உச்சந்தலையைப் போலவே உள்ளங்காலும் முக்கியமானது.
***** ***** ***** ***** ***** பல துளி பெரு வெள்ளம்.
உலகின் முக்கால் பகுதி கடல்.
எண்ணிறந்த சிறு துளிகள் ( Small drops) சேர்ந்தது தான் மிகப்பெரிய கடல்.
மலையளவு தேரும் சிறிய அளவு அச்சாணி இல்லாமல் ஓட முடியாது.
பனை உயரம் கட்டடம் இருக்கலாம். ஆனால் அதை அந்த அளவுக்கு உயர்த்திய செங்கல்கள் மிகச்சிறியவை.
பூமியைப்போல் 1,300,000 மடங்கு பெரிய சூரியனைப் போல பில்லியன் கணக்கில் உள்ள நட்சத்திரங்களும் கண்ணுக்குத் தெரியாத அணுக்களின் கணம் (Set) தான்!
The whole universe is just a set of atoms.
இயேசுவால் இராயப்பர் என்னும் பாறைமேல் கட்டப்பட்ட திருச்சபை என்னும் கட்டடத்தின் செங்கல்கள் எவை?
இந்தக் கேள்விக்கான பதிலை இயேசுவிடம் கேட்டிருந்தால்,
அவர் தன்னையே ஒரு நல்ல ஆயனான உருவகப் படுத்திக் கொள்வதால்,
இந்தக் கேள்விக் கான அவரின் பதிலும் உருவகத்தில்தான்
இருந்திருக்கும்.
"இயேசுவோ அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளை மேய்" என்றார்." (அரு. 21:15)
திருச்சபை என்னும் கட்டடத்தின் செங்கல்கள் ஆட்டுக்குட்டிகள்!
ஆண்டவர் ஆடுகளையும் குறிப்பிடுகிறார்; ஆட்டுக் குட்டிகள்தானே ஆடுகளாய் மாறும்.
அனைத்து விசுவாசிகளும் -
பாப்பரசரிலிருந்து ஒரு பங்கின் சிறு குழ்ந்தை வரை -
திருச்சபையின் உறுப்பினர்கள்.
நிருவாக நீதியாக பாப்பரசர் திருச்சபையின் தலைவர்,
நமது உடலின் நிர்வாகத் தலைவராக நமது தலை இருப்பதுபோல.
உறுப்பினர் ரீதியில் எல்லோரும் உறுப்பினர்கள்.
உசசந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புக்களும் சேர்ந்ததுதான் முழு உடல்.
ஏதாவது ஒரு உறுப்புக்கு சுகம் என்றால் அனைத்து உறுப்புக்களும் அதன் மகிழ்ச்சியில் பங்கு பெரும்.
ஏதாவது ஒரு உறுப்புக்கு பிரச்சினை என்றால் அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படும்.
திருச்சபையை கிறிஸ்துவின் ஞான உடல் என்கிறோம்.
நமது உடலின் உள்ளங்காலில் ஒரு சிறு விரவில் ஒரு சிறு முள் குத்தி விட்டாலும்
.
உடனே தலை குனிகிறது,
கண் பார்க்கிறது,
விரலில் வலித்தால் கண்ணில் நீர் வருகிறது,
கை கண்ணையும் துடைத்துக் கொண்டு
ஊக்கைத் தேடி எடுத்து முள்ளையும் எடுக்கிறது.
முள்ளை எடுத்த பின்தான் முழு உடல் மகிழ்கிறது.
திருச்சபையில் கோடிக் கணக்கான உறுப்பினர்கள் இருக்கலாம்.
அவர்களில் மிகச் சிறியோர் ஒருவருக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே அதை உணர்பவர் தலைவராகிய இயேசுவே.
யாரையும்,
அவர் எவ்வளவு சிறியவராய் இருந்தாலும்,
அழியவிடாமல்,
கடைசி நாளில் உயிர்ப்பிக்க வேண்டுமென்பதே இயேசுவின் ஆசை.
ஒரு சிறிய பங்கை எடுத்துக் கொள்வோம்.
பங்கு மக்களில் முக்கியமானோர் யார் என்று கேட்டால்
சிலர் அங்குள்ள வசதியுள்ளோர் பெயரைச் சொல்லுவார்கள்.
சிலர் ஒழுங்காக கோவிலுக்கு வருவோர் பெயரைச் சொல்லுவார்கள்.
ஆனால் ஞானஸ்நானம் பெற்றும் கோவிலுக்கே வராத,
எல்லா விதமான கெட்ட பழக்கங்களும் உள்ள ஒரு கெட்ட கிறிஸ்தவனை முக்கியமானவன் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.
ஆனால் இயேசுவைப் பொறுத்தமட்டில் அவன்தான் முக்கியமானவன்.
ஏனெனில் இவ்வுலகிற்கு வந்ததே பாவிகளைத் தேடித்தான்.
அவர் பங்குச் சாமியாராக இருந்தால் பாவியின் வீட்டிற்கு தான் அடிக்கடி போவார்.
நோயாளிக்குதான் வைத்தியர் தேவை.
டாக்டரைப் பார்த்து,
"நீர் ஏன் அடிக்கடி நோயாளிகள் வீட்டிற்குப் போகிறீர்?" என்று கேட்டால்,
"நான் அதற்காகத்தான் டாக்டர் ஆனேன்" என்று சொல்லுவார்.
இயேசுவின் பணியில் நம் அனைவருக்கும் பங்கு உண்டு.
நமது உடம்பின் ஒரு உறுப்புக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் மற்ற உறுப்புக்கள் கண்டும் காணாதது போல் இருக்குமா?
ஆன்மீக ரீதியாக யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் அதற்குத் தீர்வு காண நம் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு.
ஒரு உறுப்பைப் பொறுத்த மட்டில் எல்லா உறுப்புகளுக்கும் பொறுப்பு. இருப்பதுபோல,
மற்ற எல்லா உறுப்புகள் மட்டிலும் ஒவ்வொரு உறுப்புக்கும் பொறுப்பு உண்டு.
ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவர் மீதும் அக்கரை காட்ட வேண்டும்.
பங்குக் குருவுக்கு மக்கள் மட்டில் கடமைகள் இருப்பது போல மக்களுக்கும் பங்குக் குரு மட்டும் கடமைகள் உண்டு.
முதலில் பங்குக் குருவைத் தந்தையைப் போல் நேசிக்க வேண்டும்
அவருடைய ஆன்ம சரீர நலனுக்காக வேண்டிக் கொள்ள வேண்டியது பங்கு மக்கள் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு.
குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்ற ஒவ்வொரு குடும்ப அங்கத்தினருக்கும் கடமை உண்டு.
நமது குடும்பத்தைப் பற்றி மற்றவர்களிடம் குறைவாகப் பேசுவது பேசுபவருக்கு தான் கெட்ட பெயர்.
நாம் வாழும் பங்கும், நமது திருச்சபையும் நமது குடும்பம்.
குடும்பத்துக்குள்ளே ஒருவருக் கொருவர் பிரச்சனை இருந்தால் குடும்பத்துக்குள்ளே சமாதானமாகப் பேசிக் கொள்வதுதான் முறை.
அதை விடுத்து நமது குடும்பத்துள்ள குறைகளை வெளியே பேசுவது முறையல்ல.
நமது நல்ல பேச்சின் மூலம்தான் நற்செய்தியை உலகெங்கும் பரப்ப வேண்டும்.
அவரவருக்கு அவரவர் மட்டில் கடமைகள் இருப்பது போல, எல்லோருக்கும் எல்லோர் மட்டிலும் கடமைகள் உண்டு.
ஒருவரை ஒருவர் நேசித்தாலே மற்ற கடமைகள் தானாகவே நிறைவேறும்.
எல்லோருக்கும் மீட்புக் கொடுப்பது ஒரே இயேசுவின் இரத்தம்தான் என்பதை உணர்ந்து வாழவோம்.
நாம் எல்லோரும் சேர்ந்தது தான் நமது திருச்சபை.
திருச்சபையை வளர்க்க வேண்டியது நாம்.
நம்மைக் காக்க வேண்டியது திருச்சபை.
"நான் என் தந்தையினுள்ளும், நீங்கள் என்னுள்ளும், நான் உங்களுள்ளும் இருப்பதை நீங்கள் அந்நாளில் அறிந்துகொள்வீர்கள்."
(அரு. 14:20)
திருச்சபை நமக்குள் இருக்கிறது.
நாம் திருச்சபைக்குள்
இருக்கிறோம்.
திருச்சபை நமது தாய்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment