Sunday, September 5, 2021

இயேசு ஏன் நோயாளிகளைக் குணமாக்கினார்.

இயேசு ஏன் நோயாளிகளைக் குணமாக்கினார்?

"ஹலோ, சார். Good morning."

"Very good morning."

"கொஞ்சம் உட்காருங்கள். பேசிக்கொண்டிருப்போம்."

"கொஞ்சம் உட்கார்ந்தால் குறுக்கு வலிக்கும். முழுவதும் உட்காருவோம். ம். சொல்லுங்க."


"இயேசு பாவிகளை தேடித் தானே உலகிற்கு வந்தார்."

",அதிலென்ன சந்தேகம்?"

"அதில் சந்தேகம் இல்லை. 
அவர் நற்செய்தி  அறிவித்தது,
பாடுகள் பட்டது 
சிலுவையில் மரணம் அடைந்தது எல்லாம்  பாவிகளுக்காகத்தான்.

ஆனால் அவர் சென்றவிடமெல்லாம் புதுமைகள் மூலம் நோயாளிகளைக் குணமாக்கி கொண்டே சென்றாரே.

நோய்களைக் குணமாக்குவதற்கும் பாவிகளை பாவத்திலிருந்து மீட்பதற்கும் என்ன சம்பந்தம். 

நோய்களைக் குணமாக்குவது சாதாரண மருத்துவர்கள் செய்யக்கூடிய வேலை. அதை எதற்கு ஆண்டவர் ஆர்வமுடன் செய்தார்?"


",அதாவது நோய்களைக் குணமாக்கியது ஆன்மீக பணி அல்ல என்று சொல்கிறீர்கள். அப்படித்தானே."

"அப்படியேதான்."

",நிச்சயமாக இயேசு மனிதராக பிறந்தது வெறுமனே நோய்களைக் குணமாக்குவதற்கு அல்ல.

சாதாரண மருத்துவர் நோய்களை குணமாக்குவதற்கும், இயேசு குணமாக்கியதற்கும் வித்தியாசம் தெரியவில்லையா?"

"தெரிகிறது. சாதாரண  மருத்துவர் மருந்து கொடுத்து குணமாக்குவார்.

'ஒரு சாதாரண காய்ச்சலைக்
 குணமாக்கவே நான்கு நாட்களாகும், மேலேயும் ஆகலாம்.

 சில பெரிய நோய்களுக்கு மாதக்கணக்காக மருந்து சாப்பிட வேண்டியிருக்கும்.

 அப்போதும் முழுவதும் குணமாகாது.

ஆனால் இயேசு மருந்து எதுவும் பயன்படுத்தாமல் புதுமைகள் மூலம் உடனே சுகமாக்கினார்.
அவர் கடவுளாக இருந்ததால் புதுமைகள் மூலம் குணமாக்கினார். 

எனது கேள்வி ஆன்மீக நோயை நீக்க மனுவுரு எடுத்தவர் எதற்காக உடல் நோயை நீக்குவதில் ஆர்வம் காட்டினார் என்பதுதான்.

ஆன்மீகப் பணி செய்ய வந்தவர் ஏன் உடல் வைத்தியர் பார்க்கும் பணியை செய்தார்?''

", ஒவ்வொரு முறையும்  குணமாக்கும் போது அவர் என்ன சொன்னார்?"

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

",விசுவாசம் ஆன்மீகமா? லௌகீகமா?"

"நிச்சயமாக ஆன்மீகம் தான்."

",அப்போ நோயாளி விசுவாசத்தால் தான் குணமானான்."

".ஆமா.'' 

", யாருடைய விசுவாசத்தால்?"

''நோயாளியின் விசுவாசத்தால்."

",நோயாளிக்கு விசுவாசம் எங்கிருந்து வந்தது?"

"விசுவாசம் இறைவனின் நன்கொடை . அது இயேசுவிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும்."

", ஒவ்வொரு நோயாளியையும் குணமாக்கும் முன்னால் அவனுக்கு இயேசு விசுவாசத்தை நன்கொடையாக அளித்திருக்க வேண்டும்.''

"ஆமா."

", விசுவாசத்தை அளிப்பது ஆன்மீகப் பணியா?  

அல்லது,....."

"நிச்சயமாக  ஆன்மிகப் பணி தான்!
ஆனாலும் அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறதே!"

", என்ன பிரச்சனை?"

"விசுவாசம் ஒரு புண்ணியம், அது இருக்கும்போது பாவம் இருக்க முடியாதே!"

", ஆமா,   பாவம் இருக்க முடியாது. அதில் அன்ன   பிரச்சனை?

இயேசு பாவத்தை மன்னித்து விட்டுதான் விசுவாசத்தை கொடுத்திருப்பார்.

அது மட்டுமல்ல, பாவ மன்னிப்பு பெற மனஸ்தாபம் இருக்க வேண்டும்.

 ஆகவே இயேசு நோயாளிக்கு முதலில் மனஸ்தாபத்தை கொடுத்து,

 அடுத்து பாவத்தை மன்னித்து,

 அடுத்து விசுவாசத்தை கொடுத்திருக்க வேண்டும்.

 அந்த விசுவாசம் நோயாளிக்கு சுகத்தை அளித்திருக்க வேண்டும்".

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஒவ்வொரு நோயாளியும் குணமாகும்போது 

அவனுக்கு மனஸ்தாபம், மன்னிப்பு,
விசுவாசம் ஆகியவற்றை எல்லாம் வல்ல கடவுளாகிய இயேசுவே கொடுத்திருக்க  வேண்டும்.

ஆனால் அப்படி பைபிளில் எங்கும் சொல்லப்பட்டிருக்க வில்லையே!"

",இங்கே பாருங்கள். எல்லா குளங்களும் நிரம்பி விட்டன என்று சொன்னாலே 

மழை பெய்திருக்கிறது என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ள வேண்டும். 

மனஸ்தாபம் இருந்தால் தான் மன்னிப்பு, 

மன்னிப்பு இருந்தால்தான் பாவம் இருக்காது,

பாவம் இல்லாதிருந்தால்தான் புண்ணியம் இருக்கும்.

விசுவாசம் என்ற புண்ணியம் இருந்தால் தான் சுகம் கிடைக்கும்.

இயேசு ஒவ்வொரு நோயாளியையும் குணமாக்கும் போதும்.இவ்வளவு ஆன்மீக நிகழ்வுகளும் கட்டாயம் நிகழ்ந்திருக்கும்.

வெளிப்படையாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

அடிப்படை ஞான உபதேச அறிவு இருந்தாலே இதை புரிந்து கொள்ளலாம்.

"எது எளிது ? இந்தத் திமிர்வாதக்காரனை நோக்கி, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதா?

 "எழுந்து உன் படுக்கையை எடுத்துகொண்டு நட" என்பதா?


10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"

11 திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்.
  (மாற்கு. 2:9,10,11) 

 என்ற வரிகளை வாசித்து தியானித்தால் இது புரியும்.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்த ஒவ்வொரு வினாடியும் பாவிகளுக்காகவே வாழ்ந்தார்.

நாம் பாவம் செய்வதற்கு வேறு யாருடைய உதவியும் தேவை இல்லை.

ஆனால் பாவத்திற்காக மனஸ்தாப படுவதிலிருந்து ஒவ்வொரு ஆன்மீக நிகழ்வுகளுக்கும் இறைவனுடைய அருள் இல்லாமல் எதுவும் நடக்காது.


எல்லா பாவிகளுக்கும் மனம் திரும்பவும், ஆன்மீகத்தில் வளரவும் கடவுள் அருளை கொடுக்கிறார். 

ஏற்றுக் கொள்பவர்கள் மனம் திரும்பி வளர்வார்கள்.ஏற்றுக்
கொள்ளாதவர்கள் இறைவனை இழந்துவிடுவார்கள்."

"கடவுள் சர்வ வல்லவர் தானே. மனிதர்களை பாவமே செய்யமுடியாதபடி அவர்களைப் படைத்திருக்கலாம் அல்லவா.

அப்படிப் படைத்திருந்தால் அவர் மனிதனாக பிறக்கபோ, பாடுகள் படவோ, மரிக்கவோ வேண்டிய அவசியம் இல்லாதிருந்திருக்கும் அல்லவா!"

",கடவுள் அவரது இயல்புப்படி சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார், அவருக்கு ஆலோசனையை கொடுக்க யாருக்கும் அதிகாரமோ,
 உரிமையோ இல்லை.

எந்த வெளி சட்டங்களுக்கும் அவர் கட்டுப்பட்டவர் அல்ல.

அன்னை மரியாளை சென்ம பாவ மாசு இன்றி படைத்தார்.

அதற்காக நாம் அவரிடம் போய் "எங்களையும் அப்படி படைத்திருந்தால் என்ன"

 என்று கேட்க நமக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.

அவளுடைய சொல்லுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள்.

நமது செபங்களை அவர் கேட்பது அவருடைய தாராள குணத்தினால்,
கேட்க வேண்டும் என்பதற்காக அல்ல."

"புரிகிறது. நாம் அவருக்கு கட்டுப்பட்டவர்கள்.

அம்மாவால் தான்  பிள்ளையைப் பெற முடியும். பிள்ளையால் அம்மாவைப் பெற முடியாது."

", சரியான ஒப்புமை.

நாம் படைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தால் தேவையற்ற கேள்விகளைக் கேட்க மாட்டோம்."

"இயேசுவின் ஒவ்வொரு அசைவும் நமது பாவமன்னிப்பையும் மீட்பையும் மையப்படுத்தியே இருந்தது.

மக்களின்   ஆன்ம நோயைக் குணமாக்கிய பின்புதான் உடல் நோயைக்  குணமாக்கினார்.

இயேசு சென்ற இடமெல்லாம் மக்களின் நோய்களைக் குணமாக்கியது அவர்களது ஆன்மீக மீட்புக்காகத்தான்."

 '',நாமும் நமது நோய் நீங்க இறைவனிடம் பிரார்த்திக்குமுன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து பாவமன்னிப்பு பெற்றுக் கொள்வோம்.


எல்லாவற்றையும்விட நமது ஆன்ம ஈடேற்றம் தான் நமக்கு முக்கியம்." 

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment