Thursday, February 4, 2021

"எனக்கு கம்பெனி கொடுக்க எப்பவும் ஆட்கள் ரெடியாக இருக்கிறார்களே!"

"எனக்கு கம்பெனி கொடுக்க எப்பவும் ஆட்கள் ரெடியாக இருக்கிறார்களே!"




"Hello, good morning!"

" Very good morning.உட்காருங்கள்.
இன்னொரு tea please!''

"உங்களுக்கு கம்பெனி கொடுக்கலாம் என்று பார்த்தேன். அதுதான் உங்களை பார்த்தவுடன் உள்ளே வந்தேன்."

"ஆமாம் யாரைப் பார்த்தாலும் உங்களுக்கு கம்பெனி தரட்டுமான்னு கேட்கிறீர்களே.

 எக்கச்சக்கமா கம்பெனிகள் வைத்திருக்கிறீர்களா?
   நிர்வகிக்க முடியாமல் பங்கு வைத்துக்கொண்டே போகிறீர்களா?"

"நான் கம்பெனி என்றுதான் சொன்னேன், ஒரு கம்பெனி என்று சொல்லவே இல்லையே!"

"இப்போ புரியுது."

"என்ன புரியுது?"

"தனியாக சாப்பிட்டால் ருசிக்காது. ஒரு companion னோடு சாப்பிட்டால் அதன் ருசியே தனி

 என்று சொல்ல வருகிறீர்கள் அப்படித்தானே."

"வேறு எப்படி இருக்க முடியும்!

ஆமா வீட்டில் தனியாக இருக்கும்போது போரடிக்காதா?"

"தனியாக இருந்தால் தானே போர் அடிக்கும்.

 எனக்கு கம்பெனி கொடுக்க எப்பவும் ஆட்கள் ரெடியாக இருக்கிறார்களே!"


"அப்படியா? உண்மையாவா? அப்படி யார் யாரெல்லாம் உங்களுக்கு கம்பெனி கொடுக்க ரெடியாக இருக்கிறார்கள்? Retired ஆன ஆட்கள்  பக்கத்தில நிறைய பேர் இருக்காங்களோ?"

"ஆமா, நித்திய ஓய்வு (eternal rest) பெற்றோர் நிறைய பேர் எப்போவும் யாருக்கு வேண்டுமானாலும் கம்பெனி கொடுக்க தயாராக காத்து கொண்டு இருக்கிறார்களே!"

"நித்திய ஓய்வு பெற்றோர் மோட்சத்தில் அல்லவா இருப்பார்கள்?"

"ஆமா."

"அவர்களால் உங்களுக்கு எப்படி கம்பெனி கொடுக்க முடியும்?

மோட்சம் உங்கள் பக்கத்திலேயா இருக்கிறது?"

"ஆமா! என் பக்கத்தில் மட்டுமல்ல, உங்கள் பக்கத்திலேயும் இருக்கிறது.

 யார் யாரெல்லாம் ஆசைப்படுகிறார்களோ அவர்கள் பக்கத்திலெல்லாம் இருக்கிறது!"

"புரியவில்லை. இப்போ உங்கள் பக்கத்தில் இருக்கிறதா?"

"ஆமா!''

"உங்கள் பக்கத்தில் நான் தான் இருக்கிறேன். எனக்கு மோட்சம் என்று பெயர் சூட்டி இருக்கிறீர்களா?" 

"முதலில் tea யை குடித்து முடியுங்கள். வீட்டில் போய் பேசுவோம்."

"குடிச்சாச்சு. ஏதாவது வாங்கிக்கொண்டு வாருங்கள். தின்று கொண்டே பேசினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும்."


"உட்காருங்கள். என்ன கேட்டீர்கள்?''

"இப்போ மோட்சம் உங்கள் பக்கத்தில் இருக்கிறதா? என்று கேட்டேன்"

"பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை என்றால் என்ன அர்த்தம்?"

"பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை என்று
அர்த்தம் "

"அதேபோல் தான் மோட்சம் என்றால் மோட்ச வாசிகள் என்று அர்த்தம்."

"மோட்ச வாசிகள் கடவுளோடு அல்லவா இருப்பார்கள்?"


"கடவுள் எங்கே இருக்கிறார்?"

"எங்கும் இருக்கிறார்."

"கரெக்ட். எல்லோருடைய உள்ளங்களிலும் கடவுள் இருக்கிறார்.
அப்போ கடவுளோடு இருக்கும் மோட்ச வாசிகள் எங்கே இருப்பார்கள்?"

" கடவுளோடுதான் இருப்பார்கள்."

"கடவுளை நோக்கி வேண்டும் போது அவருக்கு கேட்குமா, கேட்காதா?"

"கட்டாயம் கேட்கும்.

 வாய்திறந்து வேண்டிய அவசியமே இல்லை.

 மனதுக்குள்ளேயே வேண்டினாலும் அவருக்கு கேட்கும்."

"கோவிலிலிருந்து வேண்டினால் கேட்குமா, வீட்டிலிருந்து வேண்டிய நாள் கேட்குமா?"
 

"காட்டிலிருந்து வேண்டினாலும் கேட்கும், ஏனெனில்.அவர் எங்கும் இருக்கிறார்.

ஆனால் மோட்ச வாசிகளில் எங்கும் இருக்கிறார்கள் என்று கூற முடியுமா?"

"கூற முடியாது. ஏனெனில் கடவுள் காரணத்தினாலும், ஞானத்தினால் எங்கும் இருக்கிறார்.

அதாவது படைக்கப்பட்ட அனைத்துக்கும் காரணர் அவரே,  

படைக்கப்பட மட்டுமல்ல, அவை தொடர்ந்து இருக்கவும், இயங்கவும் காரணர் அவரே.

அதனால்தான் அவரன்றி அணுவும் அசையாது என்கிறோம்.


ஆனால் மோட்ச வாசிகள் எந்த படைப்புக்கும் காரணர் அல்ல.

 ஆகவே இறைவன் இருப்பது போல் அவர்கள் எங்கும் இருக்க முடியாது.

 ஆனால் இறைவன் எங்கெல்லாம் இருக்கிறாரோ அங்கெல்லாம் அவர்கள் நினைத்தால் இருக்க முடியும்.

 நினைவினால் இருக்க முடியும்."

".அதாவது நினைத்தால் நினைத்த இடத்தில் இருக்க முடியும். சரியா?"

" Correct. நாம் எந்த மோட்ச வாசியையாவது கம்பெனிக்கு அழைத்தால் அழைத்த உடனே வருவார்கள். 

உதாரணத்திற்கு புனித அந்தோனியாரை நோக்கி நீங்கள் வேண்ட ஆரம்பித்தால்

 அந்தோணியார் உன் உள்ளத்தில் இருப்பார்.

' அந்தோனியாரே, நான் வெளியூருக்கு சுற்றுலா போகிறேன்.

 தயவுசெய்து என்னுடன் வாருங்கள்' 

என்று அழைத்தால் உங்களது சுற்றுலா முழுவதும் உங்களுடனே இருப்பார்.


 சகல புனிதர்கள் பிரார்த்தனையின் போது சகல புனிதர்களும் நம் உள்ளத்தில் தான் இருப்பார்கள்.

உலகத்தில் வாழும் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் 

' சகல விண்ணக வாசிகளே'

 என்று அழைத்தால் அனைவர் உள்ளத்திலும் அவர்கள் அழைத்த நேரத்தில் இருப்பார்கள்.

நமது உள்ளமும் அவர்களது உள்ளங்களும் தொடர்பில் இருக்கும். 

நாம் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் அவர்களது உள்ளங்கள் செல்லும்."

"நீங்கள் சொல்லுவதை பார்த்தால் நாம் எப்போதும் தனியாக இருப்பது இல்லை போலிருக்கிறது."

"கடவுள் எப்போதும் நம்மோடு இருப்பதால் நாம் தனியாகவே ஒரு வினாடி கூட இருக்க முடியாது.

 கடவுள் நாம் அழைக்காமலேயே நம்முடன் இருப்பார்.

அவர் நம்முடன் இல்லாவிட்டால் நாம் ஒன்றுமில்லாமைக்குத் திரும்பி விடுவோம்.

விண்ணக வாசிகள் அழைத்தவுடன் வருவார்கள்."

"அந்தோனியார் நாம் இருக்கும் இடத்திற்கு அழைத்தவுடன் வருவாரானால் ஏன் மக்கள் அவரைத் தேடி உவரிக்குச் செல்கின்றார்கள்."

"அந்தோனியாரைத் தேடி உவரிக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

மனிதன் சமூகப் பிராணி. கூட்டங்களைச் தேடி செல்வது அவன் இயல்பு, 

திருவிழா கூட்டங்களுக்கு செல்வதில் தவறு ஒன்றும் இல்லை. செல்லா விட்டாலும் தவறு ஒன்றும் இல்லை."

"இயேசு கடவுள். மனிதனாய் பிறந்தது யூத சமயத்தில். ஆகவே அவரே யூத சமய வழக்கப்படி ஜெருசலேம் கோவிலுக்கு சென்றாரே!"

"அது மட்டுமல்ல மாதாவுக்குத் தெரியும் அவளது மைந்தன். கடவுள் என்று.

ஆனாலும் கடவுளுக்கு அவரை ஒப்புக் கொடுக்க கோவிலுக்கு எடுத்துச் சென்றாள்.

நாமும் பொது வழிபாட்டிற்கு கோவிலுக்கு செல்ல வேண்டும்.

 அதற்கு நமக்கு முன்மாதிரிகையாகத் தான் இயேசு கோவிலுக்கு சென்றார்."

"ஒவ்வொரு நாளையும் தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் தான் ஆரம்பிக்கிறோம்.

ஆகவே அன்று முழுவதும் நாம் எங்கு சென்றாலும் பரிசுத்த தம திரித்துவத்தின் பாதுகாப்பில் தான் இருப்போம்.

அதுபோக வேறு யாரை துணைக்கு அழைக்கலாம்?"

"ஒவ்வொருவருக்கும் ஒரு favourite புனிதர் இருப்பார்.

என்னைக் கேட்டால் இயேசு பிறந்து வளர்ந்த திருக்குடும்பம் எப்போதும் நம்மோடு இருப்பது நல்லது என்பேன்.

சிலர் புனிதர்கள் பக்தியை தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 அது உண்மையான பக்தி அல்ல.

 உண்மையான பக்தி, யாரிடம் பக்தி வைத்திருக்கிறோமோ

 அவரை நம்முடைய வாழ்வின் முன்மாதிரியாக பாவித்து, அவர்களைப்போல் நாமும் வாழ்வது தான்.

திருக் குடும்பத்தில் மாதாவும் சூசையப்பரும் தங்களது வாழ்நாள் முழுவதையும்  இயேசுக்காக முழுக்க முழுக்க அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள்.

நாம் அவர்களைப் போல் அர்ப்பண வாழ்வு வாழ வேண்டும் என்று
 முடிவெடுத்து விட்டு 
.அவர்களை நமது அருகே வைத்துக் வைத்துக்கொண்டால்

அவர்களைப் போல நாமும் வாழ நமக்கு உதவியாக இருப்பார்கள்.

மீட்பராகிய இயேசு நம்முடனே வருகிறார் என்ற உணர்வோடு நாம் வாழ்ந்தால் பாவங்கள் நம்மை நெருங்காது."

"அதெல்லாம் சரி ஆனால் 24 மணி நேரமும் அவர்களையே நினைத்துக் கொண்டிருந்தால் நமது கடமைகளை செய்வது எப்படி?

பாடம் நடத்தும் ஆசிரியர் பாடத்தில் கவனம் செலுத்துவரா அல்லது திருக்குடும்பத்தின் மேல் கவனம் செலுத்துவாரா?"

"நீங்கள் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்துதான் இயேசு அன்றே நம்மை சிறுபிள்ளைகளை போல வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

சிறுபிள்ளைகள் எப்பொழுதும் தாயின் அருகிலேயே இருக்க ஆசைப்படும்.

அருகே என்றால் மடியில் என்று அர்த்தமல்ல,

 தாய் வீட்டில் இருக்கிறாள் என்ற உணர்வு இருந்தால் அந்த வீடு முழுவதும் சென்று விளையாடிக்கொண்டிருக்கும்.

 அப்பப்போ தாயை எட்டிப் பார்த்துக் கொள்ளும்.

 விளையாடிக் கொண்டிருக்கும் போது தாய் எங்கேயாவது கிழம்பி விட்டால் விளையாட்டை விட்டு விட்டு தாயுடன் செல்லும்.

 அதே போல் தான் இயேசுவும், மரியாளும், சூசையப்பரும் நம்மோடு இருக்கிறார்கள் என்ற உணர்வுடன் 

நமது கடமைகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.

நாம் எப்போதும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ வேண்டும்.

 அதாவது இயேசு நம்மோடு தான் இருக்கிறார் என்ற உணர்வோடு வாழ வேண்டும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment