http://lrdselvam.blogspot.com/2020/06/1225.html
"வானகத்தில் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள்."
(மாற்கு.12:25)
*********************************
சொந்த ஊருக்குப் போவதற்காகப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளைப் போல,
விண்ணகம் செல்வதற்காக மண்ணகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
மண்ணக வாழ்வு ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும், பேருந்துப் பயணத்தைப் போல.
விண்ணக வாழ்வு நிலையான வாழ்வு.
மண்ணகம் ஒரு சடப்பொருள்.(matter)
பொருள் இருக்க இடம் (Space) தேவை.
பொருள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.
(Matter occupies space)
ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இன்னொரு பொருள் இருக்க முடியாது.
ஒரு இடத்தில் இருக்கும் பொருள் வேறு இடத்திற்கு மாறினால்தான்,
அந்த இடத்திற்கு வேறொரு பொருள் வர முடியும்.
இடம் ஒரு பொருள் அல்ல, கருத்து. (Concept)
ஒரு பொருள் அடைத்துக் கொண்டிருக்கும் பகுதியை இடம் என்று குறிப்பிடுகிறோம்.
ஒரு பொருள் இருக்கும் இடத்திற்கும் மற்றொரு
பொருள் இருக்கும் இடத்திற்கும் இடையில் இருப்பது தூரம்.
தூரம் ஒரு பொருள் அல்ல, கருத்து.
நமது உடல் உலகைப் போல ஒரு சடப்பொருள்.
மண்ணக வாழ்வு காலத்திற்கு உட்பட்டது. துவக்கத்துக்கும், முடிவுக்கும் கட்டுப்பட்டது. காலம் மாறிக்கொண்டே இருக்கும்.
விண்ணகம் மண்ணகத்துக்கு நேர் எதிர்மாறானது.
விண்ணக வாழ்வைப் பற்றி புனித சின்னப்பர் இவ்வாறு கூறுகிறார்:
“The eye has not seen, and the ear has not heard, nor has it entered into the heart of man, what things God has prepared for those who love him.”
''கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது".
(1. Cor. 2:9)
ஆனாலும் யாராலும் மறுக்க முடியாத சில அடிப்படை உண்மைகளுக்கு முறண்படாமல் விண்ணகம் பற்றித் தியானிப்போம்.
1. Heaven is Spiritual, not material.
2. Heaven is eternal.
3. We believe in the Communion of Saints.
4. Our life in heaven will be in union with God.
5. God is love . So our life in union with Him will be one of love.
6. We will enjoy eternal bliss In heaven.
விண்ணகம் என்று நாம் குறிப்பிடுகின்ற மோட்சம் ஒரு இடம் அல்ல. (Heaven is not a place.)
அது ஒரு வாழ்க்கை நிலை.
(State of life.)
அங்கே சடப்பொருள் எதுவும் கிடையாது.
அங்கே வாழ்பவர்கள் ஆவிகள். (spirits)
விண்ணக வாழ்விற்காகப் படைக்கப்பட்டிருக்கும் ஆன்மா ஒரு ஆவிதான்.
சடப்பொருளாகிய நமது ,உடலை இயக்கிக் கொண்டிருப்பது ஆவியாகிய ஆன்மா.
(Human body is animated by a spiritual soul.)
'நாம்' என்னும் வார்த்தை நமது ஆன்மாவைத்தான் குறிக்கும்.
விண்ணகம் ஒரு இடம் இல்லாதிருப்பது போலவே இங்கு காலமும் இல்லை.
கடவுள் நித்தியர். துவக்கமும், முடிவும் இல்லாதவர்.
மண்ணக வாழ்வை முடித்து விட்டு விண்ணகத்திற்குள் நுழையும் நாம் காலத்திலிருந்து நித்தியத்துக்குள் நுழைகிறோம்.
அங்கு நாம் துவங்குகின்ற வாழ்வு என்றென்றும் அழியாதிருக்கும்.
விண்ணகம் ஒரு இடம் இல்லையாகையால் இங்கு சடப்பொருள் இருக்க முடியாது.
அப்படியானால் உலக முடிவில் நாம் உயிர்த்த பின் நம் உடல்?
உலகம் முடிவில் நாம் உயிர்க்கும்போது நமது உடல்
இயேசுவின் உடலைப் போல் மாறிவிடும்.
அதாவது தன் சடத்தன்மையை இழந்து, ஆவிக்குரிய தன்மையைப் பெற்று விடும்.
Our body will be spiritualised.
உயிர்த்த உடலுக்கு இடம் தேவை இல்லை.
Spiritualised body needs no space to occupy.
இப்போது விண்ணகத்தில் இயேசுவும், அன்னை மரியாளும் ஆன்ம சரீரத்தோடு வாழ்வதுபோல
உயிர்த்த பின் நாமும் வாழ்வோம்.
பூமியில் உண்கிறோம், வேலை செய்கிறோம், உறங்குகிறோம். இவை எதுவும் விண்ணக வாழ்வில் கிடையாது. மாற்றம் அடைந்த உடலால் இவற்றைச் செய்ய முடியாது.
இயேசு கூறுவது போல,
இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழும்போது
பெண் கொள்வதுமில்லை,
கொடுப்பதுமில்லை.
ஆனால் வானகத்தில்
தேவதூதர்களைப் போல் இருப்போம்.
கணவனும், மனைவியும் விண்ணகத்தில் சந்திக்கும்போது ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வர்.
ஆனால் அவர்களின் உறவில் தேவதூதர்களைப் போன்றிருப்பர்.
அவர்களுடைய உடல் சடப் பொருள் இல்லை.
ஆகவே உடல் இச்சைகள் எதுவும் இருக்காது.
சிற்றின்பத்திற்கு விண்ணகத்தில் இடமில்லை.
பேரின்ப நிலை எப்படி இருக்கும்?
அது அங்கு சென்றபின்புதான் தெரியும்.
நம்மைப் படைத்த கடவுளோடு இணைந்து வாழ்வோம்.
மண்ணகத்தில் இறைவனை விசுவாசத்தின் மூலம் காண்கிறோம்.
அவரைப்பற்றி தியானிக்கிறோம்.
நாம் இப்போது விசுவாசத்தின் மூலம் காண்கிற அதே இறைவனை விண்ணகத்தில் நேருக்குநேர் சந்திப்போம்.
இயேசுவுடனும்,
அன்னை மரியாளுடனும், சகல சம்மனசுக்களுடனும், புனிதர்களிடனும்,
நமது உறவினர்களிடனும், நண்பர்களுடனும்
நமது அன்பையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வோம்.
இறைவனது அன்பை நமது ஆன்ம நிலைக்கு ஏற்றபடி முழுமையாக அனுபவிப்போம். அவரைப் புகழ்வோம்.
"இறைவன் எவ்வளவு இனிமையானவரென்று சுவைத்துப் பாருங்கள்."
இப்போது திருப்பாடல்களில் வாசித்திருக்கிறோம்.
விண்ணகத்தில் இறைவனின் இனிமையை நித்திய காலமும் சுவைத்துக் கொண்டே யிருப்போம்.
நமக்கு முன்னால் விண்ணகம் சென்றுவிட்ட நம்முடைய மூதாதையர்கள், பெற்றோர்,
உறவினர்கள் அனைவரையும் கண்டு மகிழ்வோம்.
விண்ணகத்தில் நித்திய காலமாக நாம் அனுபவிக்க விருக்கும் பேரின்பத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.
நாம் இவ்வுலகில்அனுபவிக்கும் துன்பங்கள்
மறுவுலக பேரின்பத்தின் முன் ஓன்றுமில்லை.
சிறிது நேர சிற்றின்பத்திற்காக நித்திய பேரின்பத்தை இழக்கலாமா?
சிந்திப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment