"பெற்றெடுக்கும்வரை."
(தொடர்ச்சி.)
"***********************************"
யூத முறைமைப்படி
.
சூசையப்பருக்கும் மரியாளுக்கும் மண ஒப்பந்தம்தான் ஆகியிருந்தது.
மரியாள் மூன்று வயது முதல் கோவிலில் வளர்ந்தவள்.
அங்கு வளர்ந்தபோது
தான் வாழ்நாள் முழுவதும் தன் கன்னிமையைக் காப்பாற்றுவதாக
இறைவனுக்கு வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.
(she was vowed to a life of perpetual virginity.)
திருமண ஒப்பந்தத்தின்போது
சூசையப்பர் மரியாளின் கன்னிமைக்கு பாதுகாப்பாய் இருப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.
ஆகவேதான் மரியாள் கருவுற்றவுடன் அவருக்கு சந்தேகம் வந்தது.
அவள் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்த விபரம் அவருக்குத் தெரியாது.
கபிரியேல் சம்மனசு அவரது
சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறார்.
சந்தேகம் தீர்ந்தவுடன் மாதாவை ஏற்றுக் கொள்கிறார்.
மாதா கொடுத்திருந்த கற்புநிலை வார்த்தைப்பாட்டின்படியும்
சூசையப்பர் அதற்கு பாதுகாவலாய் இருப்பதாக கொடுத்த வாக்குறுதியின்படியும்
வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு இடையே உடலுறவு இருக்கப்போவது இல்லை.
அப்படியானால் ஏன் மத்தேயு,
"அவள் தன் தலைப்பேறான மகனைப் பெற்றெடுக்கும்வரை அவர் அவளை அறியாதிருந்தார்."
என்று எழுதுகிறார்?
"ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்: அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்:" (இசையா.7:14)
"இதோ! கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர் " (மத்.1:22)
இசையாஸ் தீர்க்கத்தரிசி மெசியா கன்னிப் பெண்ணிடமிருந்து பிறப்பார் என்று முன்னறிவித்திருந்தார்.
மத்தேயு அதை மேற்கோள் காட்டியிருந்தார். (had quoted)
ஆகவே மத்தேயு தான் மேற்கோள் காட்டிய இசையாஸ்
தீர்க்கத்தரிசனப்படி
இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்ற செய்தியை அழுத்தம் கொடுத்துச் சொல்லவே
சூசையப்பர் இயேசு பிறக்கும் வரை அவரோடு சேரவில்லை என்று எழுதி இருக்கிறார்.
அதாவது மாதா கன்னிமை நிலையில்தான் இயேசுவைப் பெற்றாள் என்பதை அழுத்தம் கொடுத்துச் சொல்வதற்காக.
இரயில் பயணத்திற்குத் தயார் ஆகிக்கொண்டு இருக்கும் இருக்கும் மகனை பார்த்து அப்பா,
" ரயிலில் போகும்போது பைபிள் வாசி. ஆண்டவர் உன் அருகில் எப்போதும் இருப்பார்."
பையன் பயணம் செய்து இறங்கியவுடன் அப்பாவுக்கு போன் செய்தான்.
" அப்பா, ரயிலில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை
நான்கு மணி நேரமும் பைபிள் தான் வாசித்து கொண்டிருந்தேன்".
"இறங்கும் வரை" என்று சொன்னதால் இறங்கியபின் ஒருநாளும் பைபிள் வாசிக்கவே இல்லை என்று அர்த்தமா?
அப்பா ரயில் பயணத்தின்போது வாசி என்று சொன்னதால்
அந்த செய்தியை அழுத்தமாக சொல்வதற்காகத்தான்
'ஏறியதில் இருந்து இறக்கும் வரை' என்று சொன்னான்.
ஆனாலும் அவன் தொடர்ந்து எப்போதும்போல் வீட்டிலும் பைபிளில் வாசிக்க வேண்டிய நேரத்தில் வாசித்தான்.
அதேபோல்தான் இசையாஸ் தீர்க்கதரிசி சொன்னபடி
மெசியா கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்ற செய்தியை அழுத்தமாக சொல்வதற்காக
அதாவது இயேசு பிறக்கும்போது மாதா கன்னிப் பெண்ணாகத்தான் இருந்தாள் எந்த கருத்தை அழுத்திச் சொல்வதற்கத்தான்
'பெற்றெடுக்கும்வரை' என்று மத்தேயு எழுதினார்.
அதற்குப்பின்னால் உள்ள நிலையை பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
மரியாள் இயேசு பிறப்பதற்கு முன்னும் கன்னி,
பிறக்கும் போதும் கன்னி,
பிறந்த பின்னும் கன்னி,
முக்காலமும் கன்னி.
மத்தேயுவின் வார்த்தைகளால் அவளது கன்னிமைக்கு அழுத்தம் (emphasis) கொடுக்கப்படுகிறது.
குழந்தையைப் பெற்றபின் உடலுறவு கொண்டார்களா இல்லையா என்பது பற்றி இங்கு ஒன்றும் சொல்லப்படவே இல்லை.
ஒன்றுமே சொல்லப்படாதபோது அவர்கள் உடலுறவு கொண்டார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?
உங்கள் பக்கத்து வீட்டிலுள்ள கணவனும் மனைவியும் உடலுறவு கொண்டார்களா இல்லையா என்று யூகித்துக் கொண்டிருப்பதே அசிங்கம்.
இயேசுவின அன்னையையும்,
வளர்த்த தந்தையையும் பற்றி இஸ்டப்படி யூகிப்பவர்களை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை!
உடலுறவு கொள்ளவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்கிறீர்களா?
எங்களால் சொல்ல முடியும்.
ஏனெனில் நாங்கள் மரியாளின் மகனாகிய இயேசுவால் நிறுவப்பட்ட
ஒரே, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த விசுவாசிகள்.
திருச்சபையின் போதனைப்படி மரியாள் முக்காலமும் கன்னி என்று விசுவசிக்கிறோம்.
எப்படி கடவுள் ஒருவர் என்று விசுவசிக்கிறோமோ,
எப்படி இறை மகன் கன்னி மரியின் வயிற்றில் கருத்தரித்து மனிதன் ஆனார் என்று விசுவசிக்கிறோமோ,
எப்படி இயேசு தனது சிலுவை மரணத்தால் நம்மை இரட்சித்தார் என்று விசுவசிக்கிறோமோ,
எப்படி நாம் பாவம் இன்றி
வாழ்ந்தால் இறந்தபின் விண்ணகம் செல்வோம் என்று விசுவசிக்கிறோமோ,
எப்படி நிலைவாழ்வு உண்டு என்று விசுவசிக்கிறோமோ,
அப்படியே
இயேசுவின் அன்னை முக்காலமும் கன்னி என்றும் விசுவசிக்கிறோம்.
கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படை விசுவாசம்.
விசுவாசத்திற்கு. அடிப்படை இறைவன்,
இறைவன் மட்டுமே , விளக்கம் அல்ல.
விசுவாசம் இறைவனின் நன்கொடை என்றும்,
அதற்கு மனிதன் புரிந்து கொள்ளும்படி விளக்கம் கொடுக்க முடியாது என்றும்
கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.
மரியாள் இயேசுவின் வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தாள்.
அவர் இறக்கும்போது அவளை அருளப்பரின் பொறுப்பில் அவரது தாயாக ஒப்படைத்தார்.
வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் அருளப்பரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
அதன்பின் அப்போஸ்தலர்களை தன் பிள்ளைகளாக ஏற்று,
அவர்களுக்கு ஆலோசனைகள் கொடுத்து வந்தாள்.
அன்னையைப் பற்றி அப்போஸ்தலர்களுக்கு நன்கு தெரியும்.
அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மட்டும் போதித்தார்கள்.
அவர்கள் வழி வந்த அப்போஸ்தலிக்க திருச்சபைதான் இயேசுவின் தாய் வாழ்நாள் முழுவதும்
மாசு மரு அற்ற 'கன்னியாய் வாழ்ந்தாள் என்று போதித்தது, போதிக்கிறது, போதிக்கும்.
தாய்த் திருச்சபையின் போதனையை ஏற்கிறோம், விசுவசிக்கிறோம்.
தாயை ஏற்காத யாரும் பிள்ளையை ஏற்கவில்லை.
கிறிஸ்துவின் தாயை ஏற்காதவர்கள் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
நாம் கிறிஸ்துவின் ஞான சரீரத்தைச் சேர்ந்தவர்கள்.
இயேசுவின் தாய் நமது தாய்.
நமது தாய் பாவ மாசின்றி உற்பவித்தவள்.
எப்போதும் இறை அருள் நிறைந்தவள்.
தனது வாழ்நாள் முழுவதும் தனது கன்னிமைக்குப் பழுது வராமல் வாழ்ந்தவள்.
இங்கு
இசக்கியேல் தீர்க்கத்தரிசியின் தீர்க்கத்தரிசன வார்த்தைகளைக் குறிப்பிடுவது
பொருத்தமாக இருக்கும்.
"அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, "இந்த வாயிலின் கதவு மூடப்பட்டே இருக்கும்:
திறக்கப்படாது: யாரும் இதன் வழியாய் உள்ளே நுழையக்கூடாது:
ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் இதன் வழியாய் உள்ளே சென்றார்:
ஆகவே இது மூடப்பட்டே இருக்கும்:
(இசக்கியேல், 44:2)
பொருள்:
"இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் மனித உரு எடுக்கச் சென்ற வாயில் வழியாய் யாரும் உள்ளே நுழையக்கூடாது.
ஆகவே இது மூடப்பட்டே இருக்கும்:"
சூசையப்பர் மாதாவின் கற்புக்குப் பாதுகாவலராய் இருந்தார்.
இயேசு மட்டுமே மரியாள் பெற்றெடுத்த குழந்தை.
நாம் எல்லோரும் அவள் தத்தெடுத்த குழந்தைகள்.
இயேசு நமது சகோதரர்.
உண்மையிலேயே நாம் பாக்கியசாலிகள்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment