Sunday, July 19, 2020

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." ( மத். 12:42)

"சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது." ( மத். 12:42)
"""""''''''''''''''''"""""''''''''''''''''""""''''''''''''''''"""""'''''''''''''''""""''''''''''''''''"""

ஒரு ஊர்ல ஒரு செல்வந்தர். அவரிடம் இருந்த செல்வம் எல்லாம் மிகக் கஸ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்தது.

அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் அவரைப் போலவே சிக்கனவாதி. அடுத்தவன் கொஞ்சம் செலவாழி.

தான் கஸ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த செல்வம் இன்னும் பெருகி தன் சந்ததியார் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்று விரும்பினார் செல்வந்தர்.

ஒரு நாள் இரண்டு மக்களையும் அழைத்து,

"நான் உங்களுக்கு ஒரு test வைக்கப் போகிறேன். அதில் வெற்றி வெறுபவர்களுக்குதான் என் சொத்து.

ஆளுக்கு நூறு ரூபாய் மட்டும் தருவேன். ஆளுக்கு ஒரு வீடும் தருவேன்

பகலில் அவரவர் வீட்டை நிரப்புவது உங்கள் வேலை. மாலையில் உங்கள் வீடடைப் பார்க்க வருவேன்.

யாருடைய வீடு எனது மனதுக்கு ஏற்றபடி நன்கு நிரம்பியிருக்கிறதோ அவன்தான் என் சொத்துக்கு வாரிசு.

அடுத்தவன் அந்த வீட்டில் சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டும்."

என்று கூறி, ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

பகல் முழுவதும் இருவரும் அவரவர் வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

மாலை 6 மணிக்கு அப்பா மூத்தமகன் வீட்டிற்குச் சென்றார்.

மகன் வாசலில் நின்று கொண்டிருந்தான். கதவு பூட்டியிருந்தது.

"சுதவைத் திற, உள்ளே சென்று பார்க்க வேண்டும்."

மகன் கதவைத் திறந்தான். ஆனால் அப்பாவால் உள்ளே நுழைய முடியவில்லை.

வீடு முழுவதும் வைக்கோலால் நிரப்பப்பட்டிருந்தது.

"என்னடா இது ?"

"நூறு ரூபாய் கொடுத்து வீட்டை நிரப்பு என்றால் தங்கம் வாங்கியா நிரப்ப முடியும்?"

"வா, தம்பி வீட்டிற்குப் போவோம்."

இருவரும் தம்பி விட்டிற்குச் சென்றார்கள்.

தம்பி வாசலில் நின்று கொண்டிருந்தான். வாசல் திறந்திருந்தது.

உள்ளே இருந்து மெழுகுதிரிகள் வெளிச்சமும்,    கமகம   என்று  பத்தி வாசமும் வந்து கொண்டிருந்தது.

மெழுகு திரி வெளிச்சத்தில் நனைந்து கொண்டு, பத்தி வாசனையும் நுகர்ந்து கொண்டு உள்ளே சென்றார்கள்.

அந்தக்  காலத்தில் மின்சாரம் இல்லை.

ஏராளமான மெழுகுதிரிகளும், பத்திகளும் வாங்கி,

வீட்டை முழுவதும் வெளிச்சத்தாலும், நறுமணத்தாலும் நிரப்பியிருந்தான்.

வீட்டின் நடுவில் ஒரு மேஜை, நாற்காலி. மேஜை மேல் அப்பாவுக்கு
Sweet, காரம், Coffee!

"அப்பா, உட்காருங்கள். என்னால் இயன்ற சிற்றுண்டி. சாப்பிடுங்கள்."

அப்பா Sweet ஐயும், காரத்தையும் சாப்பிட்டுவிட்டு, காபியை ருசித்துக்கொண்டே,

"very good, மகனே, very good."

"நூறு ரூபாய்க்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்திருக்கிறேன்."

அப்பாவின் சொத்துக்கு அவனே வாரிசு ஆனான்.

நமது விண்ணகத் தந்தை, நமக்கு நிரந்தரம் அற்ற உலகில்,  நிரந்தரம் அற்ற வாழ்க்கையைக் கொடுத்து,

"அதை ஒழுங்காகப் பயன்படுத்துபவர்களுக்கு விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு"

என்று வாக்களித்திருக்கிறார்.

முடிவுள்ள வாழ்க்கையைக் கொண்டு நித்திய வாழ்வைச் சம்பாதிக்க வேண்டும்.

அதற்கு நமக்கு உபகரணங்களாக அவர் கொத்திருப்பவை:

புத்தி,

மனது,

இருதயம்.

புத்தி அறிவை ஈட்ட

மனது நல்லதை நினைக்க.

இருதயம் அன்பு செய்ய.

புத்தியின் அளவு ஆளுக்கு ஆள் மாறுபட்டிருக்கும். ஆகவே புத்தியினால் ஈட்டப்பட்டும் அறிவும் ஆளுக்கு ஆள் மாறுபட்டிருக்கும்.

இருக்கிற அறிவைச் சரியாகப் படுத்துவது ஞானம்.

இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்ற குறைந்த புத்தியைக் கொண்டு, குறைந்த அறிவைத்தான் ஈட்ட முடியும்.

இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்ற நிறைந்த புத்தியைக் கொண்டு, நிறைந்த அறிவை ஈட்டலாம். .

எவ்வளவு அறிவை ஈட்ட முடியும் என்பது முக்கியம் அல்ல.

இருக்கிற அறிவை, ஞானத்தோடு எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.

தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பம்.

நிறைவாகத் தெய்வபயம் உள்ளவன்.
அறிவு குறைவாக இருந்தாலும் மிகுந்த  ஞானத்தோடு பயன்படுத்துவான்.

குறைவாகத் தெய்வபயம் உள்ளவன்.
அறிவு நிறைவாக இருந்தாலும் குறைந்த  ஞானத்தோடு பயன்படுத்துவான்.

ஆக, நிலை வாழ்வை ஈட்ட எவ்வளவு அறிவு இருக்கிறது என்பது முக்கியம் அல்ல.

எவ்வளவு தெய்வபயம் உள்ளது என்பதுதான் முக்கியம்.

தெய்வபயத்தின் அளவிற்கு ஏற்ப ஞானம் இருக்கும்.

ஞானத்தின் அளவிற்கு ஏற்ப நமது ஆன்மீக வாழ்வும் இருக்கும்.

வெற்றிகரமான ஆன்மீக வாழ்விற்கு நமக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியம் அல்ல.

தெரிந்ததை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற ஞானமே முக்கியம்.

ஞானத்தின் அளவை நம்மிடம் உள்ள தெய்வ பயம் தான் தீர்மானிக்கிறது.

ஆகவே பைபிள் வாசிக்கத் தெரியாதவர்கள் பயப்பட வேண்டாம்.

எழுதப் படிக்கத் தெரியாத வர்களுக்கும் இறைவன் இருக்கிறார் என்பது தெரியும்.

இறைவனை நேசிக்க வேண்டும் என்பதும் தெரியும்.

இறைவனுக்கு பயப்படவும் தெரியும்.

தேவ சாஸ்திர அறிவு அத்தியாசமானது அல்ல.

ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிகம் தெரிந்தவன் அதிகம் கணக்குக் கொடுக்க வேண்டும்.

நித்திய பேரின்ப வாழ்விற்கான  மற்றொரு உபகரணம் நமது மனது.

சமாதானம் தங்கியிருக்கும் இடம் நல்ல மனது.

பாவத்தின் விளைவாக நமக்கும் இறைவனுக்கும் இடையில் இருந்த சமாதான உறவு அறுந்து போயிற்று.

அறுந்த சமாதானத்தை ஒட்டவைக்கவே இயேசு தன்னையே பலியாக்கினார்.

பலியின் பயனைப் பெற, அதாவது இழந்த சமாதானத்தை மீண்டும் பெற, நமக்கு நல்ல மனது வேண்டும்.

மனது ஆசையின்  இருப்பிடம். மீட்பு அடைய முதலில் ஆசிக்க வேண்டும்.

மீட்பு அடைய உண்மையான ஆசை இருந்தால், அதற்கு எதிரான பாவத்தின் மீது மனதில் ஆசை இருக்காது.

இரு எதிர் எதிரான ஆசைகள் மனதில் இருக்க முடியாது.

நமது மனதை இறைவனை அடுத்த நல்ல எண்ணங்களால் நிரப்பிவிட்டால் தீய எண்ணங்களுக்கு இடமிராது.

இறை ஞானமும், நல்ல மனதும இருந்து விட்டால், இறை அன்பு தானே வந்து விடும்.

இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவை பயபக்தி என்போம்.

நம்மைப் படைத்து காத்து வரும் இறைவனை

நமது பாவத்தினால் புண்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணமே பயம்.

நம்மைப் படைத்தவரை நேசிப்பது பக்தி,

நாம் எப்படி பெற்றோரை நேசிக்கும் போது

அவர்களிடமிருந்து பிறந்தவர்களையும் நேசிக்கின்றோமோ

அதேபோல நாம் இறைவனை நேசிக்கும் போது இறைவனின் எல்லா பிள்ளைகளையும் நேசிக்கிறோம்.

ஆகவே பிறரன்பு இறை அன்பில் அடக்கம்.

இறையன்பு இல்லாவிட்டால் பிறரன்பு இல்லை

பிறரன்பு இல்லாவிட்டால் இறையன்பு இல்லை.

அன்பு இல்லாவிட்டால் நாம் மனிதரே இல்லை.

பழைய ஏற்பாட்டு சாலமோன்  தனது ஞானத்திற்குப் பெயர் பெற்றவர்.

அவர் எவ்வளவுதான் ஞானம் உள்ளவராக இருந்தாலும் மனிதனாகையால்  அவரது ஞானத்திற்கு அளவு உண்டு.

அவருக்கு ஞானத்தை இலவசமாகக் கொடுத்த இறைவன் அளவற்ற ஞானம் உள்ளவர்.

அளவற்ற ஞானம் உள்ள இறைவன்தான் மனுவுரு எடுத்த நமது மீட்பர் இயேசு.

நம்மிடம் இறைவனைப் பற்றிய அறிவு குறைவாக இருக்கிறதே என்று எண்ணாமல்

இருக்கிற அறிவை ஒழுங்காக பயன்படுத்த வேண்டிய ஞானத்தை

நமது மீட்பராகிய இயேசுவை  வேண்டி பெற்றுக்கொள்வோம்.

நமக்காக உயிரையே கொடுத்த இறைவன் இயேசு

ஞானத்தைக் கொடுக்க மாட்டாரா?

கட்டாயம் கொடுப்பார்.

கேட்டால் கொடுப்பார்.

சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க

உலகின் எல்லையிலிருந்து அரசி ஒருவள் வந்தாள்.

சாலொமோனிலும் மேலானவராகிய,
அவருக்கே ஞானத்தை அள்ளிக் கொடுத்தவராகிய இறைமகன்

நம்மிடையே திவ்ய நற்கருணைப் பேழையில்

நமது வருகைக்காக இரவும் பகலும் காத்துக் கொண்டிருக்கிறாரே, பார்க்க போகிறோமா?

இதுவரைப் போகாவிட்டாலும் இனியாவது போவோம்.

ஞானத்தை பெறுவோம்.

ஞானம் அளிக்கும் நித்திய பேரின்பத்தையும் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment