Monday, October 4, 2021

", தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது " என்றார்." (லூக்.10:42)

", தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது " என்றார்." (லூக்.10:42)

.இலாசர், மரியாள், மார்த்தாள் குடுப்பத்தினர் இயேசுவின் மேல் மிகுந்த பக்தி உள்ளவர்கள்.

இவர்களில் தேவையான நல்ல பங்கைத் தேர்ந்துகொண்ட மரியாள்தான் இன்றைய தியானத்திற்கான கருப்பொருள்.

தியானத்துக்கான கருப்பொருள் மட்டுமல்ல, நமது வாழ்க்கைக்கான முன்மாதிரியும் அவளே.

ஒரு நாள் இயேசு அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருந்தபோது மார்த்தாள்  ஆண்டவருக்கு உணவு தயாரிப்பது போன்ற பலவகை  பணிவிடை புரிவதில் பரபரப்பாயிருந்தாள்

ஆனால் மரியாள்  ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

மார்த்தாள் தனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லச் சொல்லி ஆண்டவரிடம் கேட்டாள்.

ஆனால் அவர் 

"மார்த்தா, மார்த்தா, நீ பல காரியங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது " என்றார்.

அதாவது மற்ற எல்லா செயல்களையும் விட ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு செவிமடுப்பதே மேலானது,

அதையே மரியாள் செய்தாள் என்றார்.

மரியாள் ஒரு பாவி.

ஆனால்  தனது பாவங்களுக்காக வருந்தி கண்ணீர் சிந்தி ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு பாவமன்னிப்பு பெற்றுக்கொண்ட பாவி.

 இயேசு ஒரு பரிசேயன் வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது

இயேசுவுடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து,

 அழுதுகொண்டே 

அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து 

அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசிய பாவி இவள்தான்.

அவள் பெயர் குறிப்பிடவில்லை. 


.  இயேசுவின் நற்செய்தி பயணத்தில் அவருக்கு சேவை செய்த பெண்களுள் ஒருவரான

ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மதலேன் என்னும் மரியாளும் இவள்தான்.


அருளப்பர் நற்செய்தியில், 12 ஆம் 
அதிகாரத்தில், 

பாஸ்காவுக்கு ஆறுநாள் இருக்கும்போது, இயேசு பெத்தானியாவுக்கு வந்தார்.

 அப்போது  லாசர்  குடுப்பத்தினர் .
இயேசுவுக்கு விருந்து அளித்தனர்.

அப்போது மரியாள் தனது பாவங்களுக்கு பரிகாரமாக

நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் ஓர் இராத்தல் கொண்டுவந்து, இயேசுவின் பாதங்களில் பூசி அவற்றைக் கூந்தலால் துடைத்தாள்.

பாஸ்கா விற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் 

பெத்தானியாவில் தொழுநோய்ச் சீமோன் வீட்டில் இயேசு இருக்கையில்,

விலையுயர்ந்த பரிமளத்தைலம் உள்ள படிகச் சிமிழுடன் அவரை அணுகினாள். பந்தியிருக்கையில் அவர்தலையில் அதை ஊற்றினாள்.

இதைப் பார்த்த சீடர்கள் சினங்கொண்டு,

"இதை வீணாக்குவானேன் ? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்றார்கள்.

ஆனால் இயேசு,

"இவள் பரிமளத்தைலத்தை என் உடல்மீது ஊற்றுகையில் என் அடக்கத்தைக்குறித்தே செய்தாள்.

13 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதிலும் எங்கெங்கு இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள்நினைவாகக் கூறப்படும்" என்றார் (மத்.26)

ஆக, பரிசேயன் வீட்டில்இயேசு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது கண்ணீர் சிந்திய பெயர் குறிப்பிடப்படாத பெண்ணும்,

மார்த்தாளின் சகோதரி மரியாளும், மரிய மதலேனாளும் 

 ஒரே நபர்தான் என்பது விவிலிய அறிஞர்களின் கருத்து.


இயேசு பாவிகளை தேடித்தான் உலகிற்கு வந்தார்.

பாவிகளுக்காகத்தான் இரத்தம் சிந்தி உயிர் நீத்தார்.

பாவிகள் மனம் திரும்ப வேண்டும்,

 தாங்கள் செய்த பாவங்களுக்காக மனம் வருந்த வேண்டும்,

 பாவ வாழ்க்கையை விட்டு விட்டு புனிதமாக வாழ வேண்டும்,

 நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதுவே இயேசு உலகிற்கு வந்ததன் நோக்கம்.

அவரது நோக்கத்தை மதலேன் மரியாள் நிறைவேற்றினாள்.

அவளது புனிதமான வாழ்க்கையினால் இயேசுவின் நற்செய்தி பணியின்போது அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது சிலுவையின் அருகில் இயேசுவின் தாய் மரியாளுடன் நிற்கும் பாக்கியம் கிடைத்தது.

"இயேசுவின் சிலுவையருகில்

 அவருடைய தாயும், அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும்,

 மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்."
(அரு19:25)


பாவமாசின்றி உற்பவித்து பிறந்த அன்னை மரியாளுடன், நிற்கும் பாக்கியம் ஒரு மனம் திரும்பிய பாவிக்கு கிடைத்தது!

இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த போதும்  மதலேன் மரியாள் அங்குதான் இருந்தார்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த இயேசு முதல் முதல் காட்சியளித்தது மனம் திரும்பிய பாவிற்கு தான்.

இயேசு உயிர்த்த செய்தியை அப்போஸ்தலர் களுக்கு அறிவித்ததும் அவள்தான்.

''உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதிலும் எங்கெங்கு இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள்நினைவாகக் கூறப்படும்"
(மத்.26:13)

இயேசு கூறிய வார்த்தைகள் மனம் திரும்பும் பாவிகளுக்கு இயேசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது.

"அவ்வாறே, மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, 

மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(லூக்.15:7)

பைபிள் வாசிப்பதும், தியானிப்பதும் பைபிளைப் பற்றிய நமது அறிவை அதிகரிப்பதற்காக அல்ல.

 நமது வாழ்வை அதன்படி அமைத்துக் கொள்வதற்காக.

எங்கே பாவிகள் இருக்கின்றார்களோ அங்குதான் ஆண்டவரின் அருள் வெள்ளம் அதிகமாக பாயும்.

இதற்கு மதலேன் மரியாள் ஒரு உதாரணம்.

அவராலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலர்களுக்குக் கொடுக்காத பாக்கியத்தை ஆண்டவர் மனம் திரும்பிய பாவிக்கு கொடுத்திருக்கிறார்.

உயிர்த்த இயேசுவை முதல் முதல் பார்த்ததோடு,

உயிர்த்த செய்தியை அப்போஸ்தலர்களுக்கு அறிவித்ததால்

 அவள் "Apostle to the apostles" என்று அழைக்கப்படுகிறாள்.

 பாவிகளாகிய நம்மையும் இயேசு அதிகமாக நேசிக்கிறார்.

 மனம் திரும்பி பாவங்களுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்காக அருள் மழையை நம்மீது பொழிகிறார்.

மனம் திரும்புவோம்.

 பாவங்களுக்காக மனம் வருந்துவோம்.

 பாவமன்னிப்பு பெறுவோம்.

 இறை அருளின் உதவியால் புனிதர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment