(தொடர்ச்சி)
"குருவானவரைத் தவிர வேறு யாரும் திருமுழுக்கு கொடுக்கலாமா?
இறைமகன் இயேசு அப்போஸ்தலர்களை உலகெங்கும் அனுப்பியதே
நற்செய்தியை அறிவிக்கவும்
அதை விசுவசிப்பவர்களுக்கு ஞானஸ்தானம் கொடுத்து
திரு அருட்சாதனங்கள் மூலமாக அவர்களை ஆன்மிக வாழ்வில் வழி நடத்தவும்தான்.
ஆகவேதான் அப்போஸ்தலர்களின் வாரிசுகளான குருக்கள் திருமுழுக்கு கொடுக்கிறார்கள்.
ஆனால் அவசர நிலையில் (Emergency) குருவானவர் அருகில் இல்லாவிட்டால்
யார் வேண்டுமானாலும் திருமுழுக்கு கொடுக்கலாம்.
திருச்சபை வகுத்திருக்கும் வெளி அடையாளங்களை சிறிது கூட மாற்றாமல்,
வார்த்தைகளையும் மாற்றாமல் சொல்லி,
திருச்சபையின் கருத்தோடு (Intention) கொடுக்க வேண்டும்
யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்."
"யார் வேண்டுமானாலும் என்றால்?"
"குழந்தையினுடைய
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பிற மதங்களை சேர்ந்தவர்கள் கூட திருமுழுக்கு கொடுக்கலாம்.
வெளி அடையாளத்தை மாற்றக்கூடாது வார்த்தைகளையும் மாற்றக்கூடாது திருச்சபையின் கருத்தோடு கொடுக்க வேண்டும்.
(In case of necessity, however, not only a priest or deacon,
but even a layman or woman,
nay, even a pagan or heretic can baptize,
provided he observes the form used by the Church,
and intends to perform what the Church performs.)
விஷயம் தெரிந்த அம்மாக்கள்
ஞானஸ்தானம் கொடுப்பதற்கு முன்னால்
குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுவது போல் தெரிந்தால்
உடனே குழந்தைக்கு அவஸ்தை ஞானஸ்நானம் கொடுத்து விடுவார்கள்."
"ஞானஸ்நானம் ஒருமுறைதான் கொடுக்கலாம்.
அம்மா கொடுத்து விட்டால் சாமியார் என்ன செய்வார்?"
"ஞானஸ்நானம் கொடுக்க குழந்தையை எடுத்துச் செல்லும்போது குருவானவர் கேட்பார்:
"குழந்தைக்கு அவஸ்தை ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறீர்களா?"
தாய் 'ஆம்' என்று சொன்னால்,
குருவானவர் இரண்டு விதமாய் செயல்படலாம்.
1. குழந்தை பெற்ற ஞானஸ்நானம் முழுக்க முழுக்க செல்லத்தக்கது (Valid) என்பதில் அவருக்கு உறுதி ஏற்பட்டால்
ஞானஸ்நானம் கொடுப்பதை தவிர்த்து அதை ஒட்டிய மற்ற சடங்குகளை நிறைவேற்றுவார்.
The ceremonies which had been omitted in such baptism are to be supplied,
2.செல்லத்தக்கதில் (Validity) உறுதி ஏற்படாவிட்டால் நிபந்தனை ஞானஸ்நானம் ( CONDITIONAL BAPTISM) கொடுப்பார்.
அதாவது
"நீ இதுவரை ஞானஸ்நானம் பெற்றிராவிட்டால்,
தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்."
“If thou art not yet baptized, then I baptize thee in the name”, etc.
"பிரிவினை சபையில் ஞானஸ்நானம் பெற்ற ஒருவர் நம் சபைக்கு வந்தால் சுவாமி என்ன செய்வார்? "
"பிரிவினை சபையில் பெற்ற ஞானஸ்நானம் செல்லுமா செல்லாதா ஆய்ந்து முடிவு எடுக்க வேண்டியவர் குருவானவர் தான்.
செல்லுமானால் திரும்பவும் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
சந்தேகம் ஏற்பட்டால் நிபந்தனை ஞானஸ்நானம் கொடுப்பார்."
"பிரிவினை சபையில் ஞானஸ்நானம் பெற்ற ஒருவர்
நம் சமயத்திற்கு வரும் முன்னால்
பாவங்கள் செய்திருந்தால்,
நம்மிடம் வந்து நிபந்தனை ஞானஸ்நானம் பெற்றால் அந்த பாவங்கள் நிபந்தனை ஞானஸ்நானத்தினால் மன்னிக்க படுமா?"
"முந்திய ஞானஸ்நானம் செல்லுபடியாக இருந்தால்கூட
அதற்குப்பின்னால் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு பெற பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.
சந்தேகத்தின்பேரில் நிபந்தனை ஞானஸ்நானம் பெற்றாலும் நிபந்தனை பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்."
"நிபந்தனை பாவசங்கீர்த்தனம் என்றால்?"
" பாவ அறிக்கைக்கு பின் குருவானவர் நிபந்தனை பாவமன்னிப்பு ( conditional absolution)கொடுப்பார்.
பாவங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டிருக்காவிட்டால் இப்போது மன்னிக்கப்படும்."
இயேசு எப்போது திருமுழுக்கு என்னும் திரு அருள் சாதனத்தை ஏற்படுத்தினார்?
தான் விண்ணகம் எய்து முன் தனது அப்போஸ்தலிக்ககளிடம்
" நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து"
என்று சொன்னபோது அவர்களுக்கு நற்செய்தியை போதிக்கவும் ஞானஸ்நானம் கொடுக்கவும் கட்டளையிட்டார்.
தனது பொது வாழ்வின் போது,
"உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசில் நுழையமுடியாது."
(அரு. 3:5)
என்று கூறியதன் மூலம்
ஞானஸ்நானத்தின் அத்தியாவசியத்தை வலியுறுத்தினார்.
"இதற்குப்பின், இயேசுவும் அவருடைய சீடரும் யூதேயா நாட்டிற்கு வந்தனர். அங்கே அவர் அவர்களோடு தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்."
(அரு. 3:22)
இதற்கு முன் இயேசு ஞானஸ்நானம் எனும் திருவருள்சாதனத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
ஆனால் எப்போது என்று குறிப்பாக நற்செய்தி நூல்களில் சொல்லப்படவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி,
அப்போஸ்தலர்கள் இயேசு சொல்லியபடி தான் செய்தார்கள்.
தங்கள் இஷ்டத்திற்கு செயல்படவில்லை.
7 அருள் அடையாளங்களும் கிறிஸ்துவால்தான் ஏற்படுத்தப்பட்டவை.
இயேசு விண்ணகம் எய்துமுன் தனது அப்போஸ்தலர்களிஇடம் ,
'". உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்.
தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் கொடுங்கள்."
என்று சொன்னதிலிருந்து ஞானஸ்நானம் எனும் திருவருள் சாதனத்தை அவர்தான் ஏற்படுத்தினார் என்பது உறுதியாகிறது.
எப்போது என்ற கேள்விக்கு நமக்கு பதில் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் விண்ணகம் செல்லும் போது இயேசுவிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோமே!"
"அதுவும் சரிதான். நம் மக்கள் உலகில் சாதாரண விழாக்களை கொண்டாடுவது போலவே
அருள் அடையாளங்கள் சம்பந்தப்பட்ட விழாக்களையும் கொண்டாடுகிறார்களே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?"
"ஆன்மீக நிகழ்வுகளுக்கும் உலகைச் சார்ந்த நிகழ்வுகளுக்கும் உள்ள வேறுபாடு தெரியாததால் தான்
ஆன்மீக விழாக்களையும் உலக விழாக்களையும் ஒன்றுபோல் கொண்டாடுகிறார்கள்.
திருமுழுக்கு, திருமணம், குருத்துவம் ஆகிய மூன்றும் திருவருட்சாதனங்கள்,
முழுக்க முழுக்க ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை.
முதலில் திருமுழுக்கை எடுத்துக்கொள்வோம்.
மற்றவற்றை அவற்றைப் பற்றி பேசும்போது பார்த்துக்கொள்வோம்.
பாவ நிலையில் உள்ள ஒரு ஆன்மா இறைவனோடு உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக
பாவ நிலையிலிருந்து விடுதலை பெறுவதற்காக
திருமுழுக்கு பெறுகிறது.
இது முழுக்க முழுக்க ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் இடையில் நடைபெறும் முக்கிய ஆன்மீக நிகழ்வு.
இந்நிகழ்வின்போது மக்கள் எதைப் பற்றி நினைத்து மகிழ்ச்சி அடைய வேண்டுமோ அதைப் பற்றியே நினைப்பது இல்லை.
திருமுழுக்கின்போது
ஆன்மாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த அத்தனை பாவங்களும் மன்னிக்கப் படுகின்றன,
உலகைச் சார்ந்த மனிதன் திருமுழுக்கின் மூலம் இறைவனின் சுவிகாரப் பிள்ளையாக மாறுகிறான்,
நித்திய பேரின்ப வீட்டிற்கு தன்னையே தகுதி ஆக்கிக் கொள்கிறான்
என்பதை நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்?
விரல்விட்டு கூட எண்ண முடியாது.
திருமுழுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு விழா.
புதிய உடை அணிந்து,
'
விருந்தினர்களை வரவழைத்து, உபசரித்து,
மட்டன் பிரியாணி உட்பட சகலவித உணவு வகைகளை தயாரித்து
உண்டு மகிழுந்து கொண்டாட வேண்டிய ஒரு விழா
என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.
விழாவிற்கு செல்வோரும்
நன்கு விருந்து சாப்பிட வேண்டும்
திருமுழுக்குப் பெற்ற குழந்தைக்கு பரிசு வழங்க வேண்டும்
என்ற நினைப்பில் தான் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
புத்தாடைக்காகவும்,
விருந்துக்காகவும் செலவழிக்கப்பட்ட செலவின் அளவும்
பரிசுப் பொருட்களால் வந்த வருமானத்தில் அளவும்தான் விழாவின் பெருமையை தீர்மானிக்கின்றன.
குழந்தைக்கு ஞான பெற்றோர்களாய் நிற்பவர்களில் எத்தனை பேர் குழந்தை சம்பந்தப்பட்ட தங்களது ஞான கடமைகளை நிறைவேற்றுகிறார்கள்?"
"உண்மைதான். திரு முழுக்கு நாளை ஒரு சமூக விழாவாக மட்டுமே நம் மக்கள் கொண்டாடுகிறார்கள். அதனுடைய ஆன்மீக முக்கியத்துவத்தை யாரும் நினைத்து பார்ப்பதே இல்லை.
இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இப்போது கேட்கப்படும் கேள்விக்கு நீங்கள் ஒரு பதில் சொல்ல வேண்டும்."
". கேள்வியை சொல்லுங்கள்"
"திருமுழுக்கு பெறுவதற்கும்,
பாவ சங்கீர்த்தனம் செய்வதற்கும் ஒரே நோக்கம்தான்.
அது என்ன நோக்கம்?'
"Very simple.பாவத்திலிருந்து விடுதலை."
"Correct. பாவத்திலிருந்து விடுதலை பெற்றதற்காக திருமுழுக்கின்போது விழா கொண்டாடும் நீங்கள்
என்றைக்காவது பாவசங்கீர்த்தனம் செய்யும்போது அதற்காக விழா எடுத்து இருக்கிறீர்களா?"
"Hello, brother! திருமுழுக்கின்போது பாவத்திலிருந்து விடுதலை பெற்றதற்காக யாரும் விழா கொண்டாடவில்லை!
வீட்டில் ஒரு விழா கொண்டாட வேண்டும் என்பதற்காகவே விழா கொண்டாடுகிறார்கள்!
(தொடரும்)
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment