Wednesday, October 26, 2022

இயேசுவின் சீடனாக இருக்க வேண்டிய தகுதிகள்.(தொடர்ச்சி)


இயேசுவின் சீடனாக இருக்க வேண்டிய தகுதிகள்.
(தொடர்ச்சி) 

நம்மைப் படைப்பதற்கு முன் 
இறைவன் உலகத்தைப் படைத்து
 
அதன் பொருட்களை நமக்குத் தந்திருப்பது 

அவற்றை அவர் பணியிலும், பிறர் அன்புப் பணியிலும் பயன்படுத்துவதற்காக,

அவற்றின் மீது பற்று வைத்து 
அவற்றை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக அல்ல.

பணத்தின் மீது பற்று வைத்திருப்பவன், அதை ஈட்டுவதிலே குறியாக இருப்பான்,

பயன் படுத்துவதில் அல்ல.

ஆயிரக் கணக்கில் ஈட்டுபவன், இலட்சாதிபதியாக மாற விரும்புவான்.

பின் கோடீஸ்வரனாக மாற விரும்புவான்.

எவ்வளவு ஈட்டினாலும் திருப்தியே இருக்காது.

ஆனால் பணத்தின் மீது பற்று இல்லாதவன் தன்னிடம் உள்ள பணத்தை இறைவன் விருப்பப்படி பயன் படுத்துவதில் குறியாக இருப்பான்.

பணத்தின் மீது பற்று இல்லாதவனிடம் உள்ள பணம். அவனுடைய உடைமை அல்ல.

அன்புப் பணிகளில் பயன் படுத்துவதற்காக அவனிடம் ஒப்புவிக்கப்பட்ட பணம்.

அவன் நிர்வாகி மட்டுமே, உடைமையாளன் அல்ல.

அவன்தான் இயேசுவின் சீடனாக இருக்கத் தகுதியானவன்.

குருவைப் போல சீடனும் பணிபுரிய வேண்டும்.

இயேசுவைப் பின்பற்ற தகுதி உள்ள சீடன் அவரைப் போலவே பணிபுரிவான்.

நமது துறவிகள் 
பள்ளிக்கூடங்கள், 
கல்லூரிகள், 
 மருத்துவ மனைகள்,
 முதியோர் இல்லங்கள்,
 அனாதைக் குழந்தைகளைப் பாதுகாக்கும் இல்லங்கள் 
போன்றவற்றை நடத்துவது

 தங்களது சொந்த பணத்திலிருந்தும் அல்ல,

தங்கள் வருமானத்திற்காகவும் அல்ல.

பொது மக்களின் பணத்தை அவர்களின் நலனுக்காகவே 

எந்தவித பற்றுக்கும் இடம் கொடாமல் 

இறையன்பினாலும், பிறர் அன்பினாலும் உந்தப்பட்டு
பயன் படுத்துகிறார்கள்.

அவர்களை வழி நடத்துவது இறைப் பற்று மட்டுமே,

சுய பற்றும், சுய நலமும் அல்ல.

இறைவனுக்குச் சொந்தமான படைப்பைக் கொண்டு அவர்கள் செய்யும் சேவை

இறைவனது மகிமைக்காக மட்டுமே.

நாம் அனைவருமே இறைவனது மகிமைக்காக மட்டுமே பணி புரிய வேண்டும்.

இங்கே ஒரு முக்கியமான உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

கடவுள் இயல்பிலேயே அளவற்றவர், மாறாதவர்.

அளவற்ற அன்பு,
அளவற்ற வல்லமை.
அளவற்ற ஞானம்,
அளவற்ற மகிமை

உள்ளவர் கடவுள்.

அவர் தனது சகல பண்புகளிலும் நிறைவானவர். (Perfect)

தண்ணீர் நிறைந்த ஒரு பாத்திரத்தில் மேலும் தண்ணீரை ஊற்றினால் அது ஊற்றியவரிடமே திரும்பி வரும்.

அதுபோல் மகிமையே உருவான கடவுளுக்கு 'அதி மிக மகிமை' சேர்க்க நாம் உழைத்தால்

நமது உழைப்பின் பலனை நித்திய பேரின்ப வாழ்வாக இறைவன் நமக்கே தந்து விடுவார்.

அவரது மகிமை எப்போதும் நிறைவாகவே இருக்கும்.

அவரது மகிமைக்காக நாம் செய்யும் பணி நமது நித்திய பேரின்பத்தின் அளவை அதிகரிக்கும்.

இறைவன் மகிமைக்காக நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலாலும் பயன் பெறப் போவது நாம்தான்.

"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."

"வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக."

"எனக்கே செய்தீர்கள்.
அரசு உங்களுக்கு  உரிமையாகுக"

இயேசுவுக்காக நாம் செய்கிற ஒவ்வொரு நற்செயலுக்காகவும் 
மோட்சத்தில் பயன் பெறப்போவது நாம்தான்.

இயேசு நம்மைப் படைத்தது நமது நன்மைக்காக, அவரோடு பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக.

இயேசு மனிதனாய்ப் பிறந்து பாடுபட்டு மரித்தார்.

பாவத்திலிருந்து விடுதலை பெற்றது  நாம்.


இயேசுவின் அன்பின் தன்மையைப் பாருங்கள்:

அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது நன்மைக்காக.

அவருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது நன்மைக்காக.

இயேசுவின் அன்பு தன்னலம் அற்றது.

நாம் இறைப்பணி ஆற்றும் போது நமது ஆன்மீக நலன் அதிகரிக்கும்.

நமக்கும்  கடவுளுக்கும் உள்ள உறவின் நெருக்கம் அதிகம் ஆகும்.

சேவை செய்யும் நமது  நித்திய பேரின்பத்தின் அளவு அதிகமாகும்.

நாம் கடவுளுக்குச் செய்யும் சேவையால் பயன்பெறப் போவது நாம் தான்.

நாம் பயன் பெறுவதற்காகத்தான் கடவுள் நம்மைப் படைத்தார்.

கடவுள் மாறாதவர்.

நமது இறையன்பு பணியினால் பயன் பெறப்போவது நாம் தான்.

உலகப் பொருட்கள் மீது நமக்கு உள்ள பற்று குறையக் குறைய 

'இறைவன் மீது நமக்கு உள்ள பற்று அதிகமாகிக் கொண்டே வரும்.

நமது விண்கை சன்மானத்தின் அளவும் அதிகமாகிக் கொண்டே வரும்.

இயேசு முழு உலகத்தின் உரிமையாளர்.

அவர் அவரது நற்செய்திப் பணிக்காகவே அதைப் பயன் படுத்தினார்.

மாடடைக் குகையை மீட்பராகப் பிறக்கப் பயன் படுத்தினார்.

நசரேத் வீட்டை பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்கப் பயன் படுத்தினார்.

நாட்டை நற்செய்தி அறிவிக்கப் பயன் படுத்தினார்.

சிலுவை ஒரு மரம். அதை தான் மக்களுக்காகத் தன்னையே பலியாக்கப் பயன் படுத்தினார்.

இப்போது உலகை தான் ஏற்படுத்திய திருச்சபை பரவி வளரப் பயன் படுத்துகிறார்.

அவருடைய சீடர்களாகிய நாமும் அவரைப் போலவே உலகை நற்செய்திக் களமாகவே பயன் படுத்த வேண்டும்.

யோபு கடவுள் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்ட போது அவருக்கு நன்றி செலுத்தினார்.

இயேசுவின் சீடர்களாகிய நாமும்
உலகில் எதை இழந்தாலும் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

ஏனெனில் உலகில் நமது இழப்பு விண்ணுலகில் நமது வரவு ஆகும்.

இயேசுவின் அறிவுரைப்படி நாமும்

நமது உடைமைகளையெல்லாம் துறப்போம். 

இயேசுவின் சீடர்களாக மாறுவோம்.

அவருக்குப் பணி புரிய மட்டுமே வாழ்வோம்.

 கடவுளை மட்டும் கட்டிப் பிடித்துக் கொள்வோம், அவரது படைப்புகளை அல்ல.

கடவுளை மட்டும் கட்டிப் பிடித்து வாழ்பவர்கள் விண்ணக பேரின்பத்தை

மண்ணகத்திலேயே சுவைக்க (pretaste) ஆரம்பித்து விடுவார்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment