(மாற்கு நற்செய்தி 4:31)
இயேசு இறையாட்சியை ஒரு கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார்.
அது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியதாக இருந்தாலும் அது முளைத்து வளர்ந்த பின்
வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்.
இறையரசு ஒரு சிலருக்கு அல்ல, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உரியது.
இறைவாக்கைக் கேட்டு அதன்படி வாழும் அனைவரும் இறையரசின் உறுப்பினர்கள் .
இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல,
மனுக்குலத்தின் அனைத்து மக்களுக்கும் மீட்பு அளிக்கவே உலகிற்கு வந்தார்.
அதற்காகத்தான் தனது சீடர்களை உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க அனுப்பினார்.
கடுகு மரம் வானத்துப் பறவைகள் அனைத்துக்கும் அடைக்கலம் கொடுக்க காத்துக் கொண்டிருப்பது போல
இறைமகன் இயேசு உலக மக்கள் அனைவரும் தனது ஆட்சி எல்கைக்குள் வர ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதோடு,
வருபவர்களை ஏற்று அரவணைக்க இருகரம் விரித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இறையாட்சி என்பது எது?
இயேசுவின் ஆட்சி.
இயேசு அன்புமயமானவர்,
இரக்கமே உருவானவர்,
தியாகசீலர்.
ஆகவே இறையாட்சி என்பது
அன்பின் ஆட்சி,
இரக்கத்தின் ஆட்சி
தியாகத்தின் ஆட்சி.
இயேசு இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தனது சீடர்களை உலகெங்கும் அனுப்பி ஏறக்குறைய 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நற்செய்தியை ஏற்று இயேசுவின் விருப்பப்படி இறையாட்சியை ஏற்றுக்கொண்டவர்களுடைய எண்ணிக்கை
மொத்த உலக மக்கள் தொகையில் சதவீத கணக்குப்படி அதிகமாக இருந்தாலும்,
இன்னும் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளாதோர் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
உலக மக்கள் தொகை ஏறத்தாழ 810 கோடி.
இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்கள் 260கோடி.
அப்படியானால் 550 கோடி மக்கள் இன்னும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை.
புள்ளி விபரக் கணக்குப்படி உலகின் மொத்த மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் இறை இயேசுவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மீதமுள்ள 68 சதவீத மக்கள் நிலை என்ன?
அதாவது இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களுக்கு இறையாட்சி (மீட்பு) உண்டா?
Non-Catholics can be saved, as the Church affirms (CCC 846-48), but we should not presume that this will necessarily happen, lest we fall into the sin of religious indifferentism. Regarding the level of their purgation, God will judge in a mercifully just way in each person’s case (cf. 1 Cor. 3:10-15).
ஒரு சிறிய ஒப்புமை.
நாம் உண்பதற்கு வேண்டிய உணவு விவசாயி பயிரிடும் நிலத்தில் இருந்து தான் வருகிறது.
அப்படியானால் விவசாயம் செய்யாதவர்களுக்கு உணவு கிடைக்காதா?
விவசாயிக்கு நேரடியாகக் கிடைக்கும்.
மற்றவர்களுக்கு அவன் வழியாகக் கிடைக்கும்.
"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்;"
(மாற்கு. 16:15,16)
இவை இயேசுவின் வார்த்தைகள்.
இயேசுவின் சீடர்களால் போதிக்கப்படும் நற்செய்தியை ஏற்று, ஞானஸ்நானம் பெறுபவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள்.
அவர்கள் ஏற்றுக் கொண்ட நற்செய்தியின் படி வாழ்ந்தால் அவர்களுக்கு மீட்பு உறுதி.
தங்களது தவறின்றி (through no fault of their own,)
இயேசுவையும், அவருடைய திருச்சபையையும் அறியாதவர்கள் (do not know Christ and his Church:)
நேர்மையான உள்ளத்தோடு இறைவனைத் தேடி,
இறைவன் அருளால்,
இறைவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிற மனசாட்சியின் படி வாழ்ந்தால் அவர்களுக்கு மீட்பு உண்டு.
(but who nevertheless seek God with a sincere heart, and, moved by grace, try in their actions. to do his will as they know it through the dictates of their conscience - those too may achieve eternal salvation.)
உணவுப் பொருளை நாம் எங்கேயிருந்து பெற்றாலும் அது வருவது விவசாயியின் மூலமாகவே.
தங்கள் மனசாட்சியின் படி வாழ்ந்து மீட்புப் பெற்றாலும் அவர்கள் பெற்ற மீட்பு வருவது இயேசுவின் மூலமாகவே.
நமது மீட்புக்காகத் தன்னையே சிலுவையில் பலியாக்கிய இயேசுவின் மூலமாகவே நாம் மீட்புப் பெறுகிறோம்.
இயேசுவின் விருப்பப்படி வாழ்கின்ற அனைவரும் அவரது இறையாட்சியில் வாழ்கின்றவர்களே.
கத்தோலிக்கர்களாகிய நமக்கு இறை மகன் இயேசுவை அனைவருக்கும் கொடுக்க வேண்டிய கடமையும், உரிமையும் உண்டு.
(We Catholics have the obligation and also the sacred right to evangelize all men.)
"விண்ணகத் தந்தையே,
உமது ஆட்சி எங்கும் வருக.''
லூர்து செல்வம்
No comments:
Post a Comment