புதுப்பொண்ணும்,
புதுமாப்பிள்ளையும்.
(தொடர்ச்சி)
**************-------**************
திருமணம் முடித்த அன்று இரவில் புது மணமக்கள் தனிமையில் சந்திக்கிறார்கள்.
"Praised be our Lord."
"Praised be our Lord."
"ஆரம்பத்திலேயே நான் சொன்ன அதே வார்த்தைகளை நீயும் சொல்கிறாயே,
நமது வாழ்நாள் முழுவதும் அப்படியே சொல்வாயா?"
"Yes, no."
"Yes ஆ? no வா?"
"இரண்டும்தான்."
"அதெப்படி?"
" வெவ்வேறு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த நம்மை
இணைத்து வைத்தது யார்?"
"கடவுள்."
"நம் இருவருக்கும் கடவுள்தானே தந்தை!
அவருக்காக, அவரில் நாம் செய்யும் எல்லா காரியங்களிலும் நீங்கள் சொல்வதற்கெல்லாம் 'yes''
மற்ற காரியங்களில் Yesம் இருக்கலாம், no வும் இருக்கலாம்."
"Reply accepted."
"Thanks."
"suppose நான் accept பண்ணி யிருக்காவிட்டால் என்ன சொல்லியிருப்ப?"
"அப்பவும் Thanks தான்."
"அதெப்படி?"
"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள் என்று இறைவார்த்தை சொல்கிறதே!"
"புது மணத்தம்பதிகள் முதல் முதல் சந்திக்கும்போது
அவர்களுடைய கண்கள்தான் முதலிம் பேசும்,
வாய்கள் முத்தங்களைப் பரிமாறிக் கொண்ட பின்புதான் பேச ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள்.
நமது ஆரம்பம் வித்தியாசமாக இல்லை?"
"வித்தியாசமாக இல்லை.
தாலி கட்டுவதற்கு முன்பே கண்கள் பேசிவிட்டன.
சம்மதம் தெரிவிக்கும்போதே வாய்களும் பேசிவிட்டன.
மற்றவர்கள் எப்படி ஆரம்பிப்பார்களோ, தெரியாது,
நான் இறை வாழ்த்தோடு மணவாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறோம்."
" நமது திருமண வாழ்வும் இறைவாழ்த்தாகவே இருக்க
வாழ்த்துகிறேன்!
புத்தகம் எழுத ஆரம்பிப்பவர்கள் முதலில் முன்னுரை எழுதுவார்கள்.
முன்னுரையில் தாங்கள் எதைப்பற்றி எப்படி எழுதப் போகிறோம் என்பதை விவரித்திருப்பார்கள்.
நமது முதல் இரவை நாம் எழுதவிருக்கும் வாழ்க்கை என்ற புத்தகத்திற்கு முன்னுரை இரவாக வைத்துக் கொள்வோமா?"
"permission granted!"
".இதேபோல்தான் நமது வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்
ஒருவர் ஒருவரின் அனுமதியோடு நடக்க நமக்கு இறைவன் அருள் புரிவாராக.
நாம் எதற்காக திருமணம் செய்திருக்கிறோம்?"
"நம் மூலம் இறைவன் உலகிற்கு அனுப்ப விருக்கும் அவரது பிள்ளைகளை
அவரது சித்தப்படி அவருக்காக வளர்க்க இறைவன் சித்தபடி திருமணம் செய்திருக்கிறோம்."
",திருமண வாழ்வு ஒரு ஆன்மீக வாழ்வாகத்தானே இருக்க வேண்டும்.
ஆனால், அதில் சிற்றின்பம் இருக்கிறதே,
ஆன்மீகம் பேரின்பத்தை நோக்கியதல்லவா?"
"கடவுள் ஏன் உலகை அழகானதாகப் படைத்தார்?"
." அழகில்லாத உலகில் எப்படி ரசனையோடு வாழ முடியும்?
நாம் வளர்வதற்காகச் சாப்பிட வேண்டும்.
ருசி இல்லாவிட்டால் சாப்பிட மாட்டோம்.
ருசி ருசிக்காக அல்ல, சாப்பிட்டு வளர்வதற்காக.
அதேபோல் தான் உலகம் அழகாய் இருப்பது அதில் ரசனையோடு வாழ்வதற்காகத்தான்."
"உலகில் எதுவும் அதுக்காக இல்லை, வேறொரு நோக்கத்திற்காக.
ஒவ்வொரு செயலுக்கும் உடனடியான நோக்கம் (objective) ஒன்று உண்டு,
இறுதி நோக்கம் (ultimate aim) ஒன்று உண்டு.
ருசியின் நோக்கம் சாப்பிடுவது,
சாப்பிடுவதன் நோக்கம் வளர்வது,
வளர்வதின் நோக்கம் வாழ்வது,
இவ்வுலக வாழ்வின் நோக்கம் நிலை வாழ்வு. (மோட்சத்தில்)
ஆக ருசியின் இறுதி நோக்கம் நிலை வாழ்வுதான்.
அழகின் இறுதி நோக்கம் நிலை வாழ்வுதான்.
திருமண வாழ்வில் ஏன் இறைவன் சிற்றின்பத்தை வைத்திருக்கிறார்?
அது இல்லாவிட்டால் யாருமே திருமணம் செய்யமாட்டார்கள்.
சிற்றின்பத்தின் நோக்கம் மணவாழ்வு
.மணவாழ்வின் நோக்கம் குழந்தைப்பேறு.
குழந்தைப்பேற்றின் நோக்கம்,
இறைவன் கொடுத்த குழந்தைகளை அவர் காட்டிய வழியில் வளர்ப்பது.
அவர் காட்டிய வழியில் வளர்ப்பதின் நோக்கம் பிள்ளைகள் இறைவனுக்காக வாழ்வது.
இறைவனுக்காக வாழ்வதன்
நோக்கம் இறுதியில் இறைவனோடு இணைவது.
ஆக, சிற்றின்பத்தின் இறுதி
நோக்கம் இறைவனோடு இணைவது. அதாவது மோட்சம். அதாவது பேரின்பம்."
." அதாவது நாம் விடும் ஒவ்வொரு மூச்சின் இறுதி நோக்கமும் மோட்சம்தான்!
தாயின் கருவறையில் நாம் முதல் முதல் மூச்சு விட்டதே மோட்சத்தை அடைவதை நோக்கமாக கொண்டு தான்.
இப்போ ஒரு கேள்வி:
சிற்றின்பம் பாவம் ஆவது எப்போது?"
"எந்த செயலும் தன்னிலேயே பாவமானது இல்லை,
ஏவாள் பழத்தைச்
சாப்பிட்டது பாவமல்ல,
விலக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டது தான் பாவம்.
அதுபோல, சிற்றின்பம் பாவம் அல்ல,
விலக்கப்பட்ட சிற்றின்பம்தான் பாவம்.
நல்ல பொருளை ஒரு நன்மைக்காக பயன்படுத்துவது நற்செயல்.
அதே பொருளை தீமைக்காக பயன்படுத்துவது பாவம்.
பணத்தை ஏழைக்குத் தர்மமாக கொடுப்பது நற்செயல்,
அதே பணத்தை யாருக்காவது லஞ்சமாகக் கொடுத்தால் அது பாவம்.
இறைவனை வழிபடுவதற்காக கோவிலுக்குச் சென்றால் நற்செயல்,
திருடுவதற்காகச் சென்றால் பாவம்.
சாப்பாட்டைக் கூட போசனப் பிரியத்துக்காகக் சாப்பிடுவது தலையான பாவம்.
Gluttony is a capital sin.
அதேபோல்,
மனைவியோடு அனுபவிக்கும் சிற்றின்பம் நற்செயல்,
வேறு யாரோடும் அனுபவித்தால் பாவம்."
."எந்த பொருளையும் அது எந்த நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்திற்காக பயன்படுத்துவது நற்செயல்.
ஆனால் அதற்கு எதிர்மாறான நோக்கத்திற்காக, இறைவன் கட்டளைகளுக்கு எதிராக, பயன்படுத்துவது பாவம்.
கயிற்றை (rope) வாழ்க்கைக்கு உதவியாகப் பயன்படுத்தலாம்.
தற்கொலைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
அதேபோல சிற்றின்பத்தை குழந்தைப் பேற்றுக்குத் தடை இல்லாமல் பயன்படுத்துவது நற்செயல்.
குழந்தைப் பேற்றுக்குத் தடை போட்டுப் பயன்படுத்தினால் பாவம்.
சிற்றின்பத்தின்போது செயற்கை முறைக் கருத்தடைச் சாதனங்களைப்
(contraceptives)
பயன் படுத்துவது பாவம்."
"நாம் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்?"
." குறைந்தது மூன்று. அதற்கு மேலும் இறைவன் தந்தால் நன்றியோடு பெற்றுக் கொள்வோம்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் செயற்கைமுறைக் கருத்தடைச் சாதனங்களைப்
(contraceptives)
பயன் படுத்தக் கூடாது."
"புரியுதுங்க. இது பற்றித் திருச்சபை போதிப்பது எனக்குத் தெரியும்."
." Each one in this world is unique.
ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்.
உனக்கென்று சில தனிக் குணங்கள் இருக்கும்.
எனக்கென்று சில தனிக் குணங்கள் இருக்கும்."
"நீங்கள் என்ன கேட்க போகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.
நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும்.
நான் நானாகவே இருக்க வேண்டும்.
உங்களை உங்கள் தனித் தன்மைகளோடு நான் ஏற்றுக்கொள்கிறேன்.
என்னை எனது தனித் தன்மைகளோடு நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
ஹைட்ஜன் தனி வாயு.
ஆக்ஸிஜன் தனி வாயு. இரண்டும் சேர்ந்தால் ஒரே தன்மையுள்ள தண்ணீர்.
அதேபோல்தான் நாமும்.
வெவ்வேறு தன்மைகளும் அன்பில் இணைந்து ஒரே குடும்பம் ஆகிறது.
குடும்பத்திற்கென்று தனிக் குணம் ஒன்று உண்டு.
அதுதான் அன்பு.
முழுமையான அன்போடு குடும்பம் நடத்துவோம்.
அன்பு மட்டும்தான் மாறக் கூடாது."
." very good. அதேபோல் நமது பிள்ளைகளிடம் தனித்தன்மைகள் இருக்கும்.
அவற்றிற்கேற்ப அவர்களை இறையன்பில் வளர்த்து ஆளாக்க வேண்டும்.
அவர்களை அவர்களாக வளர்த்தால்தான் அவர்கள் வளர்ச்சி முழுமையாக இருக்கும்.
பிள்ளைகளையும், நம்மையும் ஒன்றாக வைத்திருக்க வேண்டியது இறையன்பும், பிறரன்பும் மட்டும்தான்.
அன்பு முழுமையானதாக இருந்தால் மற்ற எல்லா நற்குணங்களும் தாமாக வந்து விடும்."
"பிள்ளைகள் எப்படி வாழ வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ,
அப்படியே நாம் வாழ வேண்டும்.
நமது வாழ்க்கை நமது பிள்ளைகளுக்கு முன்மாதிரிகையாக இருக்க வேண்டும்."
."கடவுள் நம்மை தன் சாயலாக படைத்தார்.
அந்த சாயலுக்குப் பங்கம் வராமல் நாம் வாழ்ந்தால்
நமது பிள்ளைகளும் இறைவனின் சாயலிலேயே வாழ்வார்கள்.
இறைவனின் விருப்பம் அதுவே."
"ஆமாங்க. ஒரே வரியில் சொல்வதானால்,
நல்ல கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.
நல்ல குடும்பம் தானாக அமைந்துவிடும்."
." வழியும், ஒளியும், உயிருமாகிய இயேசுவே நமது
வழியும், ஒளியும், உயிருமாக இருக்க வேண்டும்.
நாம் இருவரும் ஒருயிராய், ஒரே வழியில் ஒரே ஒளியில் நடப்போம்."
"நாம் இப்போது எழுதியுள்ள முன்னுரைப்படி வாழ்வோம்.
இறைவன் என்றும் நம்மோடு இருக்கிறார்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment