Tuesday, October 25, 2022

இயேசுவின் சீடனாக இருக்க வேண்டிய தகுதிகள்.

.இயேசுவின் சீடனாக இருக்க வேண்டிய தகுதிகள்.

இயேசு தனது சீடனாக இருக்க விரும்புகிறவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் இரண்டினைக் குறிப்பிடுகிரார.

1.தன் சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப் பின்செல்ல வேண்டும்.

2.தன் உடைமையெல்லாம் துறக்க 
வேண்டும்.


"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.''
(லூக்.14:27)

"தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது.''
(லூக்.14:33)

ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு. இடையேயும்,

நண்பர்களுக்கு இடையேயும்,

குரு, சீடர்களுக்கு இடையேயும் 

சில பொதுவான பண்புகள் இருக்கும்.

தாயைப் போல பிள்ளை,

உன் நண்பன் யாரென்று சொல்,
நீ எப்படிப்பட்டவன் என்று சொல்லிவிடுகிறேன்.

குருவைப் போல் சீடன் 

ஆகிய கூற்றுக்களுக்கு அந்த
பொதுவான பண்புகளே காரணம்.

இயேசுவின் தந்தையே நமக்கும் தந்தை.

இந்த குடும்ப உறவு நீடிக்க வேண்டுமென்றால் நாம் இயேசுவைப் போல் மாற வேண்டும்.

"உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்: ஏனெனில், தலைவன் செய்வது இன்னது என்று ஊழியனுக்குத் தெரியாது.

 ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன்."

இயேசுவின் இந்த கூற்றுப்படி அவருடைய ஊழியர்களாகிய நாம் அவருடைய நண்பர்கள் தான்.

அவருடனான நட்பு அவர் நமக்குத் தந்திருக்கும் அன்பளிப்பு.

அவருடனான நமது நட்பு நீடிக்க வேண்டுமென்றால் நாம் அவரைப் போல் மாற வேண்டும்.

நாம் இயேசுவின் சீடர்கள். அவருடைய பண்புகளை நாமும் கொண்டிருந்தால்தான் நமது சீடத்துவம் நீடிக்கும்.

நாம் பின்பற்ற வேண்டிய இயேசுவின் பண்புகள் நிறைய இருக்கின்றன.

  அவற்றில் இரண்டை இயேசு
 குறிப்பிடுகிறார்.

சிலுவையை சுமந்து அதில் தன்னை தானே பலியாக்குவதற்காகத் தான் 
இயேசு மனிதனாகப் பிறந்தார்.

இயேசுவையும் சிலுவையையும் பிரிக்க முடியாது.

நாம் இயேசுவோடு ஒன்றித்து விட்டால் நம்மையும், சிலுவையையும் பிரிக்க முடியாது.

சிலுவையை விட்டு நம்மை பிரித்து விட்டால் நாம் இயேசுவின் சீடர்கள் அல்ல.

அதனால் தான் இயேசு சொல்கிறார்,

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.''

சிலுவை என்ற வார்த்தை நாம் அனுபவிக்கும் துன்பங்களைக் குறிக்கிறது.

புவியிலுள்ள அனைத்து உயிர்வாழ் இனத்திற்கும் துன்பங்கள் உண்டு. ஆனால் அவை அனைத்தும் சிலுவைகள் அல்ல.

இயேசுவுக்காக, 

இயேசு எதற்காக சிலுவையை சுமந்தாரோ, அதற்காக, 

நம்மால் ஏற்றுக் கொள்ளப்படும் துன்பங்கள் தான் சிலுவைகள்.

இயேசுவுக்காக நமது சிலுவைகளை சுமந்து அவரை பின்பற்றினால் தான் நாம் அவரது சீடர்களாக இருக்க முடியும்.

இயேசுவின் தாயிலிருந்து இன்று வரை வாழ்ந்த அனைத்து புனிதர்களும் இயேசுவைப்போல் சிலுவையை சுமந்து அவரை பின்பற்றியவர்கள் தான்.

சில புனிதர்கள் இயேசுவின் ஐந்து காயங்களை கூட வரமாக பெற்று அதன் வேதனைகளை அனுபவித்தவர்கள்.

நமது வாழ்வில் நமக்கு துன்பங்கள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற இயேசுவிடம் கேட்பதற்கு பதில்,

அவற்றைச் சுமக்க போதிய சக்தியை தரும்படி அவரிடம் மன்றாட வேண்டும்.

துன்பங்கள் வருவது இயல்பு, 
அவற்றை சிலுவைகளாக மாற்றுவது நமது கிறிஸ்தவ வாழ்வு.

கிறிஸ்தவன் என்றால் இயேசுவுக்காக சிலுவையை சுமப்பவன் என்று தான் பொருள்.

அந்த பொருளில் நாம் இயேசுவுக்கு பிரியமான கிறிஸ்தவர்களாக,

 அதாவது அவருடைய சீடர்களாக,

 வாழ வேண்டும்.

மற்றவர்கள் நம்மை துன்பப்படுத்தும் போது அவர்களை இயேசுவுக்காக நான் சிலுவையை சுமக்க உதவும் நண்பர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்.

எப்படி இயேசுவின் எதிரிகள் அவரை சிலுவையில் அறைந்து அவரை நமது இரட்சகராக மாற்றினார்களோ,

அப்படியே கிறிஸ்தவத்தின் எதிரிகளும் நம்மை கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வேத சாட்சிகளாக மாற்றுகிறார்கள்.

இயேசு எப்படி தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தாரோ,

அதேபோல நாமும் நம்மை துன்பப்படுத்தும் கிறிஸ்தவத்தின் எதிரிகளை மனமார மன்னிக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் இயேசுவின் உண்மையான சீடர்கள்.

அன்னை மரியாள் இயேசுவைப் பெற்றது, சிலுவைக்காகத்தான்.

எப்படி தாயையும், மகனையும் பிரிக்க முடியாதோ,

அப்படியே, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.

அப்படியே இயேசுவின் உண்மையான சீடர்களையும் சிலுவையிலிருந்து பிரிக்க முடியாது.


இயேசு கடவுள். தன்னிலே நிறைவானவர். நாம் வாழும் பிரபஞ்சமும், நாமும் படைக்கப் படுவதற்கு முன்பேயே,

நித்திய காலத்திலிருந்தே அவர் நிறைவாக இருக்கிறார்.

அவரது அனைத்து படைப்புகளும் அவருக்கு உரியவை. ஆனால் அவர் அவற்றுக்கு அப்பாற்பட்டவர்.

அவரது படைப்புகள் தாங்கள் இருப்பதற்கு (To exist) அவரை சார்ந்துள்ளன.

ஆனால் அவர் எந்த படைப்பையும் சார்ந்திருக்கவில்லை.

அவருடைய படைப்புகளை எல்லாம் அவர் அழித்து விட்டாலும் அவரது நிறைவுக்கு எந்த குறைவும் ஏற்படாது.

நம்முடைய Bank balance காலியாகி விட்டால் நாம் empty ஆகிவிடுவோம். ஏனெனில் நமது வசதியான வாழ்வுக்கு அதைச் சார்ந்திருக்கிறோம்.

இந்த விஷயத்தில் நாம் எப்படி இயேசுவைப் போல் மாறுவது?

இயேசு இயல்பிலேயே (By nature) நிறைவானவர், எந்த பொருள் மேலும் சார்ந்திராதவர்.

நாம் இயல்பிலேயே சார்ந்து. வாழ்பவர்கள்.

நம்மால் கடவுளைப் போல் நிறைவானவர்களாக மாறவே முடியாது.

We can never become perfect.

ஆனாலும் இயேசு நம்மை நோக்கி,

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
( மத். 5:48)

48Therefore, be perfect, even as your heavenly Father is perfect.

என்கிறார்.

"நானும் தந்தையும் ஒன்றே." என்று இயேசுவே கூறுவதால்,

தந்தையைப் போல் நிறைவுள்ளவர்களாய் இருப்பதும்,

அவரைப் போல் நிறைவுள்ளவர்களாய் இருப்பதும் ஒன்றுதான்.

ஆனால் சுயமாக வாழும் இயேசுவைப் போல்,

சார்ந்திருக்கும் நம்மால் எப்படி மாற முடியும்?

அதற்கும் இயேசுவே வழி சொல்கிறார்.

''தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது.''

நமது உடைமையெல்லாம் துறப்பது ஏன்று தான் அதற்கு வழி

"Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven."

எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே. (மத். 5:3)

இறைமகனாகிய இயேசு படைக்கப் பட்ட பொருட்களுக்கு அப்பாற்பட்டவர்.

ஆனால் நாமே படைக்கப்பட்ட பொருள்தான்.

நம்மால் எப்படி அவற்றை சாராமல் வாழ முடியும்?

அவற்றையெல்லாம் துறந்தால், இழந்தால், விட்டு விட்டால் 

அவற்றைச் சாராமல் நம்மால் வாழ முடியும்.

நம்மிடம் உள்ள படைக்கப்பட்ட பொருள்களை எல்லாம் எப்படி இழப்பது?

நமது உடலே படைக்கப்பட்ட பொருள்தான். அதை இழந்து விட்டால் நம்மால் உலகில் வாழ முடியாதே.

ஆனால் ஆண்டவர் சொன்னபடி எளிய மனத்தோராய் வாழ்ந்தால் முடியும்.

எளிய மனத்தோர் என்றால் மனதில் தங்கள்  உடல் உட்பட எந்த உலகப் பொருள் மீதும் பற்று இல்லாமல் வாழ்வோர்.

பற்று இல்லாமல் வாழ்வது என்றால்?

நம்மிடம் விலை உயர்ந்த பேனா ஒன்று இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

ஒரு நாள் எதிர் பாராமல் அது தொலைந்து விட்டது.

பேனா தொலைந்தது பற்றி நமக்கு வருத்தம் ஏற்பட்டால், நாம் அதன் மீது பற்று உள்ளவர்கள்.

அதைப் பற்றி கவலையே படாவிட்டால் நாம் அதன் மீது பற்று இல்லாதவர்கள்.

மதுரையிலிருந்து தென்காசி வரை இரயிலில் பயணிக்கிறோம்.

நாம் தென்காசியில் இறங்கியவுடன் இரயில் போய்விடுகின்றது.

அதற்காக வருத்தப் படுகிறோமா?

இல்லை.

ஏன்?

ஏனென்றால் நமக்கு அதன் மீது பற்று இல்லை.

நாம் அதைப் பயணத்திற்குப் பயன்படுத்தினோம்.

அவ்வளவுதான்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment