Thursday, February 18, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 4(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 4
(தொடர்ச்சி)

"குழந்தை ஞானஸ்நானம் பெறுவதை விழாவாக கொண்டாடுவது தவறு என்கிறீர்களா?"
 
"விழாவாக கொண்டாடுவது தவறு என்று சொல்லவில்லை, கொண்டாடும் விதம்தான் தவறு.

 மனிதன் வெறும் சமூக பிராணி (social being) மட்டும் அல்ல,

 திருமறை சார்ந்த (religious being) பிராணியும் கூட.

சமூக பிராணி தான் வாழும் மனித சமூகத்தோடு உறவு தொடர்பு உள்ளவன்.

திருமறை சார்ந்த பிராணி இறை உறவு தொடர்பு உள்ளவன்.

முதலில் அவன் இறைவனை சார்ந்தவன், ஏனென்றால் அவரால்தான் படைக்கப்பட்டான்.

அடுத்துதான் அவன் பிறந்த சமூகத்தை சார்ந்தவன்.

ஞானஸ்நானம் மனிதனை இறைவனோடு உறவு தொடர்பு கொள்ள செய்யும் ஒரு ஆன்மீக நிகழ்வு.

சமூக முக்கியத்துவத்தை விட ஆன்மீக முக்கியத்துவத்துக்குதான் முதலிடம் கொடுக்க வேண்டும். 

இறை உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சமூகத்துக்கும் உணர்த்துவதாக விழா இருந்தால் அது ஏற்றுகொள்ள படத் தக்கது.

ஞானஸ்நான விழாவிற்கு வருவோர் அதைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். 

 ஏனெனில் அவர்களும் கிறிஸ்தவ மறையை சார்ந்தவர்கள்.

விழா அவர்கள் பெற்ற ஞானஸ்நானத்தை நினைவுபடுத்துவதாக இருக்க வேண்டும். 

 குருவானவர் குழந்தையிடம் சில உறுதிமொழிகள் கேட்பார்.

 அதன் சார்பாக அதனுடைய ஞானப்பெற்றோர் உறுதிமொழிகள் கொடுப்பர்.

விழாவில் கலந்து கொள்வோர் தாங்கள் கொடுத்த உறுதி மொழிகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

 அதற்கு ஏற்ப தங்களது வாழ்க்கை இருந்ததா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.

 இல்லாவிட்டால் அதை சரி செய்ய வேண்டும்.

 இதைச் செய்யாவிட்டால் விழாவில் கலந்து கொண்டும் பயனில்லை,

 விருந்துக்குப் போய் சாப்பிடாமல் வந்ததற்கு சமம்."


"அதாவது விழாவிற்கு வரும் ஒவ்வொருவரும் தங்களது ஞானஸ்நான வார்த்தைப்பாட்டை புதிப்பிக்க வேண்டும் என்கிறீர்கள், அப்படித்தானே?" 

"அப்படியேதான். சாப்பிடப் போகும் மட்டன் பிரியாணியை நினைத்துக்கொண்டு விழாவில் கலந்துகொண்டால் அந்தக் விழாவினால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை."

"விழாவிற்கு வருவோரை விடுங்கள், குழந்தையை பெற்றவர்களாவது நினைத்து பார்ப்பார்கள் என்பது சந்தேகமே."

"ஏன் முதலாவது அருள் அடையாளத்தை திருமுழுக்கு அல்லது ஞானஸ்நானம் என்று அழைக்கிறோம்? பெயரிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஏதாவது இருக்கிறதா?"

ஸ்நானம், அல்லது முழுக்கு என்றால் குளிப்பது.

உடல் ரீதியாக குளிப்பதற்கு, அதாவது உடலிலுள்ள அழுக்கை நீக்க, தண்ணீரைப் பயன்படுத்துகிறோம். 

ஞானஸ்நானம் அல்லது திருமுழுக்கு என்றால், ஆன்மீகக் குளிப்பு அதாவது ஆன்மாவில் உள்ள அழுக்கை போக்க பயன்படுத்தப்படும் குளிப்பு.

ஸ்நானம், அல்லது முழுக்கு திருமுழுக்கு என்ற அருள் அடையாளத்தில்

ஆன்மா பரிசுத்தம் ஆவதை குறிக்கும் அடையாள வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது.

It is used figuratively, to denote washing.

பரிசுத்தமாக்குவது தண்ணீர் அல்ல 

 பரிசுத்த ஆவியானவரே ஆன்மாவை பரிசுத்தம் ஆக்குகிறார். 

தண்ணீர் ஊற்றுதல் ஆவியானவரின் செயலுக்கான  உருவகம் "

"புரியவில்லை"

"இலக்கணம் படித்தவர்களுக்கு உருவகம் என்ற வார்த்தையில் பொருள். நன்கு புரியும்.

"பெண் எப்படி?"

"பசு."

"மாப்பிள்ளை?"

"சிங்கம்."

மனிதர்களை அவர்களுடைய குணங்கள் உள்ள மிருகங்களாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

பெண் சாந்த குணத்தில் பசு போன்றவள்.

மாப்பிள்ளை வீரத்தில் சிங்கத்தை போன்றவர்.


பெண்ணை பசுவாகவும் மாப்பிள்ளையை சிங்கமாகவும் உருவகப் படுத்தியுள்ளார்கள்.

இயேசு தன்னையே எப்பொழுதும் நல்ல ஆயனாக உருவகப்படுத்தி பேசுவார்.

ஸ்நாபக அருளப்பர், "இதோ! கடவுளுடைய செம்மறி' இன்று கூறும்போது இயேசுவை பலி ஆகப்போகும் செம்மறியாக உருவகப்படுத்துகிறார். 

இயேசு,

"அருளப்பர் நீரால் ஞானஸ்நானம் கொடுத்தார்: நீங்களோ இன்னும் சில நாட்களில் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்" . (அப்.1:5) என்று சொல்லும்போது 

ஞானஸ்நானம் பரிசுத்த ஆவியால் 
நமது ஆன்மா பாவம் நீங்கி பரிசுத்தம் ஆவதற்கு உருவகமாக செயல்படுகிறது.

(The term baptize is employed in a metaphorical sense in Acts, i, 5, where the abundance of the grace of the Holy Ghost is signified,)

வெளி அடையாளமாக தண்ணீர் குழந்தையின் தலையின் மேல் ஊற்றப்படும்போது

பரிசுத்த ஆவி ஆன்மாவை ஜென்ம பாவ கறை நீங்க கழுவுகிறார்,

அதாவது பரிசுத்தம் ஆக்குகிறார்.

இதைத்தான் திருமுழுக்கு பெறும்போது நமக்குள் பரிசுத்த ஆவி இறங்குகிறார் என்று கூறுகிறோம்.

இந்த சந்தர்ப்பத்தில் மற்றொரு இறையியல் உண்மையையும் ஞாபகப்படுத்த வேண்டும்.

தந்தை படைத்தார் 
மகன் மீட்டார் 
பரிசுத்த ஆவி பரிசுத்தமாக்கினார்
 என்று வழக்கமாக சொல்லுவோம்.

ஆனாலும் படைப்பு, மீட்பு, பரிசுத்தமாக்கும் ஆகியவற்றை செய்வது பரிசுத்த தமதிரித்துவம் ஆகிய ஒரே கடவுள்.

மனிதனாக பிறந்து பாடுகள் பட்டு மரித்தது இரண்டாம் ஆளாகிய மகன் தேவன்தான்.

தந்தை மனிதனாக பிறக்க வில்லை. 

பரிசுத்த ஆவி மனிதனாக பிறக்க வில்லை.

அதில் மாற்றம் இல்லை.

ஆனாலும் படைப்பு,.மீட்பு, பரிசுத்தம் ஆக்குதல் ஆகிய மூன்றையும் செய்வது திரிஏக கடவுள்தான், அதாவது மூன்று ஆட்களாக இருக்கிற ஒரே கடவுள் தான்.

கடவுளை மூன்று பங்கு வைக்க முடியாது.

ஆகவே 

கடவுள் படைக்கிறார்

கடவுள் மீட்கிறார்  

கடவுள் பரிசுத்தமாக்குகிறார்..

ஆகவே 

திருமுழுக்கின் போது பாவத்தை நீக்கி நம்மை பரிசுத்தம் ஆக்குவதும் மூவொரு கடவுள்தான்.


"நான் பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன்."
(லூக்.12:50)

இங்கு இயேசு தனது பாடுகளை ஞானஸ்நானமாக உருவகப்படுத்துகிறார்.

நாமும் நாம் பெற்ற ஞானஸ்நானத்தை இயேசுவுக்காக நாம் படவிருக்கும் சிலுவைக்கு உருவகமாக எடுத்துக்கொண்டால்

நமது சிறந்த ஆன்மீகத்திற்கு அது ஒரு காரணமாக அமையும்.

அதாவது நாம் ஞானஸ்நானம் பெறும்போதே,

"நான் இயேசுவின் சிலுவையில் பங்கெடுக்கப் போகிறேன்"

என்று நம்பினால் 

வாழ்நாளில் நமக்கு வரும் துன்பங்களை துன்பங்களாகவே பார்க்க மாட்டோம்.

நாம் சுமக்க வேண்டிய சிலுவையாகவே பார்ப்போம்.

இயேசுவைப் போலவே சிலுவையை சுமந்து

 இயேசுவைப் போலவே மரித்து

 இயேசுவைப் போலவே உயிர்த்து

 இயேசுவைப் போலவே விண்ணகத்திற்கு செல்வோம்

 என்ற உண்மையை நாம் பெற்ற ஞானஸ்நானம் நினைவு படுத்துக் கொண்டே இருக்கும்."


"நாம் பெற்ற திருமுழுக்கில் நமது வாழ்நாளே அடங்கியிருக்கிறது என்பது இப்பொழுது புரிகிறது.

இன்னும் ஒரு சிறிய சந்தேகம்

 அருளப்பர் கொடுத்த ஞானஸ்நானமும்,

இப்பொழுது நமக்கு கொடுக்கப்படும் ஞானஸ்நானமும் ஒன்றா?"

"அருளப்பர் மெசியா அல்ல.
ஆகவே அவர் கொடுத்த ஞானஸ்நானம் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட ஞானஸ்நானம் அல்ல.

இயேசுவால் ஏற்படுத்தப்பட்டு நாம் பெற்றுக் கொண்டிருக்கும் ஞானஸ்நானம் பாவ மன்னிப்பிற்கான ஞானஸ்நானம்.

ஆனால் அருளப்பர் கொடுத்து வந்தது பாவ மன்னிப்பிற்கான ஞானஸ்நானம் அல்ல,


"அருளப்பர் கொடுத்தது மனந்திரும்பியதைக் காட்டும் ஞானஸ்நானம்.
. அதைக் கொடுத்தபோது, தமக்குப்பின் வருபவர் மீது விசுவாசம்கொள்ள வேண்டுமென மக்களுக்குச் சொன்னார்: அவர் அப்படிக் குறிப்பிட்டது இயேசுவைத்தான்" என்றார். (அப்.19:4)

 புனித சின்னப்பர்   கூறுகிறபடி,

அருளப்பர் கொடுத்தது மனந்திரும்பியதைக் காட்டும் ஞானஸ்நானம்.
"Indeed, I baptize you with water for repentance,"

"நீங்கள் மனந்திரும்பியதைக் காட்ட உங்களுக்கு நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருபவரோ என்னைவிட வல்லவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்ல நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்."
(மத். 3:11)

அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றவர்கள் மனம் திரும்பி பாவத்திற்கு பரிகாரமாக தவச் செயல்கள் செய்ய வேண்டும்.

தவச் செயல்கள் மூலம் பாவங்கள்
மன்னிக்கப்படும்.


 ஆனால் இயேசுவின் ஞானஸ்நானத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமையால் பாவங்கள் உடனே மன்னிக்கப்படும்.

ஆதி திருச்சபையில் அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்தவர்களாக மாறியபோது

 கிறிஸ்து ஏற்படுத்திய ஞானஸ்நானத்தை பெற்று பரிசுத்த ஆவியினால் பாவமன்னிப்புப் பெற்றுக்கொண்டார்கள்."

"திருமுழுக்கு பெறும்போது பரிசுத்த ஆவியானவர் பாவங்களை நீக்கி நமது ஆன்மாவை பரிசுத்த
மாக்குகிறார்.

அதற்குப்பின்?"


"அதென்ன அதற்குப்பின்? கேள்வியை முழுமையாக சொல்லு."


"அதற்குப்பின் எந்த அருள் அடையாளத்தின் போது பரிசுத்த ஆவி திரும்ப வருவார்?"

"ஏங்க, பரிசுத்த ஆவி அப்பப்போ வந்து visit போட்டுவிட்டு போய்விட அவர் என்ன விருந்தாளியா!

அவர் கடவுள், நம்மை படைத்தவர், நம்முடன் எப்போதுமே இருப்பவர்.

 நாம் பாவ நிலையில் இருந்தாலும், பரிசுத்த நிலையில் இருந்தாலும் கடவுள் எப்போதும் நம்மோடு தான் இருக்கிறார்.


 ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

 அவர் நமது வாழ்வின் காரணர். 

 கடவுள் நம்மை விட்டு நீங்கி விட்டால் நாம் ஒன்றும் இல்லாமைக்கு திரும்பி விடுவோம்."


"அப்போ திருமுழுக்கின் போது பரிசுத்த ஆவி இறங்கி வருகிறார் என்று சொல்கிறோம்?"


"ரயில் பயணத்தின்போது எப்போதாவது 'மதுரை வந்தாச்சா' என்று கேட்டிருக்கிறீர்களா?"

"கேட்டிருக்கிறேன்."


"மதுரை எப்படி வரும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?"


"நாம் மதுரைக்கு வந்து விட்டோமா என்று புரிந்து கொள்ள வேண்டும்!"

"Correct. அப்படித்தான் ஆன்மீகத்திலும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் பாவ நிலையில் இருக்கும்போது நமக்குள் இருக்கும் இறைவனை நம்மால் உணர முடியாது.

பாவங்களுக்காக வருந்தும்போது இறைவன் பாவங்களை மன்னிக்கிறார்.

பாவங்கள் மன்னிக்கப்பட்ட உடன் நாம் அவர் இருப்பதை உணர்கிறோம்."

"இப்போ புரிகிறது. கேள்வியை சிறிது மாற்றி கேட்கிறேன்.

  அடுத்து எந்த அருள் அடையாளத்தில் நாம் பரிசுத்த ஆவியின் அருள் வரங்களை அதிகமாக பெற்றுக் கொள்கிறோம்?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment