Tuesday, July 7, 2020

"தாவீதின் மகனே, எங்கள்மேல் இரக்கம்வையும்" என்று கூவினர்.(மத். 9:27)

"தாவீதின் மகனே, எங்கள்மேல் இரக்கம்வையும்" என்று கூவினர்.
(மத். 9:27)
***********************************

இரண்டு குருடர்கள் இயேசுவை நோக்கிக் கூறிய வார்த்தைகள்:

"தாவீதின் மகனே, எங்கள்மேல் இரக்கம்வையும்."

ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் கூறிய வசனம்,

வேறொரு சந்தர்ப்பத்தில், வேரொருவருக்கு வேறு எண்ணங்களைத் தூண்டும்.

ஒரே வசனத்தை வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கேட்கும்போது,

அவரவர்க்கு ஏற்றபடி  இறைத் தூண்டுதல்களைக் கொடுக்கலாம்.

குருக்கள் வாசிக்கும் அதே பைபிளைத்தான் வேலைக்குப் போகும் கூலியாட்களும் வாசிப்பார்கள்.

அதே பைபிளைத்தான் ஆசிரியரும் வாசிப்பார். மாணவனும் வாசிப்பான்.

இறைவார்த்தை உயிருள்ளது.

யாருக்கு என்ன தூண்டுதல்களைக் கொடுத்து வழிநடத்துவது என்று அதற்குத் தெரியும்.

தினமும் வாசிப்பதெற்கென்று திருச்சபை வாசகக் குறிப்புகளைத் தந்துள்ளது.

பாப்பரசர் முதல் பள்ளி மாணவன் வரை அதே குறிப்புகள்படிதான் தினமும் வாசிக்கிறோம்.

வித்தியாசமான சூழ்நிலையில் உள்ளவர்கள் ஒரே வசனத்தை அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தியானிப்பார்கள்.

தியானிப்பவர்கள் ஒரு விசயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அவர்களது தியானக்கருத்துக்கள் திருச்சபையின் போதனைக் கருத்துக்கு மாறுபட்டவையாய் இருந்துவிடக்கூடாது.   

"தாவீதின் மகனே, எங்கள்மேல் இரக்கம்வையும்"

அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் சொல்லத்தக்க ஒரு மன வல்லப செபம்.

தினமும் நேரம் கிடைக்கும். போதெல்லாம் சொல்லத்தக்க செபம்.

செப வார்த்தைகளின் பொருள் உணர்ந்து செபித்தால் அது அதிக வரங்களைப் பெற்றுத் தரும்.

இயேசு இறைமகன்.

தந்தையைப் பற்றி பேசும்போதெல்லாம் இந்த இறையுண்மையை நமக்க வெளிப்படுத்துவார்.

"நானும் தந்தையும் ஒன்றே."
(அரு. 10:30)

"என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள்" (அரு. 14:2)

"தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்,"
(அரு. 17:2

இயேசு 'மகன்' என்று சொல்லும்போது தான் 'இறைமகன்'  என்ற பொருளில் தான் சொல்லுவார்.

மனுமகன் என்று சொல்லும்போது:

''மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை.''
(மத்.8:20)

"மனுமகன் தம் வானதூதரை அனுப்புவார்." (மத். 13:41)

"மனுமகனைக்குறித்து இறைவாக்கினர்கள் எழுதியதெல்லாம் நிறைவேறும்."
( லூக். 18:31)

இயேசு மனுமகன் என்று சொல்லும்போது, தான் மனிதனாய் பிறந்திருப்பதைக் குறிக்கிறார்.

Jesus is one divine person,
with two natures.

Jesus is fully God and
fully Man.

இயேசு முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.

முழுமையாக இறை மகன்.
முழுமையாக மனு மகன்

அவரது தேவ சுபாவத்தில் அவருக்கு  தந்தை உண்டு,
தாய் இல்லை.

மனித சுபாவத்தில் தந்தை இல்லை, தாய் உண்டு.

மகன் தேவன் தன் தந்தையிடமிருந்து நித்தியமாகப் பிறந்தார்.

அதே மகன் தேவன் மரியாளின் வயிற்றில் மனு உரு எடுக்கும் போது, மனித சுபாவத்தை எடுத்துக் கொண்டார்.

மனித சுபாவத்தில் அவருக்குத் தந்தை இல்லை.

தன்னை 'மனுமகன்' என்று அடிக்கடி சொல்லுவார்.

அவர் மனித குலத்தில் மனிதனாய்ப் பிறந்ததால்
மனுமகன்.

அவளுடைய தாய் மரியாள் தாவீதின் குலத்தில் பிறந்தவள்.

ஆகவே அவர் மனிதனாகப் பிறந்தது தாவீதின் குலத்தில்,
ஆகவே தாவீதின் மகன் எனப்பட்டார்.

இதுவரை சொன்னது ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் கேட்டது,

ஆசிரியர் வகுப்பில் சொன்னதை மாணவன் பரீட்சைப் பேப்பரில் எழுதுகிற மாதிரி, பிரசங்கத்தில் கேட்டதை எழுதி விட்டேன்.

இனி பாவிகளாகிய நாம் இயேசுவை நோக்கி,

"இயேசுவே, தாவீதின் மகனே, என் மேல் இரக்கமாய் இரும்,"

என்று செபிக்கும் போது நம் மனதில் என்ன எண்ண அலைகள் எழும்

என்பதை மையமாக வைத்து எனது எண்ணங்களை எழுதுகிறேன்.

"என் மேல் இரக்கமாய் இரும்" என்று செபிக்கும்போதே

நாம் கடவுளின் இரக்கம் தேவைப் படுகிற நிலையில் இருக்கிறோம்,

என்பதுதான் பொருள்.

சர்வ வல்லபராகிய கடவுள்

பலகீனமான மனிதனை மீட்க

பாவம் தவிர நமது மற்ற பலகீனங்களை அவராகவே ஏற்றுக் கொண்டு

பலகீனமான மனிதனாகவே பிறக்கிறார்.

அவர் பரிசுத்தராகையால் தான் கருவாக இருக்கும் தன் தாயை பரிசுத்த நிலையில் அருள் நிறைந்தவளாக இருக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டார்.

ஆனால் அவர் பிறக்கவிருக்கும் குலம், பாவங்கள் நிறைந்த மனிதகுலம், ஆதாமின் குலம், அதுவும் தாய்வழியில் மட்டும்.

அக்குலத்தில் பிறந்த தன் தாயை பாவமாசுமரு அற்ற பரிசுத்தமான பெண்ணாய்,

அருள் நிறைந்தவளாய்ப் படைத்தார்.

அவருக்குத் தகப்பன் கிடையாது.

அப்படி இருக்க இறைவார்த்தை ஏன் இயேசுவைத் தாவீதின் மைந்தன் என்று அழைக்கிறது?

"தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு."

உலக அனுபவத்தில் ஏதாவது ஒரு வகையில் சம தானத்தில் (சமமான இடத்தில்) இருக்கும் இருவர்தான்

மனமொத்து சமாதானம் செய்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு உலகப் போரும் முடிந்தவுடன் வென்ற நாடுகள் தோற்ற நாடுகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன.

ஆனால் உண்மையில் சமாதானம் செய்யப்படவில்லை,

வென்றவர்களால் தோற்றவர்கள் மீது சமாதானம் திணிக்கப்பட்டது.

The peace treaty was dictated by the winners and the defeated had no other go but to accept.

கடவுள் அப்படிச் செய்யவில்லை.

நம் நிலைக்கு இறங்கி வந்து சமாதானம் செய்து கொண்டார்.

God Came 'down' to lift us 'up.'

பாவிகளாகிய நம்மைத் தேடித்தான் விண்ணிலிருந்து மண்ணிற்கு  இறங்கி வந்தார்.

பாவிகளை மனம் திருப்பி இரட்சிக்கவே மனிதன் ஆனார்.

அவர் பாவிகள் வீட்டிற்குச் சென்றதும்,

அவர்களோடு உணவருந்தியதும்

அவர்கள் அவரைத் தங்களில்  ஒருவராக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்த தான்.

He wanted the Sinners to feel at home with Him to listen to and accept what He said.

மனந்திரும்பிய பாவிகளை  இயேசு அன்புடன் ஏற்றுக் கொள்வார் என்பதை நமக்கு உணர்த்தவே,

தனக்குப் பூவுலகில் தந்தை இல்லாவிட்டாலும்,

ஒரு மனம் திரும்பிய  பாவியின் மகன் என்று பைபிளில் குறிப்பிட  அனுமதி கொடுத்தார்.

தாவீது மன்னன் பெரிய பாவம் ஒன்றைச் செய்து,

மனம் திரும்பி

அதற்காக   மனம் வருந்தி அழுது பாவமன்னிப்பு பெற்றவர்.

அந்த விபரம் எல்லாம் பைபிளில் இருக்கிறது.

பாவமற்ற பரிசுத்தராகிய இயேசு நமது நம்பிக்கையைப் பெறுவதற்காக
ஒரு பாவியின் வம்சத்தில் பிறந்திருப்பது

பாவிகளாகிய நாம் மனந்திரும்பி இயேசுவிடம் வர  நமக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும்.

நம்மை மேலே தூக்கி விடுவதற்காக, பரிசுத்தராகிய நம் ஆண்டவர்

தாவீது என்ற ஒரு மனம்திருந்திய பாவியின் வம்சத்தில் பிறந்திருப்பதும்,

அவரைத் தன் தந்தையின் ஸ்தானத்தில் வைத்திருப்பதும் (தாவீதின் மகனே),

அவர் நம்மைப் பார்த்து,

"மகனே,

(பரிசுத்தராகிய நான் பாவியாகிய உன்னை மகனே என்று அழைக்கிறேன் பார்த்தாயா?)

பெரிய பாவம் செய்து என்னுடைய அருளால் மனம் திரும்பிய தாவீதை என் தந்தை என்று அழைப்பதே,

நீ பயம் இல்லாமல் என்னிடம் வர வேண்டும் என்பதற்காகத் தான்.

அதற்காகத்தான் நான் பொது வாழ்வின்போது

மற்றவர்களால் பாவி என்று கருதப்பட்ட மத்தேயுவை

எனது சீடனாக நானே தேர்ந்தெடுத்தேன்.

பாவிகள் வீட்டில் உணவு அருந்தினேன்.

குற்றவாளிகள் கைது செய்யப் படுவதுபோல நானும் கைது செய்யப்பட அனுமதித்தேன்.

குற்றவாளிகள் விசாரிக்கப் படுவதுபோல், நானும் விசாரிக்கப்பட அனுமதித்தேன்.

அது மட்டும் அல்ல, பாவிகளோடு சிலுவையில் அறையப்பட அனுமதித்தேன்.

பாவிகளோடு பாவியாய்க் கருதப்பட அனுமதித்தேன்.

("பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்:

ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்." ( இசையா. 53:12)

இதெல்லாம் எதற்காக?

உனக்காக, மகனே, உனக்காக.

எனக்கு என் கெளரவம் முக்கியம் அல்ல,

நீ என்னிடம் வர வேண்டும்.
அதுதான் முக்கியம்.

நீ என்னை உன் பாவத்தால் நோகச் செய்திருக்கலாம்.

ஆனால் நான் உன்னை அளவு கடந்த விதமாய் நேசிக்கிறேன்.

உன் மேல் இரங்குகின்றேன்.

பாவங்களுக்காக வருந்தி, மனம் திருந்தி என்னிடம் வா.

பயபடாமல் வா.

ஊதாரி மைந்தனின் தந்தை மகனின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தது போல,

உன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பயப்படாமல் வா

உன்னை என்றென்றும் என் அரவணைப்பில் வைத்திருப்பேன்."

என்று கூறுவது போல் இருக்கிறது.

"பாவம் செய்து மனம் திரும்பிய தாவீதை தந்தையாக ஏற்றுக் கொண்ட இயேசுவே,

பாவியாகிய நான் மனந்திரும்பி

உமது மகனாக உம்மிடம் வர,

அருள் புரிய

என் மீது இரக்கமாய் இரும்."

என்ற செபத்தைத்தான் இந்த இறைவசனம் தூண்டுகிறது:

"தாவீதின் மகனே, எங்கள்மேல் இரக்கம்வையும்"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment