Friday, October 22, 2021

" உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்."(லூக்.12:58)

" உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்."
(லூக்.12:58)

உலக வழக்கில் நமது எதிரி  அவனுக்கு எதிராக நாம் செய்த குற்றத்திற்காக நம்மை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றால்,

நீதிமன்றத்திற்கு போகும் முன்னாலேயே அவனோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

சமாதானம் செய்து கொண்டால் நீதிபதியின் விசாரணையின்போ து நமக்கு கிடைக்கக்கூடிய தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இல்லாவிட்டால் விசாரணையின்போது கிடைக்கும் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இந்த ஒப்புமையிலிருந்து ஒரு ஆன்மீக பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பின்வரும் இறைவசனம் அதையே கூறுகிறது:

"நீ உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய். 

இல்லையேல், அவன் உன்னை நீதிபதியிடம் இழுத்துக்கொண்டு போக, நீதிபதி உன்னைச் சேவகனிடம் கையளிக்கக்கூடும்.

 சேவகன் உன்னைச் சிறையில் அடைக்க நேரிடும்."

இந்த இறை வாக்கில் "நீ" பாவத்தால் நிறைந்த நம்மை குறிக்கிறது.

"'எதிரி" பாவத்தின் எதிரியாகிய இறைவாக்கை குறிக்கிறது.

நாம் பாவிகள்.

நமது பாவங்களோடு நமது வாழ்வில் இறைவனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஒவ்வொரு நாளும் வாசிக்கும் இறை வசனமும் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறது.

இறை வசனம் நமது பாவங்களுக்கு எதிரானது.

அது நமது பாவங்களை சுட்டிக் காண்பித்து

 நாம் திருந்தும்படி நமக்கு அறிவுரை கூறிக் கொண்டே நம்மோடு பயணிக்கிறது.

அதன் அறிவுரையை கேட்டு நாம் பாவத்திற்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும்

 திருத்திக் கொள்ளத் தவறினால் 
வாழ்வின் இறுதியில் இறைவனின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்.

பாவத்திற்குரிய பலனை அனுபவிக்க நேரிடும்.

இதைத்தான் இந்த வசனம் நமக்கு கூறுகிறது.

பைபிள் வசனம் நமக்கு எதிரி அல்ல,

 நமது பாவத்துக்கு எதிரி, 

பாவம் நமக்கு எதிரி,

 எதிரிக்கு எதிரி நண்பன்"


ஆகவே பைபிள் வசனம்   நமக்கு நண்பன்.

நமது உலக வாழ்க்கையின் போது பைபிள் வசனங்களோடு சமாதானமாக வாழ வேண்டும். 

அதாவது பைபிள் வசனங்களை தந்த இறைவனோடு சமாதானமாக வாழ வேண்டும்.

தட்டில் உணவு இருந்தால் மட்டும் வயிறு நிறையாது,

 உணவை நாம் உண்டால் மட்டுமே வயிறு நிறையும்,

அதேபோல்தான் வீட்டில் பைபிள் இருந்தால் மட்டும் போதாது,

 அதை தினமும் வாசிக்க வேண்டும்,

 வாசித்தால் மட்டும் போதாது,

 அதன்படி வாழ வேண்டும்.

சிலர் நண்பர்கள் சொற் கேட்டு அதன்படி நடந்து பயன் அடைவார்கள்.

சிதர் நண்பர்களை தாங்கள் சொன்னபடி நடக்க வைப்பார்கள்.

அதேபோல் சிலர் பைபிள் வசனங்கள் காட்டுகிற வழி நடந்து பயன அடைவார்கள்.

சிலர் பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பப்படி பொருள் கொடுத்து

 அவற்றின்படி நடப்பதாக கூறிக்கொண்டு தங்கள் விருப்பம் போல் நடப்பார்கள்.

பைபிள் மட்டும் போதும் என்று சொல்லிக்கொண்டு, அதை கையில் வைத்துக்கொண்டு கத்தோலிக்க திருச்சபையை விட்டு வெளியேறியவர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள். 

நாம் தாய்த் திருச்சபையின் வழி நடத்துதலின் படி பைபிள் வசனங்களுக்குப் பணிந்து நடப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment