Sunday, August 30, 2020

இறை நம்பிக்கை இல்லாத அறிவியலில் முழு உண்மை இருக்க முடியாது.

இறை நம்பிக்கை இல்லாத அறிவியலில் முழு உண்மை இருக்க முடியாது.
*****************************************

தமிழில் உள்ளத்தில் இருப்பது உண்மை..(உள் + மெய்)
.
உள்ளத்தில் இருப்பதை அப்படியே சொன்னால் அது வாய்மை. (வாய்+மெய்)


மனதில் உள்ளதை உள்ளபடியே பேசுகின்றவனை உண்மை பேசுகிறான் என்போம்.

பார்த்ததை பார்த்தபடியே பேசுகிறவன்  உண்மை பேசுகிறானா?

அவனுடைய மனதில் பட்டதை சொல்வதால் அவன் அளவில் அவன் உண்மையை பேசுகிறான்.

ஆனால் பார்க்கப்பட்ட பொருளின் அடிப்படையில் அவனது கூற்று உண்மையா? உண்மை இல்லையா?

பார்க்கப்பட்ட பொருளின் வெளிப்புறத்தைதான் அவனால் பார்க்க முடியும்,

அவன் சொன்னது உண்மையாய் இருக்கலாம்.

 அவனது கூற்று உண்மையாய் இருக்கவேண்டிய அவசியமில்லை.

 

"நான் இரவில் அந்த வழியே வரும்போது வழியில் ஒரு பாம்பைப் பார்த்தேன்."

ஆனால் இரவில் கயிறு கூட பாம்பு போல் தெரியும். ஆகவே அவனது கூற்று தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உலகில் வாழும் நாம் இந்த உலகத்தைப் பற்றியும் அது இருக்கும் பிரபஞ்சத்தைப் பற்றியும் அறிய விரும்புகிறோம்.

விஞ்ஞானிகள் பூமியைப் பற்றியும்,

அதில் வளரும் தாவரங்கள் பற்றியும்,

 உயிரினங்களைப் பற்றியும்

 அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

அறிவியல் ஆராய்ச்சிகளினால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் மனிதனின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை செய்திருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்புகளின் வழியாக 

மனிதனின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் நன்மைகளை விட தீமைகளை அதிகம் விளைவித்திருக்கின்றன  என்பது யாவரும் அறிந்த உண்மை.

காரணம்?

விஞ்ஞானிகளின் அரைகுறை ஆராய்ச்சி.

விஞ்ஞானிகள் முழுமையான ஆராய்ச்சி செய்திருந்தால்

 இன்று உலகை வாட்டிக் கொண்டிருக்கும் தீமைகளான  
அணு ஆயுதங்கள்,
சமாதானமின்மை,  
யுத்தத்தினால் ஏற்படும் அழிவு 
மனித உடலில் ஏற்படும் அநேக நோய்கள்  ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.

எப்படி அரைகுறை ஆராய்ச்சி?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்  ஆகிய ஐந்தும் உயிர் இல்லாத சடப் பொருள்கள்.

தாவரங்கள், பிராணிகள் உயிர்  உள்ள
சடப் பொருள்கள்.

மனிதனுக்கு ஆன்மாவும் இருக்கிறது.

உயிருள்ளவை தாமே இயங்கும் வளரும் இனப்பெருக்கம் செய்யும்.

உயிரற்றவை தாமாக இயங்காது வளர்ச்சி அடையாது இனப்பெருக்கம் செய்யாது.

ஆனாலும் உயிருள்ள சடப் பொருள்களும் உயிரற்ற சடப் பொருள்களால் ஆனவைதான்.
உயிர் சடப்பொருள் இல்லாத extra.

ஒரு மிருகத்தை வெட்டி ஆராய்ந்து பார்த்தால் அங்கே நிலத்திலுள்ள கனிமங்கள் இருக்கும்,

 நீர் இருக்கும்,

 காற்று இருக்கும். 

ஆனால் வெட்டிய உடனே உயிர் பிரிந்து விடும்.

விஞ்ஞானிகளால் கனிமங்களையும் தண்ணீரையும் , காற்றையும் ஆராய்ச்சி செய்ய முடியும். ஆனால் உயிரை ஆராய்ச்சி  செய்ய முடியாது.

 உயிர் வாழ்வன பற்றி விஞ்ஞானிகள் செய்யும் எந்த ஆராய்ச்சியும் முழுமையான ஆராய்ச்சியாக இருக்க முடியாது.

நமது பூமி மட்டுமல்ல

  பிரபஞ்சத்தில் உள்ள எல்லா விண்மீன்களும் கோள்களும் 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்  ஆகிய ஐந்தும் உயிர் இல்லாத சடப் பொருள்களால் ஆனவைதான்.

உயிருள்ள பொருள்  தானே இயங்கும்,

 உயிரில்லாத பொருள்   தானே இயங்க முடியாது.

அப்படியானால் பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்களும்,  கோள்களும் 
தாங்களாகவே இயங்க முடியாது.

 அவற்றால் இனப்பெருக்கம் செய்யவும் முடியாது.

ஆனாலும் அவையெல்லாம் இயற்கையின் மாறாத விதிகளுக்கு கட்டுப்பட்டு 

ஒழுங்காக 

கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

விஞ்ஞானிகள் பிரபஞ்சம் தோன்றி 
13.8 billion ஆண்டுகள் ஆகின்றன என்று கூறுகிறார்கள்.

இத்தனை ஆண்டுகளாக பிரபஞ்சம் இயற்கை விதிகளக்கு கட்டுப்பட்டு இயங்குவதால் தான் இவர்களால் இதை கண்டுபிடிக்க முடிந்தது.

பிரபஞ்சத்திற்கு உயிர் இல்லை.

 ஆனாலும் அது இயற்கை விதிகளுக்கு கட்டப்பட்டு இயங்குகிறது.


விஞ்ஞானிகள் தங்களது சிந்தனா சக்தியைச் சரியாக பயன்படுத்தியிருந்தால் 
ஒரு உண்மையைக் கண்டுபிடித்திருப்பார்கள்.

 பிரபஞ்சத்தை அதற்கு வெளியே இருந்து ஒரு சக்தி இயக்கிக் கொண்டிருக்கிறது.

பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தூரம் பரவிக்கிடக்கும் இப்பிரபஞ்சத்தை 

இயக்க வேண்டிய வேண்டுமானால்

 அந்த சக்திக்கு அளவு கடந்த சக்தி இருக்க வேண்டும்,

 இயற்கையின் விதிகளை (laws of nature) அந்த சக்தி தான் வகுத்திருக்க வேண்டும்,

 பிரபஞ்சத்தையே அந்த சக்திதான் படைத்திருக்க வேண்டும்.

பிரபஞ்சம் தானாகத் தோன்றியிருக்க முடியாது.

சாதாரண புத்தியுள்ள மனிதருக்கு கூட தெரியும் கடவுள்தான் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்து உயிர்வாழ் பிராணிகளையும் படைத்தவர் என்று.

பிரபஞ்சம் உருவம் உள்ளது,

 காலத்திற்கும் (time) இடத்திற்கும் (Space)  உட்பட்டது.

அதாவது அதற்கு துவக்கமும் உண்டு முடிவும் உண்டு.

அது இடத்தை அடைத்துக்கொள்ளும்.
(It occupies space)

ஆகவே அதைப் படைத்து,

 இயக்கும் கடவுள் 

உருவமற்றவர் ஆகவும், 

காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவர் ஆகவும், 

துவக்கமும், முடிவும் இல்லாதவராகவும்,

சர்வ வல்லவராகவும் இருக்க வேண்டும்.

அறிவியல் மட்டும்தான்  உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் 

கடவுளை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால்தான் 

அவர்களுடைய ஆராய்ச்சி அரைகுறை ஆகிறது.

சடப் பொருள்களின் அமைப்பு

 (பௌதிகம், ரசாயனம், தாவரவியல், உடலியல்) 

பற்றிய அவர்களுடைய ஆராய்ச்சி உண்மையாய் இருக்கலாம்.

 ஆனால் அவற்றின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் உண்மை இல்லை.

கடவுள் நம்பிக்கை இல்லாத விஞ்ஞானிகளுக்கு ஒழுக்க நெறிகள் (Moral laws) பற்றி கவலை இல்லை. 

 ஆகவேதான் அவர்களுடைய கண்டுபிடிப்புகள் மனிதனுடைய  அழிவுக்கு  காரணமாக இருக்கின்றன.

உலகப் போரின்போது அணு குண்டுகளால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை மனித இனம் மறக்காது.

கொரோனாவுக்குப் பயப்படும் அரசுகள் ஏன் அணுகுண்டுகளை வைத்திருக்கின்றன?

இரண்டாம் உலகப் போரில் மட்டும் 60 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டிருக்கின்றனர்.

Over 60 million people died in World War II.

20ம் நூற்றாண்டில் மட்டும் போர்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 108 million!

இப்போது சொல்லுங்கள் அதிகமான மனித இன அழிவிற்கு காரணமானவர்கள்

அணு ஆயுதங்களைக் கண்டு பிடித்த விஞ்ஞானிகளா, ஆயுதங்களை வைத்திருக்கும் அரசுகளா, கொரோனாவா?

மனிதன் சடப் பொருளாகிய உடலும் ஆவிப் பொருளாகிய ஆன்மாவும் சேர்ந்தவன்.

ஆன்மாதான் உடலை  இயக்குகிறது.

ஆன்மாதான் சிந்திக்கிறது.

உடலை ஆள்வது ஆன்மாவின் எண்ணங்கள் தான்.

எண்ணங்களுக்கு உருவம் இல்லை.

உருவமில்லாத எண்ணங்களால் தான் உருவமுள்ள உடல் இயங்குகிறது.

இது பிரபஞ்சத்திற்கும் பொருந்தும்.

உருவம் உள்ள பிரபஞ்சத்தை 
உருவம் இல்லாத கடவுள் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆதிகாரணராகிய அவர் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணமாக இருக்கிறார்.

அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கை இருந்தால்தான்

 தங்களது  ஆராய்ச்சியால்

 கடவுளுடைய பிள்ளைகளுக்கு

 எந்தவித ஆபத்தும் இல்லாதபடி பார்த்துக்கொள்வார்கள். 

மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.

"நானே உண்மை" (I am the Truth.) என்றார் நம் ஆண்டவர்.

உண்மை மயமான இறைவனை நம்புபவர்களால்தான்   

அவரது படைப்பு பற்றிய முழு உண்மையையும் அறிய முடியும்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள்  அரைகுறை உண்மையைத்தான் கண்டுபிடிக்க முடியும்.

பொய்யை விட அரைகுறை உண்மை அதிக ஆபத்தானது,

 இறை நம்பிக்கை இல்லாத அறிவியலில் முழு உண்மை இருக்க முடியாது.

இறைவனை நம்புங்கள். அப்புறம் ஆராய்ச்சி செய்யுங்கள்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment