Wednesday, June 10, 2020

அன்பின் காரணமும், விளைவும் அன்பே!The Cause and effect of love is love.

அன்பின் காரணமும், விளைவும் அன்பே!
The Cause and effect of love is love.
*******************************

ஒரு சிறுவன் நமது திருத்தந்தையிடம் ஒரு கேள்வி கேட்டான்.

"உலகத்தைப் படைக்கு முன்பு கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்?"

புன்முறுவலோடு திருத்தந்தை,

"அன்பு செய்து கொண்டிருந்தார்!"

யாரோ கேட்பது காதில் விழுகிறது.

சம்மனசுக்களோ, மனிதர்களோ படைக்கப் படுவதற்கு முன் கடவுள் யாரை அன்பு செய்து கொண்டிருந்தார்?

தன்னையேதான்!

ஒரே கடவுள் மூன்று ஆட்களாய்  இருக்கிறார்.

மூன்று ஆட்களும் ஒரே அன்பினால் இணைக்கப்பட்டு ஒரே கடவுளாக நித்திய காலமாக வாழ்ந்தார்கள்.

This is the great mystery of God’s Trinitarian love.

Define God.

God is Love.

கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் அன்பு,

"அன்பே கடவுள்."
(1 அரு.4.8)

கடவுள் அன்பு செய்வதற்கு வேறு யாரும் தேவை இல்லை.
அவர் தன்னையே அன்பு செய்ய மூன்று ஆட்களாய் இருக்கிறார்.

ஆனாலும் கடவுள் தன் அன்பை தான் அல்லாத மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆசித்தார்.

அதற்காகவே கடவுள் சம்மனசுக்களையும், மனிதர்களையும் படைத்தார்.

ஆகவே நாம் அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் மட்டும்தான் படைக்கப் பட்டிருக்கிறோம்.

இவ்வுலகில் நமது ஒரே வேலை அன்பு செய்வது மட்டும்தான்.

நமது 

சிந்தனையாலும், 

 சொல்லாலும்,   

செயலாலும் 

அன்பு மட்டும் தான் செய்ய வேண்டும்.

our only duty in this world is to love by our thought, word and action.

கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அன்புக் கட்டளைகள் இரண்டே இரண்டு மட்டும்தான்.

1 என்னை அன்பு செய்
2. என் பிள்ளைகளை அன்பு செய்.

Love me and love my Children.

உலகிலுள்ள அனைவரும் கடவுளுடைய பிள்ளைகள்தான்.

அனைவரும் என்றால் அனைவரும் தான்.

வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.


நம்மை நேசியாதவர்களையும்,

நம்மை வெறுப்பவர்களையும்,

 நமக்கு தீங்கு நினைப்பவர்களையும்,

நம்மை விரோதிப்பவர்களையும் கூட

நாம் நேசிக்க வேண்டும்.


"நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: 

உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்:

 உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.

45 அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள். 

அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். 

நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்."
(மத். 5:44, 45) 

அன்பு இனிமையானது.
கசப்பிற்கு அதில் இடம் இல்லை.

அதாவது அன்பு இருக்கும் இடத்தில் 

வெறுப்பு, கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு இடமில்லை.

புனித சின்னப்பர் கூறுகிறார்,

"மனக்கசப்பு, சீற்றம், சினம், வீண்கூச்சல், பழிச்சொல் ஆகிய அனைத்தும் உங்களை விட்டொழியட்டும். 

எல்லா வகையான தீய மனமும் நீங்கட்டும்.

32 ஒருவருக்கொருவர் பரிவும், இரக்கமும் காட்டுங்கள், 

கிறிஸ்துவுக்குள் கடவுள் உங்களை மன்னித்தது போல்

 நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்."
( எபேசி. 4:31, 32)

யாராவது நம்மால் மறக்க முடியாத அளவிற்கு தீங்கு செய்திருக்கிறார்களா?

அவர்களை அன்பு செய்யவும், மன்னிக்கவும் கடினமாக இருக்கிறதா?

கவலை வேண்டாம்.

நாம் பலகீனமானவர்கள் என்று கடவுளுக்குத் தெரியும்.

அவரது அருளை வேண்டுவோம்.
அவர் தரும் அருள் மூலம் மன்னிப்பது எளிது.


"அவரோ, "நான் தரும் அருள் உனக்குப் போதும்: 

ஏனெனில், மனித வலுவின்மையில் தான் என் வல்லமை சிறந்தோங்கும்"

 என்று சொல்லிவிட்டார்.

 ஆகையால் நான் என் குறைபாடுகளில் தான் மனமாரப் பெருமைப்படுவேன்.

 அப்போதுதான் கிறிஸ்துவின் வல்லமை என்னுள் குடிகொள்ளும்.

10 ஆகவே, நான் என் குறைபாடுகளைக் காணும்போது,

 இழிவுறும்போது,

 நெருக்கடியில் இருக்கும்போது,

 துன்புறுத்தப்படும்போது,

 இடுக்கண்ணுறும் போது

 கிறிஸ்துவை முன்னிட்டு நான் மனநிறைவோடு இருக்கிறேன். 

ஏனெனில், வலுவின்றி இருக்கும்போது தான் நான் வலிமை மிக்க வனாயிருக்கிறேன்."
(2 கொரி.12: 9,10)

என்று புனித சின்னப்பர் கூறுகிறார்.

ஆக,

இறைவனது அன்பின் காரணமாகவே நாம் படைக்கப் பட்டோம்.

அன்பு செய்வதற்காகவே படைக்கப்பட்டோம்.

ஏதாவது பயன்?

கரும்பு தின்ன கூலியா? என்பார்கள்.

ஆனால் நாம் அன்பு செய்ய கூலி  உண்டு.

நித்திய பேரின்ப வாழ்வு.



கடவுள் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார்.

தந்தை இறைவன்

நாம் முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு 

தன் ஒரேபேறான மகனையே
உலகிற்கு அனுப்பினார்.

மனுவுரு எடுத்த மகன் இறைவன் தன்னையே சிலுவை மரத்தில் பலியாக்கி

நம்மைப் பாவத்திலிருந்து மீட்டார்.

பரிசுத்த ஆவி எப்போதும் நம்மோடு இருந்து, 

நம்மைப் பரிசுத்தமாக்கி,

 தன் அருள் ஒளியால் நம்மை விண்ணகப் பாதையில் வழிநடத்திச் செல்கிறார்.

கடவுள் தன் அன்புமிகுதியால்
நம்மைப் படைத்தார்,

மீட்டார்,

விண்வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

இறைவன் தன் சிந்தனை யாலும், சொல்லாலும்,
 செயலாலும் நம்மை நேசிக்கிறார்.

நம்மை நித்திய காலமாகத் தன் உள்ளத்தில் சுமந்து வருபவர் இறைவன்.

நாம் படைக் கப்பட்டது காலத்தில்தான்.

ஆனால்

கடவுள் நம்மைப் படைத்ததற்கு முன்பே, நித்திய காலமாக நம்மைத் தன் உள்ளத்தில் இருத்தி நேசித்து வந்திருக்கிறார்.

நாம் படைக்கப்பட்ட பின் தன் வார்த்தை மூலம் (பைபிள்) நம்மை வழிநடத்துகிறார்.


ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருந்து, தனது பராமரிப்பால் நமது செயல்களில் நம்மை
 வழி நடத்துகிறார்.


நமது ஒவ்வொரு அசைவிலும் அவர் நம்மோடு இருக்கிறார்.

 இறையன்பைப் போலவே
 நமது அன்பும் இருக்க வேண்டும்.

இறைவன் மீதும், நமது அயலான் மீதும் நமது உள்ளத்தில் எப்போதும் அன்பு இருக்க வேண்டும்.

நமது சொற்களிலும் நமது அன்பு வெளிப்பட வேண்டும்.

நமது உள்ளத்தின் தியானத்தின் மூலம் இறைவனின் அன்பை நினைத்து செபிப்பதுபோல,

நமது வாய்மொழி மூலமும் நாம் நமது அன்பை வெளிப்படுத்தி செபிக்க வேண்டும். 

பொது வழிபாடுகளில் உள்ளத்து செபத்துக்குச் சமமாக வாய்மொழி செபமும் இருக்கும்.

நமது அயலானோடு பேசும் போது அதில் நமது அன்பு வெளிப்பட வேண்டும்.

நற்செயல்கள் மூலம் நமது அயலானுக்கு உதவ வேண்டும்.

செயல்கள் இல்லாத அன்பு செத்த அன்பு.

இயேசு வாயினால் நற்செய்தியை அறிவித்தது மட்டுமன்றி,

மற்றவர்களுடைய உடல் நோயைக் குணப்படுத்தியதின் மூலமும் தன் அன்பை வெளிப்படுத்தினார்.

அவர் செய்த மிகப் பெரிய அன்பு செயல் நமக்காக பாடுகள் பட்டு, 

சிலுவை மரத்தில் தன்னையே பலியாக்கி, 

நம்மைப் பாவத்திலிருந்து மீட்டதுதான். 

இயேசுவைப்  போலவே நாமும்  அன்பு வாழ்வு வாழ வேண்டும். 

நமது வாழ்வும், 

அதன் காரணமும்,

அதன்  விளைவும்

 அன்பாக மட்டுமே இருக்க வேண்டும்.

அன்பிலிருந்து புறப்பட்டோம், 

அன்பாய் வாழ்வோம்,

இறுதியில் தித்தியத்துக்கும் அன்போடு இணைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment