Wednesday, July 29, 2020

"உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன்." (அரு. 11:15)

"உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன்." (அரு. 11:15)
**************************************

நான் ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம்:

எங்கள் தலைமை ஆசிரியர் சுவாமியவர்கள், 

எங்கள் psychology ஆசிரியரும் அவர்தான்,

"நாளை உங்களுக்கு outing. எங்கே வேண்டுமென்றாலும் போகலாம். காலை உணவு உண்டபின் போகலாம். சாயங்காலம் 5 மணிக்கு Hostel ல் இருக்க வேண்டும். Attendance எடுக்கப்படும்." என்றார்.

எல்லா மாணவர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

காலை உணவு முடிந்தவுடன் எல்லோருக்கும் மதிய உணவிற்கான பொட்டலம் கொடுக்கப்பட்டது.

எல்லா மாணவர்களும் நல்லா dress பண்ணிக் கொண்டு, தனித்தனியாகவோ, group group ஆகவோ, அவரவர் திட்டப்படி புறப்பட்டோம்.

Gate ல் H.M சுவாமி நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரையும் Gate ல் நிறுத்தினார்கள்.

ஏதோ புதிதாக  Instruction தரப்போகிறார்கள்போல் என்று எண்ணிக்கொண்டு எல்லோரும் நின்றோம்.

சுவாமியவர்கள் இரண்டே வார்த்தைகள்தான் சொன்னார்.

Outing Cancelled!

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு வித உணர்ச்சி.

அமைதியாகத் திரும்பினோம்.

மறுநாள் psychology வகுப்பின் போது சுவாமியவர்கள் கேட்டார்கள்,

"நேற்று outing Cancelled பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னார்கள்.

நான் சொன்னேன்:

"outing அறிவித்தவர்களுக்கு Cancel செய்யவும் உரிமை இருக்கிறது.
நாங்கள் மாணவர்கள். கீழ்ப்படிய கடமை இருக்கிறது." என்றேன்.

எல்லோருடைய பதில்களையும் இரசித்த சுவாமியவர்கள்,

"எதிர் பாராத நிகழ்வுகளுக்கு நீங்கள் எப்படி react பண்ணுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே
Cancel செய்வதற்கென்றே outing ஏற்பாடு செய்தேன். கவலைப்பட வேண்டாம். அடுத்த வாரம் இதே நாள் outing, 
Cancel செய்யமாட்டேன்."

சுவாமியவர்கள் சொன்னதை மாணவர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

ஒரு பையன் மட்டும் சொன்னான்,

"கடவுள் திட்டம் எப்படியோ!"

ஒரு முறை ஒரு பிறவிக் குருடன் பற்றி சீடர்கள்

"இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? 

இவன் செய்த பாவமா? 

இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று  அவரை வினவினர்.

 இயேசு,

 "இவன் செய்த பாவமும் அன்று,

 இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. 

கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்.''

இயேசு அவனைக் குணப்படுத்தினால் இயேசுவின் மாட்சி அவனில் வெளிப்படும்.

இயேசு கடவுள் என்ற உண்மையும் வெளிப்படும்.

அதற்காகவே அவர் திட்டப்படிதான் அவன் குருடனாகப் பிறந்தான்.

பிரபஞ்சத்தில் நடைபெறும் எல்லா செயல்களும், பாவம் தவிர, இறைவன் திட்டப்படியே நடக்கின்றன.

கடவுளுடைய திட்டத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் உண்டு.

இலாசர் நோயுற்றிருந்தான். அவன் இயேசுவின் மேல் மிகுந்த பக்தி உள்ளவன். 

நோயுற்றிருந்த விபரத்தை அவனுடைய சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி,

 "ஆண்டவரே, இதோ! நீர் நேசிக்கிறவன் பிணியுற்றுள்ளான்"

 என்று தெரிவித்தார்கள்.

ஆனால் இயேசு அவனைக் குணமாக்கவில்லை.

இயேசுவோ,

"இப்பிணி சாவில்வந்து முடியாது,

 கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று: 

இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது"

 என்றார்.

இயேசுவுக்குத் தெரியும் இலாசர் இறந்து விடுவான் என்று.

அவரின் திட்டமே அது தானே.

ஆனால் அவர், " இப்பிணி சாவில்வந்து முடியாது"

ஏன் அப்படிச் சொன்னார்?

இலாசர் சுகமில்லாதிருக்க வேண்டும்,

அவன் சாக வேண்டும்.

இயேசு அவனை உயிர்ப்பிக்க வேண்டும்.

இது அவருடைய நித்திய காலத் திட்டம்.

ஆகவேதான்

"சாவில்வந்து முடியாது" என்றார், 

   சாவுக்குப் பின்னும் தொடர வேண்டிய நிகழ்ச்சி உள்ளது என்பதை உணர்த்தவே இவ்வாறு சொன்னார்.

இரண்டு நாள் கழித்துதான் இலாசரைப் பார்க்கப் புறப்படுகிறார்.

அப்போதும்

"நம் நண்பன் லாசர் தூங்குகிறான், அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பச் செல்லுகிறேன்"

என்றுதான் சொல்கிறார்.

 இறந்தவனைத் 'தூங்குகிறான்' என்றார்.

"இயேசு அழுதார் என்று பைபிளில் இருக்கிறது, சிரித்தார்  என்று இல்லை" என்பார்கள்.


ஆனால் 'இறந்தவனைத்' 'தூங்குகிறான்' என்று அவர் சொல்வதில் அவருடைய நகைச் சுவை உணர்வு தெரிகிறது!


அடுத்து,


"உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, 

நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன். 

வாருங்கள், அவனிடம் செல்வோம்" 

என்று தெளிவாகச் சொன்னார்.

இயேசு தெளிவாகச் சொல்கிறார்,


"நான் அங்கு இல்லாமற்போனது

உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டே!"

இப்போது கடவுளின் திட்டம் தெளிவாகத் தெரிகிறது .

கடவுள் என்ன செய்தாலும்  அது நமக்கு விசுவாசத்தைத் தரும் பொருட்டும்,

நமது விசுவாசத்தை ஆழப்படுத்துவதற்காகவும்தான் என்று.

இலாசருடைய மரணத்திலிருந்தும், உயிர் பெற்றதிலிருந்தும் இயேசு தான் சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று  தெளிவு படுத்தியிருக்கிறார்.

அதே சமயம் இயேசு கல்லறையை நெருங்கும்போது

'மனம் குமுறிக் கலங்கி   கண்ணீர் விட்டு' அழுதது

அவர் மெய்யாகவே மனிதனாகவும் இருக்கிறார்  என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 

The Lazer incident proves that Jesus is fully God and fully Man.

இலாசருடைய வாழ்க்கையில் மட்டுமல்ல, 

 நமது  வாழ்க்கையிலும் இறைவனின் திட்டம் செயலில் இருப்பதை அறியலாம்.

நமது வாழ்க்கையில்  நாம் ஒரு திட்டம் போட்டு அது நடக்காவிட்டால் அதற்காக வருத்தப்படக்கூடாது.

இறைவன் நமது நன்மையை மையமாக வைத்து திட்டமிட்டிருப்பார். அதை நிறை வேற்றுவதற்காக நமது திட்டத்தை நிறுத்திவைத்திருப்பார்.

ஆகவே நாம் நினைத்தது நடந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

நடக்காவிட்டாலும் நன்றி கூறவேண்டும்.

ஒரு முக்கியமான அடிப்படை உண்மையை ஞாபகத்தில் வைத்திருந்தால்தான் இறைவனின் நித்திய திட்டம் புரியும்.

நமக்குத் தெரியும் இறைவன் நம்மைப் படைத்தது நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்விற்காக அல்ல 

நிரந்தரமான மறுவுலக வாழ்வுக்காக.

இவ்வுலக சிற்றின்பத்திற்காக அல்ல, 

மறுவுலக பேரின்பத்திற்காக.

நிரந்தர மறுவுலக வாழ்வும், நித்திய பேரின்பமும் நமது ஆன்மாவை மையமாகக் கொண்டவை.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வர திட்டம் தீட்டுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நமது திட்டம் எதை மையமாகக் கொண்டிருக்கும் ?

இந்தியாவில் வந்து இறங்குவதை.

Suppose. இந்தியாவுக்குக் கொண்டு வர நிறைய பொருட்கள் வாங்கி வைத்திருக்கிறோம்.

அப்பொருட்களை கொண்டுவருவதாக இருந்தால் flight ல் ஏற முடியாது என்ற நிலைமை வந்தால்,

இந்திய வருகைக்காக நமது பொருட்களைத் தியாகம் செய்வோமா? 

அல்லது,

பொருட்களுக்காக இந்திய வருகையைத் தியாகம் செய்வோமா? 

விண்ணக வாழ்வுக்காக நம்மைப் படைத்த இறைவன் எதை மையமாகக் கொண்டு திட்டம் தீட்டுவார்? 

விண்ணக வாழ்வையா? அல்லது மண்ணக வாழ்வையா?

ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறேன். 

வேலை கிடைக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.

ஆனால் இறைவன் திட்டம் வேறு மாதிரி இருக்கிறது.

வேலை கிடைக்கவில்லை.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

இந்த வேலை கிடைத்தால் அது எனது மீட்புப் பயணத்தில் இடைஞ்சலாக இருக்கக்கூடும்.

அது கடவுளுக்குத் தெரியும்.

ஆக இறைவனுடைய நித்திய திட்டம்

 நம்மை எந்த நோக்கத்திற்காகப் படைத்தாரோ 

அந்த நோக்கத்தை அடைவதையே மையமாகக் கொண்டிருக்கும்.

இவ்வுலகில் துன்பங்களை அனுபவித்தால்தான் நமது ஆன்மா பரிசுத்தமாகும் என்பது இறைவனது சிததமானால்

அவர் நமக்குத் துன்பங்களை அனுமதிப்பார்.

என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

சிறு குழந்தைக்குத் தன் மேல் உள்ள 
அக்கரையை விட, தாய்க்குக் குழந்தை மீது உள்ள அக்கரை அதிகம்.

அதேபோல்,

நாம் நம் மீது கொண்டிருக்கும் அக்கரையை விட 

இறைவன் நம் மீது 
கொண்டுள்ள அக்கரை அதிகம்.

ஏனெனில் அவர் நம்மைப் படைத்தவர்.

அவருதவியின்றி நம்மால் நல்லது எதுவும்  செய்ய முடியாது என்று. அவருக்குத் தெரியும்.

ஒவ்வொரு வினாடியும் அவர் நம்மைப் பராமரித்து வருகிறார்.

ஒரு தாயின் மகன் வெளிநாட்டில் வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம்.

நல்ல வருமானம்தான்.

ஆனால்  அந்நியப் படையெடுப்பின் காரணமாக அந்நாட்டில் வாழ்வோருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தால் தாய் என்ன செய்வாள்?

தன் மகனை "வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்து விடு" என்று சொல்லிவிடுவாள். 

ஏனெனில் தாய்க்கு மகனின் சம்பளத்தை விட மகன்தான்
முக்கியம்.

அவ்வாறேதான் நம் விண்ணகத் தந்தையும்,

அவருக்கு நமது உடல் நலனை விட ஆன்ம நலன்தான் முக்கியம்.

நம் நிரந்தர வீடு விண்ணகம்தான்.

ஆகவே இவ்வுலகில் தொடர்ந்து வாழ்வது நமது ஆன்ம நலனுக்குக் கேடு விளைவிக்கும் என அவருக்குத் தெரிந்தால்,

நமது ஆன்ம நலன் கருதி,

 அவர் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துக் கொள்வார்.

நம் விண்ணகத் தந்தை என்ன செய்தாலும் நம் நலன் கருதியே செய்வார்.

இதை உணர்ந்து, இறைவன் திட்டத்திற்குப் பணிந்து,

என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment