Friday, January 12, 2024

கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்?

கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்?


கடவுள் நன்மையே உருவானவர்.

" கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன." 
(தொடக்கநூல் 1:31)

கடவுள் நன்றாய்ப் படைத்த உலகத்தில் பாவங்களும், நோய் நொடிகளும், கஷ்டங்களும் நிறைந்துள்ளனவே, ஏன்?

என்று சிலர் கேட்கிறார்கள்.


கடவுள் அன்புமயமானவர்.

பாவம் ஒரு தீமை. இது அவரது இயல்புக்கு எதிரானது. 

அன்பு கடவுளின் இயல்பு.
Love is God's nature.

பாவம் அன்புக்கு எதிரானது.

கடவுள் நம்மோடு தனது அன்பைப் பகிர்ந்து கொண்டார்.

இறையன்பு இருக்கும் இடத்தில் பரிசுத்தத்தனம் இருக்கும்.

 நாம் இறையன்புக்கு எதிராக செயல்படும்போது பாவம் செய்கிறோம்.

பாவம் செய்வது நாம்.
Sin is our product.

கடவுளால் பாவம் செய்ய முடியாது. அதாவது அவரது விருப்பத்திற்கு எதிராக அவரே செயல்பட முடியாது.

இப்போது ஒரு கேள்வி எழலாம்.

கடவுள் சர்வ வல்லவராச்சே.

மனிதனைப் படைக்கும் போது அவன் அவரது திட்டத்திற்கு எதிராகச் செயல்பட முடியாதவளாகப் படைத்திருக்கலாம் அல்லவா!

அதாவது அவனுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்காமல் படைத்திருக்கலாம் அல்லவா!

சுதந்திரம் இருந்ததால் தானே அதைப் பயன்படுத்தி அவன் பாவம் செய்தான்.

அன்பைப் போலவே சுதந்திரம் கடவுளுடைய இயல்பு.

தன்னுடைய இயல்பைத்தான் மனிதனோடு கடவுள் பகிர்ந்திருக்கிறார்.

நாம் ஒரு இயந்திரத்தைச் செய்யும் போது அது எப்படி இயங்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படியே செய்கிறோம்.

இயந்திரத்தால் இஷ்டம் போல் இயங்க முடியாது.

கடவுள் நம்மைச் சுதந்திரம் இல்லாமல் படைத்திருந்தால் நாமும் ஒரு இயந்திரமாகவே இருந்திருப்போம்.

நிலம், நீர், காற்று போன்ற இயற்கை பொருட்களுக்கு உயிர் இல்லை.

அவை கடவுள் கொடுத்த இயற்கை விதிகளின்படி தான் இயங்குகின்றன.

விதிகளை மீறி அவற்றால் இயங்க முடியாது.

சுதந்திரம் இல்லாமல் படைக்கப்பட்டிருந்தால் நம்மாலும்
விதிகளை மீறி இயங்க முடியாது.

சுதந்திரம் இல்லாமல் படைக்கப்பட்டிருந்தால்

 நம்மால் பாவம் செய்ய முடியாது, உண்மைதான், 

ஆனால் புண்ணியமும் செய்ய முடியாது.

புண்ணியம் செய்ய முடியாவிட்டால் நம்மால் விண்ணக வாழ்வை ஈட்ட முடியாது.

சுதந்திரமாகச் செயல்படும் வேலைக்காரன் மாத முடிவில் தனது உழைப்புக்குச் சம்பளத்தை எதிர்பார்க்கலாம்.

ஆனால் விஞ்ஞான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும்,

நாம் பயன்படுத்தும் Car மாத முடிவில் சம்பளத்தை எதிர்பார்க்கலாமா?

நாம் சுதந்திரமாகச் செயல்பட்டு விண்ணகப் பேரின்ப வாழ்வை நமது பூவுலக வாழ்வால் ஈட்ட வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.

 அதனால் தான் நம்மை ஒரு இயந்திரமாகப்(Robot) படைக்காமல் முழுமையான சுதந்திரம் உள்ள மனிதர்களாகப் படைத்தார்.

சுதந்திரமாக அவரது அன்பை ஏற்றுக்கொண்டு நாம் அதன்படி நடந்தால் நமக்கு விண்ணக வாழ்வு கிடைக்கும்.

அவர் தந்த சுதந்திரத்தில் அவர் குறுக்கிட மாட்டார்.

பாவமாகிய தீமையைச் செய்வது நாம்.

ஆனாலும் நாம் செய்கிற தீமையிலிருந்து அவரால் நன்மையை வரவழைக்க முடியும்.

நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் காரணமாகத்தான் நமக்கு ஒரு இரட்சகர் கிடைத்தார்.

"ஓ ஆதாமின் பாவமே!
உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!

இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடைய பேறுபெற்றதால்
பாக்கியமான குற்றமே!"

என்று நமக்கு மீட்பரைக் கொண்டு வந்த பாவத்தையே புகழ்ந்து பாடுகிறோம்!

கடவுள் நமக்கு முழுமையான சுதந்திரத்தைத் தந்து விட்ட படியால் அதில் குறுக்கிட விரும்பாமல் நாம் நமது சுதந்திரத்தை பயன்படுத்தி செய்யும் தீமையை அனுமதிக்கிறார்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment