Sunday, May 31, 2020

''மீட்பு இனி வரும் என்ற நம்பிக்கையில் (hope) வாழ்கிறோம்." (உரோ 8:24)

''மீட்பு இனி வரும் என்ற நம்பிக்கையில் (hope) வாழ்கிறோம்."
உரோ. 8:24)
********************************
நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படையாக (foundation) இருப்பது

 விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் 
(Faith, Hope, Charity) 

என்னும் மூன்று தேவசம்பந்தமான புண்ணியங்கள். (Theological Virtues.)

இந்த மூன்று புண்ணியங்களும் 

நம்மை நேரடியாக சம்பந்தப் படுத்தும் 

இறைவன் சம்பந்தப்பட  புண்ணியங்கள்.

ஆகையால் 

 இவை தேவசம்பந்தமான புண்ணியங்கள் எனப்படுகின்றன.

கட்டடத்துக்கு அடிப்படை, (base) அடிப்படை. (foundation).

அந்த அடிப்படைக்கு அடிப்படை அதே அடிப்படைதான்.

கடவுள் ஆதி காரணர். அவருக்கு வேறு காரணம் இருக்க முடியாது.

தேவசம்பந்தமான புண்ணியங்களுக்கு கடவுள் தான் அடிப்படை.

அவை இறைவனிடமிருந்து புறப்பட்டு வந்து நம்மை அவரோடு கட்டிப் போடுகின்றன.

நாம் கடவுளை விசுவசிக்கிறோம்.

கடவுளை நம்புகிறோம்.

கடவுளை சிநேகிக்கிறோம்.

கடவுள் இயற்கையைப் படைத்தார். நமது உடல் இயற்கையைச் சார்ந்தது. 

ஆகவே இயற்கையை நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

ஆனால் கடவுள் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்.

கடவுள் இருக்கிறார் என்பதை நமது புத்தியால் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அவரைப் பற்றிய உண்மைகளை அவரே வெளிப்படுத்தினால் அன்றி
நம்மால் தெரிந்து கொள்ள முடியாது.


எதுவுமே இல்லாத ஒரு அறையை நாம் பூட்டி விட்டு போய் விடுகிறோம்.

 அரை மணிநேரம் கழித்து வந்து அறையைத் திறந்து பார்த்தால் உள்ளே ஒரு மேஜை கிடக்கிறது.

 நமக்கு ஒன்று மட்டும் புரியும், அந்த மேஜையை யாரோ கொண்டு வந்து போட்டிருக்கிறார்கள், அவர்கள் கையில் அறைச் சாவியும் இருக்கிறது என்று.

ஆனால் அந்த ஆள் எப்படிப் பட்டவர் அவரே வந்து சொன்னால்தான் புரியும்.

கடவுளை பற்றியும் அப்படியேதான்.

 கடவுள் தான் எப்படிப்பட்டவர் என்று வெளிப்படுத்தினால் தான் அவரைப் பற்றி நமக்கு தெரியும்.

 கடவுள் நமது அன்னை திருச்சபை மூலமாகவும்,

 அவள் ஏற்றுக் கொண்டிருக்கிற பைபிள் மூலமாகவும்

 தன்னை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார்.

 நாம் கடவுளைப் பார்த்தது இல்லை.

 ஆனாலும் திருச்சபையையும் பைபிளையும் ஏற்று

 இறைவனை பற்றி அவர்கள் கூறுவதை விசுவசிக்கிறோம்.

 நமது விசுவாசத்திற்கு ஆதாரம் திருச்சபையும் பைபிளும் தான்.

விசுவாசம் இறைவன் நமக்கு தந்த இலவசப் பரிசு.

நாம் விசுவசிக்கும் கடவுளை உறுதியாக நம்புகிறோம்.

அவர் நமக்கு தந்திருக்கிற கட்டளைகள்படி நடந்தால்

 நாம் உறுதியாக ஒருநாள் அவரை விண்ணகத்தில் சந்தித்து, அவரோடு நித்திய காலமாக இணைவோம் என்று நம்புகிறோம்.

நமது நம்பிக்கை உறுதியானதாக இருக்க வேண்டும்.

நாம் விசுவசிக்கும், நம்பும் கடவுளை நமது முழு மனதோடு நேசிக்கின்றோம்.

இந்த மூன்று புண்ணியங்களின் அடிப்படையில்தான் 

நமது ஆன்மீக வாழ்க்கையும், மீட்பும் அடங்கி இருக்கிறது.

புனித சின்னப்பர் கூறுகிறார்,

"மீட்பு இனி வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்."
உரோ. 8:24) என்று.

நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலை பெற்று இறைவனோடு விண்ணகத்தில் இணைவதைத்தான் மீட்பு என்கிறோம்.

நாம்  மீட்புப் பெறுவோம் என்ற  உறுதியான நம்பிக்கையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் விசுவசிக்கும் கடவுள் உறுதியாக நம்மை மீட்பார் 
என்ற நம்பிக்கை நமது வாழ்வின் ஒவ்வஒவ்வொரு விநாடியும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை இருப்போர் என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்வர்.


"என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள்."
(1 தெசெ. 5:18)

என்பது வேத வாக்கு


"என்ன நேர்ந்தாலும்" என்பதில் நமக்கு நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் அடங்கும்.

இன்பமோ, துன்பமோ,
இலாபமோ, நட்டமோ,
வெற்றியோ, தோல்வியோ,
வியாதியோ,  நலமோ,
வாழ்வோ, சாவோ

என்ன நேர்ந்தாலும்,

அது இறைவனின் பராமரிப்பினால்

நமது ஆன்மீக நலனுக்காக

இறைவனின் நித்திய திட்டப்படி, (According to the eternal plan of God)

நடக்கிறது.

இறைவனை நமது நல்ல தந்தை என்று ஏற்றுக்கொண்டால்,

 அவர் நமக்காக செய்பவை எல்லாம்  நல்லவையே என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்,

 நல்லது நடந்தால் நன்றி கூற வேண்டாமா?

இறைவன் மீது விசுவாசம் மட்டுமல்ல 

நம்பிக்கையும் இருந்தால் தான் 

நமக்கு நேர்பவை எல்லாம் நல்லவை என்று ஏற்றுக் கொள்ள முடியும்,

மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும்.

பேருந்தில் ஏறும்போதே,

' Driver குடிகாரன் மாதிரி தெரியுது, நாம் வீட்டிற்குப் போய்ச் சேருவோமா?.
அல்லது போய்ச்சேருவோமா?'

என்று சந்தேகம் வந்தால் பேருந்தில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

ஒருவன் மருத்துவமனையில் 
treatment பெற்றுக்கொண்டு இருக்கிறான்.

 அவன் காதில் விழும்படி டாக்டர்

" நம்பிக்கை இல்லை"

 என்று கூறினார்.

 ஆனால் நோயாளி மகிழ்ச்சியாக இருந்தான். 

நண்பன் கேட்டான்,

" ஏண்டா, டாக்டர்
'நம்பிக்கை இல்லை'ன்னு சொல்லுகிறார். நீ சிரிச்சிக் கிட்டு இருக்கிற?"

"எனக்கு நம்பிக்கை இருக்கிறது."

"என்ன நம்பிக்கை?"

"இருந்தால் இவ்வுலகம், இறந்தால் மறுவுலகம்.

கடவுள் எங்கும் இருக்கிறார்.

எங்கிருந்தாலும் இறைவனோடுதான் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கடவுளை நினைக்கிறேன்.  மகிழ்ச்சியாக இருக்கிறேன்."

மகிழ்ச்சிக்கு இது போதாதா?

விவசாயி பையன். அவர் படிக்கவில்லை.  பையனைப் படிக்கவைத்து அரசாங்க வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ஆசையோடு பள்ளிக்கு அனுப்புகிறார்.

 அவன் S.S.L.C யில் fail  ஆகிவிட்டான்.

ஆனால் வருத்தப் படவே இல்லை.

அப்பா கேட்கிறார்,

"fail ஆகிவிட்டோமே என்ற கவலையே இல்லையா?
pass பண்ணாம எப்படி வேலைக்குப் போக முடியும்?"

" நான் நமது வயலில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் கடவுளின் திட்டம் என்று நினைக்கிறேன்.

'எல்லாம் அவன் செயல்' என்று அடிக்கடி கூறுவீர்களே.

இதுவும் அவன் செயல்தான்."

இப்போது குரோனா பயம் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது,

 இறைவன் மேல் நம்பிக்கை இருந்தால் பயம் இருக்காது.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் 

என்ன நேர்ந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள்.


 எது நேர்ந்தாலும் நன்றியோடு இருப்பார்கள்.

 நாமும் இறைவனை நம்புவோம்.

 எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

நமது வாழ்வின் நோக்கம் மீட்பு மட்டும்தான்.

இவ்வுலகில் இறைவன் திட்டத்தால் நமக்கு நடைபெறும் எல்லா நிகழ்வுகளும் 

நம்மை மீட்பை நோக்கியே வழிநடத்துகின்றன.

இறைவனை மீறி எதுவும் நடக்காது.

என்ன நேர்ந்தாலும் நமக்கு மீட்பு உறுதி என்று நம்புவோம். மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

 













 

Saturday, May 30, 2020

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."(அரு. 21:25)




"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."

(அரு. 21:25)

*********************************


எதைச் சொன்னாலும் "பைபிளில் எங்கே இருக்கிறது?" என்று கேட்போர் கவனத்திற்கு:


இயேசு விண்ணகம் எய்தும்போது வயது 33.

(அம்மாவுடன் வாழ்ந்தது 30 ஆண்டுகள். பொதுவாழ்க்கை 3 ஆண்டுகள்.)


விண்ணகம் எய்து முன் அவர் சீடர்களிடம் 


"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்."


"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."

(மத். 28:19,20)



"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்." 

(மாற்கு,16:15)


என்றுதான் சொன்னார்.


"நற்செய்தியை எழுதுங்கள்" என்று அவர் சொல்லவில்லை. 


நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டது கி.பி.60 - 90 காலவெளிக்குள்.  


கி.பி.33 முதல 60 வரை யார் கையிலேயும் நற்செய்தி நூல்கள் இல்லை.


அப்போஸ்தலர்கள் வாய்மொழியாகப் போதித்தார்கள்.


முதலில் நற்செய்தியை எழுதிய மாற்கு ஒரு அப்போஸ்தலரே அல்ல. 


இராயப்பரின் நற்செய்திப் பயணங்களில் உடன் இருந்தவர்.


லூக்காசும் ஒரு அப்போஸ்தலர் அல்ல. 

அவர் சின்னப்பரின் 

நற்செய்திப் பயணங்களில் உடன் இருந்தவர்.


அருளப்பர்தான் கடைசியாக நற்செய்தியை எழுதியவர்.


இயேசு போதித்தவை அனைத்தையும் தான் எழுதவில்லை அவரே கூறியிருக்கிறார்.


"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."

(அரு. 21:25)


Suppose,


அருளப்பர் காலத்தில் வாழ்ந்த ஒருவர் அவரிடம் வந்து,


"இயேசு விண்ணகம் எய்தினார்  என்று போதிக்கின்றீர்களே.


உங்களது  நற்செய்தி நூலில் இயேசு விண்ணகம் சென்ற விபரத்தைக் குறிப்பிடவே இல்லையே.


உங்கள் நூலிலேயே  இல்லாததை நீங்கள் எப்படிப் போதிக்கலாம்?"


என்று கேட்டால் அருளப்பர் என்ன சொல்லியிருப்பார்?


"ஐயா, நான் வாய்மொழி

யாகப் போதித்ததைத்தான் எழுதினேன்.


இயேசுவின் போதனைதான் எனது வாய்மொழிப் போதனைக்கு ஆதாரம்.


என்னுடைய வாய்மொழிப் போதனைதான் (Tradition) என் எழுத்துக்கு (Gospel) ஆதாரம்.


நான் போதித்தவை எல்லாவற்றையும் எழுதவில்லை.


நான் எழுதியிருப்பது வருங்காலச் சந்ததிக்குப்

போய்ச் சேருவதுபோல


நான் எழுதாமல் போதித்தவையும்  வாய்மொழியாகவே  போய்ச் சேரும்.


நான் இயேசுவின் திருச்சபையின் அதிகாரப்பூர்வ உறுப்பினன்.


நான் போதிப்பது என் தனிப்பட்ட போதனை அல்ல.


இயேசுவின், அவரால் நிறுவப்பட்ட திருச்சபையின் போதனை.


திருச்சபையின் போதனை எழுத்து வழியே வந்தாலும், வாய்வழியே வந்தாலும் திருச்சபையின் போதனைதான்."


என்றுதான் சொல்லியிருப்பார்.


அப்போஸ்தலர்கள் இயேசு போதித்ததை நேரில் கேட்டவர்கள், 

வாசித்தவர்கள் அல்ல.


காதால் கேட்டதை வாயால் போதித்தார்கள்.


அப்போஸ்தலர்களில் மத்தேயுவையும், அருளப்பரையும் தவிர வேறு யாரும் நற்செய்தி. நூல்களை எழுதவில்லை.


தோமையார் கி.பி.52 லேயே இந்தியாவிற்கு வந்து விட்டார்.


அப்போது நற்செய்தி நூல்கள் எழுதப்படவில்லையே!



அவரே இயேசுவின் நேரடி சீடர் ஆகையால் அவருக்கு நூல்கள் தேவையும் இல்லை.


அவர் நமக்கு தந்தது வாய்மொழிப்  போதனை.


அவர் முதலில் இந்தியாவிற்கு வேதம் போதிக்க வந்தபோது


 நம்மவர் அவரிடம்,


"எழுத்து ஆதாரம் இல்லாமல் நீங்கள் எப்படி போதிக்கலாம்?


 நீங்கள் போதிப்பதை நாங்கள் நம்ப வேண்டுமென்றால்


 நீங்கள் கூறும் இயேசுவின் பைபிள் ஆதாரம் ஏதாவது இருக்க வேண்டும்."


 என்று சொல்லியிருந்தால் இந்தியாவில் கிறிஸ்தவமே வேரூன்றி இருக்காது.


 நல்லவேளை அன்றைய மக்கள் இன்றைக்கு கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருப்பவர்களை போல படித்த புத்திசாலிகள் அல்ல!


இயேசுவின் போதனையையே பாமர மக்கள் விசுவசித்த அளவுக்கு படித்தவர்கள் விசுவசிக்கவில்லையே!


ஒரு நண்பர்,


"போப்தான் திருச்சபையின் தலைவர் என்பதற்கு பைபிளில் என்ன ஆதாரம் இருக்கிறது?" என்று கேட்கிறார்.


கேள்வியைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது.



இது ஒரு பையனைப் பார்த்து,


"இந்த ஆளைப் பார்த்து 'அப்பா'

என்கிறாயே, அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?" என்று கேட்பது போல் இருக்கிறது.


தாய் மேல் நம்பிக்கை உள்ள யாரும் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டாங்க.


இயேசு இராயப்பரை  திருச்சபையின் தலைவராக நியமித்தது நமக்குத் தெரியும்.


அதற்குப் பைபிளில் ஆதாரம் இருக்கிறது.


இராயப்பரோடு இயேசு உருவாக்கிய திருச்சபையின் வரலாறு முடிந்து விட்டதா?


உலகம் முடியும் மட்டும் இவ்வுலகில் திருச்சபை செயல்பட வேண்டாமா?


ஆண்டவர் இராயப்பரை  நோக்கி "என் ஆடுகளைமேய்" என்று சொன்னாரே 

அந்த ஆடுகள் அப்போஸ்தலர்கள் தானே?


அப்போஸ்தலர்களின் வாரிசுகளை மேய்க்க ஆள் வேண்டாமா?


ஆயர்கள், குருக்கள், விசுவாசிகள் ஆகிய மூன்று வகையினருக்கும்தானே இராயப்பரை தலைமை ஆயராக இயேசு நியமித்தார்!



விசுவாசிகளைத் தொடர்ந்து விசுவாசிகள் இருப்பார்கள்.


குருக்களைத் தொடர்ந்து குருக்கள் இருப்பார்கள்.



 ஆயர்களைத் தொடர்ந்து 

ஆயர்கள் இருப்பார்கள்.


ஆனால் இராயப்பரைத் 

தொடர்ந்து அவரது ஸ்தானத்தில் யாரும் இருக்க மாட்டார்களா? 


இராயப்பர் எந்த மேற்றிராசனத்தின் ஆயரோ


 அதன் ஆயராக அவரது காலத்திற்குப் பின் வருபவர்


 திருச்சபையின் தலைவர் என்று ஆதித்திருச் சபை ஏற்றுக் கொண்டது.


திரும்பவும் சொல்லுகிறேன்,

ஆதித்திருச்சபை ஏற்றுக் கொண்டது.  


ஆதித்திருச்சபையின் தொடர்ச்சிதான் 


இடைக்காலத் திருச்சபையும்,


இன்றைய திருச்சபையும்,


வருங்கால திருச்சபையும்.


இயேசுவின் காலம் தொட்டு இறுதி காலம் வரை ஒரே  திருச்சபைதான்.



அதே திருச்சபையின் அதிகாரப்பூர்வமான,


இராயப்பரின் வாரிசான பாப்பரசரைத்


தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். 



இராயப்பர் வேத சாட்சியாய் மரித்த பின்,


உரோமையின் ஆயராகப் பொறுப்பேற்ற லீனுஸ் (Linus) இரண்டாவது பாப்பரசர் ஆனார். 


இதைத் தாய்த் திருச்சபை ஏற்றுக்கொண்டது.


தொடர்ந்து ரோமின் ஆயராகப் பொறுப்பேற்பவர்  பாப்பரசர் ஆகிறார்.


 உலகிலுள்ள அனைத்து ஆயர்களையும் பாப்பரசர் நியமிக்கிறார்.


பாப்பரசரால் நியமிக்கப்பட்ட கர்தினால்மார்கள் ரோமின் அடுத்த ஆயரைத்  தேர்ந்தெடுக்கிறார்கள்.

'

அவர் பாப்பரசர் ஆகிறார்.

                           

கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு அதன் உள் ஒழுங்குகள் புரியாது.


அவற்றைப் புரிந்துகொண்டு அவர்கள் நம்மோடு இணைய இறைவனை வேண்டுவோம்.


லூர்து செல்வம்.

Friday, May 29, 2020

"அருளப்பனின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?"(அரு. 21:15)

"அருளப்பனின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?"
(அரு. 21:15)
_______________________________
இயேசு விண்ணகம் எய்துவதற்கு முன் இராயப்பரை நோக்கி

"இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா?"

என்று கேட்கிறாய்.

"இவர்களைவிட" மற்ற சீடர்களைக் குறிக்கிறது.

இராயப்பர் மறுமொழியாக 
 "ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்."
என்கிறார்.

ஒரே கேள்வியை மூன்று முறைக் கேட்கிறார்.

இராயப்பரும் மூன்று முறையும் அதே பதிலைச் சொல்லுகிறார்.

முதல் பதில் வந்தவுடன் ஆண்டவர்,

"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"
(Feed my lambs.)  எனகிறார்.

இரண்டாவது பதில் வந்தவுடன் ஆண்டவர்,

"என் ஆடுகளைக் கண்காணி.'

மூன்றாவது பதில் வந்தவுடன் ஆண்டவர்,

"என் ஆடுகளை (Feed my sheep) மேய்.

முதலில் 
"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"
என்கிறார்.


இரண்டாவது
"என் ஆடுகளைக் கண்காணி.''
என்கிறார்.

மூன்றாவது
"என் ஆடுகளை (Feed my sheep) மேய்." என்கிறார்.

இயேசு இராயப்பரைத் திருச்சபை முழுமைக்கும் .தலைவராக நியமித்தார் என்பதற்கு அவருடைய வார்த்தைகளே ஆதாரம்.

முதலாவது குறிப்பிட்டிருக்கிற.
ஆட்டுக்குட்டிகள் விசுவாசிகளையும்,

இரண்டாவது குறிப்பிட்டிருக்கிற ஆடுகள் குருக்களையும்,

மூன்றாவது குறிப்பிட்டிருக்கிற ஆடுகள் ஆயர்களையும்

குறிக்கும். 

பெந்தேகோஸ்தே அதாவது பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள் மீது இறங்கி வந்த பின்புதான்

 போதனை செய்யும் அமைப்பு ரீதியான திருச்சபை ஆரம்பிக்கின்றது.

ஆண்டவர்

"என் ஆட்டுக்குட்டிகளை மேய்"

என் ஆடுகளைக் கண்காணி.''

"என் ஆடுகளை  மேய்."

என்று கூறியதிலிருந்து

அவர் விண்ணகம் எய்து முன்பே 

விசுவாசிகள்,

 குருக்கள்,

ஆயர்கள் 

பாப்பரசர்

 என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் என்று தெரிகிறது.

இராயப்பர் பாப்பரசர், இயேசுவின் பிரதிநிதி.

பாப்பரசர் தலைமையில் இயங்கும் திருச்சபைதான் இராயப்பர் என்ற பாறை மீது கட்டப்பட்ட ஒரே திருச்சபை.

பிரதிநிதியை ஏற்காதவர் அவரை அனுப்பியவரையும் ஏற்கவில்லை.


சகோதரர்களை அதாவது மற்ற சீடர்களை உறுதிப்படுத்தும் பொறுப்பை

ஆண்டவர் இராயப்பரிடம்தான்
கொடுக்கிறார்.


"சீமோனே, சீமோனே, இதோ! சாத்தான் உங்களைக் கோதுமைப்போலப் புடைக்க உத்தரவு பெற்றுகொண்டான்.

32 ஆனால் உன் விசுவாசம் தவறாதபடி உனக்காக மன்றாடினேன். நீ திருந்தியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து'
(லூக். 22:31, 32)



பெந்தகோஸ்தே அன்று நற்செய்திப் பணியை ஆரம்பித்து வைத்தவர் முதல் பாம்பரசர் இராயப்பர்.

"அப்பொழுது இராயப்பர் பதினொருவரோடு எழுந்துநின்று, மக்களை நோக்கி, உரத்த குரலில் பேசியதாவது: "யூதர்களே, மற்றும் யெருசலேம்வாழ் மக்களே, நான் சொல்வதை அறிந்துகொள்ளுங்கள்: என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.(அப். 2:14)


ஆதித்திருச்சபை சபைகளை விசாரித்து வந்தவர் இராயப்பர்.

"இராயப்பர் எல்லாச் சபைகளையும் விசாரித்து வருகையில் ஒருநாள், லித்தா நகரில் வாழ்ந்து வந்த இறை மக்களிடம் வந்து சேர்ந்தார்."
(அப்.9:32)


.நெடுநேரம் வாதாடிய பின் இராயப்பர் எழுந்து, "சகோதரரே, புறவினத்தார் என் வாய்மொழியால் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசம் கொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலிருந்தே உங்களிடையில் என்னைத் தேர்ந்துகொண்டார். இது உங்களுக்குத் தெரிந்ததே.
(அப். 15:7)

இவ்வசனமே  இராயப்பரைக் கடவுள் தேர்ந்து கொண்டது புரியும்.


எதற்கெடுத்தாலும் பைபிளிலேயே ஆதாரம் தேடுபவர்கள் 

இத்தனை ஆதாரங்கள் தெளிவாக பைபிளில் இருந்தும் 

பாப்பரசரை தவறாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் 

அது அவர்களது அறியாமையால் அல்ல.

உண்மையிலேயே  கடவுளையே அறியாமல் இருக்கிற மக்களிடம் உணமையைச் சொன்னால் புரிந்துகொள்வார்கள்.

அறிந்தும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிற மக்களிடம் சொன்னால் புரியும், ஆனால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அவர்களுக்காக செபிப்போம்.

லூர்து செல்வம்.

Thursday, May 28, 2020

"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"(லூக். 18:38)

"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"
(லூக். 18:38)
_______________________________
இயேசுவை ஏன் தாவீதின்  குமாரன் என்று அழைக்கிறோம்?

தாவீதின் வம்சத்தில் பிறந்தார் என்பது உண்மைதான்.

 தாவீது ஒரு அரசர், ஆகவே இயேசு அரச குடும்பத்தில் பிறந்தார் என்பது உண்மைதான்.

தாவீது இஸ்ரயேல் மக்களின் இவ்வுலக அரசர்.

ஆனால் அரச குடும்பத்தில் பிறந்த இயேசு இஸ்ரேல் மக்களின் இவ்வுலக அரசர் அல்ல. 

இயேசு பிறந்தபோது இஸ்ரயேல் மக்கள் ரோமை சாம்ராட்சியத்தால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களை ரோமை சாம்ராட்சியத்திலிருந்து உலக ரீதியாக மீட்க எதுவும் செய்யவில்லை.

"நீ யூதரின் அரசனோ?" என்று பிலாத்து வினவும்போது, 

இயேசு மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்"
(லூக்.23:3)

"என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று: 
(அரு. 18:36)
 என்றுதான் சொன்னார்.

ஆக அரச குடும்பத்திலிருந்து பிறந்தது இந்த உலகை ஆள்வதற்கு அல்ல.

(ஏற்கனவே இந்த உலகம் அவருடையதுதான். ஏனெனில் அவர்தான் இதை படைத்தவர்.)

அப்படியானால் இயேசு, 

"தாவீதின் மைந்தன்" என்று இயேசு அழைக்கப்படுவதில் ஏதாவது  உட்பொருள் இருக்குமோ?

இதைத் தியானிக்கும் போது என் மனதில் பட்டதைப்  பகிர்ந்து கொள்கிறேன்.  

இயேசு உலகில் மனிதனாய்ப் பிறந்ததின் நோக்கத்தை இரண்டு கண்ணோக்குகளில் (points of view)பார்க்கலாம்.

இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான்.

1.பாவிகளை மனந்திருப்ப.

2.மனிதரைப் பாவத்திலிருந்து மீட்டு பரிசுத்தராய் மாற்ற.

1.இறைமகனாகிய (Son of God) இயேசுவுக்குத் தன்னை மனு மகன் (Son of Man) என்று அழைத்துக் கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன்.

"மனுமகன் பாடுகள் பல படவும்......." (லூக்.9:22)

"இழந்துபோனதைத் தேடி மீட்கவே 
மனுமகன் வந்துள்ளார்" 
(லூக்.19:10)


அவர் விருப்பப்பட்டு தானே மனிதனாய்ப் பிறந்தார்.

"மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்"
(லூக்.5:32)


நமது முதல் பெற்றோர் பாவம் செய்ததால்,  மனுக்குலம் முழுவதும் பாவத்தின் பிடியில் விழுந்தது.

மனிதர்கள் எல்லாருமே மீட்கப் பட வேண்டிய பாவிகள்.

பாவிகளை மீட்கவே பாவ வலைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் மனுகுலத்தில் மனிதனாகப் பிறக்கிறார்.

பாவிகளை மனம் திருப்ப இறைமகன் மனு மகனாக பிறக்கவிருப்பதற்கு  முன் அடையாளமாக

 அவர் தாவீதின் வம்சத்தில் பிறக்க நித்திய காலமாக திட்டமிடுகிறார்.

தாவீது இறைவனால் இஸ்ரயேலரின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

ஆனால் அவர் உரியாவின் மனைவியோடு விபச்சாரம் செய்து மகாப் பெரிய பாவத்தைக் கட்டிக் கொண்டார்.

ஆனால் நாத்தான் தீர்க்கத்தரிசி மூலம் இறைவன் அவரது தவற்றைச் சுட்டிக் காண்பித்தபோது,

தான் செய்த பெரிய பாவத்திற்காக மிகவும் மனம் வருந்தி அழுது

 இறைவனிடம் மன்னிப்பு கேட்டார்.

இறைவன் அவரை மன்னித்தார்.

இறை மகன் மனிதனாய்ப் பிறப்பதற்கு 

மிகப் பெரிய பாவம் செய்து மனம் திரும்பிய தாவீதின் வம்சத்தைத் தேர்ந்தெடுத்தார்.

தான் பிறந்தது பாவிகளை மனம் திருப்புவதற்காகத்தான் என்பதற்கு 
முன் அடையாளமாக இதை செய்தார்.

 மிகப்பெரிய பாவம் செய்த பாவிகள் 

பைபிளை வாசிக்க நேர்ந்தால்

 இறைவன் இவ்வளவு பெரிய பாவியை இரக்கத்தோடு மன்னித்திருக்கும் போது

 நம்மையும் கட்டாயம் மன்னிப்பார் என்ற நம்பிக்கையோடு இறைவனை நோக்கி 

பாவத்துக்கான மனஸ்தாபத்தோடு திரும்பி வருவர்.

 அப்படிப் பட்டவர்களுக் காகத்தான் இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்தார்.

தாவீதின் மைந்தன் என்று அழைக்கப்படுவதை அவர் தடுக்கவில்லை.

"இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்"

என்று வழியோரக் குருடன் கெஞ்சிய போது, இரங்கி அவனைக் குணப்படுத்தினார்.

இயேசு மனம் திரும்பும் பாவிகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார்.

பாவியாகிய  சக்கேயுவின் வீட்டுக்குத் தங்குவதற்காகப் போகிறார். 

மற்றவர்களின் முணு முணுப்பைப் பற்றி கவலைபட வில்லை.

சக்கேயு மனம் திரும்புகிறான்.

மனம் திரும்பிய ஒரு பாவியின் வம்சத்தில் பிறக்க திட்டமிட்டது 

தான் பாவிகளையே தேடி வந்து இருப்பதை வெளியே காண்பிப்பதற்காகதான்.

எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் அவனையும் நேசிக்கிறார்.

அவன் மனம் திரும்புவதையே விரும்புகிறார்.


 
2.அவர் பரிசுத்தர்.

அவர் பாவிகளை நேசிப்பதே அவர்களைப் பரிசுத்த மானவர்களாக மாற்றுவதற்காகத் தான்.

மனித சுபாவம் எடுக்கும் முன்பே 

தான் எந்த பணிக்காக வந்தாரோ 

அந்த பணியை ஆரம்பித்து விட்டார் இயேசு.

 அதாவது மனிதர்களை 
பரிசுத்தமானவர்களாக மாற்ற வந்த இயேசு

  அவரை பெறப்போகும் தாயை

 அவள் உற்பவிக்கும்போதே ஜென்ம பாவம் இல்லாமல்  பரிசுத்தமானவளாகப் படைத்தார்.
 

இயேசு தன்னைக் கருத்தரிக்கும் பெண் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக,

 மீட்பிற்காக தான் படவிருக்கும் பாடுகளின் பலனை முன்கூட்டியே அவளுக்கு அளிக்கிறார்.

அதன் பலனாய் மரியாள் பாவ மாசின்றி  உற்பவிக்கிறாள்.

நம்மை பாவத்தில் விழுந்த பின்பு மீட்ட இயேசு 

தன் தாயை

 இறைவனின் தாய் என்பதால்

விசேசித்த விதமாக  அவளை பாவத்தில் விழாமல் மீட்டார்.

ஆகவேதான் அவளை நாம் "அருள் நிறைந்த மரியே"
 என்கிறோம்.

"இயேசுவே,  நீர் பரிசுத்தர்.

ஆனால் பாவிகளை அளவு கடந்து நேசிக்கிறீர்.

பாவிகள் மனம் திரும்ப வேண்டும் என்று ஆசிக்கிறீர்.

அந்த ஆசையை வெளிப்படையாகக் காட்டவே,

பாவியாக இருந்து மனம் திரும்பிய தாவீதின் வம்சத்தில் பிறந்தீர்.

தாவீதை மனம் திருப்பியது போல எங்களையும் மனம் 
திருப்பும்.

இயேசுவே, தாவீதின் வம்சத்தில் பிறந்தவரே. எங்கள் மீது இரக்கமாக இரும்.

இயேசுவே, பாவ மாசு அண்டாத, அருள் நிறைந்த மரியாளின் மைந்தனே,

எங்கள் பாவங்களை மன்னித்து, எங்களைப் பரிசுத்தர்களாக மாற்றும்.

ஆமென்."

லூர்து செல்வம்.



 

Wednesday, May 27, 2020

நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.

நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.
.....................................................  பழைய திரைப்பட நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது.

ஒரே ஒரு தம்பிக்கு ஒரே ஒரு அண்ணன். நிறைந்த சொத்து. ஒரு நாள் தம்பி தன் மாமனாருடைய துற்புத்தி கேட்டு அண்ணனிடம் சொத்தில் பங்கு கேட்கிறான். அண்ணனும் சம்மதிக்கிறான்.
சொத்து பிரிக்கிற அன்று  அண்ணன் சொத்து முழுவதையும் மொத்தமாக வைத்து விட்டு அவன் ஒரு புறம் உட்கார்ந்து கொண்டு,
"உனக்குப் பிரியமான பங்கை எடுத்துக்கொள்"  என்கிறான். தம்பிக்கு ஒன்றும் புரியவில்லை. சொத்தை இரண்டாகப் பிரிக்காமலேயே
"உனக்குப் பிரியமான பங்கை எடுத்துக்கொள்" என்றால் எப்படி? திடீரென்று ஞானம் உதயமாகிறது. "அண்ணா, உன்னை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்" எனது கூறிவிட்டு, அண்ணனை இறுக்க பற்றிக் கொள்கிறான்.  இது இவ்வுலக நிலை.

ஆன்மீக நிலையில், இறைவன் இவ்வுலக செல்வங்களை எல்லாம் நம் முன் வைத்துவிட்டு,

" உனக்கு முன்னால் இருக்கும்

இவ்வுலக அனைத்து சொத்துக்கள்,

நான்,

இரண்டில் எதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உனக்குப் பரிபூரண சுதந்திரம் தருகிறேன்"

என்று சொன்னால் நாம் என்ன செய்வோம்?

நாம் என்ன வேண்டும்?

"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"

இயேசு கொடுத்த இரண்டு அன்பு கட்டளைகளுள்

"உன்மீது நீ அன்புகாட்டுவாயாக" என்ற கட்டளை இல்லை.

ஆனாலும், இயேசு,
" உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல்"

என்று கூறினார்.

ஏன்?

நம் மீது நாம் அன்பு காட்டுவது இயல்பு,

Self love is inherent in us,

நம்மிடம் இருப்பதைத்தானே. மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்?

ஆகவேதான் அன்புமயமான கடவுள் நம்முள் அன்பை வைத்துப் படைத்தார்.

இப்போ இறைவன்  அழியக்கூடிய  உலகை ஒருபுறம் வைத்து,

நித்தியராகிய தான் ஒரு  புறமும் இருந்து கொண்டு

"தேர்ந்தெடு" என்றால்

நாம் அழியக்கூடிய செல்வத்தைத்
தேர்ந்தெடுக்க வேண்டுமா?

அழியாத செல்வத்தைத்
தேர்ந்தெடுக்க வேண்டுமா?

அழியக்கூடிய செல்வத்தைத்
தேர்ந்தெடுத்தால், நாம் அன்பு என்னும் கண் இருந்தும் குருடர்கள்தான்!

நாம் கண்ணை மூடிக் கொண்டு சாக்கடைக்குள்   விழுவதற்குச் சமம்.

நாம் இறைவனை தேர்ந்தெடுத்தால்தான் நமக்குள் இறைவன் வைத்த அன்பிற்கு அர்த்தம் இருக்கிறது.

இறைவன் நித்தியர்,

அவரைத் தேர்ந்தெடுத்தால் தான் நமக்கு நித்திய வாழ்வு கிடைக்கும்.

அவரை விட்டுவிட்டு உலகத்தை மட்டும் தேர்ந்தெடுத்தால்  நித்திய மரணம்தான்.

ஆக,   நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். 

அதுதான்  இறைவனோடு நாம் வாழப்போகும் நித்திய பேரின்ப வாழ்வு.

அப்படியானால் கடவுள் ஏன் ஒரு உலகைப் படைத்து, அதில் பல செல்வங்களையும் வைத்து அதன் மத்தியில் நம்மையும் வாழ விட்டிருக்கிறார்?

நேராக விண்ணகத்திலேயே நம்மை படைத்திருக்கலாமே! எதற்காக இந்த உலகம்?

இது பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன்,

" எதற்காக இந்த தேர்வுகள் எல்லாம்?

தேர்வே வைக்காமல் சான்றிதழ் தந்திருக்கலாமே!" என்று சொல்வதுபோல் இருக்கிறது.

பள்ளிக்கூடமே போகாத ஒரு பையன் சொன்னானாம்:

"எதற்கு பள்ளிக்கூடம்?

பேசாம 14 வயசுல 8வது வகுப்பு சர்ட்டிபிகட்,

16வயசுல S.S.L.C சர்ட்டிபிகட்,.

18வயசுல +2 சர்ட்டிபிகட்,.

22 வயசுல B.E சர்ட்டிபிகட், கொடுத்துவிட்டுப் போகலாமே! என்றானாம்.

அவனுக்கு என்ன பதில் சொல்வோம்?

"நமது தகுதியை நிரூபித்து சர்ட்டிபிகட் பெற்றால் தானே நமக்கு மரியாதை?"

விண்ணுலக நிலை வாழ்வை நாம் நமது இவ்வுலக வாழ்க்கையில் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.

நாம் இவ்வுலகில் வாழ்வது இவ்வுலக வாழ்வுக்காத அல்ல. 

நமது ஒரே வாழ்வான நித்திய வாழ்வை ஈட்டுவதற்காக. (to earn)

அமெரிக்காவில் flight ஏறி,

பிரயாணம் சுகமாக  இருக்கிறது என்பதற்காக

பாவூர்சத்திரத்தையும், வீட்டையும் மறந்தால் எப்படி?

நாம் இவ்வுலகில் வாழ்வது நிலை வாழ்வை நோக்கிய பயணம்தான்.

நிலை வாழ்வில் நித்திய காலமாக நாம் அனுபவிக்க பேரின்பம் காத்திருக்கிறது.

நாம் அனுபவிக்க இருக்கும் பேரின்பத்தின் அளவை அதிகரிக்க இவ்வுலகில் வாய்ப்புகள் தரப்பட்டிருகின்றன.

இவ்வுலகில் சிற்றின்ப வசதிகள் நிறைய உள்ளன.

சிற்றின்பத்தை அனுபவிக்கும் போது இன்பம் இருக்கும்.

அனுபவித்து முடிந்தவுடன் அது காணாமற்போய்விடும்.

ஆனால் விண்ணுலக. நிலைவாழ்விற்காக இவ்வுலக சிற்றின்பத்தைத் தியாகம் செய்தால்,

அதற்குப் பிரதிபலனாக நிலைவாழ்வில் நிலையான பேரின்பத்தின் அளவு அதிகம் ஆகும்.

உதாரணத்திற்கு,

மட்டன் பிரியாணி சாப்பிடுவதால் கிடைப்பது சிற்றின்பம்.

கடவுளோடு நாம் வாழ இருக்கும் நிலை வாழ்வுக்காக
இந்த சிற்றின்பத்தை தியாகம் செய்தால்

நமது பேரின்பத்தின் அளவு அதிகரிக்கும்,

சிற்றின்பம் முடிவுக்கு வரும்,
  பேரின்பம்  என்றென்றும் நிலைத்திருக்கும்.

நமது ருசியான உணவை தியாகம் செய்து

சாப்பாடு கிடைக்காத ஒரு ஏழைக்குக் கொடுத்து உதவினால்

பேரின்பத்தின் அளவு இரு மடங்கு அதிகரிக்கும்.

கிறிஸ்மஸ் போன்ற விழாக் காலங்களில்

நாம் செய்யும் ஆடம்பரங்களைத் தியாகம் செய்து

அதில் மிச்சமாகும் பணத்தை ஏழைகளுக்காகச் செலவு செய்தால்

இறைவன் நமது நிலைவாழ்வின் பேரின்பத்தை பன்மடங்கு அதிகரிப்பார்.

இவ்வுலக வாழ்வின் போது சிற்றின்பம் மட்டுமல்ல

துன்பங்களும் நிறைய வரும்.

சிற்றின்பத்தை தியாகம் செய்துவிட்டு

துன்பங்களை இறைவனுக்காக நாம் ஏற்றுக்கொண்டாலும்

நமது நிலை வாழ்வின் பேரின்பம் அதிகரிக்கும்.

ஆகவேதான் புனித வாழ்வு வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்

வாழ்நாளில் துன்பங்கள் நிறைய வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு முன்மாதிரிகையாகத்தான்

இயேசுவே, விண்ணுலகிலிருந்து துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் தேடியே
இவ்வுலகத்திற்கு வந்தார்.

இவ்வுலகில் தனக்காக வாழாமல் பிறர் நலனுக்காக வாழ்பவனும் விண்ணுலகில் பேரின்பத்தை சம்பாதிக்கிறான்.

புனித கல்கத்தா தெரசா தன் வாழ்நாழ் முழுமையும் நோயாளிகளின் நலனுக்காகத் தன்னையே அர்ப்பணித்தாள்.

நாம் அழியா வாழ்வுடைய ஆன்மாவையும் அழியக்கூடிய உடலையும் கொண்டவர்கள்.

நமது உடல் மண்ணிலிருந்து வந்தது.

மண்ணிற்குத் திரும்பு முன்   தன்னை இயக்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு எவ்வளவு நன்மைகள் செய்ய முடியுமோ அவ்வளவு செய்து விடவேண்டும்.

நம் உடல் எந்த அளவுக்கு தன்னை ஒறுக்கிறதோ,

அந்த அளவிற்கு ஆன்மாவிற்கு விண்ணுலகில்  பேரின்பம் அதிகமாகும்.

ஆன்மாவிற்கு உதவிகரமாக இருக்கும் உடலுக்கும் சன்மானம் கிடைக்காமல் போகாது.

உலக முடிவில் உயிர்ப்பு நாளன்று மண்ணாலான நமது உடல் ஆன்மீக உடலாக (Spiritual body) மாறி,

ஆனமாவோடு இணைந்து, விண்ணக வாழ்வில் பங்கு பெறும்.

The Bible tells us

that when Jesus returns to earth,

he will physically raise all those who have died,

giving them back the bodies they lost at death.

These will be the same bodies people had in earthly life—

but our resurrection bodies will not die and, for the righteous, they will be transformed into a glorified state,

freed from suffering and pain,

and enabled to do many of the amazing things

Jesus could do with his glorified body (see 1 Cor. 15:35–44, 1 John 3:2).

ஏற்கனவே இயேசுவும், அன்னை மரியாளும் ஆன்ம சரீரத்தோடு விண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை.

அது பூமியில் இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அல்ல.

விண்ணுலகில்

இறைவனோடும், புனிதர்களோடும்
வாழவிருக்கும்

நிலையான விண்ணுலக வாழ்க்கை.

அதற்காக இப்பொழுதே இறைவன் உதவியோடு. நம்மை நாமே தயாரிப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, May 26, 2020

சீடராவோம், சீடராக்குவோம்.



சீடராவோம், சீடராக்குவோம்.
...................................................
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்".
இது ஒரு தமிழ் மொழி.

"பகிர்ந்துண்டால் பசி தீரும்."
இது ஒரு பழமொழி.

நாம் நம்மை நேசிப்பதுபோல  பிறரையும் நேசித்தால் மேற்கூறப்பட்ட இரண்டு மொழிகளும் நமமில் உண்மை யாகும்.

இரண்டுமே இறைவனின் பண்பை நமக்குப் புரியும் வகையில் எடுத்துரைக்கின்றன.

இறைவன் தனது சாயலாக நம்மைப் படைத்தார்.

நாம் எப்போதெல்லாம் நமக்கு உரியதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோமோ,

 அப்போதெல்லாம் நாம் இறைவனின் சாயலாய் இருக்கிறோம் என்பதை வெளிப்படையாகக் காண்பிக்கின்றோம்.

 இறைவன் அன்பு நிறைந்தவர்.

 அவர் தனது அன்பாகிய பண்பை அவருடைய படைப்பாகிய நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

இறைவன் சுதந்திரமாக செயல்படக்கூடியவர்.

 தம் சுதந்திரத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

 அவர் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்தி நல்லதை மட்டும் செய்தார்.

 நாமோ நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவம் செய்தோம்.

 இதை உணர்ந்த  பிறகாவது நம்முடைய பாவத்திற்கு மன்னிப்பு பெற்று, தொடர்ந்து நம் சுதந்திரத்தை இறைவனிடம் அர்ப்பணிப்போம்.
அவரது சித்தப்படி வாழ்வோம்.

 அவரை, அவரது அன்பை, அவரது நன்மை தனத்தை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து ஆனந்தம் அடைவோம்.

இயேசு விண்ணகம் எய்துமுன் தனது சீடர்களை  உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கப் பணித்தார்.

அவர்கள் அறிவித்த நற்செய்தியைத் தான் இன்று நமது வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் இறைவனை நேசிப்பது உண்மையானால்

 அவரது கட்டளைப்படி நமது அயலானையும் நேசிப்பதும் உண்மையானால்

  நாம் பெற்ற நற்செய்தியை நமது அயலானோடும்  பகிர்ந்து கொள்வோம்.

 ஏனெனில்,  நாம் நேசிப்பவர்களோடு நமக்கு கிடைத்த நல்லவை எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வது   இறைவனிடமிருந்து நாம் பெற்ற நற்பண்பு.

  இயேசுவின் நற்செய்தியை பெற்றவுடனேயே  நாம் அவருடைய சீடர்கள் ஆகிவிட்டோம்.

.நற்செய்தியைப் பெற்ற ஒவ்வொரு சீடனும்

 நற்செய்தியை அறிவித்து சீடர்களை உருவாக்குவதைப் பணியாகக் கொண்டு செயல்பட்டால்

 சில ஆண்டுகளில் உலகோர்  அனைவரும் இயேசுவின் சீடர்களாக மாறி விடுவார்கள்.

இயேசு நற்செய்தியை  அறிவிக்க ஆரம்பிது  2000 ஆண்டுகள் கழித்தும் இன்னும் உலகோர் அனைவரும் அவரது சீடர்களாக மாறவில்லை  என்றால்

 நாம் நமது  சீடத்துவ பணியை ஒழுங்காகச் செய்யவில்லை என்றுதான் அர்த்தம்.

நம்மில் அநேகர்

 "நற்செய்திப் பணியைச் செய்யத்தான் முழு நேரப் பணியாளர்களாக குருக்களும், ஆயர்களும் இருக்கிறார்களே,

 உலகக்காரியங்களைக் கவனித்துக் கொண்டு, நமது ஆன்மாவைக் கவனிப்பதே பெரும்பாடாக இருக்கிறதே,

மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க நேரம் எங்கே இருக்கிறது" என்று கேட்பது காதில் விழுகிறது.

ஆனால் நற்செய்திப் பணி நமது வாழ்வோடு வாழ்வாக கலந்தது.  

நமது வாழ்வே நற்செய்திப் பணிதான்.

அதாவது நாம் எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழ்ந்தால் அது நற்செய்திப் பணி.

 எப்படி வாழவேண்டுமோ அப்படி வாழாவிட்டால் நாம் நற்செய்திக்கு எதிர்ப்பணி ஆற்றுகிறோம்.

ஒரு அடிப்படை உண்மையை உணர்ந்தால் 

 நாம் ஒன்று நற்செய்தியைப் பரப்புகிறோம், 

அல்லது 

அதற்கு எதிராகச் செயல் படுகிறோம், 

நடுநிலையாக இருக்க முடியாது என்பது புரியும். 

நாம் சீடராக வாழ்ந்தாலே சீடர்களை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கிறோம்.

சீடராக வாழாவிட்டால் வாழ்பவர்களைத் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நமது முகத்தில் ஒரு வாசனைத் திரவியத்தைப் பூசிக்கொண்டு வந்தால்

அதன் மணத்தை நாம் மட்டுமல்ல நம் அருகில் வருவோரும் அனுபவிப்பர்.

நம் மேல் ஒரு அசிங்கம் இருந்தால் அதன் துர்மணம் நம் அருகில் வருவோரையும் மூக்கைப் பொத்த வைத்துவிடும்.

நாம் சமூகப் பிராணி என்பதை நினைத்துக் கொண்டால் இது புரியும்.

நாம் எப்படி இயேசுவின் சீடனாகவும், சீடர்களை ஆக்குபவர்களாகவும் வாழ்வது?

நமது சிந்தனை, சொல், செயல் (இந்த மூன்றும் இணைந்ததுதான் வாழ்க்கை) மூன்றாலும் சீடர்களாக வாழ்வோம்.

சீடத்துவ வாழ்வின் அடிப்படை (Foundation) சிந்தனை.

சிந்தனை என்ற அடிப்படை மேல்தான் சீடத்துவம் என்ற கட்டடத்தைக் கட்டவேண்டும்.

சிந்தனை மனதின் வேலை.

" நல்ல மனது உள்ளவர்களுக்கு சமாதானம்"

 என்ற விண்ணுலக வாழ்த்தின் அடிப்படையில்

 நல்ல மனது உள்ளவர்களிடம் சமாதானம் குடியிருக்கும்,

 இறைமகன் இயேசு நமது விண்ணக தந்தைக்கும் நமக்கும் இடையில் சமாதான உறவை ஏற்படுத்ததான் உலகிற்கு வந்தார்.

சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும் போது,

நீங்கள் வீட்டுக்குள் போகும்போது, " உங்களுக்குச் சமாதானம் " என்று வாழ்த்துங்கள்."
(மத்.10:12 )

என்று கட்டளையிட்டார்.

இயேசு பாடுபடுவதற்கு முந்திய நாள் தனது சீடர்களிடம்:

"சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்: என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்:"
(அரு. 14:27)


இயேசுவின் நற்செய்தியை முழுவதும் 

'அன்பின் அடிப்படையில் பிறந்த சமாதானம்'

 என்று சொல்லிவிடலாம்.

நன்மனது-- சுத்தமான மனது.

நமது மனது சுத்தமானதாக இருந்தால் அங்கு அன்பும் சமாதானமும் இருக்கும்.

 அதாவது அன்புக்கும் சமாதானத்திற்கும் உரிய 
இறைமகன் இயேசு அங்கு குடியிருப்பார்.

 நமது சிந்தனைகள் அதாவது எண்ணங்கள் எல்லாம் இயேசுவை சுற்றியே இருக்கும்.

உள்ளத்தின் நிறைவில் இருந்துதான் வாய் பேசும்.

 ஆகவே நமது பேச்சுக்கள் இயேசுவைச் சுற்றியும், அவரது பண்புகளாகிய அன்பு சமாதானம் ஆகியவற்றைச் சுற்றியும்தான்  இருக்கும்.

உள்ளத்தில் இயேசு இருக்கும்போது 

நமது எண்ணங்களும், அவற்றிலிருந்து புறப்படும் சொற்களும் கிறிஸ்தவ விழுமியங்கள் படிதான் (Christian values) இருக்கும்.

அதாவது நாம் மற்றவர்களுக்கு நமது சொற்களால் இயேசுவைக் கொடுத்துக் கொண்டே யிருப்போம்.


 நமது சிந்தனையும் சொல்லும் இயேசுவைப் பற்றியதாக இருந்தால் 

நமது செயலும் இயேசுவைப் பற்றியதாகவே இருக்கும்.

 நமது சிந்தனையும் சொல்லும் இயேசுவை மற்றவர்களுக்குக் கொடுத்தால் 

நமது செயலும் அவரை மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும்.

நமது செயல்கள் யாவும் இயேசுவைச் சார்ந்தவையாகத்தான் இருக்கும்.

அன்பு, இரக்கம், பொறுமை, மன்னிப்பு, பிறர் உதவி
போன்ற இயேசுவைச் சார்ந்த பண்புகளெல்லாம் நமது செயல்களாக வெளிப்படும்.

கிறிஸ்துவே நமது வாழ்வை இயக்குவதை மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

நமது வாழ்வு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரிகையாக இருக்கும்.

நமது முன்மாதிரிகையான வாழ்வால் நாம் இயேசுவை மற்றவர்களுக்கு அளிக்கும்போது நாம் அவருடைய சீடர்களாக செயல்படுகிறோம்.

மற்றவர்கள் நம் வாழ்வைப் பின்பற்றி வாழும்போது அவர்களை சீடர்களாக ஆக்குகிறோம். 

நமது  மனது நன்மனதிற்கு எதிர் மனதாக இருந்தால், நமது சொல், செயல் ஆகிய வாழ்வும் எதிர்த்திசையில் பயணித்து, 

நம்மைப் பார்ப்பவர்களையும் கெடுத்துவிடும்.

நாம் ஆண்டவரை நோக்கிப் போனாலும் ஒரு group நம்மோடு வரும்.

நாம் ஆண்டவரை விட்டுப்
 போனாலும் ஒரு group நம்மோடு வரும்.

நமது திருச்சபையின் அனுபவமே இதற்கு ஆதாரம். 

தாய்த் திருச்சபையை விட்டுத் தனிக்குடித்தனம் போனவர்கள் எல்லோருமே group group பாகத்தான் போயிருக்கிறார்கள்.

group group பாகப் போனவர்களும் அப்படியே பிரிந்து எண்ணற்ற group களாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள்.

நாம் நமது சீடத்துவ வாழ்வால் பிரிந்து சென்றவர்களை நம்மை நோக்கி ஈர்க்க (attract) வேண்டும்.

இயேசுவை அறியாதவர்களையும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் 

இயேசுவின் சீடர்களாக மாற்ற வேண்டும்.

இயேசு சர்வ வல்லபர்.

"உண்டாகுக" என்ற ஒரே சொல்லால் உலகத்தைப் படைத்தவர்.

"மாறுக" என்ற ஒரே சொல்லால் எல்லோரையும் மாற்றவில்லை.

தன் சர்வ வல்லமையால் அல்ல,

தன் நாவன்மையால் அல்ல,

 தன் அன்பினால்,
தன் இரக்கத்தினால்,
தன் மன்னிக்கும் சுபாவத்தால்,
தன் உயிரையும் கொடுத்து பாவிகளாகிய நம்மை தம் பிள்ளைகளாக மாற்றினார்.

நமக்கு அவரது சாயலைக் கொடுத்திருக்கிறார்.

 நாமும்   அவரைப்போலவே 
நம் அன்பினால்,
நம் இரக்கத்தினால்,
நம் மன்னிக்கும் சுபாவத்தால்,
நமது உயிரை தியாகம் செய்தாவது  

பிரிந்து போனவர்களை மட்டுமல்ல

அவரை அறியாதவர்களையும்
அவரிடம் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று ஆசிக்கிறார்.

 அவரைப்போலவே நாமும் செயல்படுவது  நமக்கு  எவ்வளவு  பெரிய பாக்கியம்!

இயேசுவின் ஆசைப்படி 

சீடர்களாய்

 நாமும் மாறுவோம்,

மற்றவர்களையும் மாற்றுவோம்!

லூர்து செல்வம்.

Monday, May 25, 2020

God's love letter.(தொடர்ச்சி.)

.God's love letter.

(தொடர்ச்சி.)
**  **  **   ** ** **   ** ** ** **

அள்ள அள்ளக் குறையாத அன்பே!

உண்மையான அன்பே!

இறைவா, உம்மை அடிபணிந்து ஆராதிக்கின்றேன்.

நான்  மனம் திறந்து எழுதும் இந்த கடிதத்தில்

 ஏதாவது தவறு இருக்குமானால், 

அன்பே, அன்பு கூர்ந்து மன்னிக்கவும்.

இப்போதெல்லாம் உம் மக்களுக்கு எதையும fashion னுக்காகச்  செய்வதே fashion ஆகிவிட்து.

எதை எதற்காகச் செய்ய வேண்டுமோ அதை அதற்காக செய்யாமல்

 fashion க்காகச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

உடையிலே fashion, விளைவு indecency,

உணவிலே fashion, விளைவு
வியாதிகள்.

 வாழ்க்கையே fashion ஆக மாறிவிட்டதால் எதிர் விளைவுகள் மலிந்து விட்டன.

உலகியல் வாழ்வில் எப்படியும் இருக்கட்டும்.

ஆன்மீக வாழ்வில்!

கோவிலுக்குப் போகும்போது பைபிளைக் கையில் எடுத்துக் கொண்டு போவது மிகவும் நல்ல வழக்கம்.

அன்றைய வாசகம் வாழ்வாக மாறுமானால் பைபிளைக் கொண்டு போவது உண்மை யிலேயே பக்தி முயற்சி.

வாழ்க்கைக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாவிட்டால், அது fashion தானே?

ஆற்றில் இறங்கி குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது.
ஆனால் அழுக்கே போகாமல் குளிப்பதால் என்ன பயன்?

நாங்கள் எல்லோருமே பாவிகள்தான். அதை மறுக்கக் கூடாது.

பைபிள் வாசிக்க ஆரம்பிக்கும் போது உள்ள பாவ உணர்வு வாசிக்கும்போது மறைய வேண்டும், குளிக்கும்போது அழுக்குப் போவது போல.

வாசிக்க ஆரம்பிக்கும்போது இருந்த நிலை முடித்த பின்பும் அப்படியே இருந்தால், வாசிப்பது  fashion தானே!

இயேசுவே,

பைபிள் வாசித்தபின்பும் எங்களில் எந்த நல்ல 'மாற்றமும் ஏற்படாமைக்கு இன்னுமொரு காரணம் இருக்கிறது.

உண்மையான வயிற்றுப்பசி உள்ளவனுக்கு, "சாப்பிடு" என்று உத்தரவு போட வேண்டிய அவசியமில்லை.

அவனாகவே சாப்பாட்டை வாங்கி வேண்டிய அளவு சாப்பிடுவான்.

ஆனால் பசியே இல்லாமல் சாப்பிட வேண்டுமே என்பதற்காகச் சாப்பிடுபவன் கடமைக்காகச் சாப்பிடுவான்.

ஆண்டவரே,

 நீங்கள் எங்களை நேசிக்க வேண்டுமே என்பதற்காகவா நேசிக்கிறீர்கள்?

 இல்லை.

 அன்பு உங்கள் இயல்பு.

 நீங்களே அன்புதான்,

 உங்களால் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

 வெறுக்க முடியாது.

 அதேபோல  நாங்களும் இயல்பாக இருக்க வேண்டும்.


 பைபிள் வாசிக்க வேண்டுமே என்பதற்காக வாசிப்பதும்,

 ஞாயிற்றுக் கிழமை கோவிலுக்குப் போகவேண்டுமே என்பதற்காக போவதும்,


 திருவிழா கொண்டாட வேண்டுமே என்பதற்காகக், கொண்டாடுவதும்,

 சாமியாரைப் பார்க்க வேண்டுமே என்பதற்காக பார்க்கப் போவதும்,

 மற்றவர்களுக்குச் சாப்பாடு போட வேண்டுமே என்பதற்காக போடுவதும்,

 கடமைக்காகச் செய்யக்கூடிய காரியங்கள்,

 இவற்றை ஆசையோடு இயல்பாகச்  செய்வதற்கான அருள் வரங்களை  அனைவருக்கும் தந்தருளும், அப்பா, தந்தையே.

எப்போவோ ஞான வாசகத்தில் (Spiritual reading) வாசித்ததாக ஞாபகம்.

ஒரு புனிதர், 

பெயர் ஞாபகம் இல்லை, 

 உம்மை நோக்கி,

" தந்தையே, நான் உம்மை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிக்கிறேன்.

 உம்மை நேசிக்க வேண்டும் என்று நீர் கட்டளை  இட்டதற்காகவோ,

 எங்களுக்கு சன்மானமாக மோட்சத்தை தருவீர்கள் என்பதற்காகவோ 
 நேசிக்கவில்லை. 

நித்திய காலத்திற்கும் எனக்கு உம்மைப் பார்க்கும் வரம் கிடைக்காவிட்டாலும்

 நான் உம்மை நேசித்துக் கொண்டே இருப்பேன்.

 நீர் அன்பு மயமானவர்.

 என்னை நீர் உமது அன்பால் நிறைத்திருக்கிறீர்.

 உமது அன்பை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்.

  அன்பு அன்பை கைமாறு எதிர்பாராமல் நேசிக்கும்.

 ஆகவே அன்பே, உம்மை அன்பு செய்கிறேன்."

என்று சொன்னார் என்று வாசித்திருக்கிறேன்.

கடமைக்காக உங்கள் கடிதத்தை வாசித்தால்  வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்படாது.

  உமது வார்த்தையின் மேல் இயல்பான அன்புகொண்டு வாசித்தால்

 மக்களது வாழ்க்கை முற்றிலுமாக எப்போதோ மாறி இருக்கும்.

 ஆகவே, அன்பு தந்தையே, நீர் அனுப்பியுள்ள கடிதத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை எம் எல்லோரிடமும்  எழுப்பும்.

ஊற்றுத் தண்ணீர் தானாகவே வருவது போல உம் கடிதத்தை வாசிக்க ஆவலும் தானாக வரவேண்டும்.

என் உறவினர் ஒருவர் என்ன காரணமோ தெரியவில்லை, கத்தோலிக்க சமயத்திலிருந்து பெந்தேகோஸ்தே  சபைக்குப் போய்விட்டார்.

சில மாதங்களுக்குப் பின் எங்கள் வீட்டுக்கு வந்தவர் என்னைப் பார்த்து,

"அத்தான், நீங்கள் சாத்தானின் பிள்ளை!"

எனக்கு அதிர்ச்சி ஒன்றும் ஏற்படவில்லை.

ஏனெனில் அவர் போயிருக்கும் இடம் அப்படி.

நான் ரொம்ப அமைதியாக,

"நான் என்ன செய்ய வேண்டும்?"

"நீங்கள் இரட்சிக்கப்பட  வேண்டும்."

"ரொம்ப நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க?"

"என்னை பரிசுத்த ஆவி வழி நடத்துகிறார். இரட்சிக்கப் பட்டு விட்டேன்" என்றார்.

பரிசுத்த ஆவியானவரே,

 அன்பின் தேவனே,

 உமது பெயரைச் சொல்லிக்கொண்டு 

உமது திருச்சபைக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்

 உமது பிள்ளைகள் மீது இரக்கமாயிரும்,

 அவர்கள் மனம் திரும்பி,

 நீர் வழிநடத்திக் கொண்டிருக்கும் கத்தோலிக்க திருச்சபைக்குள் வந்து சேர அவர்களுக்கு உதவும்.

 எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே மந்தைக்குள்  வரவேண்டும்.

ஒரே தலைவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அன்பின் ஆவியானவரே, நீரும், , தந்தையும், மகனும

ஒருவருக்குள் ஒருவராய் ஒரே கடவுளாய் இருப்பதுபோல,

ஒரே பைபிளை வாசிக்கும் அனைவரும் ஒரே குடைக்குள் வர அருள் புரியும்.


இயேசுவே, நீர் சிந்திய இரத்தத்தில் ஒரு துளி கூட வீணாகி விடக்கூடாது.

நீர்  படைத்து மண்ணகத்தில் வாழவிட்ட மனுக்குலம் முழுவதும்

 உமது இரட்சண்யத்தைப் பெற்று

 விண்ணகத்திற்கு வந்து சேர வேண்டும் என்பதே 
 எங்கள் ஆசை.

இந்த ஒரு ஆசையை மட்டும் கட்டாயம் நிறைவேற்றியருள உமது பாதம் பணிந்து வேண்டுகிறோம்.

எங்கள் தந்தையே, உமது சித்தம் தான் விண்ணிலும்,
மண்ணிலும் நிறைவேறும்.

திரியேக தேவனை அடிபணிந்து, ஆராதிக்கும்,

அன்பு மக்கள்.

லூர்து செல்வம்

Sunday, May 24, 2020

God's Love Letter.

God's love letter.
**  **  **   ** ** **   ** ** ** **
அன்பே வடிவான திரியேக தேவனுக்கு,

என்றும் உங்கள் நினைவாகவே இருக்கும் அன்பு மக்கள் அன்பென்னும் மை தொட்டு ஆசை ஆசையாய் எழுதும் அன்புக் கடிதம்,

முதலில் உமது திருப்பாதங்களுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்!

உமது அன்பு மடல் கிடைக்கப் பெற்றோம்.

உமது எல்லா பிள்ளைகள் கையிலும் உமது மடல் இருக்கிறது.

எல்லோருமே  அதை ஆசையோடு வாசிக்கிறோம்.

காலையில் எழுந்ததுமே உமது அன்புக் கடிதத்துக்கு ஆசை முத்தம் கொடுத்து விட்டு, திறந்து வாசிக்கிறோம்.

இதில் விநோதம் என்ன என்றால், உமது கோடிக்கணக்கான, பிள்ளைகளுள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாசிக்கிறார்கள்.

சிலர் தினம் ஒரு பக்கமாக வாசிக்கிறார்கள்,

சிலர் தினம் ஒரு அதிகாரமாக வாசிக்கிறார்கள்.

சிலர் ஒரு வசனமாக வாசிக்கிறார்கள். அவர்கள் உமது கடிதத்தை எடுக்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு அதைத் திறந்து கண்ணில் பட்ட வசனத்தை வாசித்துவிட்டு முடி விடுவார்கள். வேடிக்கையாக இல்லை?

பலர் உமது பெயரால் எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் தாய்த் திருச்சபை தந்த குறிப்புகளின்படி வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

பைபிள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது.

வாசிப்பதில் ஒன்றும் குறைவில்லை,

ஆனால், அன்புத் தந்தையே,

வாசித்து விட்டு,

 நீங்கள் என்ன நோக்கத்திற்காக அன்புக் கடித்தத்தை எழுதினீர்களோ

 அதை  நிறைவேற்றாமல், அதற்கு எதிர்மாறாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தந்தையே, நீங்கள் அன்பே உருவானவர். நீங்கள் எழுதியிருப்பது அன்பை மட்டும் தாங்கி வந்திருக்கும் உன்னதமான அன்புக் கடிதம்.
 (Love Letter)

நீங்கள் கடிதத்தை எழுதியிருப்பதே , 

ஒருவரை ஒருவர் அன்பு செய்து, 

சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தானே!

ஆனால் உமது மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

 அன்பின் பெயரால் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

உமது கடிதத்தை கையில் வைத்துக்கொண்டே ஒருவர் குடுமியை ஒருவர் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

"உங்களுக்குச் சமாதானம் உண்டாகக்கடவது"

என்ற உங்கள் கடித  அறிவுரையை வாசித்துவிட்டு சமாதானத்துக்கு சமாதி கட்டிவிட்டார்கள்!

'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.'

என்ற இயேசுவின் வார்த்தைகளை வாசித்துவிட்டு,

 ஆயிரக்கணக்கான பிரிவுகளாய் பிரிந்து கிடக்கிறார்கள்.

 கேட்டால் உமது  கடிதப்படியே வாழ்கிறோம் என்று கூறுகிறார்கள். 

" தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்:"

என்ற இயேசுவின் வார்த்தைகளை வாசித்தும்

  எல்லோரும் ஒன்றாக இல்லையே!

இயேசுவை ஏற்றுக்கொள்வார்களாம்.

 ஆனால் அவரது பிரதிநிதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்களாம்.

 அவரது பிரதிநிதியை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவரை ஏற்றுக் கொள்ளாததற்குச் சமம் தானே!

இயேசுவே,

. "என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று இராயப்பரிடம்"  கூறினீர்களே,
 பிரிந்துபோன ஆடுகளை மேய்ப்பது யார்?

 அவை ஆயனில்லா ஆடுகளாக ஆங்காங்கே அலைவதால் ஓநாய்களுக்கு இறையாகி விடுகின்றனவே!

அவர்கள் மேல் பாவமாக இருக்கிறது.

 ஒரே மந்தைக்குள் வந்தால்தானே தொலைந்துபோன ஆடுகளுக்கு பாதுகாப்பு.

 தேவனே, உங்களது அன்பு நிறைந்த கடிதத்தை வாசித்துவிட்டு

 அதில் அன்பு இருக்கிறது என்பதை தெரிந்தும் 

அதை எடுத்துக் கொள்ளாமல்

 அன்பே இல்லாதவர்கள் போல 

மந்தையை விட்டு விட்டு 

திக்குத் திக்காய் உங்கள் ஆடுகள் பிரிந்து போவதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியும்.

 ஆனாலும் எங்களுடைய மனதைத் திறந்து உங்களோடு பேச வேண்டும் என்று ஆவலாய் இருக்கிறது, தந்தையே.

தந்தையே, உங்களது கடிதத்தின் மூலமாகத்தான் உங்களைப்பற்றி எங்களுக்கு வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

படைக்கப்படும் முன் நாங்கள் ஒன்றும் இல்லாமல் இருந்தவர்கள், உங்களைப் பற்றி எங்களுக்கு எதுவும்  தெரியாது.

படைக்கப்பட்ட பின்னும் நீங்கள் எங்களுக்குப் பரிசாக அளித்திருந்த புத்தியைக் கொண்டு

 எங்களைப் படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்று மட்டும் தெரியும்.

 எங்கள் புத்தி சொன்னது,

 "காரணம் இல்லாமல் காரியம் இல்லை.

படைப்பவர் இல்லாமல் படைப்பு இல்லை."

உங்களது கடிதத்தை வாசித்த பின்புதான் 

அது தந்த செய்தியிலிருந்துதான் நீங்கள் திரியேக தேவன் என்றும்,

அன்பு மயமானவர் என்றும்,

 உங்களது அளவுகடந்த அன்பின் காரணமாகவே அன்பு செய்வதற்கென்றே எங்களை படைத்தீர் என்றும்,

  உங்களை அன்பு செய்வது மட்டுமே எங்களது பணி என்றும் தெரிந்து கொண்டோம்.

அதுமட்டுமல்ல

  நாங்கள் சரியாக பயன்படுத்த      நீங்கள் தந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உங்களுக்கு விரோதமாக பாவங்கள் செய்தோம் என்றும்,

 எங்களது பாவத்திற்கு பரிகாரமாக இயேசுவே எங்களுக்காக மனிதனாகப் பிறந்து  

எங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே சிலுவை மரத்தில் பலிகொடுத்து

 எங்களை இரட்சித்தார் என்பதையும் அறிந்து கொண்டோம்.

இவ்வளவும் தெரிந்துகொண்ட பின்பும் 

ஒற்றுமையுடனும் அன்புடனும் பணி செய்து வாழ வேண்டும் என்று நீங்கள் படைத்த நாங்கள்

உங்களது பெயரைச் சொல்லிக்கொண்டே

 ஒற்றுமையும்  அன்பும் இன்றி பிரிந்து கிடக்கிறோம் என்றால்

அதற்கு முக்கிய காரணம் உங்கள் கடிதம் மூலமாக நீங்கள் தந்த செய்தியை (message) எங்கள் இஸ்டத்துக்குப் புரிந்து கொண்டதுதான்.

கடிதத்தை எழுத மனிதர்களையே கருவியாகப் பயன்படுத்தி யுள்ளீர்கள்.

அவர்கள் நாங்கள் பேசும் மொழியிலேயே 

நீங்கள் அவர்களுக்கு உள்ளுணர்வுகள் (inspirations) மூலமாக அளித்த செய்திகைகளை எழுதியுள்ளார்கள்.

செய்தி உங்களுடையது, ஆகவே தெய்வீகமானது.

மொழி மனிதனுடையது.  

Message is divine.
Language is human.

தந்தையே, நீங்களே உங்களைப் பற்றி உங்களது அன்பு கடிதத்தின் மூலமாக வெளிப்படுத்தி இருந்தாலும்

 அளவு கடந்த உங்களை அளவுள்ள எங்களால் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது.

 மேலும் எங்களுடைய மொழி எங்களுடைய லெளகீக அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக நாங்கள் உருவாக்கியது.

 அதைக் கொண்டு தங்களது தெய்வீக செய்திகளைத்
தந்திருப்பதால் 

தாங்கள் தரும் செய்தியை நாங்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமோ

அப்படிப் புரிந்து கொள்ள

 அதை விளக்க தங்களால் நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பு இருந்தால் மட்டுமே முடியும்.

 அப்படி பட்ட அமைப்புதான்
தங்களது அன்பு மகனால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபை.

அவர் நற்செய்தியை அறிவிக்க நியமித்த சீடர்களும்

 அவர்களுடைய வாரிசுகளும்  இன்றைய வரை தங்கள் கடமையை ஒழுங்காகத்தான் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஆனால்,தங்களுடைய கடிதத்தை எல்லோரும் வாசித்து பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு 

நிறைய  பிரதிகள் எடுத்து ஆளுக்கொரு பிரதி கொடுத்திருக்கிறார்கள்.

ஆகவே எல்லோரும் கடிதத்தை வாசிக்கிறார்கள்.

இப்பொழுது நான் சொல்லப் போகும் கருத்தை, ஆண்டவரே, உங்களிடம் மட்டும் தான் சொல்கிறேன். மற்றவர்கள் நான் சொல்வது சரி இல்லை என்றுதான் சொல்வார்கள். 

நான் சொல்லப்போவது தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.  

இன்று நிறைய பேர் வழிதவறி போவதற்கு இன்றைய மொழிபெயர்ப்புகளும்

 ஆளுக்கொரு கடிதம் இருப்பதும் தான் காரணம்.

 மொழிபெயர்ப்புகளால் மூல நூலின் கருத்துக்களை அப்படியே மாறாமல் தர இயலாது.

  ஆளுக்கொரு பைபிள் வைத்திருப்பது ஆளுக்கொரு கத்தி வைத்திருப்பதற்குச் சமம்.

பயன்படுத்த தெரியாதவன் கையில் கத்தி இருந்தால் என்ன ஆகும் என்று சொல்லத் தேவை இல்லை.

பயன்படுத்தத் தெரியாதவன் கையில் உங்கள் கடிதம் (பைபிள்) இருந்தாலும் ஆபத்துதான்.

பைபிள் வாசிப்பதற்கு எழுதப்படிக்க தெரிந்தால் மட்டும் போதாது.

 வசனங்களுக்கு உரிய பொருள் கொடுக்கத் தெரிய வேண்டும்.

 குருக்கள் பல ஆண்டுகள் விவிலிய பயிற்சி பெற்றபின்புதான் 

 போதிப்பதற்கு உரிய தகுதி பெற்று பட்டமும் பெறுகின்றார்கள்.

ஆனால் சாதாரண மக்கள்  ஒரு பயிற்சியும் பெறாமல் எடுத்த எடுப்பில் பைபிளை எடுத்து வாசித்தால் அவர்கள் வசனங்களுக்கு பொருள் கூற மாட்டார்கள், வார்த்தைகளுக்குப் பொருள் கூறுவார்கள்.

ஒருவன் திருப்பலிக்கு வராமல் இருப்பதற்கு பைபிள் வசனத்தை காரணம் காட்டுகிறான்!

'உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் நமக்கு விருப்பமே இல்லை."
(ஆமோஸ் 5:21)

"வழிபாட்டுக் கூட்டங்களில்  விருப்பமே இல்லை என்று ஆண்டவரே கூறுகிறார்.

ஆண்டவருக்கு விருப்பம் இல்லாத இடங்களுக்கு நான் வர மாட்டேன்." என்கிறான்!

தாங்கள் செய்யும் தவறுகளுக்கு உங்களது கடிதத்தையே ஆதாரமாகக் காட்டும் ஆசாமிகள் கையில் அது இருந்து என்ன பயன்?

ஆண்டவரே, எழுத வாசிக்க தெரியாதவன் கூட
கோவிலுக்கு ஒழுங்காக வந்து

 சாமியார் வாசிப்பதையும்,

  அவர் கூறும் விளக்கத்தையும் கேட்டு நல்ல கிறிஸ்தவனாக வாழ்வான்

அரைகுறைகளின் கையில் இருக்கும் உங்கள் கடிதம் படும் பாடு இருக்கிறதே!  

(தொடரும் )

லூர்து செல்வம்.


Saturday, May 23, 2020

"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே."(1 திமோத்.2:5)

, "கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே."
(1 திமோத்.2:5)
**  **  **   ** ** **   ** ** ** **
மனிதர்களிலேயே ஒரு இயல்பு உண்டு.

யார் மேலேயாவது குற்றம் சாட்ட வேண்டுமென்றால் 

அவர் எப்போதாவது எந்த சூழ்நிலையிலாவது   சொன்ன வார்த்தைகளை

 மற்றொரு சூழ்நிலையில் அவர் மேலேயே  சாட்டுவது வழக்கம்.

ஒரு பையன் இரவு 11 மணிக்கு அவனுடைய  செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

அவனது அப்பா.

"ஏலே, மணி 11. தூங்குகிற நேரம்.

இப்போ என்ன விளையாட்டு?
படு''  என்றார்.

மறுவாரம் Annual Exam.

 இரவு 11 மணி.
பையன் படுக்கப் போனான்.

அப்பா, "நாளைத் தேர்வு. கூடக் கொஞ்ச நேரம் படித்தால் என்ன?"

"போன வாரம் நீங்கதான் சொன்னீங்க '11 மணி படுக்கிற நேர முன்னு.
அது தான் படுக்கப் போறேன் ."


"கடவுள் ஒருவரே. கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே." 

இது புனித சின்னப்பர் திமோத்தேயுக்கு எழுதிய கடிதத்தில் சொன்னது.

மனிதன் செய்த பாவத்தினால்
இறைவனோடு அவனுக்கு இருந்த இணைப்பு அறுந்துவிட்டது. 

பாவ நிலையில் இறைவனோடு மனிதன் தொடர்பு கொள்ள முடியாது.

இழந்த தொடர்பை மீட்டுத் தருவதற்காக 

இறைமகன் இயேசு மனிதன் ஆகி 

பாவத்திற்கு பரிகாரம் செய்து பாவிகளை மீட்டார்.

மீட்பிற்குப்பின் மனிதனால் இறைவனோடு தொடர்பு கொள்ள முடிந்தது.

இறைவனோடு  கொண்டிருந்த இணைப்பை இழந்த நமக்கு அதை மறுபடி மீட்டுக் கொடுத்தவர் இறைமகன் இயேசுவே. இயேசு மட்டுமே,

இயேசு ஒருவர்தான் நமது மீட்பர் என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக சின்னப்பர் இவ்வார்த்தைகளை கூறுகிறார்.

அதனால்தான் முந்திய வசனத்தில்

"எல்லா மனிதரும் மீட்புப்பெற
 வேண்டும் என்பதே அவரது விருப்பம்.''

என்றும்,
 
அடுத்த வசனத்தில்

"இவர் அனைவரின் மீட்புக்கு ஈடாகத் தம்மையே கையளித்தார்."

என்றும் கூறுகிறார்.

இதில் மிக முக்கியமான இறை உண்மை ஒன்று அடங்கியிருக்கிறது.

இயேசு யார்?
கடவுள்.

பாவம் செய்தவன் மனிதன்.

 ஆகவே மனிதன்தான் தன்னுடைய பாவத்திற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

 ஆனால் அளவில்லாத இறைவனுக்கு விரோதமாக அளவுள்ள மனிதனால் போதிய அளவு பரிகாரம் செய்ய இயலாது.

 மேலும் பாவ நிலையில் உள்ள  ஒருவன் செய்யும்.  செயலுக்கு இறைவன் முன்னால் எந்த பலனும் இல்லை.

 ஆகவேதான் கடவுள் மனிதனாக பிறந்து மனித சுபாவத்தில் பரிகாரம் செய்தார்.

பரிகாரம் யாருக்கு? 
இறைவனுக்கு. 

பரிகாரம் செய்தவர்?
இறைவன்.

நம்மைப் படைத்த ஒரே காரணத்திற்காக 

நாம் செய்த பாவங்களை,

 பாவமே செய்ய முடியாத கடவுள் 
தன்மேல்  சுமந்துகொண்டு,

 நாம் செய்ய  வேண்டிய பாவப் பரிகாரத்தை அவரே செய்தார்.

 தேவ சுபாவத்தில் பரிகாரம் செய்ய முடியாததால்

 மனிதனாக பிறந்து பரிகாரம் செய்தார்.
 
இதனால் அவர்ருடைய அளவில்லா அன்பு  வெளிப்படுகிறது.
 இயேசு ஒருவரே மீட்பர்.

இன்னும் கொஞ்சம் புரியும் படியாக சொல்கிறேன்.

ஒரு ஒப்புமை.

தன் முதலாளியை நோகச் செய்துவிட்டான் ஒரு வேலையாள்.

அவனால் அவரிடம் சென்று அவர் முகத்தில் விளிக்க முடியவில்லை.

அப்பொழுது மத்தியஸ்தர் ஒருவர் வந்து முதலாளியிடம் வேலையாளுக்காகப் பரிந்து பேசுகிறார்.

 அந்த வேலையாள் தன் குற்றத்திற்குப் பரிகாரம் செய்தால் மட்டுமே தன்னோடு தொடர்புகொள்ள முடியும் என்று முதலாளி சொல்லிவிடுகிறார்.

என்ன பரிகாரம் என்று மத்தியஸ்தர் கேட்கிறார்.

முதலாளி வேலையாள் செய்யவேண்டிய பரிகாரத்தை சொல்லுகிறார்.

மத்தியஸ்தர்,

" இது கொஞ்சம் கடினம். வேலையாளால் செய்ய முடியாது, அவனுக்குப் பதில் நானே பரிகாரத்தைச் செய்துவிடுகிறேன், தயவு கூர்ந்து வேலையாளை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லுகிறார்.

முதலாளியும் சம்மதிக்கிறார்.

மத்தியஸ்தர் பரிகாரத்தைச் செய்து முடிக்கிறார்.

முதலாளியும் வேலையாளை ஏற்றுக்கொள்கிறார்.

வேலையாளைப் பொறுத்த மட்டில் மத்தியஸ்தர்தான் முதலாளியோடான அவனது உறவை மீட்டுக் கொடுத்த  மீட்பர்.

இதில் அதிசயம் என்னவென்றால் அந்த மத்தியஸ்தர் முதலாளியின்  சொந்த மகன்.

இது ஒப்புமை மட்டுமே.

இதேபோல்தான் தமது பாவத்தால் இறைவனோடு நமக்குள்ள உறவை இழந்து விட்டோம்.

இழந்த உறவை மீட்டுக் கொடுத்தவர் 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

 அவர் மட்டுமே நமது மீட்பர்.

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால்

 நம்மைவிட்டு பிரிந்துசென்ற சகோதரர்கள் 

புனித சின்னப்பர் சொன்ன வார்த்தைகளை 

 தங்களது தவறான கொள்கையை நிரூபிக்க

 தவறாகப் பயன்படுத்திக்     கொண்டிருக்கிறார்கள்.

 அவர்கள் கூறுகிறார்கள்,

" தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. "
1 தீமோத்தேயு 2:5

இப்படி  வசனம்  இருக்க நமக்கு ஏன் பல மத்தியஸ்தர்கள்?"


இப்போது நன்கு கவனியுங்கள்.

 இயேசு ஒருவரே நமது மத்தியஸ்தர், மீட்பர், இரட்சகர்.

இதுதான் நமது ஆழமான விசுவாசம். 

இதில் எந்த காலத்திலும் மாற்றம் ஏற்பட்டதே இல்லை.

இறைமகன் ஒருவரே, அவர்தான் நம்மை மீட்டார்.

இப்போது பிரச்சனை, நாம் சொல்லாத ஒன்றை சொல்வதாகச் சொல்லிக்கொண்டு நம் மேல் குற்றம்  காட்டுகிறார்களே, அதுதான் எப்படி என்று தெரியவில்லை.

நாம் எந்தக் காலத்திலும் தேவமாதா நம்மை இரட்சித்தாள் என்று சொல்லவில்லை.

ஆனால், அவள் இரட்சகரின் தாய். 

நம்மை  இரட்சித்தவர் கடவுள்.

 கடவுள்தான் அவளது வயிற்றில் மனிதனாக உற்பவித்துப் பிறந்தார்.

மனு உரு எடுத்துப் பிறந்தது இரண்டாம் ஆளாகிய இறைமகன், கடவுள் .

ஆகவே கன்னி மரியாள் கடவுளின் தாய்.

 இது நமது மறுக்கமுடியாத மாற்றமுடியாத, ஆழமான விசுவாசம்.

மாதா நமது தாய். 

நாம் அவரது மக்கள்.

 இயேசு, தனது தந்தையை,

 "எங்கள் தந்தாய்'

 என்று அழைக்க

 நமக்கு முழு உரிமை கொடுத்திருக்கிறார். 

ஆகவே அவரது தந்தை நமக்கும் தந்தை, 

அந்த உறவில் இயேசு நமது சகோதரர்.

நமது அம்மா நமது சகோதரரிடம் நமக்காக பரிந்து பேச நாம் அவளிடம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

இதைச் சொன்ன உடனே நமது சகோதரர்கள் குதித்துக் கொண்டு வருவார்கள்.
" இதற்கு பைபிளில் என்ன ஆதாரம் இருக்கிறது?"

இருக்கிறது, 

ஒழுங்காக செப உணர்வோடு பைபிள் வாசிப்பவர்களுக்கு மட்டும் இது தெரியும்,  புரியும்.

அநேகர் பைபிளை rule book ஆக மட்டும் பார்க்கிறார்கள்.

நாம் அதை prayer book ஆகவும் பயன்படுத்துகிறோம்.

திருப்பலி திருச்சபையின் அதிகாரபூர்வமான செபம்,
(official prayer)

கூர்ந்து கவனித்தால் இந்த செபத்தின் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி பைபிள் வாசகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பைபிள் வாசகங்களை நாம் செப உணர்வோடு கேட்கிறோம்.

அதே உணர்வோடு இப்போது கானாவூருக்கு போவோம்.

அங்கே நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு மாதா கடவுளோடு சென்றிருக்கிறாள்.

புரியவில்லை?

இயேசு கடவுள் தானே!

நாமும் உடனிருந்து இயேசுவையும் மாதாவையும் கூர்ந்து கவனிப்போம்,

திருமணவீட்டில் ரசத்திற்கு பற்றாக்குறை ஆகிவிட்டது.

இயேசு கடவுள்.

 கடவுளுக்கு யாரும் சொல்லாமலே எல்லாம் தெரியும்.

 ஆகவே நிச்சயமாக திருமண வீட்டில் ரசம் பற்றாக்குறை ஆகிவிட்டது என்று அவருக்கு தெரியும்.

 அவர் கடவுளாகையால் அந்த விஷயம் நித்திய காலத்திலிருந்தே தெரியும்.

தெரிந்தும் அவர் கவனிக்காதது மாதிரி இருக்கிறார். காரணமாக.

மாதாவுக்கு தன் மகன் கடவுள் என்பதும் தெரியும்,

அவரால்  பிரச்சனையை தீர்த்து வைக்க முடியும்  என்பதும் தெரியும்.

ரசம் தீர்ந்து விட்டதைக் கவனித்த மரியாள் தன் மகனை நோக்கி,

"இரசம் தீர்ந்துவிட்டது" என்று  மட்டும் சொல்கிறாள்.

"ரசம் ஏற்பாடு செய்யுங்கள்" என்று அவர் கூறவில்லை.

எல்லாம் அறிந்த இயேசுவுக்கு அம்மாவின் மனம் தெரியாதா?

ஆனால் அவரது பதிலை பாருங்கள்:

"அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" 

ஆனால் அம்மாவுக்கு மகன் குணம் தெரியும்.

 நசரேத்தூரில் எத்தனை தடவை இயேசுவை வேலை ஏவியிருப்பாள்?

லூக்காஸ் இயேசுவின் நாசரேத்தூர் வாழ்க்கையின் சாரத்தை இரண்டே வார்த்தைகளில்  சொல்லிவிடுகிறார்:

"அவர்களுக்குப் பணிந்திருந்தார்" (லூக்.2.51)

இயேசு மாதா சொல்லை தட்டியதே இல்லை.

இதை நான் சொல்லவில்லை நற்செய்தியாளரே  சொல்லுகிறார்!


மாதா இயேசுவிடம் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல்,

பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.

"எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று கூறிய இயேசு தண்ணீரை ரசமாக மாற்றிய புதுமையை செய்கிறார்.


"எனது நேரம் இன்னும் வரவில்லை" என்று இயேசு கூறியது அதை கவனித்துக் கொண்டிருக்கும் நமக்காகத்தான்.

எப்படி?

இயேசு நம்மைப் பார்த்து,

"மக்களே, 
நேரம் வராவிட்டாலும் அம்மா சொன்னால் கட்டாயம் கீழ்ப்படிவேன்.  தாய் சொல்லுக்கு மறு சொல்  இல்லை." 

என்று கூறுவது கேட்கவில்லை!

எனக்குக் கேட்கிறது.

தாயையும் மகனையும் பற்றி சரியாக தெரியாதவர்களுக்கு இது கேட்காது!

அதே இபேசு இன்றும் இருக்கிறார், அவரது அம்மாவும் இன்றும் இருக்கிறார்.

 இருவரும் விண்ணகத்தில் ஆன்ம சரீரதத்தோடு இன்றும் இருக்கிறார்கள்,
என்றும் இருப்பார்கள்,

 இன்னும் அம்மா அம்மாதான், மகன் மகன்தான். 

கொஞ்சம் விசுவாசக் கண்ணோடு தாயையும் மகனையும் நோக்குங்கள்:

நித்திய காலமும் ஒருவரை ஒருவர் சும்மா பார்த்துக் கொண்டுதான் இருப்பார்களா?

நிச்சயமாக நமது தாய் நமது சகோதரரிடம் நமக்காக, நமது பிரச்சனைகளுக்காக

 பரிந்து பேசிக் கொண்டிருப்பாள்.

 விசுவாசம் அற்றவர்களுக்கு இது புரியாது.

பைபிள் இதை நேரடியாக சொல்ல வேண்டுமா?

நமக்கு இறைவன் புத்தியைக் கொடுத்திருப்பது சிந்திப்பதற்காகதத்தானே?

ஆங்கிலத்தில்

infer என்று ஒரு வார்த்தை இருக்கிறது

அதன் பொருள்:

deduce or conclude (information) from evidence and reasoning rather than from explicit statements.

ஒருவரது  செயலை பார்த்தால் போதும்,
அவர் ஏதும் சொல்லாமலேயே
அவரது தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.

கானாவூரில் மாதாவின் செயலையும் இயேசுவின் செயலையும் பார்த்தோம்.

 இயேசு தாய் சொல்லை தட்ட மாட்டார் என்று புரிந்து கொண்டோம்.

 கடவுள் மாறாதவர். 

இயேசு கடவுள்,  
ஆகவே மாற மாட்டார்.

இது Logic. புத்தி உண்மை அறிய பயன்படுத்தும் ஆயுதம்.


மாதா அம்மா என்றால் 
இயேசு மட்டுமல்ல அனைத்து புனிதர்களும் நமது சகோதரர்கள் தான்.

நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தினர்.

. 'புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்."

இது நமது விசுவாச பிரமாணம்.

இதன்படி

 விண்ணகம் 

உத்தரிக்கிற ஸ்தலம் 

உலகம் 

இந்த மூன்று இடங்களிலும் உள்ள விசுவாசிகள் எல்லோரும் ஒரே குடும்பத்தினர்.

 ஒருவருக்கொருவர் உதவி செய்ய கூடியவர்கள்.

 விண்ணக வாசிகளுக்கு நமது உதவி தேவை இல்லை.

அவர்களுடைய உதவி நமக்குத் தேவை.

உத்தரிக்கிற ஆன்மாக்கள் தங்களுக்குத் தாங்களே உதவ முடியாது.

விண்ணக வாசிகளும், நாமும் செபத்தின் மூலம் அவர்களுக்கு உதவலாம். 
உதவ வேண்டும்.

அவர்கள் நமக்கு உதவலாம்.

நாம் அவர்களுக்காகவும் செபிக்கலாம், அவர்களை நோக்கியும் செபிக்கலாம்,

இது நமது விசுவாசம்.

நமது பிரிந்துபோன சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை.

 இயேசு ஒருவரே மீட்பர்,

 புனிதர்கள் நமக்காக பரிந்து பேசக்கூடியவர்கள்.

புனித சின்னப்பருடைய வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்.

இயேசு மட்டுமே நமது மீட்பர் என்ற மறை உண்மையை மட்டுமே இது கூறுகிறது மாதாவை பற்றியோ, பிற புனிதர்கள் பற்றியோ இது எதுவும் கூறவில்லை.

 லூர்து செல்வம்.

Friday, May 22, 2020

கத்தோலிக்க திருச்சபை முதலில் பைபிள் படிப்பதைத் தடை செய்ததா?


கத்தோலிக்க திருச்சபை முதலில்  பைபிள்  படிப்பதைத் தடை செய்ததா?
**  **  **   ** ** **   ** ** ** **

"செல்வம், வா போன வேலை முடிஞ்சதா?"

"நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு வந்துவிட்டேன்'. 

"வேறு என்னமோ சொன்னதா சொன்னிய.''

"கத்தோலிக்க சமயம் ஒரு காலத்தில மக்கள பைபிள் வாசிக்கக் கூடாதுன்னு தடை செய்ததாம்."

"இது முழுப்பொய். நற்செய்தி யாளர்கள் நற்செய்தியை எழுதியது மக்கள் வாசிப்பதற்காகத்தான்.  

அன்று அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலம். 

எழுதுவதற்கு கூட இந்தக் காலத்தில்  உள்ளது போல பேப்பர் வசதி இல்லை.

பழைய ஏற்பாட்டு நூல்கள் தோலில் எழுதப்பட்டன. 

புதிய ஏற்பாட்டு நூல்கள் பேப்பிரஸ் (Papyrus) எனப்படும் ஒரு வகைப் சுருள்களில் (scrolls) எழுதப்பட்டன.

அப்போஸ்தலர்களுடைய கடிதங்கள் மக்கள் வழிபாட்டிற்காக ஒன்று கூடும் போது அவர்களுக்கு வாசித்து காட்டப்பட்டன.

கோவில்களில் திருப்பலி நேரத்தில் பைபிளிலிருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டன.

இதற்காக பைபிள் முழுவதும் 
கையினால்தான் பிரதிகள் (Copies) எடுக்கப்பட்டன.  .

பிரதிகளை கையினால் எழுதும் வேலையை சந்நியாச மடங்களிலுள்ள சந்நியாசிகளே (Monks) செய்தார்கள்.

அதற்காகவே சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார்கள்.

இது எவ்வளவு கடினமான வேலை என்பதைப் பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன்.

மிகவும் பிரமிப்பாக இருந்தது.

பைபிள் முழுவதையும் ஒரு பிரதி எழுத 10 மாதம் ஆகும்.

இன்றைய செலவு விகிதபடி ஒரு மணி நேரத்திற்கு 8 டாலர் படி 10 மாத வேலைக்கு
16,640 டாலர் ஆகுமாம். 

அதை வரிவரியாக வாசித்து சரிபார்க்கிற ஆளுக்கும் மேற்படி விகிதப்படி சம்பளம் போட்டு மொத்தச் செலவைப் பார்த்தால் ஒரு பிரதிக்கு
30,000 டாலர். (எழுத மட்டும்) ஆகுமாம்.

நான் கதை எழுதவில்லை. நான் வாசித்த கட்டுரையின் பகுதி இதோ:

Until some time after the invention of the printing press,

 the Bible, was an extremely costly book. 

At today’s minimum wages of $8/hr and only counting the time for one monk to write the whole Bible, it would take 10 months at a cost of $16,640!!!

 But that doesn’t count the second monk who checked every single page for accuracy,

 which would raise the cost of one Bible in today’s US Dollars to $30,000 +

 And that still does not include the cost of materials, or for the time for another monk to Illuminate (decorate) the pages

 and for someone else to bind the pages together and put on a cover. 

At these prices it is easy to see why every person could not have their own personal Bible for study and devotions.

இந்தச் செலவுக் கணக்கில் நாட்டிலுள்ள அனைவருக்கும் வீட்டுக்கொரு பைபிள் வாங்க முடியுமா?

கோவிலில் கூட பாதுகாப்பிற்காக பைபிளைச் சங்கிலியால் கட்டிவைத்திருப்பார்கள். 

கோவிலில் சென்று யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். 

மக்களை பைபிள் வாசிக்கக் கூடாது என்று தடுத்ததாகக் கூறுவது சுத்தப் பொய்.

எல்லோராலும் பைபிள் வாங்க இயலாது என்பதனால்  

மூன்று ஆண்டு சுழற்சி முறையில் தினமும் பலி பூசையில் பைபிள் வாசகங்கள் வாசிக்கப்பட்டு விளக்கம் தரப்பட்டன.

ஒழுங்காகத் தினமும் பூசைக்குச் செல்வோர் முழு பைபிளையும் மூன்று ஆண்டிற்குள் கேட்டு விடுவர்.

அன்றைய பழக்கம் இன்றும் தொடர்கிறது.

அந்தக் காலக்கட்டத்தில் சாதாரண மக்களிடையே இன்றைய அளவிற்குப் படிப்பறிவு இல்லை.

அவர்களுக்காக கோவிலிலுள்ள சன்னல் கண்ணாடிக் கதவுகளில் பைபிள் நிகழ்ச்சிகள்  வண்ணப் படங்களாகத் தீட்டப் பட்டிருந்தன.

பைபிள் கையினாலேயே எழுதப் பட்டதால் மக்களிடம் அதைத் தாராளமாகக் கொடுக்க முடியவில்லையே தவிர

 குருக்கள் நற்செய்தியை அறிவிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை.

நற்செய்தி நூல்கள் எழுதப்படாத  காலத்தில் அப்போஸ்தலர்கள் எவ்வளவு உற்சாகத்துடன் அச்செய்தியை போதித்தார்களோ,

 அதைவிட கொஞ்சம் கூட குறைவு இல்லாமல் 

அவர்களுக்குப் பின் வந்தவர்களும்

கையினால் எழுதப்பட்ட நற்செய்தி நூல்களின் பிரதிகளை பத்திரமாக வைத்திருந்து மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள்.


அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பைபிள் குறைந்த செலவில் ஏராளமாக அச்சடிக்கபட்டன.

புதிய மொழி பெயர்ப்புகளும் பயன்பாட்டிற்கு வந்தன.

எந்தக் காலத்திலும் திருச்சபை தன் பிள்ளைகளப் பைபிள் வாசிக்கக் கூடாது என்று தடுத்ததே இல்லை.

பைபிள் அச்சிடப்பட முடியாத காலத்திலும் வாசிப்பின் மூலமும், கோவில் சித்திரங்கள் மூலமும் பைபிள் போதனை மக்களுக்குத் தரப்பட்டது.

இப்போது கல்வி அறிவு பெருகிவிட்டது. 

பைபிளும் விலை குறைந்து விட்டது.  

எல்லோருடைய கையிலும் பைபிள் இருக்கிறது.

பைபிள் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கையும் கூடிவிட்டது.

பைபிள் அறிவும் அதிகரித்து விட்டது.

இப்போ ஒரு கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

பைபிள் வாசிப்பதற்கா?
வாழ்வதற்கா? 

இயேசு சமாதானத்தின் தேவன்.

அவர் பிறக்கும் போது உலகிற்குக் கொண்டு வந்த முதல் நற்செய்தியே

"நன்மனதோற்கு சமாதானம்" என்பதுதான்.

நம் அனைவருக்கும் தந்தை ஒருவரே. 

விண்ணகத்திலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலும்,
மண்ணகத்திலும் வாழும் கிறிஸ்தவர்கள்  அனைவருக்கும் தலைவர் ஒருவரே-இயேசு.

மண்ணகத்தில் வாழும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் தலைவராக இயேசுவால் நியமிக்கப்பட்டவர் ஒருவரே-

எந்தப் பாறை மீது இயேசுவின் திருச்சபை கட்டப்பட்டதோ 
அந்தப் பாறையின் வாரிசான பாப்பரசர்.

என்று ஒரே தலைவரின் கீழ் அனைத்துக் கிறிஸ்தவர்களும் சமாதானமானமாகி ஒன்று சேர்கிறார்களோ, அன்று தான்  


"நாங்கள் பைபிளை வாழ்கிறோம்"

என்று சொல்லலாம்."

"உண்மைதாங்க. பைபிள் கையிலும், வாயிலும் இருந்தால் மட்டும் போதாது.

அது நம் வாழ்க்கையில் இறங்க வேண்டும்.

இறைவார்த்தை மறுவுரு எடுத்ததே நம்மை வாழ வைக்கவே.

அவரது வார்த்தையும் நம்மை வாழ வைக்கவே.

வார்த்தையை வாழ்ந்தால் தான் வார்த்தையானவரோடு நித்தியத்துக்கும் வாழ முடியும்.

வார்த்தையானவருக்கு  நாம் நன்றி உள்ளவர்களாக இருப்பது மட்டுமல்லாம்,

அவரது வார்த்தையை நமக்கு உணவாக ஊட்டிக் கொண்டிருக்கும்

நமது ஞானத் தந்தையர்களுக்கும் நாம் நன்றி உள்ளவர்களாக இருக்க  வேண்டும்.

இன்று அச்சு இயந்திரம் இருப்பதால் நாம் ஆளுக்கு ஒரு பைபிள் வைத்திருக்கிறோம்.

Electronic media வந்த பிறகு நமது ஒவ்வொரு cell phoneலும் 

எண்ணற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட எண்ணற்ற பைபிள்களை வைத்திருக்கிறோம்.

ஒரு Click ல் நினைத்த நற்செய்தி நூல், நினைத்த அதிகாரம், நினைத்த வசனம் கண்முன் வந்து நிற்கிறது.

இது எதனால் சாத்தியம் ஆயிற்று?

அச்சு இயந்திரம்  இல்லாத காலத்தில் மாதக்கணக்கில் மட்டுமல்ல.
வருடக்கணக்கில் எழாமல் உட்கார்ந்து பைபிளை கைப்பட எழுதி காப்பாற்றித் தந்தார்களே சந்நியாசிகள்,

அவர்களால் சாத்தியம் ஆயிற்று.

வீட்டிற்கு வீடு பைபிள் பிரதிகளை கொடுக்க முடியாவிட்டாலும்,

ஒவ்வொரு ஆலயத்திலும் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து, தங்களது போதனையால் இறைவார்த்தை உணவை மக்களுக்கு ஊட்டி, வாழவைத்தார்களே

அந்த ஞானத் தந்தையர்களால்
சாத்தியம் ஆயிற்று.

காலங்காலமாக இறைவார்த்தை என்னும் தீபத்தைப் பத்திரமாகப் பாதுகாத்து, இன்றும் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறதே

அன்னையாம் கத்தோலிக்க திருச்சபை,

அதனால் சாத்தியம் ஆயிற்று.

எல்லோருக்கும், எப்போதும் நன்றி உணர்வோடு இருப்போம்.

 என் friend க்கிட்ட இதை எல்லாம் பொறுமையாக சொல்லுகிறேன்.

புரிந்து கொள்வாள்.

அடுத்து

"நமக்கும் கடவுளுக்கும் இடையில் இயேசு மட்டுமே  உள்ளார் என்று வேதம் கூறுகிறது.'' என்ற என் நண்பியின்  கூற்றுக்கு பதில் தயாரித்து வையுங்கள்."


"இப்போ உனக்குதான் நன்றி கூற வேண்டும்."

"எதற்கு?"

"எனக்கு மட்டுமல்ல, என் எழுத்துக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறாயே, அதற்கு."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Thursday, May 21, 2020

ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை.

ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை.
**  **  **   ** ** **   ** ** ** **
"ஏங்க, கொஞ்சம் உங்க phone diaryய கீழ வைக்க முடியுமா?"

" இன்றைக்கு Post பண்ணுவதற்காக article எழுதிக்கிட்டிருக்கேன்."

"அதைப் பிறகு எழுதி நாளைக்கு Post பண்ணிக்கொள்ளலாம். . இப்போ கொஞ்சம் பேசணும்."

"ஒரு நாளும் இப்படி பதர்ஸ்டப் படமாட்ட . இன்றைக்கு என்னாச்சி?"

"இப்போ வெளியே போயிருக்கும்போது என் friend ஒருத்தியப் பார்த்தேன். ஆசையோடு பேசப் போனா அவா ஒரே வார்த்தையில என்ன  mood out பண்ணிட்டா."

"அப்படி என்ன சொன்னா?"

"அவள் சொன்னதைச் சொன்னா உங்க mood out ஆயிடும். அதை விடுங்க.

அவள் கேட்ட கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லணும். உங்க கிட்ட சில விபரங்கள் கேட்க வேண்டியிருக்கு."
 
"வேறு என்ன கேட்டிருப்பா, பைபிளைப் பற்றி ஏறுக்கு மாறா ஏதாவது சொல்லியிருப்பா. சரி, கேளு."

"இப்போ எல்லார் கையிலேயும் ஆளுக்கோர் பைபிள் வச்சிருக்காங்க. நல்லதுதான்."

"நீ ஆரம்பிக்கும் போதே புரிஞ்சிக்கிட்டேன்
 ஆளுக்கொரு பைபிள் வச்சிக் கிட்டு

 ஆளுக்கொரு விளக்கம் கொடுக்கிறாங்களே, 

இது சரியான்னு கேட்க வார, அப்படித்தானே"

"அப்படியேதான்."

" Primary School ல் படிக்கும்போது  கணக்கு வருப்பில முதன்முதல சொல்லித்தருவாங்களே, அது என்னது?"

"வாய்பாடு."

"Correct. எதுக்காக வாய்பாடு படிக்கிறோம்?"

"வாய்பாடு தெரிஞ்சாதான் கணக்கு செய்ய முடியும்."

''Correct. ஆனால் வாய்பாடே தெரியாட்டா?"

"கணக்கு வராது."

"ஆனால் சில பேர்  வாய்ப்பாடு தெரியாமலேயே கணக்குப் போடுகிறார்களே! .

நாம் விசயத்துக்கு வருவோம்.

கணக்குக்கு வாய்பாடு அடிப்படையாக இருப்பது போல் பைபிளுக்கும் ஒரு அடிப்படை இருக்கிறது.

அந்த அடிப்படை சரியாகத் தெரிந்தால்தான் பைபிளும் சரியாகப் புரியும்.

பைபிளுக்கு உரிய அடிப்படையை உருவிப் போட்டு விட்டு தங்களுக்கு இஸ்டமான அடிப்படையைப் போட்டுக் கொண்டால் அவர்களுக்கு இஸ்டமான விளக்கம் தான் வரும். சரியான விளக்கம் வராது."

"அப்படிப் பட்டவர்களுக்கு நம்மால் எப்படி பைபிளுக்கு 
விளக்கம் கொடுக்க முடியும்?"

"முடியவே முடியாது. அவர்களுக்கு முதலில் சரியான அடிப்படையை விளக்க வேண்டும்.

இயேசு தனது திருச்சபையை மணலின் மீது கட்டவில்லை. அசைக்க முடியாத பாறை மீது கட்டினார்.

"மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். 

உன் பெயர் "பாறை." 

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.

19 வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன். 

எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" என்றார்.
( மத். 16:18, 19)"

"இன்று உலகில ஆயிரக்கணக்கா திருச்சபைகள் இருக்கே!"

"காலப்போக்கில ஆயிரக் கணக்கு இலட்சக் கணக்கா பிரிந்து பிரிந்து போனாலும் ஆச்சரியமில்லை.

ஆனால் இயேசு ஒரே ஒரு திருச்சபையைத்தான் கட்டினார்."

"ஒரே ஒருன்னு சொல்றீங்க. ஆனால் ஆயிரக் கணக்கா பிரிந்து போயிருக்கே! அதுக்கு  என்ன அர்த்தம்?"

"அதுக்கு ஒரே ஒரு அருத்தம் தான். 

இராயப்பர் என்ற பாறை மீது கட்டப்பட்ட திருச்சபை தான் இயேசு நிறுவிய ஒரே ஒரு திருச்சபை."

"மற்றவை?"

"அவரவர்களாக நிறுவிக் கொண்டவை!"

"அவர்களும் நமது பைபிளைத் தான் வைத்திருக்கிறார்கள்!"

"ஆமா, ஆனால், இல்லை." 

"அதென்ன ஆமா, ஆனால், இல்லை? ஏதாவது ஒரு பதிலைச் சொல்லுங்கள்."

"இராயப்பர் என்ற பாறை மீது கட்டப்பட்ட திருச்சபையின் பைபிளில் 73 புத்தகங்கள் உள்ளன. 

ஆனால் அவரவர்களாகவே நிறுவிய திருச்சபைகளில் 
66 புத்தகங்கள்தான் உள்ளன. 

இப்போ சொல்லு. சரியான பதில் ஆமாவா? இல்லையா?"

"நாற்காலிக்கு நான்கு கால்கள்.

அதன் ஒரு காலை அப்புறப் படுத்திவிட்டால் அதை நாற்காலி என்று அழைக்க முடியாது. முக்காலி என்று வேண்டுமானால் அழைக்கலாம்!"

"இராயப்பரின்,  

அவரின் காலத்திற்குப் பின் அவரது வாரிசாகிய  பாப்பரசரின், 

தலைமையில் இயங்கும் திருச்சபை, 

அதாவது இயேசு நிறுவிய ஒரே திருச்சபை

 ஏற்றுக்கொண்ட
 73 புத்தகங்கள் கொண்ட பைபிள் தான் original Bible!

அதுதான் முழுமையான பைபிள்."

"பைபிளின் அடிப்படை பற்றி ஆரம்பிச்சிங்க, இன்னும் அதற்கு வரலிய!"

"ஏண்டி, மதுரைக்குப் போக bus ஏறினால் , எத்தன ஊரக் கடந்து போகணும்.

நீ bus ல ஏறினவுடனே மதுரையை எங்கேன்னு கேட்கிற!"

"சரி.மதுரைக்குப் போன பிறகு மதுரை எங்கேன்னு கேட்கிறேன். இப்ப போவோம்."

"இயேசு திருச்சபையை வழிநடத்துவதற்கு 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார்.

இராயப்பர் தலைவர். மற்றவர்கள் ஆயர்கள்.

பெந்தகோஸ்தே திருநாள் அன்று

 இயேசுவின் உத்தரவுப் படி,

 பரிசுத்த ஆவியின் தூண்டுதலால், 

நற்செய்தி அறிவிப்பை ஆரம்பித்து வைத்தவர்கள் அப்போஸ்தலர்கள் தான்.

அதன்பின் திருச்சபையை வழி நடத்தியவர்களும் அவர்கள்தான்.

ஆகவேதான் இயேசு நிறுவிய ஒரே திருச்சபை அப்போஸ்தலிக்க திருச்சபை என்று அழைக்கப் படுகிறது.

இயேசு பரிசுத்தர்.  அவர் நிறுவிய திருச்சபையும் பரிசுத்தமானது. பாவிகளாகிய நம்மை பரிசுத்தமாக்கவே 
அதை நிறுவினார். 

அழுக்கு உள்ளவர்கள் அது நீங்க சுத்தமான தண்ணீரில் தான் குளிப்பார்கள்.

அதுபோல பாவிகளாகிய நாம் பாவம் நீங்குவதற்காக இயேசு நிறுவிய பரிசுத்தமான திருச்சபைக்குள் இருக்கிறோம்.

இயேசு திருச்சபையை நிறுவியது ஒரு சிலருக்காக அல்ல.  உலகத்தினர் அனைவருக்குமாக.
கத்தோலிக்க என்ற வார்த்தைக்கு பொதுவான என்பது பொருள்.

ஆகவே இயேசுவின் திருச்சபை கத்தோலிக்க திருச்சபை என்று அழைக்கப்படுகிறது.

 . திருச்சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து 

அப்போஸ்தலர்களின் வாரிசுகளாகிய ஆயர்கள் (பாப்பரசரும் ஒரு ஆயர் தான்) திருச்சபையை  வழிநடத்திக் கொண்டு வருகிறார்கள்.

இப்போ சொல்லப் போகிறது மிக முக்கிய உண்மை.

பைபிளின் இரண்டாவது பகுதியான  புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களையும் எழுதியது  இராயப்பர் என்ற பாறைமீது இயேசுவால் கட்டப்பட்ட ஒரே, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபைதான். 

நற்செய்தியாளர்களும், நிரூபங்களை எழுதியவர்களும் ஒரே, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்களே.

இப்போ சொல்லு, பைபிளின் அடிப்படை  திருச்சபையா?

 திருச்சபையின் அடிப்படை பைபிளா?"

"இயேசுவைத் தலையாகக் கொண்டது திருச்சபை.

அதாவது இயேசு தான் திருச்சபை.

திருச்சபைதான் பைபிளுக்கு அடிப்படை.

நிலம் இல்லாவிட்டால் மரம் எப்படி வளர்ந்திருக்கும்?

திருச்சபை இல்லாவிட்டால் பைபிள் எப்படி முளைத்திருக்கும்?

மரத்திற்கு உணவு கொடுப்பது நிலம்

பைபிளுக்கு பொருள் கொடுப்பது திருச்சபை. ஒரே, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபை!

யார் இதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை.

இது தெரியாம என் friend சொல்றா 

"இந்த  21 ம்  நூற்றாண்டில்,  வேத  வசனத்தை விளக்கம்  கொடுக்க கத்தோலி க்க திருச்சபை க்கு  மட்டுமே "அதிகாரம் உண்டு  என்பதை யாரும்  ஏற்று கொள்ள மாட்டார்... "னு "

"நீ போய் தலையை நிமிர்த்தி சொல்லு,

'அம்மா தாயே,

 இயேசுவின் வரலாற்றுக்கும் போதனைக்கும் எழுத்து வடிவம் கொடுத்தது கத்தோலிக்க திருச்சபைதான்.

 திருச்சபை எழுதிய நூலுக்கு சரியான பொருளும் விளக்கமும் திருச்சபைக்கு மட்டும் தான் தெரியும்.'

உன் friend இதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை."

"ஏங்க கத்தோலிக்க திருச்சபை முற்காலத்தில் பைபிள் வாசிப்பதைத் தடை செய்ததாக சினேகிதி சொல்கிறாளே. உண்மையா?"

"முழுப் பொய். விளக்கம் நாளைக்கு."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Wednesday, May 20, 2020

"யாரென்று அறியாமலே நீங்கள் வழிபடும் தெய்வத்தையே உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்."(அப்.17:23)

"யாரென்று அறியாமலே நீங்கள் வழிபடும் தெய்வத்தையே உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்."
(அப்.17:23)
  **  **  **   ** ** **   ** ** ** **

நான் போதனா முறைக் கல்வி (B.Ed.) பயின்று கொண்டிருந்த காலத்தில்  எங்களுடைய ஆசிரியர் சொன்ன அறிவுரை : 

"முதல் முதல் வகுப்பிற்குள் நுழையும்போது

 மாணவர்களின் குறைகளைச் சுட்டிக் காண்பிக்காமல் 

அவர்களைப் பற்றி கொஞ்சம் பெருமையாக பேசிவிட்டு,

 அப்புறம் பாடத்தை ஆரம்பித்தால் மாணவர்கள் நன்கு  கவனிப்பார்கள்"


புனித சின்னப்பர் மிக சிறந்த, திறமையுள்ள ஆசிரியர் என்பது ஏதென்ஸ் நகர மக்களிடையே இயேசுவைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததிலிருந்தே தெரிகிறது. 


ஏத்தென்ஸ் நகரில்  
சிலைகள் நிறைந்து இருப்பதைக் கண்டு, அவர் உள்ளத்தில் சீற்றம் பொங்கியது.

"ஏத்தென்ஸ் நகரத்தாரும் அங்கு வாழும் அந்நியர்களும் புதுப்புதுச் செய்திகளைச் சொல்வதிலும் கேட்பதிலும் மட்டுமே காலம் கழித்து வந்தனர்." (அப். 17:21)

(Now all the Athenians, and arriving visitors, were occupying themselves with nothing other than speaking or hearing various new ideas.)

ஆனால், சின்னப்பர் அரையொபாகு மன்றத்தில் பேசும்போது அவர்களின் குறைகளை சுட்டி காண்பிக்காமல்,

"ஏத்தென்ஸ் நகரப்பெருமக்களே, நீங்கள் எவ்வகையிலும் மிக்க மதப்பற்றுள்ளவர்கள் என்று தெரிகிறது." 

என்று ஆரம்பிக்கிறார்.

தொடர்ந்து,  

"நீங்கள் வழிபடுபவற்றைச் சுற்றிப்பார்த்து" வருகையில்

 "நாம் அறியாத தெய்வத்திற்கு" (TO THE UNKNOWN GOD.)   என்று எழுதியிருந்த பீடம் ஒன்றையும் கண்டேன். 

சரி, யாரென்று அறியாமலே நீங்கள் வழிபடும் தெய்வத்தையே உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்."

என்று கூறிவிட்டு தன் போதனையை ஆரம்பிக்கிறார்.

அன்றைய போதனையின் முடிவில்,

"ஒரு சிலர் விசுவாசங்கொண்டு அவருடன் சேர்ந்துகொண்டனர்.

 அவர்களில் அரையொப்பாகு சங்கத்தின் உறுப்பினராகிய தியொனீசியூஸ் ஒருவர்.

 மற்றும் தாமரி என்பவளும், வேறு சிலரும் இருந்தனர்."
(34)


அவர் இறந்தோரின் உயிர்ப்பைப் பற்றி பேசும்போது ஒரு சிலர் ஏளனம் செய்தாலும்,

சிலர், "இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும் கேட்போம், என்றனர்."

ஆரம்பத்திலேயே சின்னப்பர் மன்றத்தாரிடம்,

"தெய்வத்தை உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்." என்றார்.

நாம் வழக்கமாக, பேசும்போது,

ஒரு நபரைப் பற்றி பேசுவோம். கேட்பவரும் அவரைப் பற்றி தெரிந்து கொள்வார்.

ஒரு ஆளைப் பற்றி  அறிவிப்பதற்கும் 

ஒரு ஆளை அறிவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

எனக்கு நேருவைப் பற்றி கொஞ்சம் தெரியும்.

 ஆனால் நேருவை கொஞ்சம் கூட தெரியாது.

ஏனெனில் அவரைப் பற்றி வரலாற்றில் படித்திருக்கிறேன்

 ஆனால் அவரோடு  நேரடி பழக்கம் கிடையாது.

இப்போது ஒரு  கேள்வி.

நாம் தினமும் நற்செய்தி வாசிக்கிறோம்.

 ஆகவே இயேசுவைப் பற்றி நமக்கு நிறைய தெரியும்.

 ஆனால் நமக்கு இயேசுவைத் தெரியுமா?

இயேசுவைப் பற்றி படிக்கப்படிக்க அவரைப் பற்றிய அறிவு (Knowledge) வளரும்.

சாத்தானுக்கு இயேசுவைப்பற்றி நம்மைவிட அதிகமாக தெரியும்.


நமது விண்ணக பயணத்தில் இயேசுவை பற்றி அறிவது துவக்க நிலை தான். (Starting point)

இயேசுவை அறிவதுதான் விண்ணக பயணம்.

துவக்க நிலையிலேயே நின்று விட்டால் பயணம் எப்படி தொடரும்?

இயேசுவை பற்றி அறிந்த நாம் அவருடனேயே கைகோர்த்து நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

அவரோடு நடப்பது எப்படி?

நமது வாழ்க்கையால்.

நமது உள்ளத்தில் வாழும் எண்ணங்கள் தான் நமது முழு வாழ்விலும் பிரதிபலிக்கின்றன.

நமது உள்ளத்தில் இயேசு வாழ்ந்தால் நமது வாழ்விலும் இயேசு வாழ்வார்.

இயேசுவை வாழ்வதைத்தான்
புனித சின்னப்பர்,

"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே"

என்றார்.

உள்ளத்தில் இயேசு வாழ்வது எப்படி?

இயேசுவைப் பற்றிய அறிவு நமது புத்தியில் இருக்கிறது.

அறிவில் உள்ள இயேசுவை நமது உள்ளத்திற்குக் கொண்டு வந்து அவரைத் தியானிக்க வேண்டும்.

அவரது வாழ்வைத் தியானிக்க வேண்டும்.

நமது தியானத்தின் தன்மைக்கு ஏற்ப இயேசு அவரது பண்புகளோடு நமது உள்ளத்தில் கலந்து விடுகிறார்.

இயேசுவின் பிறப்பை பற்றித் தியானிப்பதாக  வைத்துக் கொள்வோம்.

எங்கும் நிறைந்த சர்வவல்லப கடவுள், ஒரு மாடடைக் குடிலில் பலவீனமுள்ள மனிதனாகப் பிறந்திருக்கிறார், நமக்காக.

பலவீனராகிய நம்மை மீட்பதற்காக சர்வ வல்லபர் பலகீன உரு எடுக்கிறார்.

இதை ஆழ்ந்து தியானிக்கும் போது இயேசுவின் அளவு  கடந்த அன்பு, அவருடைய தாழ்ச்சி, ஏழ்மை, எளிமை போன்ற அவரது பண்புகள் நம் உள்ளத்திற்குள் இறங்கும்.

திரும்ப திரும்ப தியானிக்க, தியானிக்க 

தியானத்தின் ஆழம் அதிகமாகும். 

இயேசுவும், அவரது பண்புகளும் நமது உள்ளத்தை நிறப்பும்போது எதிர்மாறான பண்புகள் இடம் கிடைக்காமல் மறைந்து விடும்.

நமது உள்ளத்தால் இயக்கப்படும் நமது வாழ்க்கை  இயேசுவாலும், அவரது அவரது பண்புகளாலும் இயக்கப்படும்.


நமது வாழ்வும் 
அன்பு,  தாழ்ச்சி, ஏழ்மை, எளிமை ஆகிய பண்புகளால் ஆனதாக இருக்கும்.

இப்போது இயேசு பாலன் நமமில் வாழ்வார்.

கிறிஸ்துவின் பிறப்பை ஆழமாகத் தியானிப்பவர்கள்

 உண்மையிலேயே எல்லோரையும் அன்புசெய்வார்கள்,

 தற்பெருமை கொள்ளமாட்டார்கள்.

ஏழ்மையை நேசிப்பார்கள்,

 எளிமையாக வாழ்வார்கள்,

கிறிஸ்மஸ் விழாவிற்கு ஆடம்பரமாக ஆடை அணிய  மாட்டார்கள், 

தங்களுக்கு புதிய dress எடுக்காமல்

 இல்லாதவர்களுக்கு எடுத்துக் கொடுப்பார்கள்,

 தங்கள் உணவை எளிமையாக வைத்துக் கொண்டு, 

ஏழைகளுக்கு உணவு கொடுப்பார்கள்,

ஆண்டு முழுவதும் வரும் விழாக்களை

(வீட்டு விழாவாக இருந்தாலும் சரி, ஆலய விழாவாக இருந்தாலும் சரி,)

எளிமையாகக் கொண்டாடுவார்கள்.

கோவில் கட்ட கோடிக் கணக்கில் செலவிட மாட்டார்கள்.

இவ்வாறே,

இறை மகன் மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்தது,

பொதுவாழ்வில் அவர் அறிவித்த நற்செய்தி

பாவிகள் மீது அவர் காட்டிய இரக்கம்,

சென்ற இடமெல்லாம்  நன்மைகள் செய்தது,

அவரது பாடுகள்,

மரணம்,

உயிர்ப்பு

போன்ற இயேசுவின் வாழ்வின் எல்லா நிகழ்ச்சிகளையும்,

அதாவது அவரது வாழ்க்கை முழுவதுமே தியானித்தோம் .என்றால் நமது வாழ்க்கை முழுவதுமே இயேசுவின் வாழ்க்கைபோல் ஆகிவிடும்.

தினமும் செபமாலை சொல்கிறோம்.

செபமாலை சொல்கிறோம் என்றாலே இயேசுவின் வாழ்க்கையைத் தியானிக்கிறோம் என்றுதான் பொருள்.

நாம் செபமாலை சொல்லுகிறோம் என்றால் இயேசுவை வாழ்கிறோம் என்றுதான் பொருள்.

ஆனாலும் எத்தனை பேருடைய வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கையாக மாறி இருக்கிறது?

நமது வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கையாக மாறி இருக்கிறதா?
  

நாம் ஏழ்மையை நேசிக்க வேண்டும்.

 எளிமையாக வாழவேண்டும்

 பெற்றவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

 தாழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

 சென்றவிடமெல்லாம் நன்மை செய்ய வேண்டும்.

 தேவைப்படுபவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் உதவ வேண்டும்.

 துன்பங்களையும்  
அவமானங்களையும்
.
 மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 இயேசுவுக்காகவும்,
 அயலானுக்காகவும் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்.


 இப்படி நாம் வாழ்ந்தால் இயேசு நம்மில் வாழ்கிறார்.

 இல்லாவிட்டால் நாம் மட்டும்தான் வாழ்கிறோம். 

விசுவாசம் மட்டும் நம்மை கிறிஸ்தவன் ஆக்காது.

கிறிஸ்துவாக வாழ்ந்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள். 

கிறிஸ்துவாக வாழ்வோம் இவ்வுலகில்,

 கிறிஸ்துவுடன் வாழ்வோம் மறுவுலகில்.

லூர்து செல்வம்.