Tuesday, February 16, 2021

திக்குத் தெரியாத காட்டில்.

திக்குத் தெரியாத காட்டில்.



"ஹலோ, சார், எங்கேயாவது அவசரமாக புறப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களா ?"


"ஏன் சார், என்ன பார்த்தா எங்கேயோ புறப்பட்டு கொண்டிருக்கிறது மாதிரியா தெரியுது?

.அத வேற அழுத்தம் திருத்தமா புறப்பட்டு கொண்டு இருக்கிறீர்களா ன்னு கேட்கிறீர்கள்!

அதெப்படி ஒரே நேரத்துல புறப்பட்டு கொண்டு, இருக்க முடியும்?"


"உங்க கூட கொஞ்ச நேரம் ஆற அமர உட்கார்ந்து பேசலாம் என்று நினைத்து வந்தேன். அதனால் தான் அப்படி கேட்டேன்."

"ஆற அமர உட்கார்ந்து என்ன பேசப் போகிறீர்கள்? அதுவும் கொஞ்ச நேரம்?"


"கொஞ்ச நாளா நம்ம WhatsApp group களில சிலர் கேள்விகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

நாமதான் அவற்றிற்கு பதில் சொல்ல வேண்டுமாம்.

ஆனால் சில கேள்விகள் எனக்கு புரியவில்லை.

சிறு கேள்விகள் புரியுது ஆனால் பதில் தெரியவில்லை."

"புரியாத கேள்விகளை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

புரியாத கேள்விகளுக்கு விடை காண முயல்வதும், திக்குத் தெரியாத காட்டில் தெரிந்த இடத்தைத் தேடிப் போவதும் ஒன்றுதான்.

 இடம் தெரிந்திருக்கும். ஆனால் போக வழி தெரியாது.

பரவாயில்லை. கேள்விகளை கேளுங்க.

 பதில் எங்காவது இருக்கிறதா என்று தேடிப் பார்ப்போம்

 கிடைத்தாலும் கிடைக்கும் கிடைக்காமல் போனாலும் போகும். நமக்கு நேரம் போகும்." 


கத்தோலிக்க திருச்சபையில் உறுப்பினராவதற்கு முதல் தகுதி திருமுழுக்கா? குடும்ப வரியா? நன்கொடைகளா? பணமா?"

"நீங்கள் கேட்பது எப்படி இருக்கிறது தெரியுமா?

ஒரு கல்லூரியில் admission போடப் போகிறவர்கள்,

"இந்த கல்லூரியில் admission போட நல்ல மதிப்பெண் இருக்க வேண்டுமா அல்லது நிறைய பணம் வேண்டுமா என்று கேட்பது மாதிரி இருக்கிறது."

"Exactly. கத்தோலிக்க திருச்சபையில் உறுப்பினராவதற்கு முதல் தகுதி விருப்பம். நான் சொல்வது பெரியவர்களுக்கு.

முதலில் திருச்சபையில் சேர விருப்பம் இருக்க வேண்டும்.

விருப்பம் இருக்க வேண்டுமானால் திருச்சபையை பற்றி சம்பந்தப்பட்ட ஆளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

திருச்சபையை பற்றி தெரிந்து விருப்பமிருந்தால் அவருக்கு திருமுழுக்கு கொடுக்கலாம்.


இதில் குடும்ப வரி, நன்கொடைகள், பணம் எங்கிருந்து வந்தன? எனக்கு புரியவில்லை. உங்களுக்கு புரிகிறதா?"

"நீங்கள் சொன்னது பெரியவர்களுக்கு திருமுழுக்கு கொடுப்பது பற்றி.

ஆனால் கேள்வியை பார்த்தால் வேறு மாதிரி தெரிகிறது."

"எப்படி தெரிகிறது?"

"சில ஊர்களில் கோவில் திருவிழா வரிப்பாக்கி இருந்தால் 

அதை வசூலிப்பதற்கு ஞானஸ்நானம், திருமணம் போன்ற அத்தியாவசிய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்.


சிறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டி இருந்தாலும்

 திருமணத்திற்கு ஓலை வாசிக்க வேண்டி இருந்தாலும் 

கோவிலில் வரிப்பாக்கி இல்லை என்று உபதேசியாரிடமிருந்து கடிதம் பெறவேண்டும் என்ற ஒழுங்கை வைத்திருக்கிறார்கள்.

பழைய பாக்கிகளை பிரிக்க ஒரு டெக்னிக்."

"ஆனால் இது சரியா?"

"நிச்சயமாக சரி இல்லை.

ஆன்மீக காரியங்களுக்கும், வரவு செலவுகளுக்கும் முடிச்சுப் போடக்கூடாது,

 அப்படி போடுவதால் விளையும் ஆன்மீக கேடுகளுக்கு சம்பந்தப்பட்டவர்களே இறைவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும்."

"ஒரு முறை ஒரு குடும்பத்தில் திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது.

 ஓலை வாசிப்பதற்காக குருவிடம் செல்ல வேண்டுமென்றால் உபதேசியாரிடமிருந்து வரிப் பாக்கி இல்லை என்று கடிதம் வாங்கி செல்ல வேண்டும். வரி பாக்கி கணிசமாக இருந்திருக்கிறது.

திருமண வீட்டினர் கடிதம் வாங்கவும் இல்லை,

 சுவாமியாரிடம் செல்லவும் இல்லை..

 திருமணத்திற்கு குறிப்பிட்ட நாளன்று 

பெண்ணும் மாப்பிள்ளையும் தென்காசி மிக்கேல் சம்மனசு கோவிலுக்குச் சென்று

 பீடத்தின் முன் முழங்காலில் அமர்ந்து தாலி கட்டிக் கொண்டார்கள். இது நடந்த சம்பவம்."

"இது சரியா?"

" உறுதியாக சரி இல்லை. ஆனால் இவ்வாறு சரி இல்லாத காரியங்களை செய்ய வரவு செலவு பாக்கி காரணமாக இருக்கக் கூடாது.

வரி பிரியாமல் போகுமே என்று காரணம் சொல்லலாம்.

 இப்படி தவறாக நடந்தால் மட்டும் வரி பாக்கி பிரிந்து விடுமா?

 இரண்டு ஆத்மாக்கள் கெட்டு போனது தான் மிச்சம், தேவையில்லாத ஒழுங்குமுறைகளை அகற்ற வேண்டும்.

ஆன்மீக காரியங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்."


"எப்படிப்பட்ட நல்ல காரியமாக இருந்தாலும், யாரிடமிருந்தும் கட்டாயப்படுத்தி நன்கொடை வசூலிக்கக் கூடாது.

 கட்டாயப்படுத்தி நன்கொடை வசூலித்தால் அதற்கு பெயர் நன்கொடை அல்ல, வன்கொடை,


சிலரிடம் அதிகமான நன்கொடை கொடுத்தால் பெயர் கல்வெட்டில் பொறிக்கப்படும் என்று ஆசை காட்டி அதிகமாக நன்கொடை வாங்குவார்கள்.

 கல்வெட்டில் பொறிக்கப் படுவதற்காக நன்கொடை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு,

 மனமுவந்து காணிக்கையாக கொடுக்கப்படும் நன்கொடையை மட்டுமே கோவில் காரியங்களுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்."

''வரி கொடுக்காமல் ஏமாற்றுவது தப்பு இல்லையா?"

".நிச்சயமாக தப்புதான். 

அதை சரி செய்ய வேறு ஏதாவது வழி முறையை கையாள வேண்டும்.

 ஞான காரியங்களை பணத்திற்காக அடகு வைக்கக் கூடாது. 

ஞான காரியங்கள் கடவுளுக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கும் மத்தியில் மட்டுமே உள்ளவை, பணம் குறுக்கே பாயக்கூடாது."

"வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்று திருச்சபையில் கட்டளை இருக்கிறதா?"

"திருச்சபையின் கட்டளைகள் ஆறு.

ஆறாவது கட்டளை:

*நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியை செய்கிறது*


"நம்மாலான" என்ற வார்த்தையை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

வசதியுள்ளவர்கள் பத்தில் ஒன்று என்ன அதற்கு மேலேயும் கொடுக்கலாம்.

வசதி குறைந்தவர்கள் தங்களால் இயன்ற காணிக்கை செலுத்த வேண்டும்.

காணிக்கையை விட கொடுக்கிற நல்ல மனதுதான் முக்கியம்.

சுய விளம்பரத்திற்காக அதிகமாக கொடுப்பவர்களுக்கு விண்ணகத்தில் அதற்காக ஒன்றும் கிடைக்காது.

நல்ல மனதோடு எவ்வளவு கொடுத்தாலும் விண்ணகத்தில் பலன் உண்டு. பலன் பணத்திற்கு அல்ல. நல்ல மனதிற்கு."

"அடுத்த கேள்வி.."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment