Wednesday, July 1, 2020

எல்லா விக்கிரகங்களும் உருவங்கள்தான்.ஆனால் எல்லா உருவங்களும்விக்கிரகங்கள் அல்ல.

எல்லா விக்கிரகங்களும் உருவங்கள்தான்.

ஆனால் எல்லா உருவங்களும்
விக்கிரகங்கள் அல்ல.
************************************

"நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.

4 மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

5 அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்."
(யாத். 20:3-5)

கடவுள் தனது வார்த்தை மூலம் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை:

"நான் உன் கடவுள். நான் மட்டுமே உனது ஆராதனைக்கு உரியவன்.

நீ உனது கற்பனைப்படி ஏதாவது ஒரு உருவத்தை அல்லது 
விக்கிரகத்தை
செய்து வைத்துக் கொண்டு

அதை கடவுள் என ஏற்றுக் கொண்டு,

அதற்கு ஆராதனை செய்யாதே."

இது இறை வார்த்தையின் பொருள்.

நம்மைப் படைத்த கடவுளை விட்டு விட்டு

விக்கிரகத்தை கடவுள் என எண்ணிக்கொண்டு
அதை ஆராதிப்பதுதான் விக்கிரக ஆராதனை.

ஆராதனை இறைவனுக்கு மட்டுமே உரியது.

அதை விக்கிரகங்களுக்குக் கொடுப்பது விக்கிரக ஆராதனை.

So,

ஆராதிப்பதற்கென்று செய்யப்படும் உருவமே விக்கிரகம்.

செய்யப்படும் எல்லா உருவங்களும் விக்கிரகங்கள் அல்ல.

சாதாரண பேச்சு வழக்கில் சொல்ல வேண்டுமென்றால்,

வசிப்பதற்கென்று கட்டப்படும் கட்டடம் வீடு.

House is the building, where we live.

எல்லாக் கட்டடங்களும் வீடு அல்ல.

அதே போல்தான்

ஆராதிப்பதெற்கென்று செய்யப் வரும் உருவமே விக்கிரகம்.

எல்லா உருவங்களும் விக்கிரகம் அல்ல.

உருவம் என்ற வார்த்தையின் பொருளைப் புரிந்து கொண்டால் இது விளங்கும்.

நமக்கு உருவம் இருக்கிறது, நாம் பேசும் பேச்சுக்கு உருவம் இல்லை.

நாம் கண்ணால் பார்க்க முடிந்ததைத்தான் உருவம் என்போம்.

நமது பேச்சைக் கேட்க முடியும், பார்க்க முடியாது.

நமது பேச்சைப் பார்க்க வேண்டு மென்றால் அதற்கு முதலில்  உருவம் கொடுக்க வேண்டும்.

அந்த உருவம்தான் எழுதப்படும் எழுத்து.

நமது எண்ணங்களை நம்முடன் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்ள உருவம் இல்லாத பேச்சு போதும்.

ஆனால், இன்னும் பிறக்காத நமது சந்ததியாரோடு  நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உருவம் உள்ள எழுத்து கட்டாயம் வேண்டும்.

நமது எழுத்து ஒரு உருவம், விக்கிரகம் அல்ல.

(ஆராதிப்பதற்காக எழுத்தை உருவாக்கவில்லை)

இறை வார்த்தைக்கு உருவம் இல்லை.

இறைவனுக்கு உருவம் இல்லை.
அவரை நமது ஊனக்கண்ணால் பார்க்க முடியாது.

அவருக்கு உருவம் இல்லாததால் நமக்கு இருப்பது போல உருவம் உள்ள வாயும் இல்லை.
ஆகவே நம்மைப் போல அவரால் பேசமுடியாது.

அப்படியானால் உருவம் இல்லாத அவரது வார்த்தையை எப்படி நமக்கு அறிவித்தார்?

பைபிளில் இரண்டு பிரிவுகள் உள்ளன.

பழைய ஏற்பாடு.

புதிய ஏற்பாடு.

பழைய ஏற்பாட்டிலுள்ள இறைவார்த்தையை இறைவன் தீர்க்கத்தரிசிகள் வழியாக நமக்கு
அறிவித்தார்.

தீர்க்கத்தரிசிகளுக்கு அகத் தூண்டுதல்கள் (Inspirations) மூலம் பரிசுத்தஆவியானவர்
இறைவார்த்தையைத் தெரிவிக்கிறார்.

அதனால்தான் வேதாகமம் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்கிறோம்.

தீர்க்கத்தரிசிகள் பரிசுத்த ஆவியின்   அகத் தூண்டுதல்களை (Inspirations) நமக்கு எழுத்து வடிவில் தந்திருக்கிறார்கள்.

அதாவது உருவம் இல்லாத இறைவார்த்தை தீர்க்கத்தரிசிகள் மூலம் உருவம் பெற்றது.

அந்த உருவம் புத்தக வடிவில் நமக்குத் தரப்பட்டுள்ளது.

நாம் பைபிள் என்று அழைக்கின்ற புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கிற எழுத்துக்கள் இறைவார்த்தையின் உருவம்.

பைபிள் என்ற புத்தகம்
இறைவார்த்தையின் உருவம்.

பைபிள் விக்கிரகம் அல்ல.

புதிய ஏற்பாடு நமது மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வாயின் வழியே வந்த அவரது வார்த்தைகள்.

உருவம் இல்லாத இறைவன் மனித உரு எடுத்து

மனிதரோடு மனிதராக வாழ்ந்து,
தனது நற்செய்தியை அறிவித்தார்.

இயேசு மனிதனாய் பிறந்ததால்  நம்மைப் போலவே வாயினால்  போதித்தார்.

அவரது போதனைக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர்கள் நற்செய்தியாளர்கள்.

நற்செய்தி நூல்கள் இயேசு கிறிஸ்துவின் போதனையின் உருவம்.

புதிய ஏற்பாடு விக்கிரகம் அல்ல.

பைபிள் என்ற புத்தகம் மற்ற புத்தகங்களைப் போலவே சாதாரண பேப்பர்களால் ஆனது.


ஆனாலும் அது இறைவார்த்தையின் உருவமாகையால்

அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோம்.

அதை முத்தி செய்கிறோம்.

வீட்டிலும், கோவிலிலும் அதற்கு ஒரு முக்கியமான இடத்தைக் கொடுக்கிறோம்.

ஆனால் புத்தகத்தை ஆராதிப்பது இல்லை.

பைபிள் இறைவார்த்தையின் உருவம்,

விக்கிரகம் அல்ல.

கணவனின் cell phoneல் மனைவியின் photo.

அது மனைவி அல்ல, அவளுடைய உருவம், photo வடிவில்.

கணவன் வெளியூர் சென்றிருக்கிறான்.

மனைவியைப் பார்த்து, முத்த மாரி பொழியணும் போலிருக்கிறது.

ஆனால் வெளியூரில் இருப்பதால் பார்க்க முடியாது.

ஆகவே cell phone ஐ எடுத்து,

அதில்  photo வடிவில் உள்ள மனைவியின் உருவத்தைப் பார்த்து,  முத்த மாரி பொழிகிறான்.

எதில் பொழிகிறான்?

photo வில்.

யார் மேல் பொழிகிறான்?

மனைவி மேல்.

மனைவியின் உருவம் விக்கிரகம் அல்ல.

அவன் அதற்கு முத்தம் கொடுக்கும்போது அதை ஆராதிப்பதும் இல்லை.

மகன் வெளியூரில் படித்துக் கொண்டிருக்கிறான்.

தாய்க்கு மகனைப் பார்க்க ஆசையாய் இருக்கிறது.

அது விடுமுறையின் போதுதான் முடியும்.

ஆகவே, தாய் தன் cell phoneல் உள்ள மகனின் Photo வைப் பார்க்கிறாள்

ஒரு முத்தம் கொடுக்றாள்.

யாருக்கு?

மகனுக்கு.

Photo மகனின் உருவம். விக்கிரகம் அல்ல.

தாய் photo வை ஆராதிப்பதும் இல்லை.

மாதா பக்தன்.

மாதாவை நேரில் பார்க்க வேண்டுமென்றால் மோட்சத்திற்குச் சென்றபின் தான் முடியும்.

வீட்டில் மாதா சுரூபம் உள்ளது.

மாதாவின் உருவம் சுரூப வடிவில் உள்ளது.

சு௹பத்தைப் பார்க்கிறான். மாதாவிடம் செபிக்கிறான்.

சுருபம் மாதா அல்ல. மாதாவின் உருவம்.

சுரூபத்தின் முன் நின்று மாதாவை நோக்கி செபிக்கிறான்.

மாதா உருவத்தின் பாதத்தைத் தொட்டு முத்தம் கொடுத்தால்,

முத்தம் உருவத்திற்கு அல்ல, மாதாவுக்கு.

மாதாவின் உருவம் விக்கிரகம் அல்ல.

நாம் அதை ஆராதிக்கவில்லை.

வேளாங்கண்ணி   மாதா காட்சி கொடுத்த இடம்.

அங்குள்ள ஆலயத்தில் இயேசு திவ்ய நற்கருணையில் உண்மையிலேயே வீற்றிருக்கிறார்.

அவரை ஆராதிக்கிறோம்.

திவ்ய நற்கருணை உருவம் அல்ல.

இயேசுவே இருக்கிறார்.

ஆகவே, அவரை ஆராதிக்கிறோம்.

ஆலயத்தில் மாதாவின் சுரூபம் இருக்கிறது.

அது மாதா அல்ல, அவளது உருவம்.

மாதா  சுரூபத்தின் காலைத் தொட்டு முத்தம் கொடுத்தால்,

அது சுரூபத்துக்கு அல்ல,
மாதாவுக்கு, நமது தாய்க்கு.

மாதா  சுரூபம் விக்கிரகம் அல்ல.
நாம் அதை ஆராதிப்பதும் இல்லை.

ஆராதனை நற்கருணை நாதருக்கு மட்டுமே.

கத்தோலிக்க ஆலயங்களில் நற்கருணையை மையமாகக் கொண்ட

திருப்பலி, திருவிருந்து
திவ்ய நற்கருணை ஆராதனை,
திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் ஆகியவும்,

விசுவாசிகளின் நற்கருணை வழிபாடுகளுமே

ஆராதனையைச் சேரும்.
கடவுளுக்கு மட்டுமே ஆராதனை.

புனிதர்களை  நோக்கி நாம் செய்யும் செபங்கள்  உரையாடல் வகையை மட்டும் சேர்ந்தவை.

ஞானஸ்நானம் பெற்ற அனைவரும்,

(உலகில் உள்ளவர்கள் + உத்தரிக்கிற ஸ்தலத்தில் உள்ளவர்கள் + மோட்சத்தில் உள்ளவர்கள்)

இயேசுவின் ஞான சரீரத்தின் உறுப்பினர்கள், சகோதர, சகோதரிகள்.

பூமியில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லி உரையாடுவதில்லை?

உரையாடினால்தான் குடும்பம்.

பூமியில் நாம் ஒருவரோடு ஒருவர் உரையாடுவது போல, நாம் விண்ணில் உள்ள நமது சகோதர சகோதரிகளோடும்
உரையாடுகிறோம்.

அந்த உரையாடலுக்கு செபம் என்பது பெயர்.

இறைவனோடு நாம் செய்யும் உரையாடல், அதாவது, செபம் ஆராதனையைச் சேர்ந்தது.

புனிதர்களோடு நாம் உரையாடுவது செபம் மட்டுமே.

புனிதர்களை ஆராதிக்கக் கூடாது.

பூமியில் நாம் ஒருவர் ஒருவருக்கு வணக்கம் சொல்வதில்லை?

புனிதர்களுக்கு வணக்கம் மட்டும் செலுத்திவிட்டு செபிக்கிறோம்.

புனிதர்களோடு உரையாடக் கூடாது என்பவர்கள் குடும்ப உணர்வு இல்லாதவர்கள்.

சுருக்கமாக:

இறைவனுக்கு மட்டுமே ஆராதனை.

புனிதர்களுக்கு வணக்கம் மட்டுமே.

Logic :

எல்லா அரசு ஊழியர்களும் மனிதர்களே.

ஆனால் எல்லா மனிதர்களும் அரசு ஊழியர்கள் அல்ல.

அதேபோல்,

எல்லா விக்கிரகங்களும் உருவங்களே.

ஆனால் எல்லா உருவங்களும்
விக்கிரகங்கள் அல்ல.

Bonus:

எல்லா போதகர்களிடமும் பைபிள் இருக்கும்.

ஆனால், பைபிள் வைத்திருப்பவர்கள் எல்லாம் போதகர்கள் அல்ல.

"போலித் தீர்க்கதரிசிகள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்: உள்ளுக்கோ பறித்துச் செல்லும் ஓநாய்கள்."
(மத். 7:15)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment