Monday, October 24, 2022

"எல்லாரும் ஒன்றுபோலச் சாக்குச் சொல்லத் தொடங்கினர்"(லூக்.14:18)

"எல்லாரும் ஒன்றுபோலச் சாக்குச் சொல்லத் தொடங்கினர்"
(லூக்.14:18)

சாக்குப் போக்குச் சொல்வதில் வல்லவர்கள் நம் நாட்டில் உள்ளவர்கள்.

அது அவர்களுக்கு ஒரு கலை.

",இன்று ஞாயிற்றுக் கிழமை என்று ஞாபகத்தில் இருக்கிறதா?''

''ஞாபகத்திலா? இன்று ஞாயிற்றுக் கிழமை என்று எனக்கு போன மாதமே தெரியும்.''

",போன மாதமேவா?"

"நாளை திங்கட்கிழமை அரசுப் பொதுத் தேர்வு என்று போன மாதமே அறிவித்து விட்டார்களே!

திங்களுக்கு முந்திய நாள் ஞாயிறுதானே!"

", மணி ஏழரை ஆகிறது, இன்னும் பூசைக்குப் புறப்படவில்லை?"

''எட்டு மணிக்கு Tution. சீக்கிரம் கிழம்ப வேண்டும்."

" ஹலோ! இன்று ஞாயிற்றுக் கிழமை.

 இன்று திருப்பலியில் பங்கெடுக்க வேண்டியது நமது முதற் கடமை."

"அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சுவாமியார் போன வார பிரசங்கத்தில் சொன்னது மறந்து போச்சா?

நாள் இப்போது மாணவன். தேர்வுக்குத் தயாரிக்க வேண்டியது என் கடமை.

அதற்காகத்தான் tution."

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்.

 தந்தையையோ, தாயையோ, மகனையோ, மகளையோ நேசிக்க வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.

ஆனால் நேசிக்க முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கடவுளுக்குதான்.

ஞாயிற்றுக் கிழமை அன்று மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது திருப்பலிக்குதான்.

ஆன்மீக வாழ்வுக்கு உயிரும், உணவும் கொடுப்பது திருப்பலி தான்.''

ஆனால் சாக்குப் போக்கு சொல்பவனுக்கு எதையும் புரிய வைக்க முடியாது.

கடமையைச் செய்யாதிருப்பவர்கள் தங்க"ளை நியாயப் படுத்த சாக்குப் போக்குகளைப் பயன் படுத்துகிறார்கள்.

அம்மா: செபம் சொல்லும்போது தூங்கக் கூடாது.

பையன்: அதாவது தூக்கம் வரும்போது செபம் சொல்லக் கூடாது. இப்போ தூக்கம் வருது. நாளைக்கு செபம் சொல்கிறேன்."


''பிரசங்கம் ஆரம்பிக்கப் போகுது. நீ எங்கே போகிறாய்?"

"பிரசங்க நேரத்ல தூங்கக் கூடாதுன்னு சாமியாரே சொல்லியிருக்கார். வெராண்டாவுக்குப் போனால்தான் தூக்கம் வராது."


"பாவ சங்கீர்த்தனம் செய்யும் பழக்கம் உண்டா?"

"நான் செய்த பாவங்கள் எல்லாம் தான் கடவுளுக்குத் தெரியுமே.

கடவுளிடம நான் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்பேன். அவரும் மன்னித்து விடுவார்."

இந்த நபர் கடவுள் கொடுத்த கட்டளையை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சாக்குப் போக்கு சொல்ல கடவுளையே துணைக்கு அழைக்கிறார்.

நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்து அவற்றை மன்னிப்பதற்கு இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்: "

இந்த வார்த்தைகள் மூலம் பாவசங்கீர்த்தனம் என்னும் தேவ திரவிய அனுமானத்தை ஏற்படுத்தி,

நமது பாவங்களை மன்னிக்கும்  அதிகாரத்தை தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கும், அவர்களது வாரிசுகளான குருக்களுக்கும் கொடுத்தார்.

நாம் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த தேவத் திரவிய அனுமானத்தை இயேசு ஏற்படுத்தினார்.

இயேசுவை ஏற்றுக்கொள்வோர் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்ய மறுப்போர் இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசுவை  முழுமையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் முழுமையான கிறிஸ்தவர்கள் அல்ல.

சாவான பாவத்தோடு திருப்பலிக்குச் சென்று,

பாவ சங்கீர்த்தனம் செய்யாமல், 

பாவத்தோடு திருப்பலியில் கலந்து,

பாவத்தோடு திவ்ய நற்கருணை அருந்தி,

பாவத்தோடு வீடு திரும்புவது

சகதியோடு குளிக்கச் சென்று, அதிக
சகதியோடு வீட்டுக்குத் திரும்புவதற்குச் சமம்.

சாவான பாவத்தோடு நற்கருணை அருந்துவது இன்னொரு பாவம்.

பாவசங்கீர்த்தன விஷயத்தில் சாக்குப் போக்குச் சொல்வது,

மருத்துவர் கொடுத்த மருந்தைச் சாப்பிடாமலிருக்க சாக்குப் போக்குச் சொல்வதற்குச் சமம்.

வியாதி குணமாகாது.

எட்டு மணி பூசைக்கு சரியாக எட்டு மணிக்கு வந்துவிட்டு, பாவசங்கீர்த்தனம் செய்ய நேரம் கிடைக்கவில்லை என்று சொல்வது சாக்கு போக்கு,

தியேட்டரில் 10 மணிக் காட்சிக்கு 
6 மணிக்கே வந்து நிற்கத் தெரியும்.

8 மணி பூசைக்கு 7.30 மணிக்கு வரத் தெரியாது.

ஆன்மீக காரியங்களில் சாக்குப் போக்கு சொல்வது ஆன்மாவுக்குக் கெடுதி என்பதை உணர்வோம்.

ஆண்டவர் அழைக்கும் போது சாக்குப் போக்கு சொல்பவர்களால் விண்ணக விருந்தைச் சுவைக்க முடியாது.

சாக்குப் போக்குச் சொல்வதைத் தவிர்ப்போம்.

இயேசுவின் சொற்படி நடப்போம்.

என்றென்றும் அவரோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment