலகிற்கு அனுப்ப போகும் அவரது பிள்ளைகளை
அவரது சித்தப்படி வளர்க்க வேண்டியதுதான் எங்களது கடமை.
'
அதற்காகத்தான் நாங்கள் எங்களையே தயார்செய்து வைத்திருக்கிறோம்.
நாங்கள் பெறும் பிள்ளைகளை நல்ல கத்தோலிக்கர்களாக வளர்க்க வேண்டுமென்றால்
முதலில் நாங்கள் நல்ல கத்தோலிக்கர்களாக வாழ வேண்டும்.
எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் முன் மாதிரிகையாக வாழ வேண்டும்
எங்களது வார்த்தைகளை விட செயல்கள்தான் பிள்ளைகளுக்கு அதிகம் போதிக்க வேண்டும்.
இறைவார்த்தை சொல்லுகிறது:
"குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால், இருவரும் குழியில் வீழ்வர்"
(மத்.15:14)
பெற்றோர் இறை வார்த்தையாகிய ஒளி இல்லாமல் வாழ்ந்தால்
அவர்களால் எப்படி பிள்ளைகளுக்கு இறைவார்த்தையை ஊட்ட முடியும்?
சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்!
பெற்றோரிடம் என்ன குணங்கள் இருக்கின்றனவோ அவைகள் தான் பிள்ளைகளுக்கும் வரும்.
ஆகவே பெற்றோர் இறைவார்த்தையின்படி புண்ணிய வாழ்வு வாழ வேண்டும்.
அவர்களைப் பார்த்தே பிள்ளைகள் புண்ணிய வாழ்வு வாழ்வர்..
பெற்றோர் கண்களில் விட்டம் இருந்தால் பிள்ளைகளின்
கண்ணிலுள்ள துரும்பு அவர்களுக்கு எப்படி தெரியும்?
குற்றம் இல்லாத பெற்றோர்தான் பிள்ளைகளை குற்றம் இல்லாதவர்களாக வளர்க்க முடியும்.
பெற்றோரிடம் குற்றம் இருக்குமானால் அவர்கள் முதலில் திருந்த வேண்டும், அப்புறம் பிள்ளைகளை திருத்த வேண்டும்.
கிறிஸ்தவ வாழ்வு ஆன்மீக வாழ்வு, ஆகவே கிறிஸ்தவ பெற்றோர் பிள்ளைகளை ஆன்மீகத்தில் வளர்க்க வேண்டும்.
உலக காரியங்களை பிள்ளைகள் தெரிந்திருக்க வேண்டியதுதான்,
ஆனால் அவர்கள் தெரிந்திருக்கிற உலக காரியங்கள்
கிறிஸ்தவ ஆன்மீகத்திற்கு இடையூறாக இல்லாதவையாக இருக்க வேண்டும்.
அவர்ளுடைய கல்வி, அவர்கள் செய்யப்போகிற வேலை போன்றவை எதுவாக இருந்தாலும்
ஆன்மீக வாழ்வுக்கு விரோதமாய் இருந்து விடக் கூடாது.
ஒவ்வொரு குடும்பமும் ஒரு குட்டித் திருச்சபை என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
நானும், எனக்கு மனைவி ஆகப்போகிறவளும் இதை உணர்ந்து எங்களையே தயாரித்து,
திருமணத்திற்குத் தயாராக இருக்கிறோம்."
"எங்களால் செய்ய முடியாத ஒன்று உங்களால் செய்ய முடியும், அது என்ன?"
"எங்களால் குருக்களைப் பெற முடியும், உங்களால் குடும்பத்தைப் பெறமுடியாது."
"very Good. நான் இந்த கேள்வியைகேட்டதற்குக் காரணமே
நீங்கள் திருச்சபைக்கு குருக்களைப் பெற்றுத்தர வேண்டும் என்று விண்ணப்பிப்பதற்காகத்தான்.
ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு குருவானவர் உருவாக வேண்டும்.
ஒவ்வொரு அமைப்பிலும் quantityயும், qualityயும்,
அதாவது எண்ணிக்கையும், தரமும் இருக்கிறது.
திருச்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டவேண்டியது குடும்பங்கள்.
தரத்தை maintain செய்ய வேண்டியது குருக்கள்.
குருக்களுடைய பணி ஆன்மீகப் பணி.
தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்ட விசுவாசிகளை விண்ணகப் பாதையில் வழிநடத்திச் செல்வது அவர்களது பணி.
உங்களுடைய குடும்பத்திலிருந்தும் ஒரு குருவானவர் வரவேண்டும்.
சரி. அப்பா அம்மாவை வரச் சொல்லுங்கள். மற்ற விபரங்கள் பற்றி பேசுவோம்."
"Thank you, Father."
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment