Sunday, June 7, 2020

சமாதானமாய் இருங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களோடு இருப்பார்.And so the God of peace and love will be with you.(2கொரி.13:11)

சமாதானமாய் இருங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களோடு இருப்பார்.

And so the God of peace and love will be with you.
(2கொரி.13:11)
*********************************
காலையில் எழும்போதும் இரவில் தூங்கப் போகும் போதும்,

வேலையை ஆரம்பிக்கும் போதும் முடிக்கும்போதும்,

சாப்பிட ஆரம்பிக்கும் போதும் முடிக்கும்போதும்

நாம் சொல்லும் செபம்:

தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே, ஆமென்.

துவக்கமும், முடிவும் இல்லாத கடவுள்தான் நமது துவக்கமும், முடிவும்.

நமது வாழ்வு ஆரம்பிப்பது கடவுளிடமிருந்து.

சங்கமிப்பதும் கடவுளோடுதான்.

எப்படித் தண்ணீர் கடலிலிருந்து நீராவியாக ஆரம்பித்து, ஆகாயம் வழியே பயணித்து, மேகமாக மாறி, மழையாக மண்ணில் விழுந்து ஆறு வழியாக ஓடி கடலில் கலக்கிறதோ,

அதே போல நாமும் கடவுளில் ஆரம்பித்து, உலகில் பயணித்து பயண முடிவில் இறைவனோடு ஐக்கியமாகிறோம்.

ஆகவேதான் எந்த வேலையை ஆரம்பித்தாலும், முடித்தாலும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பிக்கிறோம், முடிக்கிறோம்.

கடவுள் ஒருவர்,
ஆட்கள் மூன்று.
பரிசுத்த தமதிரித்துவம்.

அவரின் இந்த இயல்பு (Nature) அவரே நமக்கு வெளிப்படுத்தியதால்தான் நமக்குத் தெரியும்.

ஒரே கடவுளாகிய தான் மூன்று ஆட்களாக இருக்கிற உண்மையையும்

நம்மை அவரது சாயலாகப் படைத்த உண்மையையும்

நமக்கு  வெளிப்படுத்திய கடவுள்

அதன் மூலம் நமக்கு ஒரு செய்தியைத் (message) தர விரும்புவதாக உணர்கிறேன்.

முதலில் ஆதாமை மட்டும் படைத்த இறைவன் அவருக்கு துணையாக ஏவாளையும் படைத்தார்.

பின்பு அவர்களை ஆசீர்வதித்து,  பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பச் சொன்னார்.

கடவுள் படைத்தது ஆதாம் என்ற ஒரு மனிதனை மட்டும் அல்ல, ஆனால் மனுக்குலத்தை.

மனிதர்கள் பலர், குலம் ஒன்று.

original
ஆட்கள் மூன்று, கடவுள் ஒன்று.

Image
ஆட்கள் பலர், குலம் ஒன்று.

தம திரித்துவத்தின் மூன்று ஆட்களுக்கும்

ஒரே தேவ
சுபாவம்,

ஒரே அன்பு,

ஒரே ஞானம்,

ஒரே வல்லமை இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்.

கடவுள் தன்னுடைய இந்த பண்புகளை மனுக்குலத்தோடு பகிர்ந்து கொண்டார்.

ஆனால் சாயல் original ஆக முடியாது.

பூனை புலியின் சாயலில் இருக்கும்.

ஆனால் பூனை புலியாக முடியாது.

ஆனாலும் சாயல்
original ஐ முன்மாதிரிகையாக வைத்து வாழ வேண்டும்.

மனுக்குலத்தோடு தன்  பண்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

இறைவனின் பண்புகள் மனுக்குலத்திலும் இருப்பதால் அது இறைவனின் சாயலைப் பெற்றிருக்கிறது.

ஆனால் இதைத் தவறாகப புரிந்து கொள்ளக் கூடாது.

இறைவனைப் பொறுத்த மட்டில் மூன்று ஆட்களுக்கும் ஒரே தேவ சுபாவம், ஒரே அன்பு. etc.

ஒரே மாதிரியான தேவ சுபாவம் அல்ல,

ஒரே  தேவ சுபாவம்.

என்னுடைய அப்பாவுக்கு என்னைப் போலவே உயிர் இருக்கிறது. ஒரே மாதிரியான இரண்டு உயிர்கள், ஒரே உயிர் அல்ல.

ஒரே உயிராக இருந்திருந்தால் அவர் இறந்த போதே நானும் இறந்திருப்பேனே!

ஆனால் இறைவனைப் பொறுத்த மட்டில் மூன்று ஆட்களுக்கும்

ஒரே மாதிரியான பண்புகள் அல்ல, ஒரே பண்பு.

இன்னும் புரியும்படியாகச் சொல்லவேண்டுமென்றால்,

இறைவன் தன் அன்பை என்னோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறார், என் மகனோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

எங்கள் இருவரிடமும் அன்பு இருக்கிறது, ஆனால் ஒரே அன்பு அல்ல. இருவரிடமும் அன்பு என்ற பண்பு இருக்கிறது. அவ்வளவுதான்.
இருவரின் அன்பும் வெவ்வேறானவை, வெவ்வேறு அளவானவை.

ஆனால் இறைத்தந்தைக்கும், இறை மகனுக்கும், தூய ஆவிக்கும் இருப்பது ஒரே அன்பு.

மூவருக்கும் ஒரே சித்தம், ஒரே வல்லமை.

இயேசு தன் தந்தையின் சித்தத்தை நிறைவேற்ற வந்திருப்பதாகக் கூறினார். .

(ஆனால் இருவருக்கும் ஒரே சித்தம்தான். தந்தையின் சித்தம்தான் மகனின் சித்தம்.)

"உண்மையின் ஆவியானவர் வந்தபின், நிறைஉண்மையை நோக்கி உங்களை வழி நடத்துவார்" என்றும் கூறினார். (அரு.16:13)

இவவாறு கூறியது தமதிரித்துவ இரகசியத்தை வெளிப் படுத்துவதற்காகத்தான்.

"உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்தே பெற்றுக்கொள்வதால்,"
(அரு.16:14)

என்று இயேசு கூறும்போது 'இருவருக்குள்

(மகனுக்கும், தூய ஆவிக்கும்)

உள்ளதும்' ஒன்றுதான், வெவ்வேறு அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மனுக்குலத்தை ஏன் இறைவன் தன் சாயலாக படைத்தார்.

மனுக்குலம் இறுதி காலத்தில் தன்னோடு இணைய வேண்டும் என்பது அவரது ஆசை.

ஒரு திரவமும் அதைப் போன்றுள்ள மற்றொரு திரவமும் கலக்கலாம்.

ஆனால் திரவமும் கல்லும் கலக்க முடியுமா?

இறைவனின் பண்புகளைக் கொண்டிருந்தால்தான் மனுக்குலம் இறைவனோடு ஒன்று சேர இயலும்.

அதனால்தான் மனிதனோடு தன்னுடைய அன்பை பகிர்ந்து கொண்டார்.

மனுக்குலம் முழுவதும் அன்பு என்ற ஒரே பாசக்கயிற்றால்  பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்போதுதான் பூமியில் சமாதானம் நிலவும்

என்பதற்காக தன்னுடைய அன்பாகிய பண்பை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ஆனால் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட மற்றொரு பண்பாகிய சுதந்தரத்தைத் தவறாகப் பயன் படுத்தி,

அன்பையும் தவறாகப் பயன்படுத்தி

உண்மையான அன்பும், சமாதானமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் புனித சின்னப்பர் நமக்கு புத்திமதி யாக:

"சமாதானமாய் இருங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களோடு இருப்பார்."

என்று கூறுகிறார்.

இறைவனின் சாயலாக இருக்கும் நாம்

இறுதிநாளில் இறைவனோடு இணைய வேண்டும் என்றால்

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகளை

அவருடைய சித்தப்படியே பயன்படுத்தி வாழ்வோம்.

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும்

அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு

அந்த ஒரே பேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.


17 கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று,

அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே."

(அரு. 3:16, 17)

உலகோர் அனைவரும் மீட்புப் பெற இறைவனை வேண்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment