Sunday, November 8, 2020

கிறிஸ்துவின் போதனைகள் இலக்கணம் என்றால், கத்தோலிக்க பாரம்பரியம் அதன் இலக்கியம்.

கிறிஸ்துவின் போதனைகள் இலக்கணம் என்றால்,

 கத்தோலிக்க பாரம்பரியம் அதன் இலக்கியம்.

                   * * * *



"Hello, Sir Good morning."

"Good morning."

"கொஞ்சம் freeயா இருக்கீங்களா?"

"என்ன விசயம்?"

"உங்களோடு கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

கொஞ்சம் time ஒதுக்க முடியுமா?"

"முதல்ல நீங்க யாருன்னு தெரிந்து கொள்ளலாமா?"

"நான் ஒரு கிறிஸ்தவன். பிரிவினை சபையைச் சேர்ந்தவன். 

நீங்கள் கத்தோலிக்கர்.

 விசுவாச அடிப்படையிலான சில விசயங்களைப் பற்றி உங்களோடு கொஞ்சம் கருத்துப் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்."

"வழக்கமாக எதிரெதிர் கொள்கை உடையவர்கள் பேச ஆரம்பித்தால் 

கருத்துப் பரிமாற்றம் இருக்காது,


கருத்துக்கள் மோதல் தான் இருக்கும்.


மோதல் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நான் கருத்துக்களை பரிமாற தயார்."

"மோதல் இருக்காது."

"இயேசு தந்த சமாதானத்தோடு கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்."

"ஆரம்பமே சரி இல்லை என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

ஏனெனில் நமக்குள் இருக்கும் கொள்கை வேறுபாடுகளுக்கு காரணமே இந்த ஆரம்பம் தான்.

நாங்கள் பைபிள் மட்டும் போதும் என்கிறோம். 

நீங்கள் பைபிள் மட்டும் போதாது என்கிறீர்கள். கொஞ்சம் விளக்க முடியுமா?"

"பைபிளில் இயேசுவின் போதனைகள் இருக்கின்றன.

ஆனால் எல்லா போதனைகளும் இல்லை.

ஏற்றுக்கொள்கிறீர்களா?"

"ஏற்றுக்கொள்கிறேன்."

"இயேசு போதிக்கச் சென்ற இடமெல்லாம் அவரோடு இருந்தவர்கள் அவருடைய சீடர்கள்.

இயேசு மக்களுக்குப் போதித்த பின் தான் போதித்தவை எல்லாவற்றையும்

 சீடர்களோடு தனியாக இருக்கும்போது அவர்களுக்கு விளக்கினார்.

ஏனெனில் நற்செய்தியை அறிவிக்கச் செல்லவிருந்தவர்கள் அவர்கள்தான்.

இயேசு தங்களுக்கு அளித்த நற்செய்தியை அவர்கள் உலகிற்கு அளித்தார்கள்.

இயேசு நற்செய்தியை எழுதும்படி அவர்களுக்குப் பணிக்கவில்லை.

தனது போதனை எல்லாம் எழுத்து வடிவம் பெற வேண்டும் என்று அவர் கட்டளை எதுவும் பிறப்பிக்கவில்லை.

 சீடர்கள் நற்செய்திக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் முன் 
அதை வாய்மொழி மூலமாகத் தான் போதித்தார்கள். 

இயேசுவின் வாயிலிருந்து கேட்ட செய்திக்கு எதிராக செய்திகளை அவர்கள் போதித்திருக்க மாட்டார்கள்.

போதித்த செய்தியை இயேசு கொடுத்த விளக்கத்தோடுதான் போதித்திருப்பார்கள்.

எல்லா செய்திகளுக்கும் எழுத்து வடிவம் கொடுக்கவில்லை.

எழுத்து வடிவம் பெற்ற செய்திகள் பைபிளில் உள்ளன.

எழுத்து வடிவம் பெறாத செய்திகள் எப்படி அடுத்த தலைமுறையினருக்கு சென்று சேர்ந்திருக்கும்?"

"வாய்மொழி மூலமாக."

"வாய்மொழி மூலமாக சென்ற போதனைகளும், 

எழுத்து மூலமாக சென்ற போதனைகளும்  

யார் மூலம் வந்த,
 யாரின் போதனைகள்?"

"சீடர்களின் மூலமாக வந்த இயேசுவின் போதனைகள்."

"Correct! சீடர்களுக்குப் பின்?

அவர்களுடைய வாரிசுகள்.

அதாவது பாப்பரசரின் கீழ் உள்ள கத்தோலிக்க திருச்சபை."

" நாங்கள் பாப்பரசரை ஏற்றுக் கொள்ளவில்லை."

".நான் உங்களைப் பற்றி இப்போ பேசவில்லை. எங்களைப் பற்றி பேசுகிறேன்."

"Sorry."

"இயேசுவின் போதனைகள் தான்

(அதாவது, பைபிள் மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் வந்த போதனைகள்,)

 திருச்சபையின் வாழ்க்கைக்கும், வழிபாட்டு முறைகளுக்கும் அடிப்படை.


இயேசுவின் போதனைகளின் அடிப்படையில் பிறந்து வளர்ந்ததுதான் 

கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியம்.

 கிறிஸ்துவின் போதனைகள் இலக்கணம் என்றால்,

 கத்தோலிக்க பாரம்பரியம் அதன் இலக்கியம்.


நான் சொல்வது கொஞ்சமாவது புரிகிறதா?'

"புரிகிறது."

" புரிந்ததை சொல்லுங்கள் பார்ப்போம்." 

''பைபிளிலும் இயேசுவின் போதனைகள் உள்ளன.

பாரம்பரியத்திலும் இயேசுவின் போதனைகள் உள்ளன."

"இப்போ ஒன்று புரிந்திருக்கும்.

 இயேசுவின் போதனைகளை முழுவதும் அறிய,

பைபிளை மட்டும் தெரிந்திருந்திருந்தால் போதாது,

 திருச்சபையின் பாரம்பரியத்தையும் தெரிந்திருக்க வேண்டும்.


இப்போ சொல்லுங்க, பைபிள் மட்டும் போதுமா?''

"உங்கள் சொற்களின் அடிப்படையில் பார்த்தால் பைபிள் மட்டும் போதாது. "

"அதாவது நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை!"

"நீங்கள் குருக்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்கிறீர்கள்.

 கிறிஸ்து எந்த இடத்திலாவது மக்கள் குருக்களிடம் பாவங்களை அறிக்கையிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரா?" 

"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:

 எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" 
(அரு. 20:23)

இது இலக்கணம்.
பாவசங்கீர்த்தனம் இலக்கியம்.

இயேசுவின் இந்த போதனையைத்தான் சீடர்கள் மக்களுக்குப் போதித்து நடைமுறை படுத்தி உள்ளார்கள்.

பாவசங்கீர்த்தனம் இல்லாவிட்டால் 

இந்த போதனைக்கு என்ன அர்த்தம்?"

" என் சீடர்களிடம் உங்கள் பாவங்களை சொல்லுங்கள்"

 என்று இயேசு மக்களுக்கு சொல்லி இருக்கிறாரா?"

"இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் 
கொண்டு மக்களுக்குஉணவு கொடுத்த போது,

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"

 என்று சீடர்களிடம்தான் சொன்னார்.

சீடர்களைத்தான் பரிமாறச் சொன்னார்.

மக்கள், "எங்களை சாப்பிடுங்கள் என்று சொல்லவில்லை, நாங்கள் சாப்பிட மாட்டோம்." என்று சொன்னார்களா?"

"நீங்கள் தினமும் திருப்பலி நிறைவேற்றுகிறீர்களே.

இயேசு உங்களைப்போல் திருப்பலி நிறைவேற்றினாரா?"

"தான் சிலுவையில் பலியானதற்கு முந்திய நாள்,

 அதாவது, வியாழக்கிழமை இரவு உணவின்போது இயேசு முதல் திருப்பலியை நிறைவேற்றி,

 தன்னையே தன் சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார். 

"இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்று தன் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

இயேசு அப்பத்தைப் பிட்டு திருப்பலி நிறைவேற்றியதால் ஆதித்திருச்சபையில் இது "அப்பம்பிட்டல்" என்று அழைக்கப்பட்டது.

'அப்பம்பிட்டல்' இல்லாவிட்டால் திருச்சபை இல்லை."


"இறந்தவர்களைப் புனிதர்கள் ஆக்கி அவர்களை வணங்குகிறீர்கள்.

இதையொட்டி இயேசு எதாவது சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்களா?" 

"அவ்வாறே, மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட,

 மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(லூக். 15:7)

இயேசுவின் இந்த வாக்கை வாசிக்கும்போது உங்கள் மனதில் ஏதாவது தோன்றுகிறதா?"


"பூமியிலுள்ளோரில் யாராவது மனம் திரும்பினால் விண்ணகத்தில் உள்ளோர் மகிழ்ச்சி அடைவர்."

"பூமியிலுள்ளோரில் யாராவது மனம் திரும்பினால்

 விண்ணகத்தில் உள்ளோர் ஏன்
மகிழ்ச்சி அடைய வேண்டும்?"


"பூமியிலுள்ளோரும், விண்ணகத்தில் உள்ளோரும் ஒரே விண்ணகத் தந்தையின் மக்கள் தானே!"

"Correct. இதிலிருந்து இன்னொரு உண்மையைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்."

." நமது விருப்பம் நிறைவேறும் போது தான் மகிழ்வோம்.

அப்படியானால் பாவிகள் மனம் திரும்ப வேண்டுமென்று விண்ணக வாசிகள் விரும்புகிறார்கள் என்று கொள்ளலாம்."

"கொள்ளலாம் என்ன, கொள்ள வேண்டும்! 

நமது நலனை அவர்கள் விரும்புகிறார்கள்.

அவர்கள் இறைவனுக்குள் இருப்பதால் அவர்களது விருப்பத்தை இறைவன் அறிவார். 

தனக்கு மிகவும் பிரியமான அவர்களுடைய விருப்பத்தை இறைவன் நிறைவேற்றி வைப்பார்.

Very simple logic!"

"இதற்கும் புனிதர்கள் வணக்கத்திற்கும் முடிச்சு போட பார்க்கிறீர்களா?"

"பிரிந்து இருப்பவர்களை சேர்க்க தான் முடிச்சு போட வேண்டும். இயல்பாகவே சேர்ந்து இருப்பவர்களுக்கு எதற்கு முடிச்சி?"

"அதென்ன இயல்பாகவே சேர்ந்து இருப்பவர்கள்? புரியவில்லை."

"பிறரன்பு கிறிஸ்தவர்களுக்கு இருக்கவேண்டிய முக்கிய பண்பு.

 பூமியிலுள்ள நாம் நிறைவை அடையாததால் இந்தப் பண்பு முழுமையாக இல்லாமலிருக்கலாம்.

விண்ணக வாசிகள் நிறைவை அடைந்து விட்டதால் இந்த பண்பு நிறைவாகவே இருக்கும்.

விண்ணக வாசிகளுக்கு நம் மீது இயல்பாகவே அன்பு இருக்கும்.

குடும்பத்தினருக்குள்ளே இருக்கவேண்டிய பண்பு.

அவர்களும் நாமும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பதை ஏற்றுக் கொண்டபின்னும்,

நமக்குள்ளே அன்பு இயல்பானது என்பதை புரிந்து கொண்ட பின்னும்

நம்மிடையே உள்ள உறவை மறுக்க முடியுமா?

புனிதர்களுக்கும் நமக்கும் இடையில் உள்ள உறவு குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத உறவு."

"உறவு சரிதான், வணக்கம் எதற்கு?"

"அவர்களுடைய புனிதத்துக்கு."

"பைபிளில் ஆதாரம்?"

" Hello! நாம் ஆரம்பித்ததே பைபிள் வசனத்திலிருந்துதான். மறந்துவிட்டதா?"

" Sorry. இப்படியே கேட்டு கேட்டு பழகிவிட்டது.

 அறியாமலேயே வாயில் வந்து விடுகிறது.

புரிந்து கொண்டேன்"


"என்ன புரிந்து கொண்டீர்கள்?"


 "கிறிஸ்துவம் என்றாலே அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் உதவுவதுதான்.

அதைத்தான் புனிதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்."

"இனிமேல் 'பைபிளில் எங்கே இருக்கிறது?' என்று கேட்க மாட்டீர்களே!"

"உங்களால் பிரம்பு இல்லாமல் வகுப்பிற்குள் நுழைய முடியுமா?"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment