Wednesday, August 12, 2020

தேனினும் இனியவை இறை வார்த்தைகள்.

தேனினும் இனியவை
இறை வார்த்தைகள்.
***"*************************************

"டேய் கொஞ்சம் பொறு. ஏன் இவ்வளவு வேகமா சாப்பிடுகிறாய்?

நாக்கில், படாமலேயே விழுங்குகிறாய்?"

"ஸ்கூலுக்கு நேரம் ஆகிவிட்டது. அப்பா."

"இங்கே பாரு. சாப்பாட்டை பல்லினால் நன்கு மென்று, நாவினால் ருசித்துச் சாப்பிட வேண்டும்.

நாவினால் ருசித்துச் சாப்பிட்டால்தான் நாவில் சீரண நீர் சுரந்து, உணவு சீரணமாகும்.

நீ சாப்பிடுகிறமாதிரி சாப்பிட்டால் சாப்பாடு சீரணம் ஆகாது. உடலில் சத்து எதுவும் ஏறாது."

"உண்மைதான். ஆனால் நீங்கள் சொல்ற மாதிரி சாப்பிட்டால் School bus   போய்விடும்.

அப்புறம் நடந்து போகவேண்டியதிருக்கும். நான் School க்குப் போகும்போது எல்லோரும்     வீட்டுக்குப் போயிருப்பாங்க''

."காலையில் பைபிள் வாசிச்சியா"

"வாசித்தேன்."

"இன்றைய இறைவார்த்தை உனக்கு உணர்த்திய இறைச் செய்தி என்ன?"

"School க்கு time ஆய்ட்டு அப்பா."

"செய்தியைச் சொல்லிவிட்டுப் போ."

"மறந்து போச்சப்பா."

இந்தப் பொடியனை மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள்.

நிறைய வாசிப்பார்கள், மனதில் ஒன்றும் தங்காது.

நிறைய கேட்பார்கள், ஆனால் காதில் ஒன்றும் நுழையாது.

நிறைய உழைப்பார்கள், ஆனால் பயன் ஏதும் இருக்காது.

இனிப்பு சாப்பிடுவார்கள், ஆனால் இனிக்காது.

ஏன்?

"செய்வன திருந்தச் செய்."  என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

செய்யவேண்டியதை எப்படிச் செய்ய வேண்டுமோ, அப்படிச் செய்தால்தான் செய்தது பயன்தரும்.

ஏனோதானோ என்று செய்தால் செய்தது எல்லாம் waste.

இறைவார்த்தை உயிருள்ளது.
வாசித்தவர்களை இயக்கி, முன்னேறச் செய்வது.

இறைவார்த்தை இனிமையானது. தியானிக்கத் தியானிக்க உள்ளத்திற்குச் சுவையைத் தரக்கூடியது.

அந்தச் சுவை நம்மை இடைவிடாது தியானிக்கத் தூண்டும்.

இறைவார்த்தை கனி தரக்கூடியது.
அது நற்செயல்களாகிய கனிகளைத் தந்து கொண்டே இருக்கும்.

ஒழுங்காக வாசித்து தியானித்தால் நம்மைப் புனிதர்களாக மாற்ற ஒரே ஒரே இறைவார்த்தை போதும்.

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?" (மத்.16:26,)

இந்த ஒரு வசனம்தான் புனித சவேரியாரைப் புனிதராக மாற்றியது.

"என் பின்னே வாருங்கள்: உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்"
(மத். 4:19)
என்ற ஒரே வார்த்தைதான்

இராயப்பரையும் ,  பெலவேந்திரரையும் புனிதர்களாக மாற்றியது.

ஒரு விதை முளைத்து வளர வேண்டுமானால், அது பூமிக்குள் விழ வேண்டும்.

பூமியின் மேல் விழுந்தால், வானத்துப் பறவைகள் வந்து கொத்திக் கொண்டு போய்விடும்.

அதேபோல் நாம் வாசிக்கும், அல்லது கேட்கும் இறைவார்த்தை மனதிற்குள் ஆழ இறங்க வேண்டும்.

மனதிற்குள் இறங்கினால்தான் அது நமது சிந்தனையையும், செயலையும் தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கும்.

அடிமனதில் இருக்கும் எண்ணங்கள் தான் நமது வாழ்க்கையை இயக்குகின்றன.

இறைவார்த்தையைத் தியானிக்கத் தியானிக்க  அது நமது அடி மனதிற்குள் இறங்கி, நமது ஆன்மீக வாழ்வை இயக்கிக் கொண்டேயிருக்கும்.

நாவில் பட்டும் படாமலும் நாம் விழுங்கும் உணவின் ருசி. நமக்குத் தெரியாது.

அதே போல்தான் மனதில் பட்டும்
  படாமலும் இருக்கும் இறைவார்த்தை மனதிற்கு இனிமையைத் தராது.

மனதிற்குள் இறங்கிய இறைவார்த்தை தியானிக்கத் தியானிக்க இனிமையாய் இருக்கும்.

நம்மை தியானித்துக்கொண்டே இருக்க தூண்டிக் கொண்டே இருக்கும்.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்ற இயேசுவின் வார்த்தையை ஆழ்ந்து தியானித்துக் கொண்டே இருந்தால்

இயேசு நம் தோளின் அருகேயும்,

நமது உள்ளத்திலும்

நம்மோடு இருப்பதை நன்கு உணர்வோம்.

தியானிக்கத் தியானிக்க இந்த உணர்வு அதிகமாகும்.

தாய் அருகில் இருப்பதை உணரும் குழந்தை எதற்கும் பயப்படாது.

இயேசு அருகே இருக்கும் உணர்வு எப்போதும் இருந்தால்

நாம் எதற்கும் அஞ்சமாட்டோம்.

நாம் எப்போதும், ஒவ்வொரு வினாடியும் இயேசுவில், இயேசுவோடு வாழ்கிறோம்.

இன்ப வேளையில் மட்டுமல்ல, துன்ப வேளையிலும் அவர் நமக்குத் துணையும் ஆறுதலுமாய் இருக்கிறார்.

இதை நாம் நன்கு உணரவேண்டுமானால் அவருடைய வார்த்தைகள் நம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும்.

  தினமும் எத்தனை திருவசனங்களை வாசிக்கிறோம் என்பது முக்கியமல்ல,

எப்படி வாசிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

Quality is more important than quantity.

"தினமும் எத்தனை அதிகாரங்கள்  வாசிக்கிறாய்? பைபிளை  எத்தனை முறை Cover to Cover  வாசித்திருக்கிறாய்?"
என்றெல்லாம் இயேசு கேட்கமாட்டார்.

"என் வார்த்தையை எப்படி வாழ்ந்திருக்கிறாய்" என்றுதான் கேட்பார்.

தாய்த் திருச்சபை தினசரி வாசகக் குறிப்புகளை நமக்குத் தந்திருக்கிறது.

அவற்றின்படி வாசித்து, 'வாழ்ந்தாலே' போதும்.

'வாழ்ந்தாலே' underlined.

நிறைய வாசிப்பதுவும் நல்லதுதான், வாழப் பயன்பட்டால்.

Mutton சத்துள்ள உணவுதான். அது ஜீரணித்தால்தான் சத்து உடலில் சேரும்.

இறைவார்த்தை  உயிர் உள்ளதுதான்,

அது நமது ஆன்மாவோடு கலந்து, அதை இயக்கினால்தான் நமக்குப் பயன்.

இறைவார்த்தை நமது ஆன்மீக உணவுதான்.

அதன் இனிமையை உணர வேண்டுமானால் அது நம் ஆன்மாவிற்குள் இறங்க வேண்டும்.

இறைவார்த்தையை

வாசிப்போம்,

யோசிப்போம்.   

வாழ்வாக்குவோம்.

நிலை வாழ்வு பெறுவோம்.

லூர்து செல்வம்.




No comments:

Post a Comment