Tuesday, November 3, 2020

"நீங்கள் ஒரு கத்தோலிக்கர்தானே?"

"நீங்கள் ஒரு கத்தோலிக்கர்தானே?"
               *************
                


"மிஸ்டர், கொஞ்சம் நில்லுங்க."

"Yes!"

"நீங்கள் ஒரு கத்தோலிக்கர்தானே?"

"ஆமா. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?"

"நிறைய பிரச்சனை இருக்கு, எனக்கல்ல, உங்களுக்கு.

 கொஞ்சம் உட்கார்ந்து பேசுவோமா?" 

"நீங்கள் யாரோ?"

"நான் ஒரு கிறிஸ்தவன், உண்மையான கிறிஸ்தவன்.

கிறிஸ்துவை மட்டும் வழிபடுபவன்.

 கிறிஸ்துவின் நற்செய்தியை போதிப்பவன். போதகர்."

"ரொம்ப சந்தோஷம்  அதனால் எனக்கு என்ன பிரச்சனை?" 

"நான் போதகராய் இருப்பதால் உங்களுக்கு பிரச்சனை இல்லை,  உங்களால் தான் உங்களுக்கு பிரச்சனை."

"கொஞ்சம் விளக்கமாய் சொல்கிறீர்களா?"

"இயேசுதானே கடவுளையும் மனிதரையும் இணைப்பவர்.
அதாவது mediator?"

"ஆமா.  அதில்  உங்களுக்கு என்ன சந்தேகம்?"

" சந்தேகம் எனக்கு அல்ல, உங்களுக்கு.

 நீங்கள் இயேசுவை கடவுளையும் மனிதரையும் இணைப்பவராக ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை."

"எதைவைத்து  சொல்லுகிறீர்?"

"ஏற்றுக் கொண்டிருந்தால் அவர் மூலமாகத்தானே கடவுளை அணுகுவீர்.

 புனிதர்கள் என்பவர்கள் நம்மைப்போல மண்ணில் வாழ்ந்து மரித்தவர்கள் .

நீங்கள் அவர்கள் மூலமாக அல்லவா இயேசுவையே அணுகுகிறீர்கள்!

"என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்."
(அரு. 14:14)

"நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும், அதை என் பெயரால் உங்களுக்குத் தருவார்."
(அரு. 16:23)

இயேசு தன் பெயரால் எதையும் கேட்க சொல்லியிருக்கிறாரே தவிர, புனிதர்கள் பெயரால் எதையும் கேட்க சொல்லவில்லையே!"

"புனிதர்கள்  பெயரால் எதுவும் கேட்கக்கூடாது என்று இயேசு எங்காவது சொல்லி இருக்கிறாரா?"

"இது இடக்கர் மடக்கரான கேள்வி. சொன்னதைத்தான் quote பண்ண முடியும். சொல்லாததை எப்படி  quote பண்ண முடியும்?"

"Correct. ஆமா நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?"

"நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

 நான் ஒரு  போதகர்  நற்செய்தியை அறிவிப்பவர்."


"போதகராக என்னவெல்லாம்   செய்கிறீர்கள்?"

"இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கிறேன்.

 மக்களுக்காக ஜெபிக்கிறேன்.

 இயேசுவின் பெயரால் சுகம் இல்லாதவர்களைக்  குணப்படுத்துகிறேன்.''

"மக்களுக்காக யாரிடம் ஜெபிக்கிறீர்கள்?"

"மக்களுக்காக இயேசுவிடம் ஜெபிக்கிறேன்.

 பரம தந்தையிடம் ஜெபிக்கிறேன்.

 என்னுடைய ஜெபம் கேட்கப்படுகிறது."

"நீங்கள் மனிதர்தானே, அதாவது புனிதர்களைப் போல மனிதர்தானே?"

"ஆமா, அதில் என்ன சந்தேகம்?"

"மனிதர் மட்டுமல்ல, போதகரும் கூட. 

ஆஆமா....கிறிஸ்துதானே கடவுளுக்கும் மனிதருக்கும்  மத்தியஸ்தர்.

உமது  கருத்துப்படி 

கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் நேரிடையாக அவரைத் தானே அணுக வேண்டும்.

 இடையில் அவர்களுக்காக பரிந்து பேச உமக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

 பைபிளில் இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

அதாவது இயேசு உமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறாரா?

இல்லை.தெரியாமல் தான் கேட்கிறேன்."


"இது தேவையற்ற கேள்வி.
நீங்கள் ஜெபிப்பதில்லை?"

" நாங்களும் ஜெபிக்கிறோம், புனிதர்கள் மூலமாகவும் ஜெபிக்கிறோம்.

 இங்கே பிரச்சனை அது அல்ல.

 உமது கருத்துப்படி.

 உம்மிடம் வருபவர்களிடம் ,

'உங்களுக்காக பரிந்து பேச வேண்டியவர் 

கடவுளுக்கும் மனிதருக்கும்   மத்தியஸ்தரான கிறிஸ்து மட்டுமே.

 அவரிடமே சொல்லுங்கள்.

 அவர்தான் 

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்,

 போதகர் மூலமாக கேளுங்கள் என்று அவர் யாரிடமும் சொல்லவில்லை'

என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை?"

"நாங்கள் உயிரோடு இருப்பவர்கள்.

புனிதர்கள்  இறந்தவர்கள்.

இறந்தவர்கள் எப்படி உங்களுக்காகப் பரிந்து பேச முடியும்?"

"ஹலோ, யார் இறந்தவர்கள்?
நிலை வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

யாரிடம் பரிந்து பேச வேண்டுமோ அவருடனேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

திருச்சபை என்னும் குடும்பத்தில் மூத்த சகோதர சகோதரிகள்."

"அதெல்லாம் சரிதான்,  புனிதர்கள் வணக்கத்திற்கு பைபிளில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா, அதை முதலில் சொல்லுங்கள் "

" இயேசு எப்போதாவது

' என்னைப் பற்றியும் எனது போதனையைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டுமானால் 

பைபிளை வாசியுங்கள், பைபிளை மட்டுமே வாசியுங்கள்' என்று கூறியிருக்கிறாரா?

பைபிள் மட்டும் போதும் என்பதற்கு பைபிளில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?

இயேசு தன் சீடர்களுக்கு நற்செய்தியை போதிக்கும் படி சொன்னார்,

 தன்னைப் பற்றி எழுதச் சொன்னதாக பைபிளில் எங்கும் இல்லை.

பைபிளில் இல்லாததை

 பைபிளை மட்டும் நம்பும் நீங்கள்

 எப்படி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?"

"இயேசு சொன்னது 
 பதியப்படவில்லை என்பதற்காக,

 அவர் சொல்லவேயில்லை என்று அர்த்தமா?"


"நானும் அதைத்தான் கேட்கிறேன்.

இயேசு சொன்னது எல்லாம்
 எழுதப்படவில்லை என்பதற்காக,

 அவர் சொல்லவேயில்லை என்று அர்த்தமா?"

"நான் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்.

 பதில் கேள்வி கேட்கக் கூடாது."

"பதில் கேள்வி கேட்கவில்லை,

 நீங்கள் சொன்னதைக் தான் நானும் சொல்கிறேன்."

"புனிதர்களை வணங்கலாம், அவர்களிடம் ஜெபிக்கலாம் என்று உங்களுக்கு சொன்னது யார்?"

"நீங்கள் பைபிளை மட்டும் நம்புகிறீர்கள்.

 நாங்கள் பைபிளையும், அதைத் தந்த தாய்த் திருச்சபையின் புனிதமான பாரம்பரியத்தையும் நம்புகிறோம்.

 நீங்கள் நம்பாத ஒன்றை கொண்டு உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்க முடியாது.''

"சரி, புனிதர்களை வணங்கிவிட்டுப் போங்கள்.."

"ஹலோ,. அதற்கு உங்கள் permission தேவையில்லை."

"Alright, permission withdrawn.

 புனிதர்களுக்கும்  உங்களுக்கும்
ரயில் இடையில்  சிலைகள் எதற்கு?"

"ஹலோ, என்ன சொன்னாலும் மூளையில் ஏறாதா? அவைகள் சிலைகள் அல்ல, சுருபங்கள்.

வணங்குவது சுருபங்களை அல்ல, அவற்றால் குறிக்கப்படும் புனிதர்களைத்தான்.

உங்கள் வீட்டில் உங்கள் முன்னோர்களது படங்கள் இல்லை?

 அவற்றிற்கு நீங்கள் மாலை போடுவது இல்லை?"

"சரி, விடுங்கள். 

மனிதன் இறந்தவுடன் அவனுடைய  ஆன்மா எங்கே போகிறது?"

(தொடரும்)

லூர்து செல்வம்.

1 comment: