Monday, October 18, 2021

"அப்போது அவர்களைப் பார்த்துக் கூறினதாவது: "அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள். " (லூக். 10:2)

"அப்போது அவர்களைப் பார்த்துக் கூறினதாவது: "அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள். " (லூக். 10:2)

இயேசு 72 சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது அவர்களிடம் கூறிய வார்த்தைகள் இவை:

இவ்வார்த்தைகளை வாசிக்கும்போது நமது உள்ளத்தில் ஒரு கேள்வி எழும

அறுவடையின் ஆண்டவரே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான்.

அவர்தான் 72 பேரை நற்செய்தி அறிவிக்க அனுப்புகிறார்.

ஏன்

" வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" என்று சொல்கிறார்?

அதாவது 

ஏன் அறுவடைக்கு ஆட்களை அனுப்பும்படி தன்னையே மன்றாடச் சொல்லி அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்?

நற்செய்தி அறிவிப்பதற்காக அனுப்பப்படுகிறவர்கள் நற்செய்தியின் ஆண்டவரோடு எப்போதும் செபத்தொடர்பில் இருக்க வேண்டும் என்பது அவரின் ஆசை.

அவர் 72 பேரை முதலில் அனுப்பினாலும் அனுப்பப்பட்டவர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்தில் இருந்தே,

"நற்செய்தி  அறிவிக்கப்பட வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அனுப்பப்பட்ட 72 பேர் போதாது.
இன்னும்  ஆட்களை அனுப்பும் ஆண்டவரே."

என்று அவரோடு செபத் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆண்டவரது வார்த்தைகள் இப்போது நமக்கும் பொருந்தும்.

இயேசு ஆரம்பத்தில் 12 பேரைத்தான் ஆயர்களாக தேர்ந்தெடுத்தார்.

உலகம் முழுமையும் கணக்கு பார்க்கும்போது 12 பேர் போதாது.

ஒவ்வொருவராக உலகம் முழுவதும் பரவி நற்செய்தி அறிவித்த பன்னிருவரும் 

ஆண்டவரோடு அவர்களுக்கு இருந்த செப உதவியுடன் புதிய ஆயர்களை நியமித்துக் கொண்டார்கள்,

புதிய ஆயர்கள் நற்செய்தி அறிவிப்பதில் தங்களுக்கு உதவியாக இருக்கும்படி  குருக்களை நியமித்துக் கொண்டார்கள்,

 உலக மக்கள் தொகையை முழுவதும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்க குருக்கள் போதாது. 
 

நற்செய்திப் பணியிலேயே இரண்டு விதமான பணிகள் அடங்கியுள்ளன.

1.நற்செய்தியை அறியாதவர்களுக்கு அதை அறிவித்தல்.

2.நற்செய்தி அறிவிக்கப்பட்டவர்களின் ஆன்மீக வாழ்வின் வளர்ச்சியில் உறுதுணையாக இருத்தல். 

அவர்களுக்காக தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவேண்டும்,

 அவர்களின் ஆன்மீக வழிகாட்டியாக செயலாற்ற வேண்டும்.

மொத்தமாக கவனிப்பதோடு ஒவ்வொரு ஆன்மாவையும் தனித்தனியே கவனிக்க வேண்டும். 

ஏனெனில் ஒவ்வொருவரின் ஆன்மீக தேவைகள் வித்தியாசமானவையாய் இருக்கும்.

இரண்டு விதமான நற்செய்திப் பணிகளையும் செவ்வனே நிறைவேற்ற குருக்களின் எண்ணிக்கை பற்றாது.

நற்செய்திப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
வேண்டும் என்று நற்செய்தியின் ஆண்டவரை வேண்டும் கடமை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இருக்கிறது.

அதிகமான குருக்கள் தேவை என்ற விசயம் நாம் சொல்லாமலேயே ஆண்டவருக்குத் தெரியாதா என்று கேட்கலாம்.

நிச்சயமாக தெரியும்.

ஆனாலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னோடு செபத் தொடர்பில் இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

நாம் நமது உறவினர்களோடும்,  நண்பர்களோடும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புவதுபோல் ஆண்டவரும் விரும்புகிறார்.

அனேக சமயங்களில் ஆண்டவரோடு தொடர்பில் இருக்க வேண்டும்  என்பதை நாம் மறக்கும் போது 

அதை நமக்கு ஞாபகப் 
படுத்துவதற்காகவே நோய் நொடிகளை வர விடுகிறார்.

நோய் நொடிகள், கஷ்டங்கள் ஏற்படும் போது மட்டுமல்ல 

எல்லா காலங்களிலும் நாம் ஆண்டவரோடு செபத் தொடர்பில் இருக்க வேண்டும்.

குருக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டுவதில் சுயநலம் கூட இருக்கிறது.

நமது ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது குருக்களே.

போதுமான குருக்கள் இருந்தால்தான் நமது ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய தேவைப்படும் போதெல்லாம்  அவர்களை அணுகமுடியும்.

நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தான்,

 சுகம் இல்லாதவர்கள் தேவைப்படும்போது எளிதில் மருத்துவ உதவி பெற முடியும்.

குருக்கள் தான் நமது ஆன்மீக மருத்துவர்கள்.

நமது பாவ நோயைக் குணமாக்கி, தேவத்திரவிய அனுமானங்கள் மூலம் நமக்கு ஆண்டவரின் அருள் வரங்களை பெற்றுத்தர வல்லவர்கள் அவர்களே.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

அக்கடமையையும் நிறைவேற்றுவோம்.

குருக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி ஆண்டவரை வேண்டுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment