Sunday, October 23, 2022

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."(லூக்.18:14)

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."
(லூக்.18:14)

"தாத்தா, ஒரு சந்தேகம்.

இயேசு, "தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."

என்கிறார்.

நாம்  நம்மைத்  தாழ்த்த ஆசைப்பட வேண்டும் என்று இயேசு ஆசைப் படுகிறாரா?

உயர்த்த ஆசைப்பட பட வேண்டும் என்று  ஆசைப் படுகிறாரா?"

"ஏன் இந்த சந்தேகம்?"

"தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்." என்று இயேசு சொல்வதில்,

முதலில் நாம் நம்மை தாழ்த்த வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது.  தாழ்ச்சியைத்தான் புண்ணியங்களின் அரசி என்று சொல்கிறோம்.

அடுத்து 'உயர்த்தப்பெறுவான்' என்கிறோம். 

அதாவது,

நம்மை நாமே தாழ்த்துவதே உயர்த்தப்படுவதற்குத்தான்.

இப்போது சொல்லுங்கள்,

நம்மை நாமே தாழ்த்த ஆசைப்பட வேண்டுமா?

உயர்த்தப்பட ஆசைப்பட வேண்டுமா?"

", ஆசிரியர் சொல்கிறார்,

'நன்கு படிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.'

நன்கு படிக்க ஆசைப்பட வேண்டுமா?"

வெற்றி பெற ஆசைப்பட வேண்டுமா?"

"இரண்டுக்கும்தான்.

வெற்றி பெற ஆசைப்பட்டால்தானே நன்கு படிக்கத் தோன்றும்."

", இப்போ சொல்லு,


நம்மை நாமே தாழ்த்த ஆசைப்பட வேண்டுமா?

உயர்த்தப்பட ஆசைப்பட வேண்டுமா?"

"இரண்டுக்கும்தான்.

ஆனால் அதே இயேசு சொல்கிறார்,

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்." என்று.

அப்படியானால் உயர்த்த ஆசைப் படக்கூடாது என்று தானே அர்த்தம்.

அது தான் புரியவில்லை."

",விண்ணகத்தில் உயர்ந்த நிலையை அடைய ஆசைப்பட வேண்டும்.

இவ்வுலகில் நம்மை நாமே உயர்த்த ஆசை படக்கூடாது.

இவ்வுலகில் தன்னைத்தானே உயர்த்துபவன் மறுவுலகில் தாழ்த்தப்படுவான்.

இவ்வுலகில் தன்னைத்தானே தாழ்த்துபவன் மறு உலகில் உயர்த்தப்படுவான்.

அன்னை மரியாள் இவ்வுலகில் தன்னை அடிமை நிலைக்கு தாழ்த்தினாள்.

மறு உலகில், அதாவது, மோட்சத்தில் விண்ணக அரசி நிலைக்கு உயர்த்தப்பட்டாள்.

இவ்வுலகில் கடவுள் முன் தங்களைத் தாங்களே தாழ்த்தி, 

இறைவனை மட்டும் நம்பி வாழ்பவர்கள் தான் 

மறு உலகில் மோட்சம் ஆகிய உயர்ந்த நிலையை அடைவர்.

இவ்வுலகில் கடவுளைப் பற்றி கவலைப்படாமல்,  தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணி தங்கள் திறமையை மட்டும் நம்பி வாழ்பவர்கள் 

மறு உலகில் நரகம் ஆகிய தாழ்ந்த நிலையை அடைவர்."

"ஏன் அப்படி?"

'', நாம் ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுளால் படைக்கப் பட்டோம்.

ஆகவே நாம் இயல்பிலேயே ஒன்றுமில்லாதவர்கள் தான்.

இதை நாம் உணர்ந்து வாழ்ந்தால், 

அதாவது நாம் தாழ்ந்தவர்கள் என்று எண்ணி வாழ்ந்தால்,

அதாவது தாழ்ச்சியோடு வாழ்ந்தால் 

முழுக்க முழுக்க இறைவனை மட்டும் நம்பி வாழ்வோம்.

இறைவனோடு முழுமையான உறவு நிலையில் வாழ்வோம்.

கடவுள் அவரை மட்டும் நம்பி வாழும் நம்மை மோட்ச நிலைக்கு உயர்த்துவார்.

 ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுளால் படைக்கப் பட்டவர்கள் என்பதை உணராமல்,

தங்கள் திறமையை மட்டும் நம்பி வாழ்பவர்கள் கடவுளைத் தேட மாட்டார்கள்.

இறை உறவுக்கு எதிரான செயல்களை,

அதாவது பாவங்களைச் செய்து வாழ்வார்கள்.

தங்களைத் தாங்களே உயர்த்தி வாழ்பவர்களால்,

அதாவது, பாவ நிலையில் வாழ்பவர்களால்,

 மறு உலகில் மோட்ச நிலையை அடைய முடியாது.

Lucifer தனது தற்பெருமையினால்தான் சாத்தானாக மாறினான்.

Lucifer ஐப் போல தற்பெருமையுடன் வாழவேண்டுமா?

அன்னை மரியாளைப் போல தாழ்ச்சியுடன் வாழவேண்டுமா?"

"விண்ணக நிலையை, அதாவது மோட்ச நிலையை அடைய வேண்டுமென்றால்

அன்னை மரியாளைப் போல தாழ்ச்சியுடன் வாழவேண்டும்."

", அப்படியானால் என்ன ஆசையோடு உலகில் வாழ வேண்டும்?"

"விண்ணக நிலைக்கு உயர்த்தப் படவேண்டும் என்ற ஆசையோடு தான்,  தாழ்ச்சியோடு உலகில் வாழ வேண்டும்.

இவ்வுலகில் தாழ்ச்சியோடு வாழ்ந்தால்,  மறுவுலகில் கடவுள் நம்மை உயர்த்துவார்."

", இறைமகன் இயேசு மனித நிலைக்குத் தன்னைத் தாழ்த்தியதே

நம்மை மோட்ச நிலைக்கு உயர்த்துவதற்காகத் தான்."

"இயேசுவுக்கு நன்றி."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment