Sunday, February 28, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 13 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 13
(தொடர்ச்சி)

"ஏதோ கதை தெரியுமான்னு கேட்டீங்க."

"Brother Juniper கதைதானே."

"அதேதான்."

"அவர் ஒரு கப்புச்சின் சபை lay brother.

மிகவும் நல்லவர், பக்தி உள்ளவர்,
மிகவும் இரக்க சுபாவம் உள்ளவர், மிகவும் கீழ்ப்படிதல் உள்ளவர்."

"ஹலோ! எலலா துறவிகளும் அப்படித்தான் இருப்பார்கள். கதைக்கு வாங்க."

"ஒரு நாள் சுப்பிரியர் அவரைக் கூப்பிட்டு,

"Brother, இப்போது எந்த room freeயாக இருக்கிறது?"

"Room number 13."

"இன்று ஒரு guest வருகிறார்கள்.
சில நாட்கள் தங்குவதற்கு அந்த அறையை ஏற்பாடு செய்யுங்கள்."

Brother ம் மறு வார்த்தை பேசாமல் அப்படியே செய்துவிட்டார்.

அன்று பிற்பகல் வந்த guest ஐ அந்த அறையில் தங்க வைத்து விட்டார்.

அன்று இரவு சுமார் 10 மணி இருக்கும்.

எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

சுப்பிரியர்க்கு தூக்கம் வரவில்லை.

கையில் ஜெப மாலையை 'எடுத்துக் கொண்டு வெராண்டாவிற்கு வந்தார்.


வெராண்டாவின் ஒரு ஓரத்தில் யாரோ படுத்திருந்தார்கள்.

சுப்பிரியர் அருகில் வந்து பார்த்தார்.

Brother Juniper!

ஏன் இவர் இங்கே படுத்திருக்கிறார்?

அவரை தட்டி எழுப்பி,

"Brother, அறையில் படுத்தால் என்ன? இங்கு பனியடித்துக் கொண்டு இருக்கிறதே!"

"அதை நீங்கள் சொன்னபடி guest தங்க கொடுத்துவிட்டேன்."

"உங்கள் அறையை கொடுக்கும்படி நான் சொல்லவில்லையே!"


"இப்போது எந்த room freeயாக இருக்கிறது? என்று நீங்கள் தானே கேட்டீர்கள்!"

"Room number 13 என்று நீங்கள் தானே சொன்னீர்கள்."

"ஆமா. அது என் அறை. நான் உங்கள் அறையில் உங்களோடு பேசிக் கொண்டிருந்ததால் எனது அறை free ஆக இருந்தது.

அதைத்தான் சொன்னேன்."

சுப்பிரியருக்கு கோபம் வந்தது

கோபமான குரலில்,

"கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம்? 

என் அறையில் படுத்துக்கொள்ளுங்கள்."

"Father, நீங்கள்?"

"சொன்னதைச் செய்யுங்க போங்கள்."

Brother க்கு ஒன்றும் புரியவில்லை 

 "சொன்னதைத்தானே செய்தோம். அதற்கு ஏன் இவ்வளவு கோபம்?

Father க்கு ஏதோ ஆகிவிட்டது."
Brother க்கு கோபம் வரவில்லை. சுப்பீரியர் மீது இரக்கப்பட்டார்.

தான் கீழ்ப்படியாமல் இருந்திருந்தால் அவர் கோபப்படுவதில் நியாயம் இருக்கிறது.

கீழ்ப்படிந்தவர் மீது கோபப்பட்டால்?

"சுவாமிக்கு சுகம் இல்லை என்று நினைக்கிறேன்."

இரவு முழுவதும் பிரதர் தூங்கவே இல்லை.

அதிகாலையில் எழுந்து சமையலறைக்குச் சென்று ஏதோ தயாரித்தார்.

சுப்பிரியர் எழு முன் அவர் அறைக்கு வந்து,

எழுந்தவுடன் அவரிடம் சென்று,

"சுவாமி, கோபத்தில் உங்கள் முகம் சரி இல்லை. உங்களுக்கு சுகமில்லை என்று நினைக்கிறேன். தயவுசெய்து இதை சாப்பிடுங்கள்.
நல்ல சுகம் கிடைக்கும்."

சுப்பிரியர் Brother ஐப் பார்த்தார். 
இப்படி அநியாயத்திற்கு அப்பாவியாய்இருக்கிறாரே!

எதுவும் சொல்லாமல் கொடுத்ததை வாங்கி குடித்து விட்டார்.

"சுவாமி இன்று பகலில் நன்கு ஓய்வு எடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்."

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனாலும், " சரி, brother." என்று கூறிவிட்டு சென்றார்.

Brother Juniper ஐப் பற்றி
 என்ன நினைக்கிறீர்கள்?"

"எனக்கு எதுவுமே தோன்றவில்லை.

கீழ்ப்படிதல் இருக்கிறது. 
பரிவு இருக்கிறது.
 உதவிசெய்யும் குணம் இருக்கிறது.
 நல்லவர் என தோன்றுகிறது. ஆனால் விவேகம் இல்லையே!"

"ஒரு குழந்தையிடம் இருக்கும் innocence இருப்பது தெரியவில்லை?"

"குழந்தையிடம் இருந்தால் அது innocence. வளர்ந்தவர்களிடம் இருந்தால் அதற்கு பெயர் குழந்தை தனம்."

"உண்மையிலேயே உலகத்தார் கண்களுக்கு நல்லவர்கள் பைத்தியக்காரர்கள் போல்தான் தோன்றுவார்கள்!

நல்லவர்களுக்கு பெயர் பிழைக்கத் தெரியாதவர்கள் என்ற பெயர் உண்டு!

  ஆனாலும் நன்மைத்தனம் (goodness) பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்று.

நல்லவர்கள் மனதில் நல்ல நல்ல எண்ணங்கள்தான் தோன்றும்.

எதை பார்த்தாலும் அதன் positive side மட்டும் தெரியும்.

Negative side தெரியாது.

நல்ல பையன், என்னவோ படிப்பு மட்டும் வரமாட்டேன் என்கிறது.

 வகுப்பில் ஆசிரியர் கேள்விக்கு தவறான அளித்ததற்காக கையில் பிரம்பால் ஒரு அடி கொடுத்தார்.

மதிய உணவு வேளையின் போது பையன் கையில் எதையோ வைத்துக்கொண்டு ஆசிரியரிடம் வந்தான்.

"என்னடே?"

 "வலது கையை கொஞ்சம் காட்டுங்கள்."

"என்ன விஷயம்?"

"காட்டுங்கள். சொல்கிறேன்."

ஆசிரியர் காட்டினார்.


"சார், பெருவிறல் பின்பக்கம் ஏன் வீங்கி இருக்கிறது? நீங்கள் அடிக்கும்போது பார்த்தேன்."

"ஏல, அடிபட்ட கையை பார்க்காமல் என் கையை ஏன் பார்த்தாய்?"

"சார், இந்த தைலத்தை கையில் தடவுங்கள். வீக்கம் வற்றிவிடும்."

"சரி உன் கையால் நீயே தடவி விடு."

தடவி விட்டான். இதமாக இருந்தது.

"தைலம் எங்கிருந்து வாங்கி வந்தாய்?"

"என்னிடம் எப்போதும் இருக்கும். பிரம்படி  பட்ட இடம் வீங்கினால் தடவிக்கொள்வேன்."

"பிறர் பணி செய்வதற்கு படிப்பே தேவை இல்லை!"

".என் பையன் என்னிடம் அடிபடும் போதெல்லாம், முணுமுணுத்துக் கொண்டே இருப்பான்,

வலியினால் முணுமுணுப்பான் என்று அதை நான் கண்டு கொள்வதே இல்லை.

ஆனால ஒரு நாள் அவன் முணுமுணுக்கும் போது எனக்கு கோபம் வந்தது

'என்னடா முணுமுணுக்கிறாய்?'
 கையை ஓங்கினேன்.

எனது மனைவி குறுக்கிட்டாள்.

"பொறுங்க. அவன் முணுமுணுக்கவில்லை. நீங்கள் அடிக்கும் போதெல்லாம் உங்களுக்காக அவன் ஒரு அருள்நிறை மந்திரம் சொல்லுகிறான்."

"அப்படியாடா?"

அவன் புன்சிரிப்பு சிரித்தான்."

"இப்படிப்பட்ட  பிள்ளையை பெற்ற நீ பாக்கியசாலி! உன் பிள்ளை பரிசுத்த ஆவியின் அருள் பெற்றவன்.

நன்னயம் பெற்றவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

நாம் அவர்களுக்கு தீங்கு செய்தாலும் அதிலும் மகிழ்வதற்கு ஒரு நன்மையை காண்பார்கள்.

கிறிஸ்து அடிபடும்போதும், மிதிபடும் போதும், சிலுவையில் அறையப்படும் போதும் அந்த வேதனைகளில் நமது மீட்பை மட்டுமே கண்டிருப்பார்."

"அவர் மனிதனாக பிறந்ததே அதற்காகத்தானே!

நாம் அவருடைய உண்மையான சீடர்களாக இருக்க விரும்பினால் 

நமது துன்பங்களிலும் சரி, 
உலகின் துன்பங்களிலும் சரி 

மீட்பிற்கான இறைவனின் செயல்களைத் தான் காண வேண்டும்.

துன்பமே படாமல் மீட்கப்பட ஆசைப்படுவதும்,

தண்ணீரே இல்லாமல் குளிக்க ஆசைப்படுவதும் ஒன்றுதான்."


"கடவுள் நல்லவர். ஆகவேதான் அவர் படைப்பில் நன்மையை மட்டும் கண்டார். 

"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."

  படைப்பில்

நன்மையை காண்பவர்கள் நல்லவர்கள், 

 தீமையை காண்பவர்கள் தீயவர்கள்.

கடவுள் படைத்தவற்றை நன்மை செய்ய பயன்படுத்துபவர்கள் நல்லவர்கள்.

தீமை செய்ய பயன்படுத்துபவர்கள் தீயவர்கள்.

பணத்தை காணிக்கை போடவும் பயன்படுத்தலாம்.

லஞ்சம் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம்.

கத்தியை கொண்டு காய்கறியும் வெட்டலாம்,

கையையும் வெட்டலாம்.

இயற்கை பொருள்களை பயன்படுத்த கூடாத விதமாய் பயன்படுத்திவிட்டு இறைவனுடைய படைப்பு தவறு என்பது சரியல்ல.

தீமை உலகிற்குள் எப்படி நுழைந்தது?

ஆதி மனிதன் இறைவனது கட்டளையை மீறியதால் தீமை உலகிற்குள் எப்படி நுழைந்தது.

இறைவனது கட்டளைகள்படி வாழ்பவர்கள் நல்லவர்கள். மீறுபவர்கள் தீயவர்கள்.

இறைவனது கட்டளைகள்படி வாழ்வதற்கும் பரிசுத்த ஆவியின் அருள் வரம் வேண்டும்."

"பரிசுத்த ஆவியானவரின் நினைவோடு வாழ்பவர்களிடம் பாவம் நெருங்காது.

ஆவியானவரின் சேவைக்காக தங்களை முழுவதும் அர்ப்பணித்து விட்டவர்களின் வாழ்க்கைக்குள் அவருக்கு எதிரான எதுவும்  நுழைய முடியாது."

"அர்ப்பண வாழ்வுக்கு உயிர் எது தெரியுமா?"

"விசுவாசம். Faith."

(தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment