Friday, November 13, 2020

*செய்வினை, செயப்பாட்டு வினை* *ஆன்மீகம்.*

*செய்வினை, செயப்பாட்டு*
*வினை ஆன்மீகம்.*


மொழி இலக்கணத்தில் 

இரண்டு வகை வாக்கிய அமைப்புகள் உண்டு.

1. செய்வினை (Active Voice)

2. செயப்பாட்டு வினை.
(Passive Voice)

 செய்வினை வாக்கியத்தில் எழுவாய்,  செயல்படும்.

The subject is active in the Active Voice.


செய்ப்பாட்டுவினை வாக்கியத்தில் எழுவாய் எதுவும் செய்யாது, செய்யப்படும்.

The subject is passive (inactive)  
in the Passive Voice.

நான் அடித்தேன். செய்வினை.


நான் அடிக்கப்பட்டேன்.
செய்ப்பாட்டுவினை.

இந்த இலக்கணத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஆன்மீக பாடம் ஒன்று இருக்கிறது.


நமது ஆன்மாதான் எழுவாய். (Subject)

பாவ நிலையில் உள்ள நமது ஆன்மா பாவமன்னிப்பு பெற்ற பின் பரிசுத்தம் அடைகிறது.


 பரிசுத்தம் அடைந்த ஆன்மா மென்மேலும் பரிசுத்தத்தனத்தில் வளர வேண்டும்.

பரிசுத்தத்தன  வளர்ச்சியில் இரண்டு வழி முறைகள் உண்டு.

1 சுய முயற்சி பரிசுத்தத்தனம்.
    Active Purification.


'2. இறை முயற்சி பரிசுத்தத்தனம்
      Passive Purification.

முதல்வகையில் 

ஆன்மா பரிசுத்தத்தனத்தில் வளர தானாக முயற்சி எடுக்கும்.

அதாவது தன்னைப் பரிசுத்தமாக்கும் முயற்சிகளில் ஈடுபடும்.


இரண்டாவது வகையில்

ஆன்மா பரிசுத்தத்தனப்படுவதை ஏற்றுக்கொள்ளும்.

அதாவது, இறைவனால் தான் 
பரிசுத்தத்தனப்படுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும்.


இதில் ஆன்மா எடுக்கும் முயற்சியை விட இறைவன் எடுக்கும் முயற்சியே  அதிகமாக இருக்கும். ஆன்மாவின் பணி அதை ஏற்றுக் கொள்வதுதான்.


ஆன்மீகப் பரிசுத்தத்தனத்தில் முக்கிய பங்கு வகிப்பவை ஜெபமும், தவமும்.

ஜெபம் இன்றி ஆன்மீகம் இல்லை.

சிலர் வார்த்தைகளை பயன்படுத்தி வாய் வழியாக சொல்வதே ஜெபம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது ஜெபத்தில் ஒரு வகை.

உண்மையில் ஜெபம் வார்த்தைகளில் அடங்கி இருக்கவில்லை.

மனிதர்கள் தங்களது கருத்துப் பரிமாற்றத்திற்காக 
(for communication) கண்டுபிடித்த ஒரு யுக்தி தான் வார்த்தைகள்.

இறைவனோடு கருத்து பரிமாறிக் கொள்ள வார்த்தைகள் தேவை இல்லை.

ஜெபம் என்றால் இறைவனோடு ஒன்றித்து வாழ்தல்.

இறைவனுக்காக நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் அர்ப்பணித்து வாழ்வது தான் ஜெபம். 

தவமும் ஜெபத்தில் ஒரு பகுதிதான்.

நமது உடலுக்கு இன்பம் தராதவற்றை   ஆன்மீக பரிசுத்தத்தனத்திற்காக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதுதான் தவம்.

1 *சுய முயற்சி பரிசுத்தத்தனம்.*
    *Active Purification.*

 நமது ஆன்மாவின் பரிசுத்தத்தனத்திற்காக நாமாக முயன்று செய்யும் தவ முயற்சிகள்.

நோன்பு இருத்தல், விருப்பமான உணவு வகைகளைச் சாப்பிடாதிருத்தல், நடந்து திருயாத்திரைகள் செய்தல், அசனம் வைத்தல், தர்மம் கொடுத்தல்......
சொல்லிக்கொண்டே போகலாம்.

நாமாக நமது உடலை வருத்தி நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுக்கும் போது நமது ஆன்மா பரிசுத்தம் அடைகிறது.

சிலர் தபசு காலத்தில் இவற்றைப் பயன்படுத்துவார்கள்.

வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துபவர்களும் உண்டு.

நாமாக தவ முயற்சிகளை செய்வதற்கும் ஆண்டவருடைய அருள் வரம் நமக்கு வேண்டும்.

அவருடைய உதவியின்றி ஆன்மீகத்தில் வளர முடியாது.


2. *இறைமுயற்சி*        *பரிசுத்தத்தனம்*
      *Passive Purification.*

இவ்வகை தவ முயற்சிகளில் நம் பங்கை விட இறைவனுடைய பங்கே அதிகம்.

We are passive. God is active.

We are made to do penance by God.


தங்கம் தானாக நகையாக மாறுவதில்லை. ஆசாரியால் நகையாக மாற்றப்படுகிறது.

Gold is passive. Goldsmith is active.

தங்கம் ஆகிய நாம் பரிசுத்தம் ஆகிய நகையாக மாற

 இறைவனால் நாம் நெருப்பில் இடப்பட்டு, உறுக்கப்பட்டு, உறைய வைக்கப்பட்டு, அடிபட்டு, கம்பி ஆக்கப்பட்டு, பின்னப்பட்டு நகையாக மாற்றப் படுவோம்.

இறைவனால் பரிசுத்தமாக்கப்படுவோம்.

இது செயப்பாட்டு வினை.
Passive Voice.

We don't make ourselves holy.

We are made holy by God.

தங்கம் நெருப்பிலிடப்பட்டு புடம் இடப்படுவது போல,

 நாம் துன்பங்களாகிய நெருப்பிலிடப்பட்டு புடம் இடப்படுவோம்.

நாம் எதுவுமே செய்ய வேண்டியதில்லை.

 இறைவனே அனுப்பும் அல்லது அனுமதிக்கும் துன்பங்களை

 மகிழ்ச்சியுடன் ஏற்று, பாவப் பரிகாரமாக அவருக்கு ஒப்புக் கொடுப்பது மட்டுமே நமது வேலை.

கடவுள் நம்மை பரிசுத்தமாக்குவதற்கு புடம் இட   நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் சாதாரண துன்பங்களையே பயன்படுத்துகிறார்.

ஒவ்வொரு கிறிஸ்தவன் வாழ்விலும் அவனது ஆன்மாவைப் பரிசுத்தமாக்க
 போதுமான அளவு துன்பங்கள் இயல்பாகவே நிகழ்கின்றன.


நமது அன்றாட வாழ்வில் இறைவனால் அனுமதிக்கப்படும்  துன்பங்கள்

 நமது ஆன்ம நிலைக்கு ஏற்றவாறு அவை நாம் தாங்கி கொள்ளும் அளவிற்கே இருக்கும்.

 அந்தந்த ஆன்மாவின் தேவைக்கு ஏற்றபடிதான் துன்பங்கள் இருக்கும்.  

அநேகர் தங்களது வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் 

தங்களது ஆன்மீக நலனுக்காகவே இறைவனால் அனுமதிக்கப் பட்டவை  என்பதை உணராமல்

 அவற்றிலிருந்து தப்பிக்க முயலுகின்றனர்.

அவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கும் போது அவை   பயனற்றவை ஆகிவிடுகின்றன.

அன்றாட வேலைகளின் போது ஏற்படும் களைப்பு,

நமது கடமைகளை செய்யும்போது ஏற்படும் சங்கடங்கள்,

ஆசைப்படுபவை  கிடைக்காமை,

தலைவலி, உடல்வலி, கால்கை உளைச்சல் போன்ற சுகவீனங்கள்,

உடல் நோய்கள்,

விரும்புதை அடைய நாம் முயலும்போது ஏற்படும் போராட்டங்கள்,

நமக்கு உதவி செய்ய வேண்டியவர்கள் செய்யாமல் மறுக்கும் போது ஏற்படும் துன்பம்,


மற்றவர்கள் நம்மை தவறாகப் புரிந்து கொள்ளும்போது ஏற்படும் மனக் கவலை,

நமது முயற்சிகளில் ஏற்படும் தோல்விகள்,

நண்பர்களால்  கைவிடப் படல்- 

இவற்றைப் போன்ற துன்பங்கள் எல்லோருடைய வாழ்விலும் வெவ்வேறு உருவில் வருபவைதான். 

நினைத்தது  நினைத்த படியே நடக்கவேண்டும் என்று ஆசைப்படுவது நமது இயல்பு.

நினைத்த படியே நடப்பதில்லை என்பது உண்மை.

நமது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் மகிழ்ச்சியோடு ஏற்று 

அதனால் ஏற்பட்ட துன்பங்களையும் வருத்தங்களையும் நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுக்கும் போது 

நாம் பரிசுத்தத்தில் வளர்கிறோம்.

"ஆண்டவரே இப்பொழுது எனது உடலில் ஏற்படும் களைப்பை எனது பாவத்திற்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."


"உதவுவான் என்று எதிர்பார்த்த என் நண்பன் உதவவில்லை. இதனால் ஏற்படும் மன உளைச்சலை ஆண்டவரே எனது பாவத்திற்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

 ஏற்றுக்கொள்ளும்.

 என் நண்பனை ஆசீர்வதித்தருளும்."

"இன்று எனது அலுவலகத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானங்களை எனது பாவங்களுக்கு பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்."


"பசியாக இருக்கிறது. சாப்பாடு  பிந்தும்போது இருக்கிறது எனது பசியை எனது பாவத்திற்கு பரிகாரமாக ஒப்புக்கொடுக்கிறேன்."

நமது அன்றாட வாழ்வில் நாம் விரும்பாத நிகழ்வுகளை கடவுள் அனுமதிப்பது நமது  அன்றாட பாவங்களுக்கு பரிகாரமாக அவற்றை அவருக்கு ஒப்புக் கொடுப்பதற்காகத்தான்.

 ஆண்டவரே நம்மை பரிசுத்தமாக்குகிறார்.

 நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரது சித்தத்திற்கு அடிபணிவது மட்டுமே.

இவை போக சில பெரிய  துன்பங்களையும் ஆண்டவர் அனுமதிப்பது உண்டு.

ஆன்மீக மொழியில்  அவற்றை சிலுவைகள் என்போம்.

நமது பாவங்களுக்காக ஆண்டவர்  சிலுவையைச் சுமந்தார்.

ஆண்டவரது சீடர்களாகிய நாம் 
நமக்கு வரும் சிலுவைகளை மகிழ்ச்சியோடு சுமந்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக் கொள்வோம்.

நமது வாழ்வில் துன்பங்களை  ஆண்டவர் அனுமதிப்பது 

நம்மை அதிகம் அதிகமாக பரிசுத்தத்தனத்தில் வளர்ப்பதற்கே.
'

 எவ்வாறு உரமும், நீரும் அதிகமாக சேரும்போது தாவரம் வேகமாக வளர்ந்து 
பயன்தருகிறதோ 

அவ்வாறே துன்பங்களை நாம் மகிழ்ச்சியோடு பாவப்   பரிகாரமாக ஏற்றுக்கொண்டால் ஆன்மீக வாழ்வில் வேகமாக வளர்வோம்.

பாவத்தின் விளைவாகிய துன்பத்தாலே பாவத்தை முறியடிப்போம்.

துன்பத்தால் நம்மை பரிசுத்தமாக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment