இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார்.
(லூக்கா நற்செய்தி 8:50)
தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் மரணப் படுக்கையில் இருந்த தன் மகளைக் குணமாக்க இயேசுவை அழைத்துச் சென்று கொண்டிருந்த போது மகள் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது.
அப்போது இயேசு சிறுமியின் தந்தையை நோக்கி,
"அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார்.
அதன் பின் அவளது வீட்டுக்குச் சென்று அவளுக்கு உயிர் கொடுத்தார்.
நாம் இப்போது இயேசுவின் வார்த்தைகளை நமது தியானத்துக்கு எடுத்துக் கொள்வோம்.
இயேசுவின் வார்த்தைகள் உயிருள்ளவை.
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கூறப்பட்ட வார்த்தைகள் அதே போன்ற எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும்.
சாகக் கிடந்த சிறுமியின் தந்தை எதற்காக இயேசுவிடம் வேண்டினாரோ அது நிறைவேற வாய்ப்பு இல்லை என்ற செய்தி வந்த பிறகும்
இயேசு வேண்டியவரை நோக்கி,
"அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்கிறார்.
இதேபோன்ற சூழ்நிலைகள் நமது வாழ்விலும் வரலாம்.
ஒருவர் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
நேர்காணப் போகுமுன் அதிகாலையில் எழுந்து பைபிளைத் திறந்து அன்றைய வாசகத்தை வாசித்து விட்டு,
காலையில் ஆறு மணிக்கே நற்கருணை நாதரைச் சந்திக்கிறார்.
நேர் காணல் காலை பத்து மணிக்கு.
"ஆண்டவரே, நான் வேலைக்கு விண்ணப்பித்திருப்பது உமக்குத் தெரியும். நான் வேலை சம்பந்தமான நேர்காணலுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
நேர் காணலில் நான் வெற்றி பெறவும், வேலை கிடைக்கவும் எனக்கு உதவி செய்யும்."
நேர் காணப் போய்க் கொண்டிருக்கும் போது காலை எட்டு மணியளவில் ஒரு கார் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்தது.
சிறிது விலகி தனது பைக்கை நிப்பாட்டி விட்டு காருக்குள் எட்டிப் பார்த்தார்.
காரை ஓட்டி வந்தவர் Wheelல் குப்புறப் படுத்திருந்தார்.
வேறு யாரும் காருக்குள் இல்லை.
இது எப்படி நிகழ்ந்தது அவரால் யூகிக்க முடியவில்லை.
கதவிலுள்ள கண்ணாடி திறந்திருந்தது.
அருகில் யாருமில்லை.
உடனே இவர் தன் பைக்கை ஒரு ஓரத்தில் நிப்பாட்டி விட்டு,
கதவுத் திறப்பு வழியே காருக்குள் ஏறி, படுத்திருந்தவரை கட்டப்பட்டு தூக்கி Driver seat ஓரமாக உட்கார வைத்து விட்டு காரை அருகிலிருந்த மருத்துவ மனைக்கு ஓட்டிச் சென்று, அங்கு நின்ற சிலர் உதவியுடன் படுத்திருந்தவரை மருத்துவ மனையில் admit செய்தார்.
மருத்துவர் வந்து அவரைக் காப்பாற்றி விட்டார்.
அவர் எழுமட்டும் அவர் அருகில் அமர்ந்திருந்தார்.
மணி ஒன்பது ஆகிவிட்டது.
நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னார்.
அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
"தம்பி, கடவுளுக்கு நன்றி. உன் Bike ரோட்டோரம் கிடக்கிறது. நீ என் காரில் நேர் காணச் செல்."
இவர் காரில் சம்பந்தப்பட்ட அலுவலகம் செல்லும் போது மணி பத்தரை.
நேர் காணலில் கலந்து கொள்ள முடியவில்லை.
"ஆண்டவரே, உம்மால் நல்லது மட்டுமே செய்ய முடியும்.
ஆபத்தில் இருந்த ஒருவருக்கு உதவி செய்ய உதவியதற்கு நன்றி."
என்று கூறி விட்டு காரில் மருத்துவ மனைக்கு வந்து Car Driver டம் எல்லா விபரங்களையும் கூறிவிட்டு,
அவரோடு ரோட்டுக்கு வந்து பைக்கை எடுத்துக் கொண்டு நேரே கோவிலுக்குச் சென்று
நற்கருணை நாதரைச் சந்தித்து நன்றி கூறிவிட்டு வீட்டுக்கு வந்தார்.
பைபிளைத் திறந்து காலையில் வாசித்த வசனத்தை திரும்பவும் வாசித்தார்.
""அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்"
"ஆண்டவரே, என்ன நேர்ந்தாலும் என் நம்பிக்கையை இழக்க மாட்டேன்.
நீர் நல்லதை மட்டுமே செய்வீர்.
என்ன நேர்ந்தாலும் உமக்கு நன்றி கூறுவேன்."
இது நடந்த இரண்டாவது நாள் அவர் எதிர்பாராத வகையில் அவருக்கு ஒரு Courier post வந்தது.
திறந்து பார்த்தார்.
நியமன உத்தரவு.
(Appointment order)
அவர் வண்ணப்பிக்காத கம்பெனியிலிருந்து.
உதவி நிர்வாகியாக.
அவர் விண்ணப்பித்திருந்த கம்பெனி வாக்களித்ததிலிருந்து இரு மடங்கு சம்பளம்.
நற்கருணை நாதரைச் சந்தித்து நன்றி கூறிவிட்டு
உத்தரவில் இருந்து விலாசத்திற்குச் சென்றார்.
நிர்வாகி நாற்காலியில் அமர்ந்திருந்தவர் அன்று மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற அதே நபர்.
"சார், நீங்களா!!"
"நானே தான். அமருங்கள்."
"நான் இதை எதிர் பார்க்கவில்லை.இறைவனுக்கு நன்றி, உங்களுக்கும் நன்றி."
"அன்று மருத்துவ மனையில் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்த விபரங்ஙளின் அடிப்படையில் உத்தரவை அனுப்பினேன்.
அன்று என் மேல் கோபம் வந்ததா?"
"எதற்கு?"
"என்னால்தானே நீங்கள் விண்ணப்பித்த வேலை கிடைக்கவில்லை."
"உங்களால் அல்ல. கடவுளால். நடப்பதெல்லாம் அவரது சித்தப்படிதானே நடக்கும்.
நீங்கள் அவரது சித்தம் நிறைவேற அவர் பயன்படுத்திய கருவி.
எனக்கு நீங்கள் வேலை தருவீர்கள் என்று நம் இருவருக்கும் தெரியாது.
ஆனால் இது கடவுளின் நித்திய காலத் திட்டம்."
"அன்று காரில் நான் வந்து கொண்டிருந்த போது ஒரு மாதிரி வந்தது.
உடனை brake போட்டு வண்டியை நிறுத்தி விட்டு wheel ல் சாய்ந்து கொண்டேன்.
அப்புறம் என்ன நடந்தது என்று மருத்துவ மனையில் தான் தெரியும்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு மயக்கம் வரச் செய்தவர் கடவுள், உங்களை அனுப்பியவரும் கடவுள். இது உங்கள் நம்பிக்கை."
"சத்தியமாக. நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வழி நடத்துபவர் அவர்தான்."
"நமது கம்பெனியையும் லாபகரமான முறையில் வழி நடத்த கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்."
"கடவுளுடைய திட்டம் நமக்கு உதவிகரமாகவே இருக்கும். கடவுளால் நல்லதை மட்டுமே செய்ய முடியும்."
கடவுளை நம்புவோம்.
அவரால் நமக்கு நன்மையை மட்டுமே செய்ய முடியும் என்று நம்புவோம்.
நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.
என்ன நடந்தாலும் நல்லதாகவே இருக்கும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment