Saturday, September 4, 2021

"மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" (லூக்.6:5)

"மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்"  (லூக்.6:5)

ஒரு ஒய்வு நாளன்று இயேசுவும், சீடர்களும் விளைச்சல் வழியே
சென்று கொண்டிருந்தார்கள்.

 சீடர்களுக்குப் பயங்கரப் பசி.

இயேசு நற்செய்தி அறிவிப்பதிலேயே குறியாக இருந்ததினால், சாப்பாட்டைப் பற்றி கவலைப்பட மாட்டார்.

கிடைக்கிற உணவை, கிடைக்கிற நேரத்தில், கிடைக்கிற   இடத்தில் சாப்பிடுவார்.

 உணவு கிடைக்காவிட்டால் , பட்டினிதான்.

 சில சமயங்களில் பசியுடனே ஊருக்கு ஊர் நடந்து போக வேண்டியிருக்கும்.

ஒரு முறை பசியோடு நடந்து கொண்டிருக்கும்போதுபோது இயேசு ஒரு அத்தி மரத்தில்  காய்கள்  உள்ளனவா என்று பார்த்தார்.

காய்கள் இல்லை. அந்தப் பொழுது பட்டினிதான்.

சீடர்கள் எப்போதும் இயேசுவுடனே இருந்ததால் அவருக்கு சாப்பாடு கிடைக்கும் போதுதான் அவர்களுக்கும் கிடைக்கும்.

 அல்லது அவரைப் போல பட்டினிதான்.

விளைச்சல் வழியேசென்று கொண்டிருந்தபோது பசியைத் தாங்க முடியாமல் சீடர்கள்
கதிர்களைக் கொய்து கையில் கசக்கித் தின்றனர். 

பரிசேயருள் சிலர், "ஓய்வுநாளில் செய்யத் தகாததை நீங்கள் செய்வதேன்?"
என்று கேட்டனர்.


அக்கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில் ,

தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபொழுது, 

கடவுளின் இல்லத்தில் நுழைந்து
செய்ததை சுட்டி காண்பித்துவிட்டு,

"மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" என்றார்.

பரிசேயர்களுடைய கருத்துப்படி இயேசுவின் சீடர்கள் கதிர்களை கொய்தது அறுவடைக்கு சமம்,

 அவற்றை கையால் கசக்கியது மில்லில் அவற்றை குத்தியதற்குச்
 சமம். ஆகவே அது ஓய்வுநாளில் செய்யக்கூடாத வேலை.

"ஒய்வு நாளைப் பரிசுத்தமாய்க் கொண்டாட நினைவு கூர்வாயாக.

 ஆறு நாளும் நீ வேலை செய்து உன் தொழிலுக்கடுத்த காரியங்களை எல்லாம் நடத்துவாயாக.

 எழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவரின் ஓய்வு நாளாய் இருப்பதனால், 

அன்று நீயாவது, உன் மகன் மகளாவது, உன் வேலைக்காரன் வேலைக்காரியாவது, உன் மிருகங்கள் அல்லது உன் வாயில்களில் இருக்கிற அந்நியனாவது யாதொரு வேலையும் செய்ய வெண்டாம்."

என்று மோயீசன் கொடுத்த சட்டத்தில் உள்ள

 "யாதொரு வேலையும் செய்ய வெண்டாம்."

வார்த்தைகளுக்கு 

பரிசேயர்கள் தங்கள்   இஷ்டம் போல் பொருள் கொடுத்து,

அதை மக்கள்மேல் சுமத்தியிருக்கிறார்கள்.

மோயீசன் கொடுத்த மூன்றாவது கட்டளையின் நோக்கம்

 ஓய்வுநாளை ஆண்டவருக்காக மட்டும் செலவழிக்க வேண்டும் என்பதுதான்.

அன்று மக்கள் தங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய வேலைகளை செய்யாமல் 

கடவுளுக்கு மகிமை தரக்கூடிய காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும் என்பது கட்டளையின் நோக்கம்.

கதிர்களை கொய்து கசக்கித் தின்பது ஒரு வேலையே அல்ல, 

அதிலும் இறைவனுக்கு பணி செய்யும் போது ஏற்பட்ட பசியை நீக்கவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். 

"மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்"

சீடர்கள் ஓய்வுநாளில்  ஆண்டவராகிய இயேசுவின் பணியில் ஈடுபட்டிருக்கும்போது 

அதன் காரணமாக ஏற்பட்ட பசியை நீக்க அவர்கள் செய்தது இறைபணியில் ஒரு பகுதிதான்.

அவர்களது பசிக்கு காரணமே இறைமகன் இயேசுவோடு அவர்கள் சாப்பிடாமல் சென்றதுதான்.

பசி காரணமாக அவர்கள் மயங்கி விழுந்திருந்தால் அவர்கள் செய்துகொண்டிருந்த இறைப்பணியை அது பாதிக்கும்.

தான் கடவுள் என்பதையும் சீடர்கள் தனது பணியில்தான் உள்ளார்கள் என்பதையும் பரிசேயர்களுக்கு சுட்டி காண்பிக்கவே 

"மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்"

என்று ஆண்டவர் சொன்னார்.


இயேசுவின் இந்த கூற்றை  நமது தியானத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

பழைய ஏற்பாட்டின் காலத்தில் சனிக்கிழமை ஓய்வுநாளாக இருந்தது.

இயேசுவின் சீடர்களாகிய நமக்கு அவர் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாக இருக்கிறது,

ஞாயிற்றுக்கிழமை ஆண்டவருடைய நாள்.

ஆகவே அதை நாம் ஆண்டவருக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இப்போது ஒரு கேள்வி எழலாம்.


நாம் ஆண்டவருக்காக தானே வாழ்கிறோம்,

 அப்படியானால் நமது வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு தானே சொந்தம்,

 குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையை மட்டும் ஆண்டவருடைய நாள் என்று ஏன் சொல்கிறோம்?

உண்மைதான்.

 நாம் ஆண்டவருக்கு சொந்தம்
 என்றால் நமது வாழ்க்கையும் ஆண்டவருக்கு தான் சொந்தம்.

 அதில் சந்தேகம் ஏதும் இல்லை.

 ஆனாலும் ஆண்டவர் நம்மை படைத்து உலகில் வாழ விட்டிருக்கிறார்.

 நமது வாழ்க்கையை உடலைச் சார்ந்த வாழ்வு, ஆன்மீக வாழ்வு என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்.

 உடலைச் சார்ந்த வாழ்வையும் ஆண்டவருக்காகவே வாழ்கிறோம்.

 ஆனாலும்  உடலைச் சார்ந்த வாழ்வில் நமது உடல் சம்பந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறோம்.

ஆன்மீக வாழ்வில் ஆன்மாவிற்கு தேவையான தேவைகளை பூர்த்தி செய்கிறோம். 

உடல் சம்பந்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும்  உடலைச் சார்ந்த வாழ்வும்,

ஆன்மாவின் தேவைகளை பூர்த்தி செய்யும்  ஆன்மீக வாழ்வும்

சேர்ந்தே பயணிக்கின்றன, உடலும் ஆன்மாவும் சேர்ந்து பயணிப்பது போல்.

உடல் ஆன்மாவுக்காக வாழ்வது போல்,

 உடலைச் சார்ந்த வாழ்வும் ஆன்மிக வாழ்வுக்கு உறுதுணையாக வாழப்படுகிறது.

உடலைச் சார்ந்த வாழ்வையும் ஆன்மீக நலனுக்காகவே வாழ்வதால் நாம் வாழ்வது ஆன்மீக வாழ்வு தான்.

இது நமது வாழ்க்கையைப் பற்றிய பொதுவான உண்மை.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழுக்க முழுக்க ஆண்டவருக்காக மட்டுமே வாழ வேண்டும்,

அன்று நாம் சமைப்பதும் உண்பதும்கூட ஆண்டவருக்கான வாழ்வுக்கு உதவிகரமாய் இருக்கவே.

நாம் ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலியில் ஈடுபட்ட உடனேயே  ஆண்டவருக்கான வாழ்வு பூர்த்தியாகி விட்டது என்று நினைக்கிறோம்.

திருப்பலி ஆண்டவருக்கான
வாழ்வில் ஒரு பகுதிதான்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதையும் செபம், தவம், தர்மம், ஞான வாசகம், ஞான உரையாடல், தியானம் போன்ற ஆன்மீக காரியங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் சுகம் இல்லாதவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவது, 

உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடுப்பது,

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்பது,

ஆண்டவரை அறியாதவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பது 

போன்ற நற்பணிகளும் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவருக்கான வாழ்வில் இடம் பெற வேண்டும்.

மீதி ஆறு நாட்களில் நாம் பார்க்கின்ற சொந்த வேலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமையில் இடமில்லை.

T.V., Smart phone போன்ற பொழுதுபோக்கு சாதனங்களுக்கு  அன்று  முழு  விடுமுறை கொடுத்து விட  கொடுத்துவிட வேண்டும்.

ஆண்டவருடைய நாளை  அவருக்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment