Tuesday, September 21, 2021

"நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"(மத்.9:13)

"நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"
(மத்.9:13)

"ஏங்க, ஒரு சந்தேகம் கேட்கலாமா?"

"சந்தேகம் வேண்டுமா? விளக்கம் வேண்டுமா?"

"சந்தேகத்துக்கு விளக்கம்."

"சரி. கேள்."

"இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்?"

"பாவிகளைத் தேடித்தான்."

"அப்போ நல்லவங்க அவருக்கு வேண்டாமா?'

", யார் சொன்னா?"


"அவர்தான். நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"னு அவர்தான சொல்லியிருக்காரு!"

", ஹலோ! கொஞ்சம் கவனி.
இயேசு சொன்னது பரிசேயர்கள் கேட்ட கேள்விக்கு பதில்.

பரிசேயர்கள் என்ன கேட்டார்கள்?"

"உங்கள் போதகர் ஏன் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்கிறார்?"

"அதற்கு பதிலாகத்தான் இயேசு சொல்கிறார்,

 "நான் பாவிகளை தேடித்தான் உலகிற்கு வந்தேன். ஆகவேதான் பாவிகளோடு உண்கிறேன்."

"ஆனால் 

'நீதிமான்களை அன்று' ஏன் சொல்கிறார்? அவருக்கு நீதிமான்கள் தேவை இல்லையா?"

", இபேசுவின் முன்னால் இரண்டு வகையான மக்கள் நிற்கிறார்கள்.

1.பாவிகள் என்று கருதப்பட்ட வரிதண்டுபவர்கள்.

2.சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பலி செலுத்துவதால் மட்டுமே தங்களை நீதிமான்கள் என்று எண்ணி கொண்டிருக்கும் இரக்கமில்லாத, வெளி வேடக் காரர்களாகிய பரிசேயர்கள்.

இயேசுவைப் பொறுத்தமட்டில் பாவிகள் எங்க வார்த்கை ஆதாம் ஏவாளின் வம்சத்தினர் அனைவருக்கும் பொருந்தும்.

மனுக் குலத்தைச் சேர்ந்த அனைவரையும் தேடியே இயேசு உலகிற்கு வந்தார்,  ஏனெனில் அனைவருமே பாவிகள்தான்.

அந்த வகையில் இயேசு  வரிதண்டுப்வர்களையும், பரிசேயர்களையும் பாவத்தில் இருந்து மீட்கவே உலகிற்கு வந்தார்.

பரிசேயர்களுடைய தவறான எண்ணத்தைச் சுட்டிக் 
காண்பிக்ககவே,

இயேசு "நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"
என்றார்.

அதாவது இயேசுவுக்கு ஏற்றவர்கள் 
தங்களை  பாவிகள் என்று ஏற்றுக் கொள்பவர்கள்தான்,

தனக்கு நோய் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்பவன்தான் குணமாக முடியும். நோயை ஏற்றுக் கொள்ளாதவன் அதிலேதான் மடிய நேரிடும்.

அப்படிப்பட்டவர்களை மருத்துவரால் எதுவும் செய்ய இயலாது.

பாவத்திற்கான மருத்துவராகிய தன்னால் நோயை ஏற்றுக்கொண்ட பாவிகளை மட்டுமே குணமாக்க முடியும்,

 பாவ நோயை ஏற்றுக்கொள்ளாத பரிசேயர்களை அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தவே இயேசு அப்படிச் சொன்னார்.

பரிசேயர்கள் தாங்கள் கடவுளுக்கு பலி செலுத்தியதால் மட்டுமே நீதிமான்கள் ஆகி விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சாதாரண மக்கள்மீது இரக்கப்படவில்லை.

ஆனால் கடவுள் விரும்புவது இரக்கத்தை, இரக்கம் கலவாத பலிகளை அல்ல.

பாவிகள் மீது இரக்கப்பட்டு  அவர்களை மீட்டு நிலை வாழ்வுக்கு அழைத்து செல்வதற்காக இயேசு உலகிற்கு வந்தார். அந்த நோக்கத்தோடுதான் அவர்களோடு பழகுகிறார்.

ஏழைகள் மீது இரக்கம் இல்லாமல் பலியை மட்டுமே நம்பி தங்களை நீதிமான்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களோடு உண்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

He says He did not come to wine and dine with the self-righteous but to save sinners, make them repent and bring them to eternal life.


"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் " என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக் கொள்ளுங்கள். 

ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"

இயேசு வெறும் பலியை விரும்பவில்லை.

இரக்கத்தையே விரும்புகிறார்.

இயேசு மனுக்குலத்தின் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே தன்னை சிலுவையில் பலியாக்கினார்.

நாம் இரக்க சிந்தனையோடு திருப்பலியில் கலந்து கொண்டால்தான் அதன் முழு பலனை அடைய முடியும்.

திருப்பலியில் கலந்து கொள்வதில் உள்ள ஆர்வம் நமது அயலானுக்கு இரக்கச் செயல்கள் புரிவதிலும் இருக்க வேண்டும்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம்.

இறைவன் நம்மீது இரக்கம் காட்டுவது போல நாமும் நமது அயலான் மீது இரக்கம் காட்டுவோம்.

இரக்கம் காட்டுபவர்களே இறைவனுக்கு ஏற்றவர்கள்.

நம்மைத் தேடிவந்த இறை மகனுக்கு ஏற்றபடி வாழ்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment