Wednesday, July 8, 2020

இயேசுவின் சகோதரர்கள்.Cousin brothers of Jesus.

இயேசுவின் சகோதரர்கள்.
Cousin brothers of Jesus.
.........................................................

இயேசு  

"உன்னைப் போல உன் அயலானையும் நேசி"

என்று நமக்குத் தந்திருக்கும் அறிவுரை,

அவர் தன்னை நேசித்ததுபோல நம்மை நேசிப்பதிலிருந்து பிறந்தது.

இயேசு முதலில் சாதனையாளர்.
தான் சாதித்ததைத்தான் போதித்தார்.

அவர் நம்மை எவ்வளவு நேசித்தார் என்றால்,

தன் தந்தையை நமக்குத் தந்தையாகத் தந்தார்.

தனது தாயையும் நமக்குத் தாயாகத் தந்தார்.

இந்த இரண்டையும் நாம் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோம்.

அதே போல தனது சிலுவையையும் நமக்குச் சிலுவையாகத் தரும்போது மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்!

அதேபோல்தான்

தனது உயிர்ப்பையும் நமக்கு உயிர்ப்பாகத் தருவார்!

தான் வாழும் மோட்சத்தையும் நமது நித்திய வீடாகத் தருவார்.

நாம் எல்லோரும் இயேசுவின் சகோதரர்கள்.

நாம் எல்லோரும் அன்னை மரியின் பிள்ளைகள்,

யாராவது வந்து,

"மரியாளுக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகள் இருந்தார்கள்"

என்று சொன்னால், நாம் துணிந்து,

"இது ஒன்றும் புதிய செய்தி அல்ல.

நாங்கள் எல்லோருமே மரியாளின் பிள்ளைகள்தான்.

மரியாளுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, கோடிக்கணக்கான பிள்ளைகள் இருக்கிறோம்."

என்று சொல்வோம்.

அவர்கள் உடனே,

"இது பைபிளில் எங்கே இருக்கிறது?"

என்று கேட்பார்கள்.

"ஆம்  இருக்கிறது. இயேசுவே சொல்லியிருக்கிறார்."

"ஆதாரம்?"

"மத்தேயு. 12:50.

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார். 


நாங்கள் வானகத்  தந்தையின் விருப்பப்படி நடக்கிறோம். 

ஆகவே நாங்கள் இயேசுவின் 
சகோதர, சகோதரிகள்தான். 

இயேசுவின் சகோதர, சகோதரிகள் என்றால் மரியாளின் பிள்ளைகள்தானே."

சிலர் குடும்பத்தில் இஸ்டம் போல் நடக்க முடியாவிட்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போய் விடுவார்கள்.

போன பின் தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக குடும்பத்தில் உள்ளவர்களைப் பற்றி ஏதாவது குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அப்படித்தான் நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சகோதரர்களும்.


தாய்ப்பற்று இல்லாதவர்களிடம் என்ன சொன்னாலும் புரியாது.

நாம் தாய்ப்பற்று உள்ளவர்கள்.

நமது தாயைப் பற்றி நம்மிடம் வந்து ஏதாவது குறை சொன்னால் பதில் சொல்லாதிருக்க முடியாது.


நாம் நமது தாய் மரியாளை முக்காலமும் கன்னி என்று விசுவசிக்கிறோம்.
 
வெளியே சென்றவர்கள் அதை நம்பாமல் தங்கள் அவநம்பிக்கைக்கு  ஆதாரமாக

 பைபிளிலிருந்து சில வசனங்களை எடுத்து 

அதன் பொருளை தங்கள் அவநம்பிக்கைக்கு ஏற்றபடி திரித்துச் (twist) சொல்வார்கள்.


அப்படி அவர்கள் எடுத்துக் காட்டும் வசனம் :


இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?

56 இவருடைய சகோதரிகள் யாவரும் நம்மிடையே இல்லையா ? பின் இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது ?" என்று சொல்லி, அவரைப்பற்றி இடறல்பட்டனர்."
(மத்.13:55, 56)

"இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?"

இதில் வரும் பெயர்களை  எடுத்துக்கொண்டு,  

"இவர்கள் எல்லாம் இயேசுவின் சகோதரர்கள், 

ஆகவே மரியாளின் மக்கள், இவர்கள் இயேசு பிறந்தபின் பிறந்திருக்க வேண்டும்." என்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் இயேசுவின் சகோதரர்கள்தான், அதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அவர்கள் நினைப்பது 
 இவர்கள் இயேசுவின் தாய் மரியாள் பெற்ற மக்கள் அல்ல.

அவள் முக்காலமும் கன்னி.

இவர்கள்  Cousin brothers.

 நாம் நமது சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா உறவு உள்ளவர்களுடைய மக்களையும் சகோதர, சகோதரிகள் என்று அழைப்போம்.

அதே உறவில்தான் இவர்கள் இயேசுவின் Cousin brothers.

 


"இயேசுவின் சிலுவையருகில்   அவருடைய தாயும், அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்"
(அரு. 19:25)

சிலுவையருகில் நின்றுகொண்டிருந்த மூவர் பேரும் மரியாதான்.

1 மரியாள் - இயேசுவின் தாய்.

2. மரியாள் - தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாள்.  இந்த மரியாளின் மக்கள் தான் யாகப்பன், சூசை, சீமோன், யூதா .

இவர்களில் யாகப்பரும், யூதாவும் இயேசுவின் அப்போஸ்தலர்கள்.

கிலோப்பாவும், அல்பேயும் ஒரே ஆளின் பெயர்கள்.

அப்போஸ்தலர் பட்டியலில்

'அல்பேயின் மகன் யாகப்பர்,'
என்று இருக்கும்.

அல்பேயின் மனைவியின் பெயர் மரியா

யூதா 

'யாகப்பரின் சகோதரர் யூதா,' என்று குறிக்கப் பட்டிருப்பார்.

யூதா தன் நிரூபத்தை இப்படி ஆரம்பிக்கிறார்:

"இயேசு கிறிஸ்துவின் ஊழியனும்,

 யாகப்பரின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது:"
(யூதா .1:1)

அன்னை மரியாள் பெற்றது ஒரே ஒரு பிள்ளைதான், இயேசு மட்டும்தான்.


Power of God Tamil Channel ல் Rev. Fr. Maria Antony O.F.M. Cap.
வழங்கிய 

"கத்தோலிக்கர்களே கவனியுங்கள்"


வரிசையில் பின் வரும் 
link களைக் Click செய்து 

நம் அன்னையைப் பற்றி நாம் அறிய வேண்டிய உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்.



https://youtu.be/jNThn31MwAI

   https://youtu.be/32kot3BIS98


 https://youtu.be/rEZJVzM_Usc


https://youtu.be/su1FjDNFlAA

https://youtu.be/xHYnMGK48TI

https://youtu.be/cVywtoRml1g

நாம் எல்லோரும் அன்னை மரியாளின் பிள்ளைகள் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லுவோம்.

"அருள் நிறைந்த அன்னையே வாழ்க."

லூர்து செல்வம்.

)

No comments:

Post a Comment