Sunday, July 11, 2021

"Brother, கொஞ்சம் நில்லுங்கள். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

"Brother, கொஞ்சம் நில்லுங்கள். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். 

இயேசு கடவுள் என்றும் இரட்சகர் என்றும் எப்படி தெரிந்து கொண்டீர்கள்?"

"கத்தோலிக்க திருச்சபையின் போதனையிலிருந்து தெரிந்து கொண்டேன்."

'அப்போ பைபிள் வாசிப்பதில்லை!"

"பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன் என்று  சொன்னால் வகுப்புக்கு போவதில்லை? என்று கேட்பது மாதிரி கேட்கிறீர்கள்."

"அப்படி கேட்பதற்கு எனக்கு என்ன பைத்தியமா? வகுப்பு பள்ளி கூடத்தில் தான் இருக்கிறது என்பது கூட எனக்கு தெரியாதா?


"தெரியலியே.  பைபிள் கத்தோலிக்க திருச்சபைக்கு உரியதுதான் என்பது உங்களுக்குத் தெரியவில்லையே!"

"பைபிளிலிருந்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லி இருக்க வேண்டும். பைபிள் வாசித்திருந்தால் அப்படித்தான் சொல்லியிருப்பீர்கள்."

".தாய்த் திருச்சபை தான் எனக்கு பைபிளைத் தந்தது  என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்."

"திருச்சபையே பைபிளிலிருந்துதான் அதை தெரிந்துகொண்டிருந்தது என்று உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்."

", ஹலோ,சிந்தித்துப் பேச வேண்டும்.

தான் கடவுளின் மகன் என்பதையும் உலகின் இரட்சகர் என்பதையும் நமக்குச் சொன்னவர் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

ஆண்டவர் தனது சொற்களை நமக்கு தெரிவிக்கவே கத்தோலிக்க திருச்சபையை நிறுவினார்.

கிறிஸ்துவின் போதனை அவர் ஏற்படுத்திய திருச்சபையின் மூலமாகத்தான் நமக்கு வருகிறது.

இயேசுவின் போதனைகளை நற்செய்தி நூல்களாக எழுதியது கத்தோலிக்க திருச்சபைதான்."

"என்னது திருச்சபையா?

நற்செய்தி நூல்களை எழுதியவர்கள் மாற்கு, மத்தேயு , லூக்காஸ், அருளப்பர் ஆகியோர்."

".தம்பி, அவங்க யாரு? கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்கள்.

பள்ளிக்கூடம் உல்லாச பயணத்திற்கு போயிருக்கிறது என்று சொன்னால்

 பள்ளிக்கூடம் எங்கே போயிருக்கிறது? ஆசிரியர்களும் மாணவர்களும் தானே போயிருக்கிறார்கள்! என்று கேட்பதுபோல் கேட்கிறீர்கள்.

நான்கு நற்செய்தியாளர்களும் கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்கள்.

கிறிஸ்துவின் போதனைகளைப் போதித்தவர்கள்.

அவர்கள் நற்செய்தி நூல்களிலிருந்து கிறிஸ்துவை அறியவில்லை.

கிறிஸ்துவிடமிருந்து  அறிந்ததைத்தான் நற்செய்தி நூல்களாக ஆக்கியிருக்கிறார்கள்.

கிறிஸ்து உலகில் இருக்கும்போதே திருச்சபை ஆரம்பித்துவிட்டது.

அப்போது நற்செய்தி நூல்கள் இல்லை.

திருச்சபை பெற்ற பிள்ளைகள்தான்
நற்செய்தி நூல்கள்.

இப்போது சொல்லுங்கள்,

மக்கள் திருச்சபையிலிருந்து கிறிஸ்துவை அறிந்தார்களா, இல்லையா?

"நற்செய்தி நூல்கள் எழுதப்பட்ட தற்கு முன் வாழ்ந்த மக்கள் திருச்சபையிலிருந்து அறிந்தார்கள்.

இப்போது வாழும் மக்கள்?"

".இயேசு ஏற்படுத்திய அதே திருச்சபை தான் இன்றும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நற்செய்தி நூல்களை எழுதிய அதே திருச்சபை தான் இப்போதும் இயேசுவை மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

அன்று எழுதப்பட்ட நற்செய்தி நூல்களை எங்கள் கையில் தந்ததும் அதே கத்தோலிக்க திருச்சபைதான்.

போதிப்பது திருச்சபைதான்.

நற்செய்தி நூல்கள் உட்பட பைபிளுக்கு விளக்கம் கூறி எங்களுக்கு போதிப்பது கிறிஸ்துவால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபைதான்."

"திருச்சபையின் போதனைகளுக்கு ஆதாரம் பைபிள் தான் என்பதையாவது ஏற்றுக்கொள்கிறீர்களா?"

", திருச்சபையின் போதனைகள்  பைபிளிலும், திருச்சபையின் பாரம்பரியத்திலும் இருக்கின்றன.

இரண்டுமே கத்தோலிக்க திருச்சபையின் சொத்துக்கள்தான்.

 திருச்சபை ஆரம்பிக்கும்போதே பாரம்பரியம் ஆரம்பித்துவிட்டது.

பாரம்பரியத்திலிருந்து பிறந்ததுதான் புதிய ஏற்பாடு.

விளக்கமாகச் சொல்வதானால்,

அப்போஸ்தலர்கள் வாய்மொழி வழியாகவே கிறிஸ்துவின் போதனைகளை அறிவித்தார்கள்.

அதுதான் பாரம்பரிய போதனை.

அதன் ஒரு பகுதி எழுத்து வடிவம் பெற்றது. எழுத்து வடிவம் பெற்ற போதனை புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளது.

எழுத்து வடிவம் பெறாத போதனை பாரம்பரியமாகவே தொடர்கிறது.

ஆகவேதான் திருச்சபையின் போதனை

 புதிய ஏற்பாட்டிலும் உள்ளது,

 பாரம்பரியத்திலும் உள்ளது.

கத்தோலிக்கர்கள் இரண்டையுமே கிறிஸ்துவின் போதனையாக ஏற்றுக் கொள்கிறோம்."

"கிறிஸ்துவைப் பற்றி நாம் பைபிளிலிருந்து அறிந்து கொள்கிறோம் என்று சொன்னால் தப்பா?"

", நாம் பைபிளிலிருந்து  கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொள்ளலாமா  என்று கேட்டிருந்தால் நான் ஆம் என்றிருப்பேன்.

ஆனால் நீங்கள் இயேசு கடவுள் என்றும் இரட்சகர் என்றும் எப்படி தெரிந்து கொண்டீர்கள்?"

'பைபிளிலிருந்து' என்று சொன்னால் அது முழுமையான பதிலாக இருந்திருக்காது.

'கத்தோலிக்க திருச்சபையிலிருந்து' என்பதுதான் முழுமையான பதில்.


சரி,  தம்பி உங்கள் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள்?"

"ஐந்து உறுப்பினர்கள், நான், எனது மனைவி, மூன்று பிள்ளைகள்."

 "மூன்று பிள்ளைகளும் குடும்ப உறுப்பினர்களா அல்லது அம்மா பெற்ற பிள்ளைகளா?"

"இரண்டு வகையாகவும் சொல்லலாம். 

 அம்மாவின்  பிள்ளைகள் என்றும் சொல்லலாம். குடும்ப உறுப்பினர்கள் என்றும் சொல்லலாம்."

", அப்படியானால் பைபிளின் போதனையை ஏன் திருச்சபையின் போதனை என்று சொல்லக்கூடாது?"

"ஓ! நீங்க அப்படி வர்ரீங்களோ? சொல்லிட்டு போங்க."

",முடியாது, சொல்லிக்கொண்டு இருப்போம்."

"நீங்கள் ஏன் திருச்சபையை பரிசுத்த கத்தோலிக்க திருச்சபை என்கிறீர்கள்? அதிலேயே பாவிகளே இல்லையா?"

",பாவிகள் மட்டுமே இருக்கிறோம்.

இயேசு பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தார். 

அவர் பரிசுத்தர்.
பாவிகளைத் தேடிவந்த பரிசுத்தர்.

அவர் நிறுவிய திருச்சபையும் பரிசுத்தமானது.

 பாவிகளைத் தேடிவந்த பரிசுத்தரின் சபையில் பாவிகள் தானே இருப்பார்கள்!

மன்னிப்பு பெற வேண்டியவர்கள் பாவிகள்தானே.

மன்னிப்பு பெற்று பரிசுத்தமாகி பரலோகம் செல்ல வேண்டும் என்பதுதான் பாவிகளாகிய எங்களது நோக்கம்."

" நீங்கள் இறைவனிடம் மன்னிப்பு கேட்பதுபோல் தெரியவில்லையே!

சாமியாரிடம் போய்த்தானே பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறீர்கள்!'

",இயேசு  பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் குருக்களுக்குக்
கொடுத்திருக்கிறார்.

ஆகவே குருக்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்கிறோம்."

"இயேசு குருக்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கொடுத்திருப்பதாக யார் சொன்னது?."

", எவர்களுடைய பாவங்களை   மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு. 20:23)
என்று  இயேசு அப்போஸ்தலர்களிடம் கூறியிருக்கிறாரே!"
 
"கத்தோலிக்கர் அனைவரும் பாவசங்கீர்த்தனம் செய்கின்றார்களா?"

,"செய்ய வேண்டும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment