கடவுள் மனிதனை ஆன்மாவோடும் உடலோடும் படைத்தார்.
நமது ஆன்மாவுக்கு ஆன்மீக வாழ்வில் உதவி செய்வதற்கே நமது உடல்.
ஒரு வீட்டுக்கு சென்றால் அங்கு உள்ளவர்கள் நம்மை உபசரிக்கும் போது:
"காபி சாப்பிடுகிறீர்களா?
டீ சாப்பிடுகிறீர்களா?"
"Tea போதும். வேறெதுவும் வேண்டாம்."
ஆனால் Tea மட்டும் வராது. அதோடு ஒரு Cup ம் வரும்.
Tea க்காக Cup ஆ?
Cup க்காக Tea யா?
Tea க்காகத்தான் Cup.
Tea யைக் குடித்தபின் Cup ஐக் கொடுத்து விடுவோம்.
அதேபோல் பிறக்கும்போது ஆன்மாவோடும் உடலோடும் பிறக்கிறோம்.
ஆன்மாவுக்கு சேவை செய்யதான்
உடல்.
ஆன்மா பிரிந்த பிறகு உடலை மண்ணுக்குள் புதைத்து விடுவார்கள்.
நாம் ஆன்மா, உடல் ஆகிய இரண்டில் ஆன்மாவின் வாழ்வுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உடலுக்கும், அதைச் சார்ந்த சிற்றின்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போதுதான் பாவம் உள்ளே நுழைகிறது.
ஆன்மாவின் மீட்புக்காக உடலை இழக்கலாம்.
ஆனால் உடலை திருப்திப்படுத்த ஆன்மாவை இழந்து விடக்கூடாது.
"கேளுங்கள் கொடுக்கப் படும்." என்று வாக்குக் கொடுத்த இயேசுவிடம் எதைக் கேட்டாலும் ஆன்மாவின் நலனை முன் வைத்தே கேட்க வேண்டும்.
நமது இவ்வுலகத் தந்தையிடம் சாப்பிட அப்பத்தை கேட்டால் அவர் கல்லைத் தருவாரா?
நமது விண்ணுலக தந்தை நம் மீது அளவு கடந்த அக்கறை உள்ளவர்.
அவரிடம் நமது ஆன்மாவின் நலனுக்காக எந்த உதவியையாவது கேட்டால்
அதற்கு தீங்கு விளைவிக்கும் எதையாவது தருவாரா?
நாம் அவரிடம் ஏதாவது கேட்கும் போது அவர் தந்தால் அது நமது ஆன்மாவிற்கு நன்மை பயக்கக் கூடியது என்பதையும்,
தராவிட்டால் அது ஆன்மாவிற்கு தீங்கு விளைவிக்க கூடியது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் கேட்பதை தந்தாலும், தராவிட்டாலும் அது நமது நன்மைக்கே.
ஆகவே தந்தாலும் நன்றி கூற வேண்டும்,
தராவிட்டாலும் நன்றி கூற வேண்டும்.
நண்பர் ஒருவர் கேட்டார்:
"கடவுளை நம்பி அவரிடம் உதவி கேட்பவர்களை விட,
அவரை நம்பாமல் தங்கள் விருப்பம் போல் வாழ்பவர்கள் அதிக வசதி உள்ளவர்களாக வாழ்கிறார்களே, அது ஏன்?"
அவர் குறிப்பிட்டது மனசாட்சியே இல்லாமல் வாழும் அரசியல்வாதிகளையும்,
பொய்யையே நம்பி வாழும் வியாபாரிகளையும்.
அரசியல்வாதிகள் தங்கள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டுதான் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்கள்.
வியாபாரிகள் பத்து ரூபாய் பெறுமான பொருளை, பொய்யான விளம்பரத்தின் உதவியால், ஐம்பது ரூபாய்க்கு விற்கிறார்கள்.
கடவுளை நம்பி வாழ்பவர்களால் அந்த அளவுக்கு வசதியாக இருக்க முடியவில்லை.
ஆனாலும் ஒரு உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வுலகில் கடவுளை நம்பாமல் வாழ்பவர்கள் நித்திய காலமும் அவரை இழந்து விடுவார்கள்.
கடவுளை நம்பி வாழ்பவர்கள் நித்திய காலமும் அவரோடு பேரின்பத்தில் வாழ்வார்கள்.
எது நல்லது, நித்திய இழப்பா?
நித்திய பேரின்பமா?
ஒருவன் உலகத்தை எல்லாம் சொந்தமாக்கிக் கொண்டாலும் தனது ஆன்மாவை இழந்துவிட்டால்,
அவன் சொந்தமாக்கிக் கொண்ட
உலகத்தால் அவனுக்கு என்ன பயன்?
நித்திய பேரின்பம் வேண்டுமா?
உலக சிற்றின்பம் போதுமா?
தேர்வு செய்ய நமக்கு பரிபூரண சுதந்திரம் இருக்கிறது.
நாம் எதைக் கேட்டாலும் நமக்கு நித்திய பயன் அளிக்க கூடியதையே கடவுள் தருவார்.
அவர் நமக்குத் தருவதைவிட அவர்தான் முக்கியம்.
அவர்தான் நமக்கு எல்லாம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment