"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு." (அரு. 6:51)
********************************
இயேசு இறை மகன்.
அவர் எப்போதும், எங்கும் இருக்கிறார், அரூபியாக.
நம்மைப் பாவத்திலிருந்து மீட்க மனிதன் ஆனபோது மனிதனாக நம்மோடு 33 ஆண்டுகள் வாழ்ந்தார்.
அந்த 33 ஆண்டுகளும் நமது ஊனக்கண்களால் அவரைப் பார்த்தோம், காதுகளால் அவர் சொன்னதைக் கேட்டோம். நமது வாய்களால் அவரோடு பேசினோம். கைகளால் அவரைத் தொட்டு உணர்ந்தோம்.
33 ஆண்டுகள் கழித்து அவர் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் எய்தினார்.
அவர் விண்ணகம் எய்திய பின்,
உலகில் வாழ்ந்தபோது நாம் அவரைப் பார்த்தது போல பார்க்க முடியாது, கேட்க முடியாது, பேசமுடியாது, தொட முடியாது.
ஏனெனில் விண்ணகம் அரூபிகளின் உலகம், (Spiritual world)
நாம் வாழ்ந்து கொண்டிருப்பது சடப்பொருள் உலகம். (Material World)
ஆனாலும் 2020 ஆண்டுகளுக்கு முன்னால் நமமைப் போல நம்மோடு வாழ்ந்த அதே இயேசு
இப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்,
வெறும் ஞாபகத்தில் அல்ல,
உண்மையாகவே, உயிரோடு.
அன்னைமரியின் வயிற்றில் உற்பவித்த அதே உடலோடும், (the very Same body), அவரது ஆன்மாவோடும்
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
"இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
(மத். 28:20)
விண்ணகம் எய்து முன் சீடர்களிடம் கூறிய வார்த்தைகள்.
தேவ சுபாவத்தில் நித்திய கால இருப்பதை இங்கு அவர் குறிப்பிடவில்லை.
ஏனெனில்
தேவ சுபாவத்தில் அவர் நித்தியர்.
உலக முடிவுக்குப் பின்னும் நித்திய காலமாக நம்மோடு தான் இருப்பார்.
அதை Special ஆகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அவரது வார்த்தைகளை விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்:
"இறைமகனாகிய நான் உங்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாகப் பிறந்தேன்.
மீட்புப் பணிக்காக பாவப் பரிகாரத்தைச் செய்து விட்டேன்.
ஆயினும் மீட்புப் பணி உலகம் முடியும் வரை தொடரும்.
அப்பணியைத் தொடர்வதற்காகத்தான் உங்களை அனுப்புகிறேன்.
உங்கள் காலத்திற்குப் பின் அப்பணியை உங்களுடைய வாரிசுகள் செய்வார்கள்.
நான் விண்ணகம் சென்று விட்டாலும்,
தொடர்ந்து உங்களோடும், உங்கள் வாரிசுகளோடும் உலகம் முடியுமட்டும் இருப்பேன்.
வெறும் ஞாபகத்தில் அல்ல,
உண்மையாகவே, உயிரோடு"
"விண்ணகம் சென்றபின் எப்படி ஆண்டவரே எங்களோடு இருப்பீர்?" என்று சீடர்கள் கேட்கவில்லை.
ஏனெனில் எப்படி இருப்பார் என்று அவர்களுக்குத் தெரியும்.
எப்படித் தெரியும்?
நம்மவர்களில் அநேகர் நற்செய்தியை வாசிக்கும்போது ஏதோ நாடக வசனங்களை வாசிப்பதுபோல் வாசிக்கிறார்ள்கள்.
நாடகத்தில் வரும் பாத்திரங்கள் எழுதிக் கொடுக்கப்பட்ட வசனங்களை அப்படியே பேசுவார்கள்.
அதிகமாகவும் பேசமாட்டார்கள், குறைவாகவும் பேசமாட்டார்கள்.
இயேசுவோடு சீடர்கள் மூன்று ஆண்டுகள் இருந்தார்கள்.
அவர் சென்ற விடமெல்லாம் கூடவே சென்றார்கள்.
இயேசு மக்களிடம் பேசிவிட்டு, சீடர்களோடு தனியாக இருக்கும்போது மக்களுக்குப் போதித்தவற்றை அவர்களுக்கு விளக்கினார்.
"தம் சீடருக்கோ தனியாக அனைத்தையும் விளக்குவார்."
(மத் 4:34)
எல்லா விளக்கங்களும் நற்செய்தியில் எழுதப்படவில்லை.
சீடர்கள் இயேசுவின் விளக்கங்களை உள்வாங்கி தாங்கள் மக்களுக்குப் போதிக்கும்போது பயன்படுத்திக் கொண்டார்கள்.
இவ்வாறு இயேசுவின் போதனைதான் திருச்சபையின் பாரம்பரியத்தை (Traditions) வழி நடத்தியது.
திருச்சபையின் பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் இயேசுவின் போதனையைத் தான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
இயேசு
"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
என்பதை எப்படி சீடர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்?
"நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்." என்று இயேசு சொன்னபோது,
"நாம் உண்பதற்கு இவன் தன் தசையை எவ்வாறு அளிக்கக்கூடும் ?"
என்று யூதர் தமக்குள் வாக்குவாதம் செய்தார்கள்.
இயேசுவோ உறுதியாகச் சொன்னார்,
"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:
மனுமகனின் தசையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது."
ஆனால் இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாத பல சீடர்கள் கூட,
"இந்தப் பேச்சு மிதமிஞ்சிப்போகிறது, யார் இதைக் கேட்பார் ?" என்று சொன்னதோடு
பலர் அவரை விட்டுப் பிரிந்தனர்.
இயேசு பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா ?" என்றார்.
அதற்குச் சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
நீரே கடவுளின் பரிசுத்தர்: இதை நாங்கள் விசுவசிக்கிறோம்: இதை நாங்கள் அறிவோம்"
இயேசுவின் வாரத்தைகளை அநேகர் நம்பாவிட்டாலும்
பள்னிருவர் இயேசுவின் வார்த்தைகளை விசுவசித்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்,
பன்னிருவருக்கும் இயேசு தன் உடலை எப்படி உணவாகத் தரப்போவதாக விளக்கிச் சொல்லியிருக்க மாட்டாரா?
கட்டாயம் விளக்கியிருப்பார்.
அப்ப ரசக் குணங்களுள் தன்னையே (literal ஆ) தரப்போவதாக விளக்கியிருப்பார்.
அவர்கள் தானே தாம் அப்ப ரசக் குணங்களில் ஆன்ம, சரீரத்தோடு உண்மையிலேயே இருப்பதற்கு
தான் பயன் படுத்தப்போகும் குருக்களாக
அவரால் திருநிலைப்படுத்தப்படப் போகின்றவர்கள்!
இன்றைய நமது குருமடங்களில் குருமாணவர்கள் (Seminarians) பெறும் பயிற்சி இதற்காகத்தானே!
அவர்கள் தேவ சாஸ்திரம் (theology) படிப்பது இதற்காகத்தானே!
அப்போஸ்தலர்களும் இறை மகனிடம் மூன்று ஆண்டுகள்
theology தானே கற்றார்கள்!
தேவனிடமே தேவசாஸ்திரம் கற்றார்கள்!
மூன்று ஆண்டு பயிற்சி முடிந்து பெரிய வியாழக்கிழமையன்று குருப் பட்டம் பெற்றார்கள்!
அவர் சர்வ வல்லப கடவுள் என்பது அவர்களுக்குத் தெரியுமாகையால், அவரது வார்த்தைகளை அவர்கள் விசுவசித்தார்கள்.
அதனால்தான் அவர் பாடுபடப் போவதற்கு முந்திய இரவில்,
இயேசு பன்னிருவரிடமும்,
"அப்பத்தை எடுத்து, நன்றிகூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்து, " இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் "
அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை."
என்று சொன்னபோது
அதை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்.
ஏனெனில் இயேசு தன் உடலையும், தன் இரத்தத்தையும் எப்படி உணவாகத் தருவார் என்ற விபரத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.
"இதை என் நினைவாகச் செய்யுங்கள்"
என்று சொன்ன போது திருப்பலி நிறைவேற்ற வேண்டிய குருத்துவத்தை சீடர்களுக்கு அளிக்கிறார்.
அதன் விபரத்தையும் தன் சீடர்கள்களுக்கு விளக்கியிருப்பார்.
"அது பைபிளில் எங்கே இருக்கிறது?" என்று கேட்டால் அது அறியாமை.
ஏனெனில் ஒரு நல்ல ஆசிரியர் என்ன செய்வார் என்று ஆசிரியப் பணி புரிவோருக்குத் தெரியும்.
வகுப்பில் பாடங்களை விளக்குவதற்கு ஆசிரியர்களுக்கு போதிய நேரம் கிடைக்காவிட்டால்
Special Class வைத்தாவது விளக்கம் கொடுப்பார்கள்.
இயேசு நல்ல ஆசிரியர்.
வசனங்கள் பேசிவிட்டுப் போக உலகிற்கு வரவில்லை.
போதிக்க வந்தார்.
தன் பெயரால் தன்னைப் பற்றி போதிக்கப் போகிறவர்களுக்குத் தன் போதனைகளுக்கு எப்படி விளக்கம் கொடாதிருந்திருப்பார்?
பள்ளிக்கூடம் சென்று ஆசிரியர்களிடம் பாடம் கற்றவர்களுக்கு இது புரியும்.
குருத்துவத்தைப் பற்றியும். திவ்ய பலியைப் பற்றியும், திவ்ய நற்கருணையைப் பற்றியும் இயேசு நன்கு தன் சீடர்களுக்கு விளக்கியிருந்ததால்தான்,
சீடர்களும்,
அவர்கள் கையால் குருப் பட்டம் பெற்றவர்களும்,
திருச்சபையின் ஆரம்பம் முதலே
அப்பம் பிட்குதலிலும்,
செபிப்பதிலும் நிலைத்திருந்தார்கள்.
அப்பம் பிட்குதல்தான் திருப்பலி.
"இவர்கள் அப்போஸ்தலர்களின்
படிப்பினையைக் கேட்பதிலும்,
நட்புடன் உறவாடுவதிலும்,
'அப்பம் பிட்குதலிலும்,'
செபிப்பதிலும்
நிலைத்திருந்தார்கள்."
(அப்.2:42)
ஆக,
திவ்ய நற்கருணையில் இயேசு உண்மையிலேயே (really) தன் உடல், ஆன்ம, சரீரத்தோடு இருக்கிறார்.
திவ்ய நற்கருணை மூலமாக இயேசு உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருப்பார்.
திவ்ய நற்கருணை மூலமாக இயேசு தன்னையே நமது ஆன்மீக உணவாகத் தருகிறார்.
இது நமது விசுவாசம்.
எல்லோரும் விசுவசிக்கிறோம்.
விசுவசிக்கிறபடி திருப்பலிக்குப் போகிறோம். திவ்ய நற்கருணையில் அவரையே உணவாகப் பெறுகிறோம்.
ஆனால்,
நமது விசுவாசம் நமது வாழ்வாகியிருக்கிறதா?
Are we living our Faith?
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment