ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். "
(லூக்கா நற்செய்தி 8:18)
குருவானவர் மறையுரையின் போது இயேசுவின் நற்செய்தியை நமக்கு விளக்கும் நாம் காது கொடுத்து கேட்கிறோம்.
நாம் கேட்கும் விளக்கம் நமது மனநிலையைப் பொறுத்துப் பலன் தரும்.
ஒரு பாத்திரத்தின் வாய் மூடியிருக்குமானால் அதில் ஊற்றும் தண்ணீர் பாத்திரத்துக்குள் போகாது.
வீணாய் தரையில் விழும்.
அதுபோல நமது மனம் நற் செய்தியை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தால் மட்டுமே நற் செய்தியால் நமக்குப் பலன் உண்டு.
போதிப்பதால் மட்டும் எந்தப் பயனும் ஏற்படாது.
கேட்பவர் மன நிலை எப்படி இருக்க வேண்டும்?
முதலில் நற் செய்தியின் மேல் ஆர்வம் இருக்க வேண்டும்.
திறந்த மனதுடனும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடனும் கேட்பவர்கள் தான் அந்த செய்தியின் முழு நன்மையையும் பெறுவார்கள்.
விருப்பம் இல்லாமல் வேறு வழியின்றி கேட்பவர்கள் நற் செய்தியால் எந்தப் பயனும் பெற மாட்டார்கள்.
"உள்ளவருக்குக் கொடுக்கப்படும்;
இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்."
நற் செய்தியை ஏற்று அதை வாழ்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நற் செய்தியும், அதன் பயனும் தாராளமாகக் கொடுக்கப்படும்.
ஆர்வம் இல்லாதவரிடமிருந்து அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் சிறிதளவு நற் செய்தி ஞானமும் எடுத்துக்கொள்ளப்படும்.
ஒரு முறை ஆர்வம் இருந்து அதனால் கிடைத்த ஞானம்
ஆர்வம் போகும் போது அதோடு சேர்ந்து போய்விடும்.
ஆன்மீக வாழ்வில் ஆன்மீக ஆர்வம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்.
அப்பப்போ வந்து காணாமல் போகும் ஆர்வத்தினால் எந்த பயனும் இல்லை.
The good news and its generous benefits are brought forth only through unending love and perseverance for God's word.
கடவுளின் வார்த்தையின் மீது இடைவிடாத அன்பைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே நற்செய்தியையும் அதன் நன்மைகளையும் தாராளமாகப் பெற முடியும்.
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதில் ஆர்வம் வேண்டும்.
அதை நமது வாழ்வாக மாற்ற ஆசையும் முயற்சியும் இருக்க வேண்டும்.
இறை வார்த்தையை ஆர்வத்தோடு கேட்டு அதை வாழ முயற்சிப்பவர்கள் இறை வாழ்வுக்குத் தங்களை முற்றிலும் அர்ப்பணிப்பார்கள்.
அர்ப்பண வாழ்வு அவர்களுக்கு நித்திய பேரின்ப வாழ்வை ஈட்டித் தரும்.
சாப்பிடும் போது நமது கவனம் முழுவதும் ருசித்துச் சாப்பிடுவதில் மட்டும் இருக்கும்.
சாப்பிடும் போது வேறு எந்த வேலையையும் செய்ய மாட்டோம்.
அதேபோல் நற் செய்தி வாழ்வுக்காக நம்மை அர்ப்பணித்து விட்டால் வாழ்நாள் முழுவதும் நற்செய்தியை வாழ்வதில் மட்டும் நமது கவனம் இருக்கும்.
நமது செயல்கள் அனைத்தும் நற்செய்தியிலிருந்து பிறக்கும் நற்செயல்களாகவே இருக்கும்.
அன்னை மரியாள்,
"இதோ ஆண்டவருடைய அடிமை." என்று தனது வாழ்வை இறைப் பணிக்கு அர்ப்பணித்த வினாடியிலிருந்து
வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு மட்டுமே பணிபுரிந்தாள்.
இயேசு எந்த காரணத்துக்காக உலகுக்கு வந்தாரோ அது நிறைவேறும் வரை மனரீதியாக அவரோடு ஒன்றித்துப் பயணித்தாள்.
கருவறையிலிருந்து பிறந்தவுடன் தன் மடியில் தாங்கிய குழந்தை இயேசுவை
அவருடைய சிலுவை மரணத்துக்கு பின்னும் தன் மடியில் தாங்கியே கல்லறைக்கு அனுப்பினார்.
நாமும் தாயைப் போல் பிள்ளைகளாக வாழ்வோம்.
நற் செய்திக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment